கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>> தற்காலிக மற்றும் தகுதிகாண் பருவத்தினருக்கு ஊதிய உயர்வு பற்றிய நடைமுறை மற்றும் அரசாணைகள்...

 (அ) தற்காலிக ஊழியர்களுக்கும் ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்படும். ஆனால், அவர் வசிக்கும் பதவியில் தகுதிகாண் பருவக்காலத்தில் தேர்வுகள் ஏதேனும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தால் முதல் ஊதிய உயர்வு மட்டும் வழங்கப்படும். இரண்டாம் ஊதிய உயர்வு குறிப்பிட்ட அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர்தான் வழங்கப்படும். (அரசாணை எண். 1087, நிர்வாகத்துறை, நாள் 10.11.1982 அரசாணை எண். 231, P&AR,சி.16383 மற்றும் அரசு க.எண் 35068DOFIP&AR,நாள் 1.1.1994) தற்காலிகமாக பதவி உயர்வு பெற்றவருக்கும் ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt. Letter. No. 15285/FR.1746, Finance dated. 16.8.1975)


(ஆ) தகுதிகாண் பருவத்தினருக்கு ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்படும். தகுதிகாண் பருவக் காலத்தில் தேர்வுகள் வரையறை செய்யப்பட்ட பதவிகளுக்கு இரண்டாம் ஊதிய உயர்வு குறிப்பிட்ட அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் வழங்கப்படும். தகுதிகாண் பருவம் முடிந்து ஆணை வழங்கிய பின்னர் தான் இரண்டாவது ஊதிய உயர்வு வழங்கப்படவேண்டும் என்பது இனி இல்லை (G.O Ms No. 618, P&A.R., Dated 6.7.1987)


(இ) புதிய பதவியில் பணி அமர்த்தப்பட்டால், முந்தையப் பணிக்காலம் ஊதிய உயர்வுக்கு சேராது. இருப்பினும் அதே பதவியில் அதே துறையிலோ வேறு துறையிலோ பணி அமர்த்தப்பட்டால் அதே ஊதியம் வழங்குவதுடன் முந்தைய பணிக்காலம் ஊதிய உயர்வுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். (Govt. Letter. No.76362874, P&AR Dated 27.7.1988)


>>> பத்தாம் வகுப்பு - செப்டம்பர் 2020 - கணக்கு தேர்வு வினாத்தாள் மற்றும் விடைக் குறிப்புகள்....

 >>> Click here to Download SSLC(10th) Mathematics(23-09-2020) Question Paper...


>>> Click here to Download SSLC(10th) Mathematics(23-09-2020) Answer Key...

>>> தமிழ்நாட்டில் 31.10.2020 வரை கூடுதல் தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்குக்கான அரசாணை வெளியீடு...


>>> Click here to Download G.O.


>>> 02.10.2020 அன்று நடை பெற உள்ள கிராம சபை கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய பொருள்கள் விவரம்...

 





>>> Click here to Download as PDF File...

>>> பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு பற்றி மத்திய அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு - அக்.15ம் தேதிக்குப் பின்னர் மாநிலங்கள் முடிவெடுக்க அறிவுறுத்தல்...

 

>>> பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு பற்றி மத்திய அரசு வழிகாட்டுதல் விதிமுறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> 2018-2019 மற்றும் 2019-2020 நிதியாண்டுகளுக்கு வருமான வரி படிவம் தாக்கல் செய்ய நவம்பர் 30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது (இந்திய அரசின் நிதித்துறை துணைச் செயலாளர் கடிதம்)...

 கடந்த வருடம் (2018-2019 நிதியாண்டு)செய்ய வேண்டிய வருமான வரி தாக்கல் செப்டம்பர் 30உடன் நிறைவடைய இருந்தது. தற்போது  கொரோனா நோய் தொற்றின் காரணமாக நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  [இந்த வருடம் (2019-2020 நிதியாண்டு)செய்ய வேண்டிய வருமான வரி தாக்கலுக்கான கடைசி நாள் நவம்பர் 30 வரை முன்பே நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.] 



>>> ரேடியோ சிட்டியின் "கல்விக்கு கைகொடுப்போம்" நிகழ்ச்சி அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டு...

 


>>> யோனோ செயலி மூலம் வீட்டுக் கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு செயல்பாட்டு கட்டணம் தள்ளுபடி பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு...

 


>>> அரசுப் பள்ளிகளில் இதுவரை 15.9 8 லட்சம் மாணவர்கள் சேர்க்கை... (வகுப்பு வாரியான மாணவர் சேர்க்கை விவரம்)

 


>>> புதிய ஓய்வூதிய திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம் - ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம்...

 


>>> TNPSC- DISTRICT EDUCATIONAL OFFICER (DEO MAINS RESULTS ) PUBLISHED...

 DISTRICT EDUCATIONAL OFFICER IN THE 

TAMIL NADU SCHOOL  EDUCATIONAL SERVICE, 

2014-2015, 2015-2016 & 2016-2017

LIST-OT

The candidates whose Register Numbers are mentioned below have been provisionally admitted to the Oral Test for appointment by direct recruitment to the post of DISTRICT EDUCATIONAL OFFICER IN THE TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE, 2014-2015, 2015-2016 & 2016-2017 based on the results of the Main Written Examination conducted by the Commission from 27.07.2019 to 29.07.2019. The Oral Test will be held on 19.10.2020 at the office of the Tamil Nadu Public Service Commission, TNPSC Road, Chennai - 600 003. 

The candidates should attend the Oral Test with all original certificates in support of the claims made in their online applications. Individual Communication regarding the date and time of Oral Test will not be sent to the candidates by post.

>>> Click here to Download the List of Candidates (DEO 2019)Selected for Oral Test...

>>> மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம் - பள்ளி ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் - மாற்றுத் திறனாளி பள்ளி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்குதல் சார்ந்து கடிதம்...

 மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம் - பள்ளி ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் - மாற்றுத் திறனாளி பள்ளி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை  வழங்குதல் சார்ந்து கடிதம்...

மாற்றுத்திறனாளிகள் துறை முதன்மை செயலாளர் - பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அவர்களுக்கு கடிதம், நாள்:7/5/2012...


>>> CLICK HERE TO DOWNLOAD STATE COMMISIONER LETTER...

>>> பள்ளிக் கல்வி – 2019-20ஆம் கல்வியாண்டு - அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு - தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்குதல் – தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பெயர் பட்டியலினை அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்...

 


>>> Click here to Download School Education Director Proceedings in PDF Format...

