ஆண்டு வாரியான Panel தயாரித்து Promotion கலந்தாய்வினை நடத்தி அதன் அறிக்கையை 08-12-2026 அன்று நீதிமன்றத்தில் சமர்பிக்க உத்தரவு - வாட்ஸ் அப் பகிர்வு தகவல்
இன்று தொடக்கக் கல்வித் துறையில் நடுநிலைப் பள்ளிகளில் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு எதிர்வரும் 08.12.2026 அன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தொடக்கக் கல்வித் துறையில் மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவது தொடர்பான இன்று(16-11-2026 ல்) விசாரணைக்கு வந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முக்கிய உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வில், மாண்புமிகு நீதியரசர் திருமதி P T ஆஷா அவர்கள், 09.06.2026 அன்று பிறப்பித்த உத்தரவின்படி,
1. தொடக்கக் கல்வித் துறையில், இடைநிலை ஆசிரியர் நிலையிலிருந்து பட்டதாரி ஆசிரியர் நிலைக்கு, (01-01-2022 & 01-01-2023 ) ஆகிய PANEL களுக்கு காலிப்பணியிடங்களை ஆண்டுவாரியாகக் கணக்கிட்டு, தகுதியான ஆசிரியர்களைக் கொண்டு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தி முடித்திட வேண்டும்.
2. தொடக்கக் கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர் நிலையிலிருந்து நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் நிலைக்கு பதவி உயர்வு கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும்.
(YEAR WISE PANEL FROM 01-01-2022...)
3. பள்ளிக் கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர் நிலையிலிருந்து உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் நிலைக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வையும் நடத்தி முடிக்க வேண்டும்.
.(YEAR WISE PANEL FROM 01-01-2022...)
மேற்கண்ட பதவி உயர்வு கலந்தாய்வுகளை 8 வாரக் காலக் கெடுவிற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது
ஆனால், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நீதிமன்ற உத்தரவு அரசால் நடைமுறைப்படுத்த பட வில்லை. எனவே மனுதாரர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இன்று (16.11.2026, திங்கட்கிழமை) இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் 41-வது வழக்காக, 9 வது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த மாண்புமிகு நீதியரசர் திருமதி P T ஆஷா அவர்கள், ஏற்கனவே பிறப்பித்த நீதிமன்ற உத்தரவின்படி ஆண்டு வாரியான பேனல் தயாரித்து பதவி உயர்வு கலந்தாய்வினை குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் நடத்தி அதற்குரிய அறிக்கையை 08-12-2026 ஆம் தேதி அன்று நீதிமன்றத்தில் சமர்பிக்க உத்திரவிட்டுள்ளார்
💥💥💥💥💥💥💥💥













