கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கல்வி உரிமை சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி உரிமை சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2026-2027 : RTE மூலம் 25% இடஒதுக்கீடு சேர்க்கை நடைமுறை - தனியார் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள்

 

2026-2027ஆம் கல்வியாண்டிற்கு , தனியார் பள்ளிகளில் RTE மூலம் 25% இலவச இடஒதுக்கீடு சேர்க்கை  நடைமுறை - தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநர் மற்றும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட மாநில முதன்மைத் தொடர்பு அலுவலரின் செயல்முறைகள், சென்னை - 600 006.


ந.க. எண் . 2335/E1/2026, நாள். 27.03.2026


பொருள்

 குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம், 2009, பிரிவு 12 (1) (C) இன்படி- 2026 2027 ஆம் கல்வியாண்டில் அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை (LKG / I Std) வகுப்பில் குறைந்தபட்சம் 25% இடஒதுக்கீடு வழங்குதல் நடைமுறைகள் அறிவுரை வழங்குதல் - சார்பாக. சேர்க்கை


பார்வை :


1. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 மற்றும் தமிழ்நாடு விதிகள். 2011.


2. அரசாணை (நிலை) எண்.271 பள்ளிக் கல்வித்துறை (சி2) नं. 25.10.2012.


3. அரசாணை (நிலை) எண் 60. பள்ளிக் கல்வித் (எக்ஸ்2) துறை, श्री 01.04.2013.


4. அரசாணை (நிலை) எண் 59, பள்ளிக் கல்வித் (பொநூ 2) துறை, आनी 12.05.2014.


5.அரசாணை (நிலை) எண் 66, பள்ளிக் கல்வித் (பொநூ 2) துறை, फ्रन 07.04.2017.


குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 ໙ 12 (1) (C) இன்படி அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் (LKG / I Std) குறைந்த பட்சம் 25% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.


இதனை நடைமுறைப்படுத்துவதற்கு பார்வையில் உள்ள அரசாணைகளில் விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. அவ்வழிகாட்டுதல்களைப் பின்பற்றி 2013-14 முதல் 2025 2026 ஆம் கல்வியாண்டு வரை மாணாக்கர் சேர்க்கை செய்யப்பட்டு பயனடைந்துள்ளனர். சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் விதமாக, வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன் பெறும் வகையில், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் பொருட்டு, பார்வை (5) இல் கண்ட அரசாணையில் கூடுதல் வழிகாட்டுதலும் திருத்திய கால அட்டவணையும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி RTE Act 2009 பிரிவு 12 (1) (சி ) யின் 25 % இடஒதுக்கீடு அடிப்படையிலாக மாணாக்கர்கள் சேர்க்கை குறித்து வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி ஒவ்வொரு ஆண்டும் மேற்காண் நடைமுறை ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கி மே 29 க்குள் முடிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பார்வையில் கண்ட அரசாணைகளின்படி, 2026 - 2027 ஆம் கல்வியாண்டில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை நடைமுறைகள் சார்ந்து கீழ்க்குறிப்பிட்டுள்ள அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.


1. சட்டப்பிரிவு 12 (1) (சி) இன் கீழ் சேர்க்கை வழங்க தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள், 2011, விதி எண் 4 (1) இன்படி எல்.கே.ஜி அல்லது முதல் வகுப்பிற்கு அருகாமையிடம் என்பது 1 கிலோ மீட்டர் சுற்றளவு ஆகும்.


2. RTE Act-ன்படி 25% இடஒதுக்கீட்டிற்கான சேர்க்கைக்கு தகுதியான இடங்களின் எண்ணிக்கை, 2025 -2026 ஆம் கல்வி ஆண்டில் நுழைவு நிலை வகுப்பில் (L.K.G/I) EMIS இணையதளத்தின்படி உள்ள மாணாக்கர்களின் எண்ணிக்கையில் 25% ஐ கணக்கிட்டு சம்பந்தப்பட்ட பள்ளியின் EMIS login-ல் 6.4.2026 அன்று வெளியிடப்படும். சார்ந்த பள்ளியின் முதல்வர் பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களை 7..4.2026 அன்று 12(1)(சி) இன் கீழ் 25% சேர்க்கைக்கான தகுதியான இடங்களை (Alloted Seat) பள்ளியின் தகவல் பலகையில் பொதுமக்கள் அறியும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும். 15.4.2026 அன்றே பள்ளி வாரியான தகுதியான இடங்களின் எண்ணிக்கை இணைய தளத்திலும் (tnemis.tnschools.gov.in) வெளியிடப்படும்


RTE மாணவர் சேர்க்கை இந்த ஆண்டில் குறைவு




இலவச கட்டாய கல்வி சட்டம் - RTE மாணவர் சேர்க்கை இந்த ஆண்டில் குறைவு


இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நடப்பாண்டில், 7 ஆயிரத்து 717 தனியார் பள்ளிகளில்  70 ஆயிரத்து 449 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்


கடந்த ஆண்டு 71 ஆயிரத்து 398 மாணவர்கள் சேர்க்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு பரிசளிக்க ஏற்றது
My First Learning Library: Boxset of 20 Board Books for Kids | Includes ABC, Numbers, Shapes, Colors, Wild & Baby Animals, Fruits, Vegetables, Transport, Toys, Opposites, Flowers, Sea Animals, People at Work, Food, About Me & More | Early Learning for Babies, Toddlers & Preschoolers | Ages 0-3 Years | Horizontal Design




Actual Price: Rs. 1499

Offer Price : Rs. 699

Benefit : Rs. 800


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/4oRJfG5



RTE மாணவர் சேர்க்கைக்கு உரிய பள்ளிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்

 


RTE மாணவர் சேர்க்கைக்கு உரிய பள்ளிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்


பள்ளி வாயிலாக RTE மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.


RTE மூலம் மாணவர் சேர்க்கைக்கு பள்ளிக்கு சென்றே பெற்றோர் விண்ணப்பிக்க வேண்டும்; இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியாது.


rteadmission@tnschools.gov.in மற்றும் 14417 என்ற தொடர்பு எண்ணில் RTE தொடர்பான புகார்கள், தகவல்களை பெறலாம் - பள்ளிக் கல்வித் துறை.


RTE மாணவர் சேர்க்கை தொடக்கம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு



 RTE மாணவர் சேர்க்கை தொடக்கம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண் : 2342 , நாள் : 02-10-2025


மத்திய அரசு நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் RTE சேர்க்கை தொடங்குவதாக அறிவிப்பு


ஒன்றிய அரசால் நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2025–26 கல்வியாண்டிற்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 இன்படி (RTE) மாணவர் சேர்க்கை தொடங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு 


Government of Tamil Nadu Announces Commencement of RTE Admissions for 2025–26 Following Release of Funds by Government of India - Press Release 


The Government of Tamil Nadu announces the commencement of admissions under the Right of Children to Free and Compulsory Education (RTE) Act, 2009, for the academic year 2025–26 - Tamil Version & English Version 


 Press Release No: 2342 , Dated: 02-10-2025 & 2025-26 கல்வியாண்டிற்கான மாணவர் (RTE) சேர்க்கை அட்டவணை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



2025-26 ஆம் கல்வியாண்டிற்கான RTE 2009 கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்  கீழ் மாணவர் சேர்க்கை தொடக்கம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு


* தமிழ்நாடு அரசு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 (RTE Act)-இன் கீழ் 2025-26 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை அறிவித்துள்ளது. மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையில், ஒன்றிய அரசால் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய RTE நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


* W.P. No. 18427 of 2025-V. Eswaran vs. Government of Tamil Nadu & Others வழக்கில், மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம், RTE நிதி ஒதுக்கீட்டை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (Samagra Shiksha) திட்டத்திலிருந்து பிரித்து வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) அல்லது PM SHRI பள்ளித் திட்ட ஒப்பந்தம் (MoU) என்பனவற்றுடன் நிதி வழங்கல் இணைக்கப்படக் கூடாது என்றும் தெரிவித்தது.


* இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மேல்முறையீடு மனு (SLP) தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு அறிவிப்பு வழங்கியதைத் தொடர்ந்து, ஒன்றிய அரசு தன்னுடைய நிதிப் பங்களிப்பை விடுவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக 2025-26 கல்வியாண்டிற்கான RTE மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளது.


2025-26 கல்வியாண்டிற்கான RTE மாணவர் சேர்க்கை சிறப்பம்சங்கள்


1. சேர்க்கை ஒதுக்கீடு


அனைத்து சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளின் நுழைவு வகுப்புகளில்

* (LKG/1 std) 25% 

* சேர்க்கை நடைமுறைகள் RTE Act, 2009 மற்றும் தமிழ்நாடு RTE விதிகள், 2011 அடிப்படையில் நடைபெறும்.


2. சேர்க்கை முறை


* அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைன் சேர்க்கை.

* தற்போது குழந்தைகள் நுழைவு நிலை வகுப்பில் கல்வி பயிலும் அதே பள்ளியில் இந்த கல்வியாண்டிற்கான சேர்க்கை மேற்கொள்ளப்படும்.

* ஏற்கனவே சேர்க்கப்பட்ட தகுதியான மாணவர்களை RTE ஒதுக்கீட்டின் கீழ் பதிவு செய்வதற்காக 10 நாள் கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.


3. முன்னுரிமை பிரிவுகள்


* ஆதரவற்றோர்

* எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டோர்

* மாற்றுப் பாலினத்தவர்

* தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள்

* மாற்றுத் திறனாளிகள்

* ஒதுக்கீட்டை விட விண்ணப்பங்கள் அதிகமானால், குலுக்கல் நடைமுறை (Random Selection) பின்பற்றப்படும்.


4. வசூலித்தக் கட்டணத்தை திருப்பிச் செலுத்தல்


* RTE தகுதியுடைய மாணவர்களிடமிருந்து எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது.

* ஏற்கனவே கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால், 7 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.


5. கண்காணிப்பு மற்றும் புகார் தீர்வு


* மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழுக்கள் மூலம் கண்காணிப்பு.


* புகார்களுக்காக பிரத்தியேகமான உதவி எண் மற்றும் மின்னஞ்சல் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


6. கல்வி சமத்துவம் மற்றும் அணுகலை உறுதி செய்தல்


* தமிழ்நாடு அரசு, ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில், இச்சேர்க்கை நடைமுறையை தெளிவான, சமத்துவமான மற்றும் குழந்தை மையப்படுத்தப்பட்ட முறையில் மேற்கொள்கிறது.


RTE - கட்டாய கல்வி உரிமைச் சட்டம் - மாணவர்கள் சேர்க்கை 2025-26

 

RTE - இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் - மாணவர்கள் சேர்க்கை 2025-26


மத்திய அரசு நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை :


1. RTE சேர்க்கை மீண்டும் தொடங்குதல்: தனியார் பள்ளிகளில் 25% RTE ஒதுக்கீட்டின் கீழ் இலவச சேர்க்கை, முன்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிதியை மத்திய அரசு வெளியிட்ட பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.


2. தகுதி மற்றும் நன்மைகள்: தமிழ்நாடு முழுவதும் 8,000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி அல்லது 1 ஆம் வகுப்பு சேரும் குழந்தைகளுக்கு சுமார் 1 லட்சம் இடங்கள் உள்ளன, அவர்கள் 8 ஆம் வகுப்பு வரை இலவசமாகப் படிக்கலாம்.


3. பின்னணி மற்றும் சவால்கள்: மத்திய அரசு நிதியை நிறுத்தி வைத்ததால், 2025-26 கல்வியாண்டிற்கான RTE சேர்க்கையை மாநில அரசு ஆரம்பத்தில் இடைநிறுத்தியது, இதனால் பெற்றோர்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்ற கவலைகள் எழுந்தன.


4. உச்ச நீதிமன்ற தலையீடு: RTE-க்கான நிதியில் தனது பங்கை விடுவிக்க உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது, இது தற்போதைய சேர்க்கை மீண்டும் தொடங்க வழிவகுத்தது.


RTE Admission - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு

 RTE Admission - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு 


கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009ஐ முடக்கும் வகையில் செயல்பட்டுவரும் ஒன்றிய அரசுக்கு எதிராக மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரைச் சென்று வாதாடியதன் விளைவாக நமக்குரிய #RTE நிதியை பெற்றுள்ளோம்.


எனவே, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான மாணவச் சேர்க்கை நடைமுறைகள் தொடங்குகின்றன.


கல்வியை பறிக்க எத்தனை தடைகள் வந்தாலும், நம் #திராவிட_மாடல் அரசு முறியடிக்கும்!

 

2025-26ஆம் கல்வியாண்டிற்கான RTE மாணவர் சேர்க்கை தொடக்கம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு



2025-26 ஆம் கல்வியாண்டிற்கான RTE 2009 கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்  கீழ் மாணவர் சேர்க்கை தொடக்கம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு


* தமிழ்நாடு அரசு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 (RTE Act)-இன் கீழ் 2025-26 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை அறிவித்துள்ளது. மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையில், ஒன்றிய அரசால் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய RTE நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


* W.P. No. 18427 of 2025-V. Eswaran vs. Government of Tamil Nadu & Others வழக்கில், மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம், RTE நிதி ஒதுக்கீட்டை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (Samagra Shiksha) திட்டத்திலிருந்து பிரித்து வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) அல்லது PM SHRI பள்ளித் திட்ட ஒப்பந்தம் (MoU) என்பனவற்றுடன் நிதி வழங்கல் இணைக்கப்படக் கூடாது என்றும் தெரிவித்தது.


* இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மேல்முறையீடு மனு (SLP) தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு அறிவிப்பு வழங்கியதைத் தொடர்ந்து, ஒன்றிய அரசு தன்னுடைய நிதிப் பங்களிப்பை விடுவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக 2025-26 கல்வியாண்டிற்கான RTE மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளது.