>>> பள்ளிக் கல்வி - மேல்நிலைக் கல்வி பணி - அமைச்சுப் பணியிலிருந்து 2% ஒதுக்கீட்டில் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கியது - 2011 முதல் 2014 ஆம் ஆண்டு வரை நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை செய்வதற்கான கருத்துருக்கள் அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள்... (பணிவரன்முறை படிவம் மற்றும் இணைக்கவேண்டிய சான்றிதழ்கள் பட்டியலுடன்)

 

>>> Click here to Download Joint Director Proceedings & Regularisation Format...

>>> முன் சம்பளச் சான்றிதழ் (LPC) - PDF Format

 




>>> கரோனா இல்லை என போலிச் சான்றிதழ்கள் வழங்கி ரூபாய் 45 லட்சம் மோசடி - தனியார் ஆய்வக உரிமையாளர் கைது...

 


>>> கரோனா நோய்தொற்று பாதிப்பை உறுதி செய்யும் "ஃபெலுடா" பரிசோதனைக் கருவி மலிவானது -விஞ்ஞானிகள் தகவல்...

 


>>> தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு - தளர்வுகளுடன் பொது முடக்கம் அக்டோபர் 31 வரை நீட்டிப்பு - முதலமைச்சர்....

 


>>> தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற 86,326 பேர் விண்ணப்பம்...

 


>>> இன்றைய செய்திகள் தொகுப்பு... 30.09.2020(புதன்கிழமை)


🌹ஆண்களுக்கு ஆணவம் இருந்தாலும் சரி

பெண்களுக்கு ஆணவம் இருந்தாலும் சரி 

அழிவது என்னவோ 

பிள்ளைகளின் எதிர்காலம் மட்டுமல்ல 

ஒரு நல்ல குடும்பத்தின் வாழ்க்கையும் தான்.!

🌹🌹தூரமாக கூட இருந்துவிடலாம்.

ஆனால் யாருக்கும் பாரமாக மட்டும் இருந்துவிடக் கூடாது.!!

🌹🌹🌹சுகங்களை பகிர்ந்து கொள்ளும் அன்பைவிட.

சோகங்களை பகிர்ந்து கொள்ளும் அன்பே என்றும் உண்மையானது.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🎀🎀மாணவர் சேர்க்கை இன்று மாலையுடன் நிறைவு -நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

🎀🎀மருத்துவ காப்பீடு துறையில் புதிய விதிமுறைகள் அமல். வரும் அக் 1 முதல் புதிய விதி முறைகள் அமுலுக்கு வருகின்றன. மருத்துவ காப்பீடு பிரீமியம் உயர்கிறது

🎀🎀10,11,12 வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வி துறை கடந்த 24ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையை நிறுத்தி வைத்துள்ளது தமிழக அரசு.

🎀🎀தமிழகத்தில் தளர்வுகளுடன் அக். 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

👉தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடன், கட்டுப்பாடுகளுடனும் அக்டோபர் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது

👉பள்ளி, கல்லூரிகளுக்கான தடை தொடரும்

👉கூட்டங்கள், ஊர்வலங்களுக்கும் தடை நீட்டிப்பு.

👉பள்ளிகள் திறப்பு தொடர்பான அரசாணை நிறுத்திவைப்பு

👉திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு 100 பேர் வரை அனுமதி

👉சென்னை விமான நிலையத்தில் 100 விமானங்கள் தரையிறங்க அனுமதி

👉புறநகர் மின்சார ரயில் போக்குவரத்துக்கு தடை தொடரும்

👉உணவகங்கள், தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி

👉உணவகங்களில் பார்சல் சேவைக்கு இரவு 10 மணி வரை அனுமதி

🎀🎀பள்ளிக்கல்வித்துறையில் இரண்டு இணை இயக்குனர்கள் மாற்றம்

👉ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரக இணை இயக்குனர் வை. குமார், பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குனராக  மாற்றம் 

👉பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன் , மத்திய இடைநிலைக் கல்வித் திட்ட இணை இயக்குனராக மாற்றம்.

🎀🎀அரசுப் பள்ளிகளில் 16 லட்சத்தைக் கடந்த மாணவா் சோ்க்கை : பள்ளிக்கல்வித்துறை தகவல்.

நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2020-21-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்கியது. செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகபட்சமாக 1-ம் வகுப்பில் 3 லட்சத்து 8 ஆயிரம் மாணவர்களும், 6-ம் வகுப்பில் 3 லட்சத்து 66 ஆயிரம் மாணவர்களும், 9-ம் வகுப்பில் 1 லட்சத்து 4 ஆயிரம்  மாணவர்களும், 11-ம் வகுப்பில் 4 லட்சத்து 14 ஆயிரம் மாணவர்களும் புதிதாக சேர்ந்துள்ளனர்.

👉மாணவர் சேர்க்கை இன்று 30.09.2020(புதன்கிழமை) மாலையுடன் நிறைவடைவதால், இதுவரை தங்கள் குழந்தைகளை சேர்க்காத பெற்றோர்கள்,இன்று பள்ளிக்கு சென்று சேர்க்கையை உறுதி செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

🎀🎀புதிய வேளாண்மை சட்டங்களை எதிர்ப்பது விவசாயிகளின் நலன்களுக்காக மட்டுமல்ல என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

நாட்டின் எதிர்காலத்தையே பாதுகாக்கத் தான் புதிய வேளாண் சட்டங்களை எதிர்க்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்

🎀🎀மெரினாவை திறக்காதது ஏன் என தமிழக அரசு, சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தளர்வுகளை அறிவிப்பது அரசின் கொள்கை முடிவு என்றாலும் மெரினாவை திறக்காதது என்?. மேலும் மெரினாவில் பொதுமக்கள் எப்போது அனுமதிக்கப்படுவார்கள் என்றும் நீதிபதி வினித் கோத்தாரி அமர்வு கேள்வி எழுப்பினர். மேலும் மெரினாவில் பொதுமக்களை அனுமதிப்பது தொடர்பாக அக்.5-ல் பதிலளிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது

🎀🎀கொரோனா சிகிச்சையில் ‘டீகோப்ளானின்’ மருந்து 20 மடங்கு பலன் தருகிறது - 

ஐ.ஐ.டி. நடத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு

🎀🎀கொரோனா பாதிப்புள்ள மாணவர் சட்டப் படிப்பு பொது நுழைவுத்தேர்வு எழுத உச்சநீதிமன்றம் அனுமதி.                                          🎀🎀டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக 3 ஆண்டு படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

🎀காமராசர் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் 20 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி

🎀🎀அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. படிக்க விருப்பம்: பொறியியல் தரவரிசையில் முதலிடம் பிடித்த கோவை மாணவி தகவல்.

