கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கற்போம் எழுதுவோம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கற்போம் எழுதுவோம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சிறந்த கற்போம் எழுதுவோம் மையங்களுக்கு மாநில எழுத்தறிவு விருது(PLA Award Proposal Format ) – பட்டியல் சேகரிக்க உத்தரவு...



 பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் அவர்களின் கடிதத்தில் உள்ளவாறு மாண்புமிகு . பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை எண்.43 அறிவிப்பின்படி, கற்போம் எழுதுவோம் இயக்கத்தின் கீழ் திட்டச் செயல்பாடுகளை புதுமைச் செயல்பாடுகளுடன் சிறப்பாக செயல்படுத்திய கற்போர் மையங்களை ஊக்குவிக்கும் வகையில் மாநில எழுத்தறிவு விருது வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தருமபுரி மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் இணைப்பில் கோரப்பட்டுள்ள விவரங்களின்படி கற்போம் எழுதுவோம் இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்திய ஏதேனும் 2 மையங்களை (ஒரு ஒன்றியத்திற்கு) தெரிவு செய்து இணைப்பில் உள்ள படிவத்தின்படி கருத்துருக்களை பரிந்துரை செய்து அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஒன்றியங்களிலிருந்து பெறப்படும் கருத்துருக்கள் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுவினால் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு இறுதியாக 5 மையங்கள் தேர்வு செய்யப்பட்டு மாநில இயக்ககத்திற்கு அனுப்பப்படும்.


மாநில இயக்ககத்தால் அமைக்கப்பட்டுள்ள குழுவினால் இம்மையங்கள் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு இறுதியாக 3 மையங்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு மாநில எழுத்தறிவு விருது 2020-21 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிறந்த கற்போர் மையங்களுக்கான எழுத்தறிவு விருது வழங்குதல் என்பது வயது வந்தோர் கல்வித் திட்ட செயல்பாடுகளை சிறப்பாக செயல்படுத்துகின்ற மையங்களை ( பள்ளிகளை ) தெரிவு செய்து ஊக்கப்படுத்தும் ஒரு செயல்பாடாகும் . எனவே முன்குறிப்பிட்டுள்ள சிறந்த கற்போர் மையங்களுக்கான மாநில எழுத்தறிவு விருது வழங்குதல் சார்ந்த செயல்பாடுகளில் முறையான வெளிப்படைத் தன்மையை கையாண்டு , எந்தவித தொய்விற்கும் , சிக்கல்களுக்கும் இடமளிக்காத வளமைய வகையில் தனிக்கவனம் செலுத்தி சார்ந்த வட்டாரக்கல்வி அலுவலர்கள் , வட்டார மேற்பார்வையாளர்கள் , மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பரிந்துரையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 2 சிறந்த மையங்களின் கருத்துருக்களை உரிய படிவத்தில் வருகின்ற 01.09.2021 க்குள் மாவட்டத்திட்ட வளமைய அலுவலகத்திற்கு வட்டார அனுப்பி வைக்குமாறு மேற்பார்வையாளர்களுக்கு தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு.


>>> சிறந்த கற்போம் எழுதுவோம் மையங்களுக்கு மாநில எழுத்தறிவு விருது - கருத்துரு படிவம்...



கற்போம் எழுதுவோம் இயக்கம் - மாதிரி வினாத்தாள்...Karpom Ezhuthuvom - (PLA) Model Question Paper Download...



கற்போம் எழுதுவோம் இயக்கம் - மாதிரி வினாத்தாள்...


பள்ளிசாரா வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில், அடிப்படை கல்வியறிவு இல்லாத, 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு, கடந்தாண்டு நவம்பர் முதல் எழுத்தறிவு பயிற்சி வழங்கப்பட்டது. கற்போம் எழுதுவோம்' திட்டத்தில், பயிற்சி பெற்றவர்களுக்கான மதிப்பீட்டு முகாம் வரும் 29ல் துவங்குகிறது; 31ம் தேதி வரை, அந்தந்த மையங்களில் நடக்கவுள்ளது. அதற்கான மாதிரி வினாத்தாள் கீழே உள்ளது. தேவையுள்ள ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து அவர்களுக்கு பயிற்சி கொடுக்கலாம்..