2025-26 கல்வியாண்டிற்கான RTE மாணவர் சேர்க்கை சிறப்பம்சங்கள்


1. சேர்க்கை ஒதுக்கீடு


அனைத்து சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளின் நுழைவு வகுப்புகளில்

* (LKG/1 std) 25% 

* சேர்க்கை நடைமுறைகள் RTE Act, 2009 மற்றும் தமிழ்நாடு RTE விதிகள், 2011 அடிப்படையில் நடைபெறும்.


2. சேர்க்கை முறை


* அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைன் சேர்க்கை.

* தற்போது குழந்தைகள் நுழைவு நிலை வகுப்பில் கல்வி பயிலும் அதே பள்ளியில் இந்த கல்வியாண்டிற்கான சேர்க்கை மேற்கொள்ளப்படும்.

* ஏற்கனவே சேர்க்கப்பட்ட தகுதியான மாணவர்களை RTE ஒதுக்கீட்டின் கீழ் பதிவு செய்வதற்காக 10 நாள் கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.


3. முன்னுரிமை பிரிவுகள்


* ஆதரவற்றோர்

* எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டோர்

* மாற்றுப் பாலினத்தவர்

* தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள்

* மாற்றுத் திறனாளிகள்

* ஒதுக்கீட்டை விட விண்ணப்பங்கள் அதிகமானால், குலுக்கல் நடைமுறை (Random Selection) பின்பற்றப்படும்.


4. வசூலித்தக் கட்டணத்தை திருப்பிச் செலுத்தல்


* RTE தகுதியுடைய மாணவர்களிடமிருந்து எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது.

* ஏற்கனவே கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால், 7 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.


5. கண்காணிப்பு மற்றும் புகார் தீர்வு


* மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழுக்கள் மூலம் கண்காணிப்பு.


* புகார்களுக்காக பிரத்தியேகமான உதவி எண் மற்றும் மின்னஞ்சல் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


6. கல்வி சமத்துவம் மற்றும் அணுகலை உறுதி செய்தல்


* தமிழ்நாடு அரசு, ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில், இச்சேர்க்கை நடைமுறையை தெளிவான, சமத்துவமான மற்றும் குழந்தை மையப்படுத்தப்பட்ட முறையில் மேற்கொள்கிறது.


* 2025-26 கல்வியாண்டிற்கான மாணவர் (RTE) சேர்க்கை அட்டவணை


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


மத்திய அரசு 60% நிதியை ஒதுக்காததால் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த இயலவில்லை - தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்


 மத்திய அரசு 60% நிதியை ஒதுக்காததால் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த இயலவில்லை - தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்


RTE - இணையதளப் பக்கம் திறக்காதது ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி


கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்காக இணையதள பக்கத்தை திறக்காதது ஏன்?


RTE-ன் கீழ் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளியில் சேர்க்கை வழங்குவது தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு கேள்வி


மத்திய அரசு 60% நிதியை ஒதுக்காததால் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த இயலவில்லை - தமிழ்நாடு அரசு


மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு இணையதள பக்கத்தை திறக்க வேண்டும் - உயர்நீதிமன்றம் 


கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்காக இணையதளப் பக்கத்தைத் திறக்காதது ஏன் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


Right to Education Act | கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்த நிதி ஒதுக்கீடு பிரச்சினை காரணமாக இணையதளப் பக்கம் திறக்காததை சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசிடம் கேள்வி எழுப்பியது.


RTE மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்காக இணையதளப் பக்கத்தைத் திறக்காதது ஏன்? - ஐகோர்ட் கேள்வி


கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை துவங்கவில்லை எனக் கூறி, கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி வே.ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கல்வி உரிமைச் சட்டத்தின்படி மத்திய அரசு உரிய நிதியை தமிழ்நாடு அரசுக்கு ஒதுக்க வேண்டும் எனவும் , மத்திய அரசிடம் இருந்து நிதி கிடைக்கவில்லை எனக் கூறாமல் தனியார் பள்ளிகளுக்கு உரிய நிதியை ஒதுக்க வேண்டும் எனவும் கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டிருந்தது.


இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன், தனியார் பள்ளிகள் இயக்குனர் குப்புசாமி ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது.


இந்த வழக்கில் தனியார் பள்ளிகள் இயக்குநர் தாக்கல் செய்த பதில் மனுவில், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மறுத்ததால், மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்றும் மாநில அரசு தனது பங்காக 40 சதவீத நிதியை ஒதுக்க தயாராக உள்ள போதும், மத்திய அரசு 60 சதவீத நிதியை ஒதுக்காததால் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த இயலவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் உயர் நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதிக்கவில்லை என்றும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.



விசாரணையின் போது, தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும் சம பொறுப்பு உள்ள போதிலும் மாநில அரசுக்கு எதிராக மட்டுமே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும் அந்த வழக்கு செப்டம்பர் ஏழாம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.



கல்வியாண்டு துவங்கி இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான இணையதளப் பக்கத்தை இன்னும் திறக்காமல் இருப்பது ஏன் எனவும், மத்திய மாநில அரசுகளுக்கு இடையில் நிதி ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை காரணமாக மாணவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும் என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு,  இணையதளப் பக்கத்தைத் திறக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக் கொண்டனர்.


இதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், தமிழ்நாடு அரசு மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளதாகவும், தமிழ்நாடு அரசுக்கு பிரச்சனையும் இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.


இதையடுத்து, இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணையை நீதிபதிகள், செப்டம்பர் 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Abolition of passing procedure for all students from 1st to 8th standard - Central government action - Publication of Gazette - Tamil Translation



1-8ஆம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கும் நடைமுறை ரத்து - மத்திய அரசு நடவடிக்கை - அரசிதழ் வெளியீடு - தமிழாக்கம்


Abolition of passing procedure for all students from 1st to 8th standard - Central government action - Publication of Gazette - Tamil Translation 


ஆல்பாஸ் திட்டதால் இந்தியாவில் தொடக்கக் கல்வி தரம் குறைவாகி வருவதால் ஆல்பாஸ் தேர்ச்சி முறை ரத்து.


RTE சட்டத்தின் படி 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டாலும், தேர்வு எழுதாவிட்டாலும் ஆல் பாஸ் தேர்ச்சி முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது - அரசு இதழில் வெளியீடு.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> தமிழாக்கம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




The Gazette of India

CG-DL-E-21122024-259577

EXTRAORDINARY

PART II—Section 3—Sub-section (i)

PUBLISHED BY AUTHORITY

Gazette No. 715, NEW DELHI, SATURDAY, DECEMBER 21, 2024


கல்வி அமைச்சகம் 

(பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை) 

அறிவிப்பு 

புது தில்லி, டிசம்பர் 16, 2024 

ஜி.எஸ்.ஆர். 777(E).- பிரிவு 38ன் துணைப்பிரிவு (2) இன் ஷரத்து (fa) மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான உரிமைச் சட்டம், 2009 (35 இன் 2009), மத்திய அரசு 


இதன்மூலம் இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமை விதிகள், 2010ஐ மேலும் திருத்த பின்வரும் விதிகள், 

அதாவது:- 

1. (1) இந்த விதிகளை இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமை (திருத்தம்) விதிகள், 2024 என்று அழைக்கலாம். 

(2) அவை அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட தேதியில் நடைமுறைக்கு வரும். 


2. இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமை விதிகள், 2010, பகுதி V க்குப் பிறகு, பின்வரும் பகுதி செருகப்படும், அதாவது: - “பகுதி VA- தேர்வு மற்றும் சில சந்தர்ப்பங்களில் பின்வாங்குதல் 16A. ஒரு குழந்தை தடுத்து நிறுத்தப்படும் விதம் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. - 

(1) ஒவ்வொரு கல்வியாண்டின் முடிவிலும் ஐந்தாம் வகுப்பிலும் எட்டாம் வகுப்பிலும் வழக்கமான தேர்வு இருக்கும். 

(2) துணை விதி (1) இல் குறிப்பிடப்பட்டுள்ள வழக்கமான தேர்வை நடத்திய பிறகு, ஒரு குழந்தை தேர்ச்சி பெறத் தவறினால் அவ்வப்போது அறிவிக்கப்பட்ட அளவுகோல்கள், அவருக்கு கூடுதல் அறிவுறுத்தல் மற்றும் மறு-வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் தேர்வு. 

(3) துணை விதி (2) இல் குறிப்பிடப்பட்டுள்ள மறுதேர்வில் தோன்றும் குழந்தை மீண்டும் தேர்ச்சி நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறினால், ஐந்தாம் வகுப்பிலோ அல்லது எட்டாம் வகுப்பிலோ அவர் மீண்டும் நிறுத்தப்படுவார்.

(4) குழந்தையைத் தடுத்து நிறுத்தும் போது, ​​வகுப்பு ஆசிரியர் குழந்தைக்கும், குழந்தையின் பெற்றோருக்கும் வழிகாட்ட வேண்டும். அவசியமானது மற்றும் மதிப்பீட்டின் பல்வேறு நிலைகளில் கற்றல் இடைவெளிகளைக் கண்டறிந்த பிறகு சிறப்பு உள்ளீடுகளை வழங்குதல். 

(5) பள்ளித் தலைவர் பின்தங்கிய குழந்தைகளின் பட்டியலைப் பராமரிக்க வேண்டும் மற்றும் விதிகளை தனிப்பட்ட முறையில் கண்காணிக்க வேண்டும் அத்தகைய குழந்தைகளுக்கு சிறப்பு உள்ளீடுகள் மற்றும் கண்டறியப்பட்ட கற்றல் இடைவெளிகளைப் பொறுத்து அவர்களின் முன்னேற்றம். 

(6) பரீட்சை மற்றும் மறுபரிசீலனை ஆகியவை முழுமையை அடைவதற்கான திறன் அடிப்படையிலான தேர்வுகளாகும் குழந்தையின் வளர்ச்சி மற்றும் மனப்பாடம் மற்றும் நடைமுறை திறன்களின் அடிப்படையில் இருக்கக்கூடாது. 

(7) எந்தக் குழந்தையும் ஆரம்பக் கல்வியை முடிக்கும் வரை எந்தப் பள்ளியிலிருந்தும் வெளியேற்றப்படக்கூடாது. [எஃப். எண். 1-3/2017-EE-4/IS-3] 

அனில் குமார் சிங்கால், 

கூடுதல் செயலாளர் 


குறிப்பு.- முதன்மை விதிகள் அறிவிப்பு எண் ஜி.எஸ்.ஆர். 301(E), தேதியிட்ட 8 ஏப்ரல், 2010 இல் இந்திய அரசிதழ், பகுதி II, பிரிவு 3, துணைப் பிரிவு (i), ஏப்ரல் 9, 2010 தேதியிட்டது மற்றும் கடைசியாக திருத்தப்பட்டது அறிவிப்பு எண் ஜி.எஸ்.ஆர். 1302(E), அக்டோபர் 17, 2017 தேதியிட்டது மற்றும் இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டது, பகுதி II, பிரிவு 3, துணைப் பிரிவு (i), 17 அக்டோபர், 2017 தேதியிட்டது.


The Gazette of India

CG-DL-E-21122024-259577

EXTRAORDINARY

भाग II—खण् ड 3—उप-खण् ड (i) 

PART II—Section 3—Sub-section (i)

प्राजधकार से प्रकाजित 

PUBLISHED BY AUTHORITY

No. 715] NEW DELHI, SATURDAY, DECEMBER 21, 2024/AGRAHAYANA 30, 1946


MINISTRY OF EDUCATION
(Department of School Education and Literacy)
NOTIFICATION
New Delhi, the 16th December, 2024

G.S.R. 777(E).— In exercise of the powers conferred by clause (fa) of sub-section (2) of section 38 of the Right of Children to Free and Compulsory Education Act, 2009 (35 of 2009), the Central Government hereby makes the following rules further to amend the Right of Children to Free and Compulsory Education Rules, 2010, namely :—

1. (1) These rules may be called the Right of Children to Free and Compulsory Education (Amendment) Rules, 2024.

(2) They shall come into force on the date of their publication in the Official Gazette.

2. In the Right of Children to Free and Compulsory Education Rules, 2010, after Part V, the following Part shall be inserted, namely: -

“PART VA- EXAMINATION AND HOLDING BACK IN CERTAIN CASES

16A. Manner and conditions subject to which a child may be held back . — 

(1)There shall be regular examination in the fifth class and in the eighth class at the end of every academic year.

(2) After the conduct of regular examination, referred to in sub- rule (1), if a child fails to fulfil the promotion criteria, as notified from time to time, he shall be given additional instruction and opportunity for re-examination within a period of two months from the date of declaration of results.

(3) If the child appearing in the re-examination referred in sub -rule (2), fails to fulfil the promotion criteria again, he shall be held back in fifth class or eighth class, as the case may be.

(4) During the holding back of the child, the class teacher shall guide the child as well as the parents of the child, if necessary, and provide specialised inputs after identifying the learning gaps at various stages of assessment.

(5) The Head of the school shall maintain a list of children who are held back and personally monitor the provisions provided for specialised inputs to such children and their progress with respect to the identified learning gaps.

(6) The examination and re-examination shall be competency-based examinations to achieve the holistic development of the child and not be based on memorisation and procedural skills.

(7) No child shall be expelled from any school till he completes elementary education.”.
[F. No. 1-3/2017-EE-4/IS-3]

ANIL KUMAR SINGHAL, 
Addl. Secy.

Note.— The principal rules were published vide notification number G.S.R. 301(E), dated the 8th April, 2010 in the Gazette of India, Part II, Section 3, Sub-section (i), dated the 9th April, 2010 and lastly amended vide notification number G.S.R. 1302(E), dated the 17th October, 2017 and published in the Gazette of India, Part II, Section 3, Sub-section (i), dated the 17th October, 2017.