🎀🎀வெளிநாடுகள் மற்றும் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களில், உள்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் எனும் அம்சம் இனி இடம்பெறாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

🎀🎀சீன நிறுவனத்துக்குச் சொந்தமான டிக் டாக் செயலி மீது அமெரிக்க அரசு விதித்த தடையை கொலம்பியா மாகாண நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

🎀🎀ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பு மருந்தை தனக்குச் செலுத்த இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

🎀🎀அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி தொடர் ஓட்டம், ஜப்பானில் மார்ச் மாதம் 25ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

🎀🎀சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இந்தியாவில் தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொள்வதாக அறிவிப்பு. 

அமைப்பு மீதான இந்திய அரசின் பொய்க்குற்றச்சாட்டு மற்றும் அடக்குமுறையே இம்முடிவுக்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ளது.

🎀🎀அக்டோபர்- டிசம்பர் வரை நாடு முழுவதும் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் : ஆய்வில் தகவல்.

🎀🎀அக்டோபர் 1 மற்றும் 2ஆம் தேதி நடைபெறவிருந்த திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவு

🎀🎀தமிழகத்தில் காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இல்லை - இந்திய தேர்தல் ஆணையம்

🎀🎀கால்நடை மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் அக்.9ஆம் தேதி வரை நீட்டிப்பு.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் விண்ணப்பிக்க அக்.23ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

- கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம்.

🎀🎀துணை ஜனாதிபதிக்கு தொற்று உறுதி என முடிவு வந்தாலும்,அவருக்கு அறிகுறி ஏதும் இல்லை.நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். 

அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவரது மனைவிக்கு கொரோனா தொற்று இல்லை. 

- துணை ஜனாதிபதி அலுவலகம்

🎀🎀RTE - 2009 - நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு வழங்குதல் - விண்ணப்பத்தை ஆய்வு செய்தல் மற்றும் சேர்க்கைக்கான அறிவுரைகள் வழங்கி தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு.

🎀🎀மாரடைப்பிலிருந்து காப்பாற்றும் "லோடிங் டோஸ்"... (டாக்டர்.பக்தவச்சலம், கே.ஜி.மருத்துவமனை)..

🎀🎀அக்டோபர் 2 அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.                                  🎀🎀இன்ஸ்பயர் அவார்ட்-க்கு விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

🎀🎀நியாய விலைக் கடைகளில் அக்டோபர் 1 முதல் பயோமெட்ரிக் முறை - நியாயவிலைக் கடைக்கு செல்வோர் கட்டாயம் கைபேசி எடுத்துச் செல்வது நல்லது.

🎀🎀இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் சேர இந்த ஆண்டில் மொத்தம் 86,326 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது

🎀🎀அக்டோபர் 1 முதல் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடர உள்ளதாக  உயர்க்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்

🎀🎀வருமான வரி கணக்கு தாக்கல் கடந்த 3 ஆண்டுகள் தாக்கல் செய்யாதவர்களுக்கு மட்டும் return செய்ய இன்றே கடைசி நாள்.  இவ்வாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நவம்பர்- 30 ஆம் தேதி கடைசி நாளாகும்.

🎀🎀'இன்டர்நெட்' வேகம் குறைவு, நெட்வொர்க் பிரச்னை காரணமாக, வகுப்புகளை முழுமையாக கவனிக்க முடியாத நிலையில் உள்ளனர். இதனால், 'ஆன்லைன்' வகுப்புகளில் நடத்தப்பட்ட பாடங்கள் முழுவதும், பள்ளி திறந்ததும், மீண்டும் கற்பிக்க வேண்டிய நிலை உள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர் - நாளிதழ் செய்தி 

🎀🎀தமிழகத்தில் 10ம் வகுப்பு தனித்தேர்வு அறிவிக்கையை ரத்து செய்யக் கோரும் மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு 

🎀🎀ஒடிசா மாநிலத்தில் நந்தா பிராஸ்டி என்ற பெரியவர் மரத்தடியில் அமர்ந்தபடி பள்ளி மாணவர்களுக்கு 75 ஆண்டுகளாக ஒரு பைசாகூட வாங்காமல் பாடம் கற்பித்துவருகிறார் - நாளிதழ் செய்தி 

🎀🎀தர்மபுரி மாவட்டத்தில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த தலைமை ஆசிரியை 30 ஆண்டுகளாக பணி புரிந்தது அம்பலம் - நாளிதழ் செய்தி.

🎀🎀ஐபிஎல் டி20 லீக்: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

🎀🎀கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை:- 

👉நேற்று   கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை:

தமிழகத்தில்  -  5546

சென்னையில் -1277 

👉நேற்று வரை கொரோனாவால் பாதித்தோர் மொத்த எண்ணிக்கை:

தமிழகத்தில்  - 591943 

சென்னையில்-166029 

👉நேற்று  கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை:

தமிழகத்தில்  -  5501

சென்னையில் -1119 

👉நேற்று வரை கொரோனாவில் இருந்து  குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை:

தமிழகத்தில்  - 536209

சென்னையில்-151641

👉நேற்று கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை:

தமிழகத்தில்  -  70

சென்னையில் -16

👉நேற்று வரை  கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை:

தமிழகத்தில்  -  9453

சென்னையில் - 3195 

👉நேற்று வரை  கொரோனாவால் சிகிச்சையில் உள்ளோர்களின் மொத்த எண்ணிக்கை: 

தமிழகத்தில்  -  46281

சென்னையில் -11193

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

>>> கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கை - முக்கியமான தேதிகள்

 


>>> RTE - 2009 - நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு வழங்குதல் - விண்ணப்பத்தை ஆய்வு செய்தல் மற்றும் சேர்க்கைக்கான அறிவுரைகள் வழங்கி தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு...

 

>>> Click here to Download Matriculation Schools Director Proceedings - Regarding RTE Admission...

>>> பள்ளிக்கல்வித்துறையில் இரண்டு இணை இயக்குனர்கள் மாற்றம்...


ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரக இணை இயக்குனர் செல்வகுமார், பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குனராக  மாற்றம் 

பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன் , மத்திய இடைநிலைக் கல்வித் திட்ட இணை இயக்குனராக மாற்றம்

>>> தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்படுவது எப்படி...? ( நடைமுறைகள் மற்றும் அரசாணைகள்)

 ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மட்டுமின்றி, பொதுவாக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது பற்றிய அரசு விதிகள் மற்றும் அரசாணைகள் பற்றி பார்ப்போம்.