>>> Click here to Download Karpom Ezhuthuvom - (PLA) Model Question Paper...


கற்போம் எழுதுவோம் இயக்கம் - மதிப்பீட்டு முகாம் குறித்த கேள்வி பதில்கள்...

 


கற்போம் எழுதுவோம் இயக்கம்,  விருதுநகர் மாவட்டம் - மதிப்பீட்டு முகாம் குறித்த கேள்வி பதில்கள்...


1.   *மதிப்பீட்டு முகாம்* என்றால் என்ன?


 கற்போர் களின் குறைந்தபட்ச கற்றல் அளவை கற்போரின் கற்ற நிலைக்கு ஏற்றவாறு மதிப்பிடும் நிகழ்வாகும். இது அடைவுத்தேர்வு அல்ல.


2.  மதிப்பீட்டு முகாம் *எப்பொழுது* நடத்தப்பட வேண்டும்?


 29. 7 2021 முதல் 31. 7 2021 வரை.


3.  மதிப்பீட்டு முகாம் *மையத்தில் மட்டும்தான்* நடத்தப்பட வேண்டுமா?


 இல்லை. கற்போருக்கு ஏதுவாக  மையம் இல்லத்தில், அவர்கள் பணியாற்றும் இடங்களில், குடியிருப்பு பகுதிகளில் நடத்தப்படலாம். 


4.  மதிப்பீட்டு முகாமை *அடைவுத்தேர்வு எனக்* கூறலாமா?


 கூறுதல் கூடாது.


5.  மதிப்பீட்டு முகாமை நடத்துவதற்கு  *முன்னாயத்த*  பணிகளாக எவற்றை மேற்கொள்ள வேண்டும்?


 மையத்தில் பயிலும் கற்போரை மதிப்பீட்டு முகாம் நடக்கும் நாட்களில் எந்த நாட்களில் அவர்களை மதிப்பீடு செய்வது,  எந்த இடத்தில் மதிப்பீடு செய்வது என கற்போர்  வசதிக்கு ஏற்றவாறு  மையத் தலைமை ஆசிரியரால்  மதிப்பீட்டு முகாம் நடப்பதற்கு முன்னரே  பட்டியல் தயார்  செய்ய வேண்டும். 


 6.பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கத்தால் வழங்கப்பட்டுள்ள *வினா-விடை* கையேட்டை  மதிப்பீட்டு படிவமாக பயன்படுத்தலாமா?


 மதிப்பீட்டுப் படிவம் ஆக பயன்படுத்தலாம்.


7. ஒன்றிய அளவில் *கூட்டங்கள் நடத்தப்பட* வேண்டுமா?


கொரோனா தொற்று பரவல் சார்ந்த  உரிய  வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி  மைய  தலைமை ஆசிரியர்கள் மற்றும்  தன் ஆர்வலர்களுக்கு நடத்தப்படலாம்.


8. கற்போரை  மதிப்பீடு  செய்யும் பொழுதே *திறன்கள் வாரியாக* மதிப்பெண் வழங்கப்பட வேண்டுமா?


ஆம்


9. கற்போருக்கு மதிப்பீட்டு முகாம் நடைபெறுவதை *தெரிவிக்கலாமா* ?


 முன்னரே தெரிவிக்க வேண்டும்.


 10.கற்போருக்கு  *திருப்புதல்* செயல்பாடுகள் மேற்கொள்ளலாமா?


 மேற்கொள்ளலாம் அவரவர் வீட்டு அளவில்


.11.  மையத்தில் சேராமல் இம் மதிப்பீட்டு முகாமில் *நேரடியாக பங்கேற்க*  கற்போர் விரும்பினால் அனுமதிக்கலாமா?