जिक्षा मंत्रालय
(स्ट्कू ल जिक्षा और साक्षरता जिभाग)
अजधसूचना
नई दिल्ली, 16 दिसम् बर, 2024
सा.का.जन. 777(अ).— के न्द्रीय सरकार, जन:िुल् क और अजनिायय बाल जिक्षा का अजधकार अजधजनयम, 2009
(2009 का 35) की धारा 38 की उपधारा (2) के खंड (च क) द्वारा प्रित् त िज‍ तयों का प्रयोग करते हुए, जन:िुल् क और
अजनिायय बाल जिक्षा का अजधकार जनयम, 2010 का और संिोधन करने के जलए जनम् नजलजखत जनयम बनाती है, अर्ायत्:-

1. (1) इन जनयमों का संजक्षप्त नाम जनिःिुल्क और अजनिायय बाल जिक्षा का अजधकार (संिोधन) जनयम, 2024 है।


(2) ये सरकारी रािपत्र में उनके प्रकािन की तारीख को लागू होंगे।

2. जनिःिुल्क और अजनिायय बाल जिक्षा का अजधकार जनयम, 2010 में, भाग 5 के पश्चात जनम्नजलजखत भाग


अंतिःस्ट्र्ाजपत दकया िाएगा, अर्ायत्:-
“भाग 5 क- कजतपय मामलों में परीक्षा और रोका िाना
16 क. रीजत और ितें जिनके अध् यधीन दकसी बालक को रोका िा सकता है- (1) प्रत्येक िैक्षजणक िर्य के अंत पर पांचिीं
कक्षा और आठिीं कक्षा में जनयजमत परीक्षा होगी।

(2) उप-जनयम (1) में जनर्ियष्ट, जनयजमत परीक्षा के संचालन के पश्चात्, यदि कोई बालक समय-समय पर यर्ा अजधसूजचत,
प्रोन्नजत मानिण्ड को पूरा करने में असफल रहता है, तो उसे पररणाम घोजर्त होने की तारीख से िो मास की अिजध
के भीतर पुनिः परीक्षा के जलए अजतररक्त अनुिेि तर्ा अिसर दिया िाएगा।
(3) यदि उप-जनयम (2) में जनर्ियष्ट पुन: परीक्षा में उपजस्ट्र्त होने िाला बालक, प्रोन्नजत के मानिण्ड को पूरा करने मेंपुनिः
असफल रहता है, यताजस्ट्र्जत, पांचिीं कक्षा या आठिीं कक्षा में रोक दिया िाएगा।
(4) बालक को रोके रखने के िौरान, कक्षा जिक्षक बालक के सार्-सार्, यदि आिश्यक हो तो, बालक के माता-जपता का
भी मागयिियन करेगा तर्ा जनधायरण के जिजभन्न चरणों पर अजधगम के अंतरालों की पहचान करने के पश्चात्जििेर्ज्ञीय
इनपुट प्रिान करेगा।
(5) स्ट्कू ल का प्रमुख उन बालकों की सूची बनाएगा िो रोके गए हैं तर्ा ऐसे बालकों को जििेर्ज्ञीय इनपुट के जलए प्रिान
दकए गए उपबंधों तर्ा पहचाने गए अजधगम के अंतरालों के संबंध में उनकी प्रगजत पर व्यजक्तगत रूप से मॉनीटरी
करेगा।
(6) बालक के समग्र जिकास को पाने के जलए परीक्षा और पुन: परीक्षा सक्षमता-आधाररत परीक्षाएं होंगी तर्ा न दक याि
करने और प्रदियात्मक कौिल पर आधाररत होंगी।
(7) दकसी भी बालक को तब तक दकसी स्ट्कू ल से नहीं जनकाला िाएगा िब तक िह प्रारंजभक जिक्षा पूरी नहीं कर लेता।”

[फा. सं. 1-3/2017-ईई-4/आईएस-3]
अजनल कु मार ससंघल, अपर सजचि
रटप्पण.— मूल जनयम, भारत केरािपत्र, भाग-II, खंड-3, उपखंड (i), तारीख 9 अप्रैल, 2010 मेंअजधसूचना संखयांक
सा.का.जन. 301(अ) तारीख 8 अप्रैल, 2010, द्वारा प्रकाजित दकए गए र्ेतर्ा अंजतम बार अजधसूचना संखयांक
सा.का.जन. 1302(अ), तारीख 17 अ‍ तूबर, 2017 द्वारा संिोजधत दकए गए र्ेऔर भारत केरािपत्र, भाग-II,
खंड-3, उपखंड (i), तारीख 17 अ‍ तूबर , 2017 को प्रकाजित हुए र्े।



சிறுபான்மையற்ற தனியார்‌ சுயநிதி (Matric, Nursery & Primary) பள்ளிகளில்‌ வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்‌ நலிவடைந்த பிரிவினரின்‌ குழந்தைகளுக்கு 25% சேர்க்கை வழங்குதல்‌ - 28.05.2024 அன்று சார்ந்த பள்ளிகளில்‌ குலுக்கல்‌ முறையில்‌ தேர்வு செய்தல்‌ - தலைமை ஆசிரியர்‌,/ஆசிரியர்‌/வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ /ஆசிரியர்‌ பயிற்றுநர்கள்‌ நியமனம்‌ செய்தல்‌ - திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌: 299/ RTE 25%/ DC1/ 2024, நாள்‌: 22.05.2024...

 


சிறுபான்மையற்ற தனியார்‌ சுயநிதி (Matric, Nursery & Primary) பள்ளிகளில்‌ வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்‌ நலிவடைந்த பிரிவினரின்‌ குழந்தைகளுக்கு 25% சேர்க்கை வழங்குதல்‌ - 28.05.2024 அன்று சார்ந்த பள்ளிகளில்‌ குலுக்கல்‌ முறையில்‌ தேர்வு செய்தல்‌ - தலைமை ஆசிரியர்‌,/ஆசிரியர்‌/வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ /ஆசிரியர்‌ பயிற்றுநர்கள்‌ நியமனம்‌ செய்தல்‌ - திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌: 299/ RTE 25%/ DC1/ 2024, நாள்‌: 22.05.2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌

ந.க.எண்‌: 299/ RTE 25%/ DC1/ 2024, நாள்‌: 22.05.2024.


பொருள்‌: திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌ - 2024-2025 ஆம்‌ கல்வி ஆண்டில்‌ அனைத்து சிறுபான்மையற்ற தனியார்‌ சுயநிதி (Matric, Nursery & Primary) பள்ளிகளில்‌ வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்‌ நலிவடைந்த பிரிவினரின்‌ குழந்தைகளுக்கு 25% சேர்க்கை வழங்குதல்‌ - 28.05.2024 அன்று சார்ந்த பள்ளிகளில்‌ குலுக்கல்‌ முறையில்‌ தேர்வு செய்தல்‌ - தலைமை ஆசிரியர்‌,/ஆசிரியர்‌/வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ /ஆசிரியர்‌ பயிற்றுநர்கள்‌ நியமனம்‌ செய்தல்‌ - சார்பு.


பார்வை 

1... குழந்தைகளுக்கான இலவச மற்றும்‌ கட்டாயக்‌ கல்வி உரிமைச்‌ சட்டம்‌ 2009 மற்றும்‌ தமிழ்நாடு விதிகள்‌ 2011


2.  அரசாணை (நிலை) எண்‌.271, பள்ளிக்கல்வித்துறை (சி2) நாள்‌. 25:10.2012.


3. அரசாணை (நிலை) எண்‌.60, பள்ளிக்கல்வித்‌ (எக்ஸ்‌ 2) துறை நாள்‌. 0104.2013.