பொதுவான அரசாணைகள்

(அ) ஆண்டுதோறும் வழக்கம்போல் 3% ஊதிய உயர்வு வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. (அடிப்படை விதி 24) (FINANCE (PAY CELL) DEPARTMENT G.O. Ms. No. 234, DATED: 1ST JUNE, 2009)

(ஆ) ஒரு ஊழியர் மீது குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்தாலும் கூட ஊதிய உயர்வு வழங்கலாம். (அடிப்படை விதி 24-ன் துணை விதி (8) அரசு கடித.எண் 41533/பணி என்37-9, பணியாளர், நாள் 8.4.1988)

(இ) ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களின் முதல் தேதியில் ஊதிய உயர்வு வழங்கப்படும். FINANCE (PAY CELL) DEPARTMENT G.O. Ms. No. 234, DATED: 1ST JUNE, 2009)

 (ஈ) புதியதாக பணி ஏற்கின்ற அல்லது பதவி உயர்வில் பணி ஏற்கின்ற ஒருவருக்கும் முதல் ஊதிய உயர்வு, இணையான காலாண்டின் துவக்கத்தில் வழங்கப்படும். இவர்கள் விஷயத்தில் ஓராண்டு பணி முடிக்க வேண்டிய அவசியமில்லை. (G.O.Ms.No.41 Finance Dept, Dated 11.1.1977 மற்றும் Govt Letter No.171550அவி173 Finance Dept, Dated 1.10,1991)

(உ) ஊதிய உயர்வு நிலுவை இருப்பின், அதற்கான சான்று கையொப்பமிட்ட நாளிலிருந்து ஓராண்டுக்குள் வழங்கப்பட வேண்டும். தவறின், அடுத்த உயர் அலுவலரின் முன் தணிக்கை பெற வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேலும் நிலுவையாக உள்ள இனங்களுக்குத் துறைத் தலைவரின் அனுமதி தேவை. (G.O Ms No.1285, Finance department Dated 11.10.1973 மற்றும் G.O Ms No.349, Finance department, Dated 21.5.1981)

(ஊ) தேர்வுகள் தேர்ச்சி பெறுவதற்காக ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டியிருப்பின், தேர்வுகள் நடந்த கடைசி நாளுக்கு (பிரிவுகளாக நடந்திருப்பின், பிரிவுத் தேர்வு நடந்த கடைசி நாளுக்கு) மறுநாள் முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் (அடிப்படை விதி 26(எ)ன் துணை விதி (2)

>>> மாரடைப்பிலிருந்து காப்பாற்றும் "லோடிங் டோஸ்"... (டாக்டர்.பக்தவச்சலம், கே.ஜி.மருத்துவமனை)...

 


>>> சரியான முறையில் முகக்கவசம் அணியும் வழிமுறைகள்....

 உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் # COVID19லிருந்து பாதுகாக்க, பருத்தி துணியினால் ஆன முகக்கவசத்தை சரியாக அணிய எட்டு எளிய படிநிலைகள் உள்ளன.


உங்கள் முகக்கவசத்தை அணிந்ததற்கு நன்றி.

#TogetherAgainstCOVID19

>>> தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அக்டாேபர் 31 வரை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு - செய்தி வெளியீடு...

 






ஆசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு - பணி விடுவிப்பு மற்றும் சேர்க்கை அறிக்கை படிவங்கள் [Teachers Transfer & Promotion - Relieving & Joining Report Format]...

 


>>> Click here to Download Relieving Report [PDF Format - Model 1]


>>> Click here to Download Relieving Report [PDF Format - Model 2]


>>> Click here to Download Relieving Report [PDF Format - Model 3]


>>> Click here to Download Relieving Report [PDF Format - Model 4]


>>> Click here to Download Relieving Report [PDF Format - Model 5]



>>> Click here to Download Joining Report [PDF Format - Model 1]


>>> Click here to Download Joining Report [PDF Format - Model 2]






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




>>> அக்டோபர் 2 அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது...

 





>>> இன்ஸ்பயர் அவார்ட்-க்கு விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது...

 The last date for submitting nominations for INSPIRE Awards - MANAK is extended until 15th October, 2020



>>> மருத்துவ காப்பீடு துறையில் புதிய விதிமுறைகள் வரும் அக் 1 முதல் நடைமுறைக்கு வருகின்றன. மருத்துவ காப்பீடு பிரீமியம் உயர்கிறது...

 




>>> பள்ளி மாணவர்கள் படிக்க நிதியுதவி...

 


>>> ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பு மருந்து பரிசோதனை தொடங்கியது... சென்னையில் இரண்டு பேரிடம் பரிசோதனை...

 


>>> பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் - வழிகாட்டுகிறது புதுச்சேரி...

 


>>> இதயத்தையும் குறிவைக்கும் கரோனா... ஸ்டாடின் மருந்துகளுக்கு நேரடியாக வைரஸ்களை தாக்கி அழிக்கும் திறன் உள்ளது அறியப்பட்டுள்ளது...

 


>>> காற்றின் வழி பரவும் கரோனா... முக கவசம் அணிவதில் தீவிர கவனம் தேவை...

 


>>> இன்று(29-09-2020) உலக இதய தினம் - இதயம் இதமாக இருக்க 10கட்டளைகள்...

 


>>> நியாய விலைக் கடைகளில் அக்டோபர் 1 முதல் பயோமெட்ரிக் முறை - நியாயவிலைக் கடைக்கு செல்வோர் கட்டாயம் கைபேசி எடுத்துச் செல்வது நல்லது...

 


>>> பள்ளிகள் திறப்புக்கான அரசாணை நிறுத்திவைப்பு: முதல்வர் விளக்கம்...

தமிழகத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்வது குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்குச் செல்லலாம் என்று அனுமதி அளித்து, பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அரசாணை நிறுத்திவைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதை அடுத்து, அதை மேலும் தளர்வுகளுடன் நீட்டிப்பது, கரோனா நோய்த் தொற்றின் நிலவரம் பற்றியும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசிய முதல்வர் பழனிசாமி, மாணவர்களின் நலன் கருதி, பெற்றோர்களிடம் கருத்துகள் கேட்டறிந்து, மருத்துவக் குழுவினருடன் கலந்தாலோசனை செய்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழகத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1-ம் தேதி முதல் பள்ளிக்குச் செல்லலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்திய பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டங்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10 - ஆவது தளத்தில் நடைபெறுகிறது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும், மருத்துவ நிபுணர்களுடனும் முதல்வர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பிறகு, கரோனா நோய்த் தொற்றுக்காக அமல்படுத்தப்பட்டு வரும் பொது முடக்கத்தில் மேலும் பல தளர்வுகள் அளிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

 நன்றி : தினமணி

>>> மாணவர்கள் தரவரிசை பட்டியல் வெளியீடு... பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு.... அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார்...