 அனுமதிக்கலாம்.


12.  மையத்திலுள்ள *கற்போர்* *எண்ணிக்கைக்கு* ஏற்றவாறு மதிப்பீட்டு முகாம் நடத்தப்பட வேண்டுமா?


 ஆம்


13.  மதிப்பீட்டு படிவங்களை மைய தலைமையாசிரியர்கள் *எப்பொழுது* பெற்றுக் கொள்வது?


 26. 7. 2021 முதல் 27. 7. 2021 க்குள்  வட்டார கல்வி அலுவலரின் மேற்பார்வையில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் இடம் பெற்றுக்கொள்ளலாம்.



14.  கற்போரின் எவ்வகையான *திறன்களை* மதிப்பீடு செய்ய  வேண்டும்?


 எழுதுதல், வாசித்தல் ,  எண்கள் அறிதல் திறன்.


 15.கற்போரை மதிப்பீடு செய்வது யார்?


 *தன்னார்வலர்* .


 16.மதிப்பீட்டு முகாம்  சிறப்பாக நடத்துவதற்கு  யார் யாரெல்லாம் *ஒருங்கிணைந்து*  செயல்பட வேண்டும்?


 வட்டார கல்வி அலுவலர், மேற்பார்வையாளர், மைய ஆசிரியர் பயிற்றுனர், பள்ளி தலைமையாசிரியர், மற்றும் தன்னார்வலர்


 17.கற்போரின் *ஒட்டுமொத்த சராசரி* மதிப்பெண் பட்டியல் எப்பொழுது தயார் செய்ய வேண்டும்?


 2.8. 2021 க்குள்  தலைமை ஆசிரியரால் மேற்கொள்ளப்பட வேண்டும்


18.  கற்போர் மதிப்பெண் TN *EMIS*  Web portal   இல் விவரங்களை பதிவு செய்ய வேண்டுமா?


 ஆம். ஆசிரிய  பயிற்றுநர்கள் வட்டார அளவில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


19.  மதிப்பீட்டு முகாம் நடைபெறும் ஒவ்வொரு நாட்களிலும்  பூர்த்தி செய்யப்பட்ட மதிப்பீட்டு படிவங்களை மைய தலைமையாசிரியரிடம் தன்னார்வலர் ஒப்படைக்க வேண்டுமா?


 ஆம்


20. ஒட்டுமொத்த சராசரி மதிப்பீடு *33* சதவீதத்திற்கும் குறைவாக பெற்ற கற்போருக்கு ஏதாவது ஒரு திறனில் ஐந்து மதிப்பெண் *கருணை*  மதிப்பெண்ணாக வழங்கலாமா?


 வழங்கலாம்.



21. மதிப்பீட்டு முகாம் நடத்துவதற்கு ஏதுவாக வட்டார அளவில் செயல் திட்டம் தயாரிக்கப் பட வேண்டுமா? 


ஆம். வட்டார அளவில் செயல் திட்டம் தயாரித்து அதன் அடிப்படையில் திட்டமிட்டு இயங்குதல் வேண்டும்.


22. கற்போர் பெற்ற மதிப்பெண்களை எத்தனை நாட்களுக்குள் ஆசிரியர் பயிற்றுனர்கள் TN EMIS WEB PORTAL ல் பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும்? 


03.08.21 முதல் 10.08.21 க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


23. இந்த மதிப்பீட்டு முறையில் ஒவ்வொரு திறனுக்கும் எத்தனை மதிப்பெண் வழங்கப்படும்?


ஒரு திறனுக்கு 50 மதிப்பெண் என்ற அளவில் மூன்று திறன்களை சோதித்து அறிய மொத்தம் 150 மதிப்பெண் வழங்கப்படும்.


24. கல்வி தன்னார்வலர்களை  தவிர்த்து விருப்பமுள்ள மற்ற தன்னார்வலர்களை  மதிப்பீடு செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாமா? 