4. அரசாணை (நிலை) எண்‌.59. பள்ளிக்‌ கல்வித்‌ (பொ நூ 2) துறை நாள்‌. 12.05.2014.


5. அரசாணை (நிலை) எண்‌.66, பள்ளிக்‌ கல்வித்துறை நாள்‌. 07.04.2017.


6. சென்னை - 06, தமிழ்நாடு தனியார்‌ பள்ளிகள்‌ இயக்குநர்‌ மற்றும்‌ குழந்தைகளுக்கான இலவச மற்றும்‌ கட்டாயக்கல்வி உரிமைச்‌ சட்ட மாநில முதன்மைத்‌ தொடர்பு அலுவலரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌:1872/சி12024, நாள்‌.0104.2024.


குழந்தைகளுக்கான இலவச கட்டாயக்‌ கல்வி உரிமைச்‌ சட்டம்‌ - 2009-ன்‌ பிரிவு 12(1) (6) படியும்‌, தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச கட்டாயக்‌ கல்வி உரிமை விதிகள்‌ 2011 விதி 8 மற்றும்‌ 9 படியும்‌ சிறுபான்மையற்ற தனியார்‌ சுயநிதி பள்ளிகளில்‌ உள்ள நுழைவு நிலை வகுப்பில்‌ (Entry Level Class) 25 விழுக்காடு இடங்கள்‌ வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்‌ நலிவடைந்த பிரிவினரின்‌ குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்து ஒவ்வொரு வருடமும்‌ குழந்தைகள்‌ சேர்க்கப்பட்டு வருகின்றனர்‌. இக்கல்வியாண்டில்‌ (2024-2025) விண்ணப்பித்ததில்‌ தகுதியுள்ள குழந்தைகளில்‌ 25% இட ஒதுக்கீடு எண்ணிக்கையை விட குறைவாக உள்ள பள்ளிகளில்‌ நேரடியாக சேர்க்கையும்‌, 25% இட ஒதுக்கீட்டு எண்ணிக்கையை விட அதிகமாக விண்ணப்பம்‌ பெற்றுள்ள பள்ளிகளில்‌ குலுக்கல்‌ முறையிலும்‌ தெரிவு செய்து சேர்க்கை செய்யப்படும்‌.


குலுக்கல்‌ முறையில்‌ தெரிவு செய்யும்‌ முறையானது 28.05.2024 அன்று இணைப்பில்‌ உள்ளவாறு தலைமை ஆசிரியர்‌, வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌//ஆசிரியர்‌ பயிற்றுநர்‌ /வருவாய்‌ துறை அலுவலர்‌ முன்னிலையில்‌ நடைபெறும்‌. எனவே இணைப்பில்‌ உள்ள தலைமை ஆசிரியர்‌/வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌,/ஆசிரியர்‌ பயிற்றுநர்‌ / வருவாய்‌ துறை அலுவலர்‌ சம்மந்தப்பட்ட பள்ளிகளில்‌ 28.05.2024 அன்று காலை 9.00 மணிக்குச்‌ சென்று எவ்வித புகாருக்கும்‌ இடமளிக்காமல்‌, இத்துடன்‌ இணைக்கப்பட்ட தனியார்‌ பள்ளிக்‌ கல்வி இயக்குநர்‌ அவர்களின்‌ வழிகாட்டுதல்களைப்‌ பின்பற்றி குலுக்கல்‌ முறையில்‌ குழந்தைகள்‌ தெரிவு செய்திடுவதை உறுதி செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.




குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 - பிரிவு 12 (1) (C) இன் படி 2024-2025 ஆம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்பில் LKG / I Standard குறைந்தபட்சம் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்குதல் - சேர்க்கை நடைமுறைகள் - அறிவுரை வழங்குதல் சார்பாக - தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குனர் மற்றும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்ட மாநில முதன்மை தொடர்பு அலுவலரின் செயல்முறைகள் ந.க. எண் : 1872/சி1/ 2024, நாள்: 01.04.2024...


தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குனர் மற்றும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்ட மாநில முதன்மை தொடர்பு அலுவலரின் செயல்முறைகள் ந.க. எண் : 1872/சி1/ 2024, நாள்: 01.04.2024...


பொருள் : குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 - பிரிவு 12 (1) (C) இன் படி 2024-2025 ஆம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்பில் LKG / I Standard குறைந்தபட்சம் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்குதல் - சேர்க்கை நடைமுறைகள் - அறிவுரை வழங்குதல் சார்பாக...


Right of Children to Free and Compulsory Education Act 2009 - Provision of minimum 25 per cent reservation in entry level class LKG / I Standard in all non-minority private self-financed schools for the academic year 2024-2025 for children belonging to deprived and weaker sections -- Admission Procedures - Advising Regarding - Tamilnadu Director of Private Schools and Right to Free and Compulsory Education for Children Act State Principal Liaison Officer Proceedings R.C. No : 1872/C1/ 2024, Dated: 01.04.2024...



>>> Click Here to Download - RTE Admission Circular by TN Private Schools Director...



Pupil-Teacher Ratio as per RTE Act, 2009...


RTE சட்டம், 2009 இன் படி மாணவர்-ஆசிரியர் விகிதம்... 

Pupil-Teacher Ratio as per RTE Act, 2009...


RTE படி அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் 

வகுப்பு 1-5: ஒரு வகுப்பிற்கு 30 மாணவர்கள் 

வகுப்பு 6-8 : ஒரு வகுப்பிற்கு 35 மாணவர்கள் 

வகுப்பு 9&10 : ஒரு வகுப்பிற்கு 40 மாணவர்கள் 

வகுப்பு 11&12 : ஒரு வகுப்பிற்கு 50 மாணவர்கள் 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மொத்தம் உள்ள 523 தொடக்கப் பள்ளிகளில், 31 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் 15 அல்லது அதற்கும் குறைவான மாணவர்களின் மாணவர் சேர்க்கை உள்ளது, இது அவர்களின் திறனில் 10% அல்லது அதற்கும் குறைவாக உள்ளது. இதேபோல், 202 நடுநிலைப் பள்ளிகளில், 1 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 64 அல்லது அதற்கும் குறைவான மாணவர்களின் மாணவர் சேர்க்கை உள்ளது, அதன் திறனில் 25% அல்லது அதற்கும் குறைவாக உள்ளது. 

எனவே, இந்த ஆய்வுக்காக, 10% அல்லது அதற்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளையும், 25% அல்லது அதற்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளையும் குறிப்பாகத் தேர்ந்தெடுத்துள்ளோம். 