 

>>> இன்றைய செய்திகள் தொகுப்பு... 29.09.2020(செவ்வாய்க்கிழமை)


🌹நம்மைவிட இன்னொருவர் முக்கியமாகிவிடும் போது கோபம்,விவாதம்,அழுகை இவை எதுவும் முன்னுரிமை தரப்போவதில்லை 

தன்மானத்துடன் விலகிப் போவதே சிறந்தது.!

🌹🌹போதிக்கும் போது கற்றுக்கொள்ளாத பாடத்தை 

பாதிக்கும் போதுதான் கற்றுக் கொள்கிறோம்.!!

🌹🌹🌹தவறுகளை தன் மீது வைத்துக் கொண்டு 

மெளனம் காப்பவர்களிடம் கவனமாக இருங்கள்.

ஏனெனில் கோபத்தில் நீங்கள் பேசும் வார்த்தைகளை வைத்து இறுதியில் உங்களையே குற்றவாளி ஆக்கிவிடுவார்கள்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌈🌈தொடக்கக்கல்வி - 2019-20ஆம் கல்வி ஆண்டில் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு மாறுதல் ஆணை பெற்று இன்னும் பழைய ஈராசிரியர் பள்ளிகளிலேயே பணிபுரியும் 487 இடைநிலை ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவிக்கவும், அவரவர் மாறுதல் பெற்றுள்ள புதிய பள்ளிகளில் பணியேற்று பணிபுரியவும் அனுமதி அளித்து ஆணை அளித்து தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

🌈🌈ரேங்க் பட்டியல் வெளியீடு:

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல் வெளியீடு.

பொறியியல் ரேங்க் பட்டியலில் சுஷ்மிதா என்ற மாணவி முதலிடமும், நவநீதகிருஷ்ணன் என்ற மாணவர் 2வது இடமும், காவ்யா என்ற மாணவி 3வது இடமும் பிடித்துள்ளனர்.

பொறியியல் படிப்பு மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் தங்கள் கட்-ஆப் மதிப்பெண்களை அறியலாம்.                                           🌈🌈செப்டம்பர் மாதத்தில் மட்டும் 34 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் முட்டை வழங்கப்பட்டுள்ளது.

🌈🌈பெயரில்லாமல் வரும் ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை வேண்டாம் -  மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவு.

🌈🌈சுற்றுச்சூழல் கண்காணிப்பு செயற்கைக்கோள்கள், இரண்டை வெற்றிகரமாக சீனா விண்ணிற்கு அனுப்பியிருக்கிறது. நில, நீர்வளம் மற்றும் பேரழிவுகளை கண்காணிக்கவும், வேளாண்மை மற்றும் வனவியல் தொழில்களுக்கான சேவைகளுக்கும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

🌈🌈சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்ய சிபிஐக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

சிறையிலுள்ள 9 காவலர்களுக்கும் குற்றப்பத்திரிகை நகல்களை வழங்கவும் உத்தரவு

🌈🌈மத்திய அரசு நிறைவேற்றி உள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கேரளத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.பிரபாகரன் உச்சநீதிமன்றத்த்தில் மனு தாக்கல் செய்துள்ளார். விவசாயிகள் நலனுக்கு எதிராக உள்ள 3 சட்டங்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ய மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

🌈🌈அக்டோபர் 7-ல் அ.தி.மு.க.வின் முதமைச்சர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவிப்பார்கள்.

-அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி 

🌈🌈ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி பரிசோதனை சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தொடங்கியுள்ளது.  2 தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

🌈🌈மறைந்த பாடகர் எஸ் பி.பாலசுப்பிரமணியத்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பாரத பிரதமர் மோடிக்கு கடிதம்

🌈🌈சொத்துவரியை உரிய காலத்தில் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை பெறலாம்

சொத்துவரியை சரியான காலத்திற்குள் செலுத்த தவறும் பட்சத்தில் ஆண்டிற்கு 2% தண்டத்தொகை செலுத்த நேரிடும்

- சென்னை மாநகராட்சி ஆணையர்

🌈🌈மத்திய அரசின் வேளாண் சட்டங்களை தங்களது மாநிலங்களில் நடைமுறைப்படுத்த முடியாத வகையில் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில்  சட்டப்பிரிவு 254(2) கீழ் சட்டம் இயற்ற சோனியாகாந்தி அறிவுறுத்தல்.

🌈🌈கேரளாவில், அக்-15 ஆம் தேதிக்குப் பின் சுற்றுலா தலங்கள் திறப்பு 

- அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்

🌈🌈கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பூசி, 2021, முதல் காலாண்டில் கிடைக்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

🌈🌈கேட் கியூ (CatQueVirus) வைரஸ் என்ற புதிய வைரஸ் இந்தியாவில் பரவியுள்ளதாக புனேவில் உள்ள ஐசிஎம்ஆரின் வைராலஜி ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

🌈🌈கேரள சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை:

கேரளாவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை தொடங்கியுள்ளது; பொதுமக்கள் அரசு அதிகாரிகளோடு ஒத்துழைக்கவில்லை என்றால் மீண்டும் முழுமுடக்கத்தை அமல்படுத்த நேரிடும்

🌈🌈அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

👉நீட் தேர்வை கைவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக தீர்மானம்!

🙏இருமொழி கொள்கையே அதிமுகவின் நிலைப்பாடு. 

👉மேகதாது அணை கட்ட முடிவு செய்துள்ள கர்நாடக அரசுக்கு கண்டனம்.

👉கொரோனா தடுப்பு பணிக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும். 

👉அதிமுகவினர் அயராது பணியாற்றி மீண்டும் ஆட்சி தொடர பாடுபட வேண்டும்.

🌈🌈மதுரை காமராஜர் பல்கலை கழகம் வேலம்மாள் மருத்துவ கல்லூரி இணைந்து புதிய முதுகலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

🌈🌈யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை ஒத்திவைக்க முடியாது : உச்ச நீதிமன்றத்தில் யுபிஎஸ்சி

🌈🌈DSE PROCEEDINGS:பள்ளிக் கல்வி - சிறப்பு ஊக்கத்தொகை - 2019-20 ஆம் கல்வியாண்டில் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு மாணவர்களின் விடுபட்ட விபரங்களை EMIS இணையதளத்தில் மீளவும் சரி செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

🌈🌈அரசு ஊழியர்கள் கணவன்-மனைவி இருவரும் பணிபுரிபவர்கள் -OBC-NON CREAMY LAYER -CERTIFICATE பெற மத்திய அரசின் தெளிவுரை கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.

🌈🌈ஆதிதிராவிடர் நலத்துறை - பதவி உயர்வு கலந்தாய்வு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கான கலந்தாய்வு அறிவிப்பு.

