கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

செங்கோட்டையன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செங்கோட்டையன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்...

 


தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் தற்போது 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதுவரை பள்ளிகளில் பெரிதளவில் கொரோனா பரவல் கண்டறியப்படாத நிலையிலும் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை இதுவரை முடிவெடுக்காமல் உள்ளது. இதற்கிடையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.


நேற்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 110வது விதியின் கீழ் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் இறுதித் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் ஆல் பாஸ் அறிவிக்கப்பட்டாலும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


மேலும் பேசிய அவர், அடுத்த கல்வியாண்டுக்கு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து உரிய நேரத்தில் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என கூறியுள்ளார். 10ம் வகுப்பு மாணவர்கள் செலுத்தி உள்ள பொதுத்தேவு கட்டணத்தை திருப்பி அளிப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த இறுதி முடிவை முதல்வர் அறிவிப்பார் - அமைச்சர் செங்கோட்டையன்...

 


ரூ.2.80 கோடி மதிப்பிலான வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் திறப்பு விழா, ரூ.6 லட்சம் மதிப்பிலான வ.உ.சி. பூங்கா புதுப்பித்தல் பணிகள், சக்தி மசாலா அறக்கட்டளையின் சார்பில் கொங்காலம்மன் கோயிலில் கட்டப்பட்டுள்ள அன்னதான கூடம் திறப்பு விழா மற்றும் ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 4 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பசுமைக் கட்டடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா ஆகிய நிகழ்ச்சிகளில் நடைபெற்றது. 

 ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், இறுதி முடிவை முதல்வர் தான் அறிவிப்பார் என்றார். 

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை. இதுகுறித்து வல்லுநர்களுடன் கல்வித்துறை ஆலோசித்து முதல்வர் இறுதி முடிவு எடுப்பார் என்றார். தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்த நிலை தொடரும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூடுதல் நேரம் பாடம் நடத்த வேண்டும் – அமைச்சர் பேட்டி...



 தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி முதல் நடத்தப்படுவதால் ஆசிரியர்கள் கூடுதல் நேரம் பாடம் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.


இதுகுறித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், “தமிழகத்தில் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டுள்ள நிலையில் பாடங்களை விரைந்து முடிக்க ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மேலும் மாணவர்களுக்கு அவர்களது குழந்தைகள் போல் கருதி நீண்ட நேரம் பாடங்கள் எடுக்க வேண்டும். ஒரு வகுப்பை 1 மணி நேரம் எடுத்து விரைவில் பாடங்களை முடிக்க வேண்டும். 


 மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு சட்டமன்ற தேர்தலுக்கு பின் நடத்தப்படுமா? என்ற கேள்விக்கு அரசு ஆய்வு செய்து வருகிறது” என்று கூறினார்.

1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தேர்வு வைக்கப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்...

 


ஈரோடு மாவட்டம் கோபி அருகே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி:- 


சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை அனைத்து கட்சி கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கேற்பதான் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.


1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தேர்வு வைக்கப்படுமா? அல்லது அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்படுமா? என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் நிரந்தரமாக்குவது எளிதான காரியம் இல்லை என்றார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதில் எந்த குழப்பமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்...


 பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதில் எந்த குழப்பமும் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. தொற்று பரவல் குறைந்தையடுத்து கடந்த ஜனவரி 19 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. பொதுத்தேர்வு நடைபெறும் தேதி எப்போது வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில், தமிழக அரசு பொதுதேர்வுக்கான கால அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளது. 


 இதன்படி, வரும் மே மாதம் 3 ஆம் தேதி துவங்கும் பொதுத்தேர்வு 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 


 பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதில் எந்த குழப்பமும் இல்லை. பொதுத்தேர்வு அட்டவணையை தயாராக வைத்திருந்தோம். தேசிய திறனாய்வு தேர்வு கட்டணத்தை அரசே செலுத்துவது குறித்து, முதல்வருடன் வரும் 23-ம் தேதி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். தமிழக சட்டமன்ற தேர்தல் தேதியை பொறுத்தே தேர்வு தேதி அறிவிக்கப்படும் என கூறியது பற்றிய கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.