RTE இன் படி மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 

தொடக்கப் பள்ளிகள் 150 

நடுநிலைப் பள்ளிகள் 255 


பத்திரிகை தகவல் 

 இந்திய அரசு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 

25-நவம்பர்-2011 16:18 IST 

மாணவர்-ஆசிரியர் விகிதம் 

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான உரிமை (RTE) சட்டம், 2009, ஏப்ரல் 1, 2010 முதல் நடைமுறைக்கு வந்தது, 

பள்ளிகளில் மாணவர்-ஆசிரியர் விகிதம் (PTR) பின்வரும் குறிப்பிட்ட அளவுகளின்படி பராமரிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது: 

A. 1 முதல் V வகுப்புகளுக்கு: 

(i) அனுமதிக்கப்பட்ட அறுபது குழந்தைகளுக்கு இரண்டு ஆசிரியர்கள் 

(ii) 61-90 குழந்தைகளுக்கு மூன்று ஆசிரியர்கள் 

(iii) 91-120 குழந்தைகளுக்கு நான்கு ஆசிரியர்கள் 

(iv) 121-200 குழந்தைகளுக்கு ஐந்து ஆசிரியர்கள் 

(v) ஐந்து ஆசிரியர்களைத் தவிர, ஒரு தலைமை ஆசிரியர், அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 150-ஐத் தாண்டினால் மற்றும் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 200-க்கு மேல் இருந்தால், PTR (தலைமை ஆசிரியர் தவிர) நாற்பதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 


B. (i) ஒரு வகுப்பிற்கு குறைந்தபட்சம் ஒரு ஆசிரியராவது இருக்க வேண்டும், 

அதனால் 

(அ) அறிவியல் மற்றும் கணிதம்: 

(ஆ) சமூக ஆய்வுகள்: மற்றும் 

(இ) மொழிகளுக்கு தலா ஒரு ஆசிரியராவது இருக்க வேண்டும். 

(ii) ஒவ்வொரு 35 குழந்தைகளுக்கும் குறைந்தது ஒரு ஆசிரியர்: 

(iii) குழந்தைகளின் சேர்க்கை 100க்கு மேல் இருந்தால், (அ) முழு நேர தலைமை ஆசிரியர் மற்றும் (ஆ) கலைக் கல்வி, உடல்நலம் மற்றும் உடற்கல்வி மற்றும் பணிக் கல்விக்கான பகுதி நேர பயிற்றுனர்கள் இருக்க வேண்டும். 

2001-02ல் சர்வ சிக்ஷா அபியான் (SSA) தொடங்கப்பட்டதில் இருந்து, அக்டோபர், 2011 வரை 19.14 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. தேசிய அளவில் PTR ஆனது 2005-06ல் தொடக்க நிலையில் 36 ஆக இருந்து 33 மற்றும் 31 ஆகவும் முதன்மை மற்றும் மேல்நிலைப் பிரிவுகளாக உயர்ந்துள்ளது. முதன்மை நிலை முறையே மாவட்ட தகவல் அமைப்பின் படி,  (DISE) - 2009-10. 


ராஜ்யசபாவில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய மனிதவளத்துறை இணை அமைச்சர் டாக்டர் டி.புரந்தேஸ்வரி இந்த தகவலை தெரிவித்தார். 


தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான மாணவர் - ஆசிரியர் விகித அட்டவணை...



Student - Teacher Ratio Table for Primary & Upper Primary Schools...






Pupil-Teacher Ratio as per RTE Act, 2009...


Students Sanctioned as per RTE

Class 1-5 : 30 students per class

Class 6-8 : 35 students per class

Class 9&10 : 40 students per class

Class 11&12 : 50 students per class


In the Kallakurichi district, among a total of 523 primary schools, 31 Panchayat Union Primary schools have a student enrollment of 15 or fewer students, which represents 10% or less of their capacity. Similarly, among 202 middle schools, 1 Panchayat Union Middle school has a student enrollment of 64 or fewer students, accounting for 25% or less of its capacity. Hence, for this study, we have specifically chosen Panchayat Union primary schools with a student enrollment of 10% or less and Panchayat Union middle schools with a student enrollment of 25% or less.


Category No of students as per RTE

Primary schools 150

Middle schools 255



Press Information Bureau

Government of India

Ministry of Human Resource Development

25-November-2011 16:18 IST

Pupil-Teacher Ratio


The Right of Children to Free and Compulsory Education (RTE) Act, 2009, which became operative with effect from 1st April, 2010, prescribed that Pupil-Teacher Ratio (PTR) in schools should be maintained as per the following specified levels:


A. For classes 1 to V:


(i) Two teachers for upto sixty admitted children


(ii) Three teachers for 61-90 children


(iii) Four teachers for 91-120 children


(iv) Five teachers for 121-200 children


(v) One head Teacher, other than the five teachers, if the number of admitted children exceeds 150 and the PTR (excluding Head Teacher) shall not exceed forty if the number of admitted children is above 200.


B. (i) At least one teacher per class so that there shall be at least one teacher each for (a) Science and Mathematics: (b) Social Studies: and (c) Languages.


(ii) At least one teacher for every 35 children:


(iii) Where admission of children is above 100, there shall be (a) a full time head-teacher and (b) part time instructors for Art Education, Health & Physical Education and Work Education.


Since inception Sarva Shiksha Abhiyan (SSA) in 2001-02, 19.14 lakh posts of teachers have been sanctioned till October, 2011. The PTR at National level has improved from 36 at Elementary level in 2005-06 to 33 and 31 at Primary and Upper Primary level respectively as per District Information System, for Education (DISE) n- 2009-10.


This information was given by Dr. D.Purandeswari, Minister of State for Human Resource in written reply to a question in Rajya Sabha today.



அரசாணை (நிலை) எண்: 189, பள்ளிக் கல்வித் துறை, நாள் 12.07.2010 - தமிழாக்கம்...

 

முதல் வகுப்பில் மாணவர்களைச் சேர்க்க 6 மாதம் தளர்வு - பிறப்புச் சான்றிதழ் இல்லையெனில், பள்ளிகளில் சேர்க்கைக்காக குழந்தையின் வயதுக்கான சான்றாகக் கருதப்படும் ஆவணங்கள் - அரசாணை (நிலை) எண்: 189, பள்ளிக் கல்வித் துறை, நாள் 12.07.2010 வெளியீடு...



>>> அரசாணை (நிலை) எண்: 189, பள்ளிக் கல்வித் துறை, நாள் 12.07.2010 - தமிழாக்கம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


முதல் வகுப்பில் மாணவர்களைச் சேர்க்க 6 மாதம் தளர்வு - பிறப்புச் சான்றிதழ் இல்லையெனில், பள்ளிகளில் சேர்க்கைக்காக குழந்தையின் வயதுக்கான சான்றாகக் கருதப்படும் ஆவணங்கள் - அரசாணை (நிலை) எண்: 189, பள்ளிக் கல்வித் துறை, நாள் 12.07.2010 வெளியீடு...


முதல் வகுப்பில் மாணவர்களைச் சேர்க்க 6 மாதம் தளர்வு - பிறப்புச் சான்றிதழ் இல்லையெனில், பள்ளிகளில் சேர்க்கைக்காக குழந்தையின் வயதுக்கான சான்றாகக் கருதப்படும் ஆவணங்கள் - அரசாணை (நிலை) எண்: 189, பள்ளிக் கல்வித் துறை, நாள் 12.07.2010 வெளியீடு...


6 months relaxation for admission of students in first standard - Documents considered as proof of age of child for enrollment in schools in absence of birth certificate - G.O. (Ms) No: 189, Department of School Education, Dated : 12.07.2010...


>>> Click Here to Download G.O. (Ms) No: 189, Department of School Education, Dated : 12.07.2010...