பயன்படுத்தி கொள்ளலாம். தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.


25. மதிப்பீட்டு முகாம் நடைபெறும் ஒவ்வொரு நாட்களிலும் கலந்து கொண்ட  கற்போர் களின் எண்ணிக்கையை  Emis  web portal இல் பதிவு செய்ய வேண்டுமா?


  ஒவ்வொரு நாளிலும் பதிவு செய்ய வேண்டும்


26.

26.7.21&27.7.21 ஆகிய நாட்களில் மைய தலைமையாசிரியர்கள் மதிப்பீட்டு படிவத்தை பெற்றுக்கொண்ட விவரத்தை TN EMIS web portal  இல் பதிவு செய்ய வேண்டுமா?


 ஆம்  பெறப்பட்ட மதிப்பீட்டு படிவங்கள் இன் எண்ணிக்கையை பதிவு செய்ய வேண்டும்

 

27. கருணை மதிப்பெண் வழங்கி   33% பெற்று   கற்போரை வெற்றிகரமாக முடித்தவர் என சான்றிதழ் வழங்கலாமா?


 சான்றிதழ் வழங்கலாம்


28. கருணை மதிப்பெண் வழங்கியும் 33% பெற இயலாத கற்போருக்கு சான்றிதழில் எவ்வகையான அளவீடு தேவைப்படும்?


 முன்னேற்றம் தேவை என்ற அளவீடு தேவைப்படும்


 மாவட்ட திட்ட அலுவலகம் 

விருதுநகர்.



கற்போம் எழுதுவோம் இயக்கம் (PLA) - கற்றல் அடைவுகளில் கற்போருக்கான மதிப்பீட்டு முகாம் நடத்துதல் மற்றும் வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து கூட்டம் 22-07-2021 அன்று காணொளி காட்சி வாயிலாக நடைபெறுதல் சார்ந்து பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 743/ஆ3/2020, நாள்: 20-07-2021...

 


கற்போம் எழுதுவோம் இயக்கம் (PLA) - கற்றல் அடைவுகளில் கற்போருக்கான மதிப்பீட்டு முகாம் நடத்துதல் மற்றும் வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து கூட்டம் 22-07-2021 அன்று காணொளி காட்சி வாயிலாக நடைபெறுதல் சார்ந்து பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் உத்தரவு...

◆கற்போம் எழுதுவோம் இயக்கம் (PLA) - கற்றல் அடைவுகளில் கற்போருக்கான மதிப்பீட்டு முகாம் 29-07-2021 முதல் 31-07-2021வரை நடைபெறவுள்ளது 

◆அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து கூட்டம் 22-07-2021 அன்று காணொளி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது.


>>> பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 743/ஆ3/2020, நாள்: 20-07-2021...


கற்போம் எழுதுவோம் இயக்கம் - கற்போருக்கான அடைவுத் தேர்வு ஒத்திவைப்பு...

 



16.05.2021 அன்று நடத்திட திட்டமிடப்பட்ட கற்போருக்கான அடைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது தகவல் தெரிவித்தல் – உரிய தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்துதல்–சார்ந்து பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கக இயக்குநர் கடிதம்.




கற்போம் எழுதுவோம் இயக்கம் - பாடங்கள் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்புதல் - உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இயக்குனர் அறிவுறுத்தல்...

 


பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் - கற்போம் எழுதுவோம் இயக்கம் 2020-21 - கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் - அடிப்படை எழுத்தறிவுக் கல்வி சார் பாடங்கள் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்புதல் - திட்டம் சார் கற்போர்கள் பயன்பெறும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்துதல் - சார்பு - பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்குனர் செயல்முறைகள் ந.க.எண்: 743/ ஆ2/2020, நாள்: 26.04.2021...




கற்போம் எழுதுவோம் திட்டத்தில் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை...