டெட் தேர்வு எழுதாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்...

 


கொரோனா ஊரடங்கு காலத்தில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வை ( TET ) எழுத முடியாமல் போன வயது வரம்பை கடந்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


கொரோனா ஊரடங்கு:

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. நோயின் பாதிப்பு அதிகமாக இருந்த காரணத்தால் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் இயல்பு நிலை பெரிதும் பாதித்தது. ஊரடங்கின் காரணமாக பல முக்கிய நிகழ்வுகள் மற்றும் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டது. மேலும் சில முக்கிய தேர்வுகள் மட்டும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடத்தப்பட்டது.


டெட் தேர்வு:

அந்த வகையில் ஊரடங்கு காலத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. இதனால் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்தவர்கள் பலர் டெட் தேர்வை எழுத முடியவில்லை. அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவது குறித்து அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.


அமைச்சரின் அறிக்கை:

செங்கோட்டையன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆய்வு நடந்து வருகிறது.


 ஆசிரியர் தகுதி தேர்வு எழுத 45 வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காலத்தில் ஆசிரியர் தேர்வாணையம் நடத்திய டெட் தேர்வை எழுத முடியாத வயது வரம்பை கடந்தவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்குவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது என்று கூறினார்.

விரைவில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு – அமைச்சர் செங்கோட்டையன்...


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். 

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கடந்த மாதம் 19ம் தேதி முதல் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கியது.

கொரோனா பாதிப்பால் மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே பாடங்கள் நடத்தப்படுவதால் பாடத்திட்டங்கள் முழுமையாக முடிக்கவில்லை என ஆசிரியர்கள் தரப்பிலும் முறையாக கல்வி கற்க முடியவில்லை என மாணவர்கள் தரப்பிலும் புகார்கள் எழுந்ததால், பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்தது.

அதன் படி, பள்ளிகள் திறக்கப்பட்டு பொதுத் தேர்வு எழுதவிருக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கான பொதுத் தேர்வு அறிவிப்புகள் இன்னும் வெளியாகாமல் இருக்கும் சூழலில், குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கோபிசெட்டிபாளையம் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பல இடங்களில் சிறு மருத்துவமனைகள் திறப்பு, விளையாட்டு மைதானம் தொடக்கம், மருந்தக பூமி பூஜை உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடக்கி வைத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியது: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப் படும்.  முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து தற்போது கூற இயலாது .


உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்புவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. உருது படித்த ஆசிரியர்கள் நம்மிடம் இல்லை. உருது படித்த ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். ஆசிரியர் தேர்வில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மீண்டும் தேர்வு வாய்ப்பு வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றார்.


விரைவில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு – அமைச்சர் செங்கோட்டையன்...


 தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கடந்த மாதம் 19ம் தேதி முதல் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கியது. கொரோனா பாதிப்பால் மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே பாடங்கள் நடத்தப்படுவதால் பாடத்திட்டங்கள் முழுமையாக முடிக்கவில்லை என ஆசிரியர்கள் தரப்பிலும் முறையாக கல்வி கற்க முடியவில்லை என மாணவர்கள் தரப்பிலும் புகார்கள் எழுந்ததால், பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்தது.


அதன் படி, பள்ளிகள் திறக்கப்பட்டு பொதுத் தேர்வு எழுதவிருக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கான பொதுத் தேர்வு அறிவிப்புகள் இன்னும் வெளியாகாமல் இருக்கும் சூழலில், குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து தற்போது கூற இயலாது என்றும் உருது பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தமிழகத்தில் இல்லை, உருது பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேவை என்றும் அவர் கூறினார்.

10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகள் நூலகமாக மாற்றமா? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்....