>>> அரசாணை (நிலை) எண்: 189, பள்ளிக் கல்வித் துறை, நாள் 12.07.2010 - தமிழாக்கம்...


அரசிதழ் எண்: 25, நாள்: 21-06-2023 - இலவச மற்றும் கட்டாயக் கல்விச் (RTE) சட்டத்தின் கீழ் 2022-2023, 2023-2024, 2024-2025 மற்றும் 2025-2026 ஆண்டுகளில் கல்விக்காக வகுப்பு வாரியாக ஒவ்வொரு குழந்தைக்கும் மாநில அரசு செய்யும் செலவினம், அரசிதழில் வெளியீடு (Gazette No: 25, Date: 21-06-2023 - Expenditure by the State Government on class wise per child for the years 2022-2023, 2023-2024, 2024-2025 and 2025-2026 under the Free and Compulsory Education Act)...


>>> அரசிதழ் எண்: 25, நாள்: 21-06-2023 - இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் 2022-2023, 2023-2024, 2024-2025 மற்றும் 2025-2026 ஆண்டுகளில் கல்விக்காக வகுப்பு வாரியாக ஒவ்வொரு குழந்தைக்கும் மாநில அரசு செய்யும் செலவினம், அரசிதழில் வெளியீடு (Gazette No: 25, Date: 21-06-2023 - Expenditure by the State Government on class wise per child for the years 2022-2023, 2023-2024, 2024-2025 and 2025-2026 under the Free and Compulsory Education Act)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கல்வி உரிமைச் சட்டம் – தனியார் பள்ளிகளில் 2023 -2024ஆம் கல்வி ஆண்டில் 25% இட ஒதுக்கீடு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் தேதி - தேவையான சான்றிதழ்கள் - செய்தி வெளியீடு எண்: 018/042023, நாள்: 17-04-2023 (Right to Education Act – 25% Reservation of Seats in Private Schools for Academic Year 2023-2024 Application Date for Admission – Required Certificates – Press Release)...





>>> கல்வி உரிமைச் சட்டம் – தனியார் பள்ளிகளில் 2023 -2024ஆம் கல்வி ஆண்டில் 25% இட ஒதுக்கீடு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் தேதி - தேவையான சான்றிதழ்கள் - செய்தி வெளியீடு எண்: 018/042023, நாள்: 17-04-2023 (Right to Education Act – 25% Reservation of Seats in Private Schools for Academic Year 2023-2024 Application Date for Admission – Required Certificates – Press Release)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE ) - 2023 - 24ஆம் கல்வியாண்டில் அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் (LKG / I Std) குறைந்தபட்சம் 25% இடஒதுக்கீடு வழங்குதல் - சேர்க்கை நடைமுறைகள் அறிவுரை வழங்குதல் - சார்பாக - தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநர் மற்றும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட மாநில முதன்மைத் தொடர்பு அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 3605/ இ1/ 2023, நாள்: 17.04.2023 (Right of Children to Free and Compulsory Education (RTE) Act - 2023-24 Academic Year - Provision of minimum 25% reservation in entry level (LKG / I Std) for children belonging to disadvantaged and weaker sections in all non-minority private self-financed schools - advising on admission procedures - Regarding - Proceedings of Tamil Nadu Director of Private Schools and State Chief Liaison Officer on Right to Free and Compulsory Education for Children Act RC.No: 3605/ E1/ 2023, Dated: 17.04.2023)...




>>> குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE ) - 2023 - 24ஆம் கல்வியாண்டில் அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் (LKG / I Std) குறைந்தபட்சம் 25% இடஒதுக்கீடு வழங்குதல் - சேர்க்கை நடைமுறைகள் அறிவுரை வழங்குதல் - சார்பாக - தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநர் மற்றும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட மாநில முதன்மைத் தொடர்பு அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 3605/ இ1/ 2023, நாள்: 17.04.2023 (Right of Children to Free and Compulsory Education (RTE) Act - 2023-24 Academic Year - Provision of minimum 25% reservation in entry level (LKG / I Std) for children belonging to disadvantaged and weaker sections in all non-minority private self-financed schools - advising on admission procedures - Regarding - Proceedings of Tamil Nadu Director of Private Schools and State Chief Liaison Officer on Right to Free and Compulsory Education for Children Act RC.No: 3605/ E1/ 2023, Dated: 17.04.2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 – 2021-2022ஆம் கல்வியாண்டிற்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு மாணவனுக்கான செலவு (Per Child Expenditure) தொடர்பாக அரசாணை (G.O.Ms.No.139, Dated: 10-08-2022) வெளியீடு...

 


>>> குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 – 2021-2022ஆம் கல்வியாண்டிற்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு மாணவனுக்கான செலவு (Per Child Expenditure) தொடர்பாக அரசாணை (G.O.Ms.No.139, Dated: 10-08-2022)...





2022-2023 கல்வியாண்டில் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி (RTE) அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகளுக்கு 25% இட ஒதுக்கீடு - தேவையான சான்றிதழ்கள், அவற்றைப் பெற வேண்டிய அலுவலர்கள் விவரம் மற்றும் அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட (RTE) மாநில முதன்மை தொடர்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரின் செயல்முறைகள் (25% reservation for deprived and disadvantaged children in all non-minority private Self-Financed schools under the Right to Education Act (RTE) for the academic year 2022-2023 - Required Certificates, Competent Authorities and Advice Proceedings of the Liaison Officer of Free and Compulsory Right to Education (RTE) Act for children and the Director of Tamil Nadu Matriculation Schools) ந.க.எண்: 1476/ இ1/ 2022, நாள்: 18-04-2022...


>>> 2022-2023 கல்வியாண்டில் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி (RTE) அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகளுக்கு 25% இட ஒதுக்கீடு - தேவையான சான்றிதழ்கள், அவற்றைப் பெற வேண்டிய அலுவலர்கள் விவரம் மற்றும் அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட (RTE) மாநில முதன்மை தொடர்பு அலுவலர் மற்றும்  தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரின் செயல்முறைகள் (25% reservation for deprived and disadvantaged children in all non-minority private Self-Financed schools under the Right to Education Act (RTE) for the academic year 2022-2023 - Required Certificates, Competent Authorities and Advice Proceedings of the Liaison Officer of Free and Compulsory Right to Education (RTE) Act for children and the Director of Tamil Nadu Matriculation Schools) ந.க.எண்: 1476/ இ1/ 2022, நாள்: 18-04-2022...






>>> குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE) 25% சேர்க்கை - 2022-2023ஆம் கல்வியாண்டில் பின்பற்ற வேண்டிய சேர்க்கை நடைமுறைகள் சார்ந்த அறிவுரைகள் - மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் (Right to Free and Compulsory Education for Children Act (RTE) 25% Admission - Advice on Admission Procedures to be followed in the 2022-2023 Academic Year - Proceedings of the Director of Matriculation Schools) ந.க.எண்: 1476/ இ1/ 2022, நாள்: 06-04-2022...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

On Duty Permission for Census Duty Teachers CEO Proceedings

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி - 31.08.2026 வரை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் ஆசிரிர்களுக்கு முற்பகல்/பிற்பகல் பிறபணியில் (OD) அனுமதி - தஞ...