🌈🌈பள்ளிகள் திறப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இன்று  (29-ம் தேதி) முதல்வர் தெளிவான முடிவை அறிவிப்பார், என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

🌈🌈01.10.2020 நடைபெறுவதாக இருந்த காணொலிக் காட்சி ஆய்வுக் கூட்டம் 09.10.2020 நடைபெறுதல் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

🌈🌈கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட செமஸ்டர் தேர்வுகளில், மாஸ் காப்பி அடித்ததாக புகார் எழுந்துள்ளது.எனவே, அதுபோன்ற விடைத்தாள்களை பிரித்தெடுத்து, மதிப்பெண் வழங்குவது நிறுத்தப்பட்டு உள்ளது 

🌈🌈ராமநாதபுரத்தில் டி.என்.பி.எஸ்.சி. போலி பணி நியமன ஆணை தயாரித்த முதன்மைக்கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கண்ணன் , பணியில் சேர்ந்தவர்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

🌈🌈ஐபிஎல் 2020 : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் சூப்பர் ஓவர் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

🌹🌹பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் இன்று அறிவிப்பு.

-அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

🌹👉பள்ளிகள் திறப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இன்று (29-ம் தேதி) முதல்வர் தெளிவான முடிவை அறிவிப்பார், என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

👉கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. கரோனா பாதிப்பு குறையாத நிலையில் கல்வி ஆண்டு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த அரசு அனுமதி வழங்கியது. கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி மூலமாக பாடவகுப்புகள் நடத்தப்பட்டன

👉இந்நிலையில், கரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் வரும்வரை தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடர்ந்து தெரிவித்து வந்தார். ஆனால், கடந்த 24-ம் தேதியன்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், ‘அக்டோபர் 1-ம் தேதி முதல் 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பள்ளி செல்லலாம்’ என்ற உத்தரவினை வெளியிட்டார்.

👉50 சதவீத ஆசிரியர்கள் பணிக்குவர வேண்டும், இரு அணிகளாக பிரித்து வகுப்புகளை நடத்த வேண்டும், பள்ளி வரும் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற்று வர வேண்டும், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் வகுப்புகளில் பங்கேற்க வேண்டுமென்பதுள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அந்த உத்தரவில் இடம்பெற்று இருந்தன.

👉கரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில், அக்டோபர் 1-ம் தேதி பள்ளிகள் திறப்பு என்ற அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், 25-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ‘பாடங்கள் தொடர்பான சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளவே 10-ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் அக்டோபர் 1-ம் தேதி முதல் பள்ளிக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா தாக்கம் இருப்பதால், பள்ளிகள் திறப்பு என்பதை பள்ளிக்கல்வித்துறை மட்டும் அறிவித்து விட முடியாது’ என்று தெரிவித்தார். இதனால் பள்ளிகள் திறப்பு தொடர்பாக மேலும் குழப்பம் ஏற்பட்டது

🌹👉இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபி அருகில் உள்ள நம்பியூர் நாச்சிபாளையத்தில் குளம் புனரமைக்கும் பணியைத்தொடங்கி வைத்த அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

👉தமிழகத்தில் அக்டோபர் 1-ம் தேதி பள்ளிகள் திறக்க ஆணை பிறப்பிக்கவில்லை. 10-ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், பாடங்களில் சந்தேகம் இருந்தால் பெற்றோரின் சம்மதத்துடன் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம் என்றுதான் கூறப்பட்டுள்ளது. பள்ளிகளை திறப்பது தொடர்பாக இன்று (29-ம் தேதி)முதல்வர் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அதன் பிறகு பள்ளிகளை திறப்பது தொடர்பான தெளிவான முடிவை முதல்வர் அறிவிப்பார், என்றார்.

பள்ளிகள் திறப்பு குறித்த பல்வேறு முரண்பட்ட தகவல்கள் நிலவிய நிலையில், ‘29-ம் தேதி முதல்வர் தெளிவான முடிவை அறிவிப்பார்’ எனக்கூறி அமைச்சர் செங்கோட்டையன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

🌈🌈கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை:-

👉நேற்று கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை:

தமிழகத்தில்  - 5589

சென்னையில்-1283

👉நேற்று வரை கொரோனாவால் பாதித்தோர் மொத்த எண்ணிக்கை:

தமிழகத்தில்  - 586397 

சென்னையில்-164744

👉நேற்று கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை: 

தமிழகத்தில்  -  5554 

சென்னையில் -  921 

👉நேற்று வரை கொரோனாவில் இருந்து  குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை:

தமிழகத்தில்  - 530708 

சென்னையில்-150522

👉நேற்று கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை:

தமிழகத்தில்  -  70

சென்னையில் -13

👉நேற்று வரை  கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை:

தமிழகத்தில்  -   9383 

சென்னையில் - 3179

👉நேற்று வரை கொரோனாவால் சிகிச்சையில் உள்ளோர்களின் மொத்த எண்ணிக்கை: 

தமிழகத்தில்  -  46306

சென்னையில் -11043

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

>>> கொரோனா ஏற்படுத்திய திடீர் மவுசு மைக்ரோபயாலஜி படிக்க குவிந்த மாணவர்கள்: ஆய்வக படிப்புகள் மீது ஆர்வம்...

 தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் 85 சதவீத சேர்க்கை நிறைவடைந்த நிலையில், கொரோனா காலத்தால் மைக்ரோபயாலஜி படிப்பில் சேர மாணவர்களிடம் கடும் போட்டி நிலவுகிறது. தமிழக உயர்கல்வித்துறையின் கீழ், 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் 80 ஆயிரத்திற்கும் அதிகமாக முதலாம் ஆண்டு இடங்கள் உள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக, நடப்பாண்டு முதன்முறையாக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாநிலம் முழுவதும் உள்ள முதல்தர அரசு கலைக்கல்லூரிகளில் (25 ஆண்டுகளுக்கு மேல் உள்ள) 90 சதவீத இடங்களும், இதர கல்லூரிகளில் 80 சதவீத இடங்களும் நிரம்பிவிட்டன. தற்போது காலியாக உள்ள ஓரிரு இடங்களும் விரைவில் நிரப்பப்படவுள்ளது.