 மத்திய அரசின் நீட், ஜெஇஇ போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி தரும் அளவுக்கு அரசு பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை என்றும், அதனால் தான் தனியார் மூலம் ஆன்லைனில் மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார். 


மேலும் நீட் தேர்வுக்கு 21 ஆயிரம் விண்ணப்பித்திருந்த நிலையில் 5,800 பேர் மட்டுமே இலவச பயிற்சி எடுக்கின்றனர். சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும். அதனையடுத்து 12-ம் வகுப்பு செய்முறை தேர்வு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 


10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளை நூலகமாக மாற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம் என தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 


இந்தநிலையில் நேற்று 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் இல்லை. அதற்கு பதில் 6 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசு உதவியுடன் டேப் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது

ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் நிரப்ப இந்த மாத இறுதிக்குள் அட்டவணை – அமைச்சர் செங்கோட்டையன்...



 ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் குடிநீர் மற்றும் சாலை திட்ட பணிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன்  பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


  • அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் இணைக்கப்படாத ஏரி, குளங்கள் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். 

  • 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் இல்லை. அதற்கு பதிலாக 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும்.

  • இன்றைய சூழ்நிலையில் 6,7,8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை. தற்போது 98.5 சதவிகித மாணவர்கள் பள்ளிக்கு வருகை தருகிறார்கள்.

  • போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சிறப்பாசிரியர்களுக்கு மத்திய அரசு நிர்ணயிக்கும் நிதி 5500 ரூபாய் மட்டும் தான். ஆனால் தமிழக அரசு ரூ.10 ஆயிரம் வழங்கி வருகிறது.

  •  உடற்பயிற்சி ஆசிரியர்கள் காலிப்பணி இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.

  • ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்ப இந்த மாத இறுதிக்குள் அதற்கான அட்டவணை வெளியிடப்படும். 

  • நீட் தேர்வு இருமுறை நடத்துவது குறித்து மத்திய அரசு கடிதங்கள் வந்த பிறகுதான் நீட் தேர்வு எவ்வாறு நடத்துவது என்பது முடிவு செய்யப்படும்.

  • 10,12-ம் வகுப்பு பொது தேர்வு அட்டவணைகள் வெளியிடுவது குறித்து முதல்வர் முடிவு செய்து பள்ளிகல்வித்துறை ஆலோசனையுடன் அட்டவணைகள் வெளியிடப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்

6, 7, 8-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்...



 தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


கொரோனா தொற்றிற்கு பின்னர் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இந்த மாதமே 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக கல்வித்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.


அடுத்த வாரம் பள்ளிகள் திறக்க வாய்ப்பிருக்கிறது என எதிர்பார்த்த நிலையில் தற்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இந்த புதிய தகவலை தெரிவித்திருக்கிறார்.


கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில், நோய் தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததன் காரணமாக பொதுத் தேர்வு எழுத இருக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த மாதம் 19-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.



இதையடுத்து 9, 11-ம் வகுப்புகளுக்கும் 30 முதல் 40 சதவீதம் வரையில் பாடத்திட்டங்களை குறைத்து அறிவிப்பை வெளியிட்டதோடு, அவர்களுக்கான நேரடி வகுப்புகளும் கடந்த 8-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 


அதனை தொடர்ந்து  6,7,8 ஆகிய வகுப்புகள் எப்பொழுது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், அவர்களுக்கும் விரைவில் நேரடி வகுப்புகள் தொடங்க வாய்ப்பு இருக்கிறது என்ற தகவலும் நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.


இந்நிலையில் தமிழகத்தில் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 


இது குறித்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-


இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை. தற்போது 98.5 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருக்கின்றனர் . 6,7,8ம் வகுப்புகளுக்கு டேப் வழங்கப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.

அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்...

 


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். நடப்பு கல்வியாண்டில் அதிகளவிலான மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் சேர்ந்துள்ளதால் ஆசிரியர்களின் தேவை அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.