 கற்போம் எழுதுவோம் திட்டத்தில் பயின்றவர்களுக்கான தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆறுமுகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது.



காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 47 மையங்களில் கற்போம் எழுதுவோம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி கிராமப் பகுதிகளில் எழுத்தறிவில்லாத 20 பேரை இணைத்து, இந்த மையங்கள் மூலம் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இந்த வகுப்புக்கு தினமும் சராசரியாக 3 முதல் 5 பேர் மட்டுமே வந்தனர். 


தொடர்ந்து வகுப்புக்கு வர தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்த போதும் வரஇயலாத நிலை உள்ளதாக அவர்கள் தெரிவித்து விட்டனர். இந்நிலையில் இந்த மையங்களில் பயின்றவருக்கு வரும் 27ம் தேதி தேர்வு நடைபெறும். 26ம் தேதிவரை திருப்புதல் தேர்வு நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 


மேலும் தேர்வுப் பணியை முறையாக முடிக்காத தலைமை ஆசிரியர்களுக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என அச்சுறுத்தப்படுகிறது. இந்தப் பயிற்சி வகுப்புக்கு வர இயலாது என கூறியவர்களை தேர்வுக்கு மட்டும் எப்படி வரவழைக்க முடியும். மேலும் கொரோனா பேரிடர் பரவல் மற்றும் தமிழக சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு 1 முதல் 11ம் வகுப்புவரை முறையான கல்வி திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. 


இந்தவேளையில், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயிலும் கற்போம் எழுதுவோம் திட்டத்தில் உள்ள கற்போருக்கான தேர்வினை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கற்போம் எழுதுவோம் திட்டம் - மாதிரி வினாத்தாள் PDF...



>>> கற்போம் எழுதுவோம் திட்டம் - மாதிரி  வினாத்தாள் (Model Question Paper) - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கற்போம் எழுதுவோம் திட்டத்தில் தேர்விற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது...

 


>>> கற்போம் எழுதுவோம் திட்டத்தில் தேர்விற்கான வழிகாட்டு நெறிமுறைகள்...

கற்போம் எழுதுவோம் மையங்களில், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை TN-EMIS செயலியில் பதிவேற்றம் செய்ய இயக்குனர் உத்தரவு...

 


கற்போம் எழுதுவோம் மையங்களில், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை TN-EMIS செயலியில் பதிவேற்றம் செய்ய இயக்குனர் கடிதம் ந.க.எண்: 743/ ஆ2/ 2020, நாள்: 21-01-2021...

கற்போர் மையங்களில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள், தன்னார்வல ஆசிரியர்கள் மற்றும் வருகைப் பதிவு பதிவேற்றம் செய்யப்பட்டதை உறுதி செய்தல், கற்போர் மையம் பார்வையிடுதல், கற்போர் மையம் பார்வை குறிப்பை TN-EMIS கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தல் குறித்து பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இயக்குனரின் கடிதம்...

>>> பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இயக்குனரின் கடிதம் ந.க.எண்: 743/ ஆ2/ 2020, நாள்: 21-01-2021 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


TN-EMIS ல் கற்போர் மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் வருகையினை சரியாக பதிவு செய்ய இயக்குநர் உத்தரவு...

 