இதனிடையே, நடப்பாண்டு கொரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுவதும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அந்த நீட்சி, அரசுக்கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையிலும் எதிரொலித்தது. அதாவது, வைரஸ் தொடர்பான ஆய்வு மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் ஒன்றான பிஎஸ்சி மைக்ரோ பயாலஜி பாடப்பிரிவில் சேர வழக்கத்தை விட மாணவர்கள் அதிக ஆர்வம் கொண்டிருந்தனர். இதனால், அனைத்து கல்லூரிகளிலும் அந்த பிரிவு வேகமாக நிரம்பியது. இதுகுறித்து அரசுக்கல்லூரி பேராசிரியர்கள் கூறியதாவது: அரசுக்கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் விருப்ப பாடம் என்பது, அந்தந்த காலகட்டத்தில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபட்டு வருகிறது. நடப்பாண்டு யாரும் எதிர்பாராத வகையில், இளங்கலை மைக்ரோ பயாலஜி பாடப்பிரிவுக்கு கடும் போட்டி நிலவியது. பெரும்பாலான கல்லூரிகளில் அந்த பாடப்பிரிவிற்கு 40 இடங்கள் மட்டுமே உள்ளன.

ஆனால், சராசரியாக 300 பேர் வரை மைக்ரோபயாலஜி பாடப்பிரிவை கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.  ஆய்வு படிப்பான மைக்ரோபயாலஜி பிரதானமாக பார்க்கப்படுகிறது. மேலும், கொரோனா தொற்றை உறுதி செய்வதில், ஆய்வகத்தினரின் பங்கு முக்கியம். இதனால், வரும் காலங்களில் இதற்காக வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்ற காரணத்திற்காகவே, நடப்பாண்டு அந்த படிப்புக்கு அதிக போட்டி இருந்தது. இவ்வாறு பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

>>> போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த தலைமை ஆசிரியை -30 ஆண்டுகள் பணி புரிந்து வந்துள்ளார்...

 


>>> 2020-2021 மாணவர் சேர்க்கை அறிக்கை படிவம்...

 

>>> Click here to Download 2020-2021 Students Admission Report in PDF Format....

>>> அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான காணொலிக் காட்சி (VIDEO CONFERENCE) ஆய்வுக் கூட்டம் 01-10-2020-ம் தேதியிலிருந்து மாற்றம் செய்யப்பட்டு 09-10-2020 தேதி பிற்பகல் 2மணிக்கு நடைபெறுதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்....

 


>>> தொடக்கக்கல்வி - 2019-20ஆம் கல்வி ஆண்டில் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு மாறுதல் ஆணை பெற்று இன்னும் பழைய ஈராசிரியர் பள்ளிகளிலேயே பணிபுரியும் 487 இடைநிலை ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவிக்கவும், அவரவர் மாறுதல் பெற்றுள்ள புதிய பள்ளிகளில் பணியேற்று பணிபுரியவும் அனுமதி அளித்து ஆணை அளித்து தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது....

 





>>> பள்ளிக் கல்வி - சிறப்பு ஊக்கத்தொகை - 2019-20 ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு மாணவர்களின் விடுபட்ட விபரங்களை EMIS இணையதளத்தில் மீளவும் சரி செய்து அனுப்பவும், சரியான வங்கிக் கணக்கு எண் விவரங்கள் குறிப்பிடவும் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் கடிதம்... (இணைப்பு: அனைத்து வங்கிகளின் வங்கிக் கணக்கு எண் இலக்கங்கள்...)

 >>> Click here to Download DSE Proceedings and Annexure

>>> அசத்தும் அரசுப் பள்ளிகள் - மாணவர் சேர்க்கை குறித்து நக்கீரன் இதழ் செய்தி...


நன்றி : நக்கீரன் 2020 செப் 23-25

 

>>> பதவி உயர்வு கலந்தாய்வு - உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கான கலந்தாய்வு அறிவிப்பு... ஆதிதிராவிடர் நலத்துறை...

 


>>> அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நிரம்பாத இடங்களுக்கான சேர்க்கையை 30-ம் தேதி வரை நீட்டித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது...

 தமிழ்நாடு முழுவதும் உள்ள 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 87,000 இடங்களில் சுமார் 72,000 இடங்களில் மட்டுமே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். எஞ்சிய இடங்களை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கையை தொடர்ச்சியாக கல்லூரிகள் மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு ஏற்கனவே ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்கள் உடனடியாக தங்கள் அசல் சான்றிதழ்களுடன் கல்லூரிகளுக்கு சென்று சேர்க்கையை உறுதி செய்யலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.வரும் 30-ம் தேதி வரை புதிய மாணவர் சேர்க்கையை கல்லூரிகள் நடத்திக் கொள்ளலாம் என்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் ( 2020-2021 ) இளங்கலை (UG ) படிப்புகளில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு ஆகஸ்ட் 31 முதல் ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இளங்கலை(UG) படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை செப். 30-ம் தேதியுடன் முடித்து விட்டு, அக்டோபர் முதல் முதுகலை ( PG ) படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையைத் தொடங்க முடிவு செய்துள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

>>> சிறுபான்மையினர் நலம் - கல்வி உதவித் தொகை - கல்வி நிறுவனங்களுக்கு ஒருங்கிணைப்பாளர்(Institute Nodal Officer) நியமனம் செய்ய வேலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் ராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள்...


>>> Click here to Download Vellore Collector Proceedings...


>>> Click here to Download Ranipet CEO Proceedings...

>>> எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சிவகங்கை மாவட்ட வருவாய் அலகில் 45 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் (ஊதியம் ரூ.15,700/-)... விண்ணப்பிக்க கடைசி நாள்: 12-10-2020...

 


>>> கோடை விடுமுறையற்ற உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், இளநிலை உதவியாளர் பணியிடங்கள் பற்றிய விளக்கம்....

 





>>> இன்றைய செய்திகள் தொகுப்பு... 28.09.2020(திங்கட்கிழமை)...

 

🌹நிறைய பேசிக் கொண்டிந்தவர் திடீரென்று அமைதியாகி விட்டார் என்றால் 

அவர் ஊமையாகி விட்டார் என்று அர்த்தம் இல்லை.

இனி உங்களிடம் பேசக் கூடாது என்கிற அளவுக்கு நீங்கள் அவரை காயப்படுத்தி இருக்கின்றீர்கள்.!

🌹🌹ஒரே வார்த்தையில் எந்த உறவும் முறியலாம்.

ஆனால் ஓராயிரம் முறை மன்னிப்பு கேட்டாலும் மீண்டும் பழைய நிலைமைக்கு வராது.!!

🌹🌹🌹யாரையும் பார்த்து இவருக்கென்ன குறை என்று எடை போட்டு விடாதீர்கள்

இங்கு பல வலிகளோடு தான் வாழ்கிறார்கள் பலர்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

⛑பெற்றோரிடம் அனுமதி கடிதம் பெற்று சந்தேகம் கேட்க மட்டும் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

⛑⛑49 முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கு தலைமையாசிரியா்களாகப் பதவி உயா்வு

⛑⛑ரேஷன் கடைகளில் அக்.1ம் தேதி பயோமெட்ரிக் முறை அமல்: இனி குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பொருட்களை பெற முடியும்.

⛑⛑மறைந்த இந்திய பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் நினைவு இல்லம் கட்டப்படும் என்று அவரது மகன் எஸ்.பி.சரண் பேட்டியளித்துள்ளார்.

மேலும், எஸ்.பி.பி. உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை பார்வையிட போலீசுடன் ஆலோசித்து மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்

⛑⛑வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல். மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து குடியரசுத்தலைவர் நடவடிக்கை. ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, அரசிதழிலும் வெளியிட்டது மத்திய அரசு.

⛑⛑கேள்விக்குறியாகும் வெளிநாட்டு உயர்கல்வி? பட்டச் சான்றிதழ்களை விரைந்து வழங்குக: அன்புமணி வலியுறுத்தல்

⛑⛑கால்நடைப் பராமரிப்புத் துறையில் எழுத்துத் தேர்வு மூலம் உதவியாளர்களை நியமிக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

⛑⛑அக்டோபர் 5 முதல் 10,12ம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம்.  :  புதுச்சேரி  முதல்வர் 

⛑⛑தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% வனத்துறையில் பணி வழங்கக்கோரிய வழக்கு: தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

⛑⛑தமிழ்நாட்டில் பள்ளி திறப்பு பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை

-அமைச்சர் செங்கோட்டையன் 

⛑⛑மத்திய அரசு கொண்டுவந்த விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பா.ஜனதா கூட்டணியிலிருந்து சிரோமணி அகாலிதளம் வெளியேறியுள்ளது.

கூட்டணியிலிருந்து விலகிய அக்கட்சி அக்டோபர் ஒன்றாம் தேதி மிகப்பெரிய விவசாய பேரணி ஒன்றை நடத்தப் போவதாக தெரிவித்துள்ளது.

⛑⛑மத்திய அரசின் வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் உரிமைகளை கேள்விக்குள்ளாக்கும் வகையில் இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம், எட்டு வழிச் சாலை திட்டம் என ஏற்கனவே இருக்கும் திட்டங்கள் மூலம் தமிழக விவசாயிகள் வயிற்றில் அடித்த அரசு, விவசாயிகளின் கருத்துக்களை கேட்காமல் புதிய சட்டத்திற்கு ஆதரவு அளித்திருப்பதன் மூலம் விவசாயிகளுக்கு மேலும் ஒரு துரோகத்தை செய்துள்ளதாகக்  குற்றம் சாட்டியுள்ளார். 

விவசாயிகள் நலனை பாதுகாக்கும் சட்ட திருத்தங்களுடன், வேளாண் மசோதா சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.

⛑⛑நாடாளுமன்றம் நிறைவேற்றிய மூன்று வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

⛑⛑அண்ணா பல்கலை. பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நடைபெறவிருந்த பல்கலை. பேராசிரியர்களின் மனித சங்கிலி போராட்டம் ஒத்திவைப்பு. அக்டோபர் 1-ம் தேதிக்குப் பின் நடைபெறும் என்று தகவல்.

⛑⛑ஐபிஎல் 2020: டி20 போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

⛑⛑அக்டோபர் மாதத்திற்கான ரேஷன் பொருட்களைப் பெற டோக்கன் இன்று முதல் 3 நாட்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு

⛑⛑69வது முறையாக மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார்.

⛑⛑நாட்டிலேயே முதல் மாநிலமாக அக்டோபர் 1ம் தேதி முதல், கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை திறக்க, மேற்கு வங்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

⛑⛑அக்டோபருக்கான ரேஷன் பொருட்கள்; இன்று முதல் 3 நாள்கள் வழங்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு.

⛑⛑இந்தியா-இலங்கை இடையேயான பௌத்த உறவை மேம்படுத்த, 1.5 கோடி டாலர் நிதி வழங்கப்படும்  - பிரதமர் மோடி

⛑⛑2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் நடப்பது உறுதி - ஜப்பான் பிரதமர் திட்டவட்டம்.

⛑⛑இங்கிலாந்தில் கொரோனா பரவலின் 2-வது அலையை தொடர்ந்து அங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவலைத் தவிர்ப்பதற்காக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டால், கொரோனா அல்லாத வேறு பிரச்சினைகளால் சுமார் 75,000 பேர் உயிரிழக்கலாம் என 188 பக்க ரகசிய ஆவணம் ஒன்று தெரிவிக்கிறது.

⛑⛑அமெரிக்க அதிபராக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சீனாவை சார்ந்திருப்பதை முடிவுக்கு கொண்டு வருவதாக டிரம்ப் கூறியுள்ளார்.

⛑⛑அக்டோபர் 1 முதல் 10,11,12 ஆம் வகுப்பு விருப்பம் உள்ள மாணவர்கள் பெற்றோரின் அனுமதி பெற்று பள்ளிகளுக்கு வந்து ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டறியலாம் :  தலைமையாசிரியர்கள் பள்ளிக்கு வரும் மாணவர்களிடம் பெற்றோர்களின் விருப்பக்கடிதம் பெற்று அனுமதிக்க உத்தரவு.

⛑⛑வருவாய்த்துறை, பள்ளி கல்வித்துறை, பொது சுகாதாரத்துறை போன்றவர்களிடம் முதலமைச்சர் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டு பள்ளி திறப்பது பற்றிய உறுதியான முடிவை அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

⛑⛑தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு, நாடு முழுவதும் நேற்று தொடங்கியது.நாடு முழுவதும் 1.6 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு.

⛑⛑மாணவர்கள், க்யூ ஆர் கோட் அதிகம் பயன்படுத்த, ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டுமென, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கூறியுள்ளது

⛑⛑வெள்ளி விழாவைக் கடந்து பொன்விழாவைக் கண்டுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழாவைச் சிறப்பிக்கும் வகையில் பொன்விழா கட்டுரைத் தொகுப்பினை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக உலகத் தமிழர்களிடையே கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

⛑⛑அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் - எதிர்கட்சி தலைவர்  ஸ்டாலின்

⛑⛑கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை 12,889 போ் இணைய வழியே விண்ணப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

>>> புதுச்சேரி, காரைக்காலில் அக்டோபர் 5 முதல் பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை தெளிவு பெறுவதற்கு ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம்...



>>> ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆக்சிஜன் வசதி - அமைச்சர் சி.விஜயபாஸ்கர்...

 


>>> உதவியாளர் பணியில் சேர போலி ஆணை - சிஇஓ அலுவலக ஊழியர் உட்பட ராமநாதபுரத்தில் 5 பேர் கைது...

 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு... 27-04-2024 – Press News – Date Extension for Online Application - Direct R...