மாநில திட்ட இயக்குநர் மற்றும் உறுப்பினர் செயலர் , தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையம் அவர்களின் வழிக்காட்டுதல்களின்படி , “கற்போம் எழுதுவோம் இயக்கம் - புதிய வயது வந்தோர் கல்வித் திட்டத்தின் கீழ் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 30.11.2020 முதல் கற்போர் மையங்கள் ( Leaners Literacy Centers ) துவங்கப்பட்டு முதற்கட்டமாக , ஒவ்வொரு கற்போர் மையத்திற்கும் குறைந்த பட்சம் 20 கற்போர்களை இலக்காகக் கொண்டு அந்தந்த தன்னார்வல ஆசிரியர்களின் வாயிலாக கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் , கற்போர் மையச் செயல்பாடுகள் , தன்னார்வல ஆசிரியர்கள் மற்றும் கற்போரின் வருகை விவரங்களை தொடர்ந்து கண்காணித்திடும் பொருட்டு பார்வை ( 2 ) -இல் காணும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் ( சமக்ர சிக்ஷா ) திட்ட இயக்குநர் ஆலோசனைகளின் அடிப்படையில் TN - EMIS கைபேசி செயலியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கற்போர் மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் வருகைப் பதிவு விவரங்களை பதிவேற்றம் செய்திடுமாறு பார்வை ( 3 ) இல் காணும் இவ்வியக்கக் கடிதத்தின்படி உரிய வழிக்காட்டுதல் நெறிமுறைகள் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது.

 இதனைத் தொடர்ந்து இணைப்பில் கண்டுள்ள 18.12.2020 அன்றைய TN - EMIS அறிக்கையின்படி கற்போர் மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் வருகை பதிவு விவரங்கள் குறைந்த அளவில் TN - EMIS கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தெரிய வருகிறது . எனவே இனிவரும் நாள்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கற்போர் மைய தன்னார்வல ஆசிரியர்கள் TN EMIS கைபேசி செயலியில் முன்குறிப்பிடப்பட்ட விவரங்களை பதிவேற்றம் செய்திட உரிய நடவடிக்கைகாக உடனடியாக மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

கற்போம் எழுதுவோம் இயக்கம் - புதிய வயது வந்தோர் கல்வி திட்டம் - தன்னார்வ ஆசிரியர்கள் மற்றும் கற்போரின் மைய வருகையை EMIS Attendance App மூலம் பதிவு செய்ய வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்...

 கற்போம் எழுதுவோம் இயக்கம் - புதிய வயது வந்தோர் கல்வி திட்டம் - தன்னார்வ ஆசிரியர்கள் மற்றும் கற்போரின் மைய வருகையை EMIS Attendance App மூலம் பதிவு செய்ய வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்...

>>> இயக்குனர் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கற்போம் எழுதுவோம் - புதிய வயது வந்தோர் கல்வித்திட்டம் செயல்படுத்துதல் - 30-11-2020 அன்று பிற்பகல் காணொளி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடத்துதல் சார்ந்து பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித்திட்ட இயக்குநரின் கடிதம்...

 கற்போம் எழுதுவோம் - புதிய வயது வந்தோர் கல்வித்திட்டம் செயல்படுத்துதல் - 30-11-2020 அன்று பிற்பகல் காணொளி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடத்துதல் சார்ந்து பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித்திட்ட இயக்குநரின் கடிதம்...

>>> இயக்குனரின் செயல்முறைகள்...


🍁🍁🍁 கற்போம் எழுதுவோம் இயக்கம் -வார பாடத்திட்டம் (Weekly syllabus)...

 >>> கற்போம் எழுதுவோம் இயக்கம் - வார பாடத்திட்டம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


🍁🍁🍁 புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் 23.11.2020 க்கு பதிலாக 30.11.2020 முதல் தொடங்கப்படுதல் குறித்து பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இயக்குனர் கடிதம்...

 


🍁🍁🍁 கற்போம் எழுதுவோம் இயக்கம் தன்னார்வல ஆசிரியர் கையேடு...

 >>> கற்போம் எழுதுவோம் இயக்கம் தன்னார்வல ஆசிரியர் கையேடு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


🍁🍁🍁 கற்போம் எழுதுவோம் இயக்கம் - Learners Book (அடிப்படை எழுத்தறிவு நூல்)...

 >>> கற்போம் எழுதுவோம் இயக்கம் - Learners Book (அடிப்படை எழுத்தறிவு நூல்) தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் (File Size : 46MB)...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை விடுமுறை அறிவிப்பு - 29.11.2024

  கனமழை காரணமாக 29-11-2024 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools &am...