ஆசிரியர் பணியிடங்கள்:

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் பள்ளிகள் கடந்த மார்ச் மாதத்தில் மூடப்பட்டன. மேலும் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்த காரணத்தால் ஏராளமானோர் வேலையிழந்தனர். தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணத்தை செலுத்த நிர்பந்தித்து, போதிய வருமானமின்மை போன்ற காரணங்களால் பெற்றோர்கள் பலர் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நடப்பு கல்வியாண்டில் வழக்கமானதை விட அதிகளவிலான மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.


எனவே பள்ளிகள் முழுமையாக திறக்கப்படும் பொழுது ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஒவ்வொரு பள்ளிகளிலும் உள்ள ஆசிரியர் – மாணவர் விகிதம் மற்றும் கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் இம்மாத இறுதிக்குள் ஆசிரியர் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.


இந்நிலையில்  கோபியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பள்ளிகள் முழுவதுமாக திறக்கப்பட்ட பின்னரே ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் அரசு பள்ளிகளில் தற்போது தேவைக்கு ஏற்ப ஆசிரியர்கள் உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 10 ஆண்டுகளில் புதிதாக 273 பள்ளிகள் தொடக்கம் – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்...

 தமிழகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் புதிதாக 273 பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள்  சட்டப்பேரவை கூட்ட உரையின் போது தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இக்கூட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. இன்று ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு எதிரான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி இனி தடையை மீறி ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபட்டால் அபராதம் மற்றும் சிறைத்தணடனை விதிக்கப்படும். பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உரையாற்றினார்.

அப்போது மருத்துவ படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கியதற்காக முதல்வருக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் பேசுகையில், 2011ம் ஆண்டு முதல் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 273 புதிய பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளது. 644 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாகவும், 127 தொடக்கப் பள்ளிகள் நடுநிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி பகுதிகளில் நூலகம் விரைவில் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் உரையின் போது கூறியுள்ளார். மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பேசுகையில், சென்னையில் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்...

 


தமிழகத்தில் 9 மற்றும் 11ம் மாணவர்களுக்கு பிப்ரவரி 8ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில், மற்ற வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.


அமைச்சர் விளக்கம்:

கொரோனா பரவல் காரணமாக கடந்த வருட மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பள்ளிகள் தமிழகத்தில் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 முதல் நேரடி வகுப்புகள் தொடங்கி உள்ள நிலையில், வரும் பிப்ரவரி 8ம் தேதி முதல் 9, 11ம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மற்ற வகுப்புகளுக்கு (1 முதல் 8) பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.


ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியிடப்படப்பட்டவுடன் வினா வங்கி கையேடு வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் ஹைடெக் லேப் உள்ளது என கூறிய அமைச்சர், நீட் மற்றும் ஜேஇஇ படத்திட்டங்களை குறைப்பது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் ஏன் கூறியுள்ளார்.


அதுமட்டுமின்றி யூடியூப், கியூஆர் கோடு மற்றும் கல்வி தொலைக்காட்சி என பல்வேறு வழிமுறைகளில் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார். பின்னர் 9 முதல் 12ம் வகுப்புகள் தவிர்த்து மற்ற மாணவர்களுக்கும் பிப்ரவரி மாதத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என தெரிவித்த அமைச்சர், பிற மாநிலங்களில் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது குறித்து முதல்வர் கவனித்து வருவதாக கூறியுள்ளார்.

பள்ளியில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு என தனியாக ஊதியம் வழங்கப்படுவதில்லை - அமைச்சர் செங்கோட்டையன்...



 கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பெரியார் திடலில் கீரிப்பள்ளம் ஓடையில் கான்கிரீட் தளம் அமைத்து ரூ.11.5 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியையும் கொடிவெரி அணையில் தடப்பள்ளி அரக்கன்கோட்டை ஆகிய இரு பாசன வாய்கால்கள் கான்கரீட் தளங்கள் அமைத்து ரூ.140 கோடியில் புனரமைக்கும் பணியையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மாவட்ட ஆட்சியா கதிரவன் ஆகியோர் பூமிபூஜையுடன் தொடங்கிவைத்தார்கள்.


இவ்விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கீரிப்பள்ளம் ஓடை குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்துள்ளது. இன்றும் மூன்று மாத காலங்களில் பணிகள் முடிவுற்ற பிறகு பார்த்தோமேயானால் அதன் நிறைவுகள் மக்களுக்கு தெரியவரும் என்றும் அதேபோல் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆர்ச் டூ ஆர்ச் வரையிலும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு கோபிசெட்டிபாளையம் ஒரு சிட்டியாக மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் சாலையை கடக்கும் இடங்களில் தானியங்கி இயந்திர நடைபாதைகள் பொருத்தப்படும் எனவும் தெரிவித்தார்.


அதேபோல் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்களில் போதிய அளவு படித்துறைகள் அமைக்கப்படும் தடப்பள்ளி அரக்கன்கோட்டை கரைகளில் விவசசாயிகள் இளைப்பாற கூடாரங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


அதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினா வங்கி கையேடு தேர்வு அட்டவணை வெளியிடப்படும் போது வழங்கப்படும் என தெரிவித்தார்


நீட், ஜேஇஇ போன்ற தேர்வுக்கான பாடதிட்டங்களை குறைப்பது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் பிப்ரவரியில் பள்ளி திறப்பு குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும், பள்ளியில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு என தனியாக ஊதியம் வழங்கப்படுவதில்லை பள்ளி தலைமையாசியரிடம் அதற்கான ஒரு குறிப்பிட்ட தொகை மட்டுமே வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

.

7,100 உபரி ஆசிரியர்கள் உள்ளனர் - பிப்.13-ம் தேதிக்குள் TRB மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் _ அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி...


 சிவகங்கையில்  அமைச்சர் செங்கோட்டையன்  செய்தியாளர்களிடம்  கூறியதாவது:


’’அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முன்னோடியாக உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டியுள்ளார். தமிழகத்தில்தான் கல்வி முறை சிறப்பாக உள்ளது எனக் கல்வியாளர்கள், மற்ற மாநிலத்தவர் தெரிவித்துள்ளனர். 742 அடல் டிங்கரிங் லேப் திட்டம் அடுத்த மாத இறுதிக்குள் செயல்பாட்டிற்கு வரும். பள்ளிகளில் 7,500 ஸ்மார்ட் வகுப்புகள், 80 ஆயிரம் ஸ்மார்ட் போன்களை வழங்க மத்திய அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


தனியார் பள்ளிகளைப் போன்று அரசுப் பள்ளிகளிலும் ஷூ, சாக்ஸ் திட்டம் செயல்படுத்தப்படும். காலத்திற்கு ஏற்ப ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை நீக்கி விட்டோம். ஏற்கனவே 7,100 பேர் உபரி ஆசிரியர்களாக உள்ளனர். அவர்களைக் காலிப் பணியிடங்களில் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அரசுக்கு ரூ.1,400 கோடி நிதிச் சுமை ஏற்படும்.


மேலும் சிலர் வழக்குத் தொடர்ந்துள்ளதால் ஆசிரியர் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒத்துழைத்தால் பிப்.13-ம் தேதிக்குள் பட்டியல் வெளியிட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். மற்ற வகுப்புகளுக்குப் பள்ளிகளைத் திறப்பது குறித்து முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும். ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை நீக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’.


இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினா வங்கி கையேடு வழங்கப்படும் - பள்ளிக்கல்வி அமைச்சர்...

 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Government Relief Application Form for Storm Damaged Crops

 புயலில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு நிவாரண விண்ணப்ப படிவம் மாதிரி Government Relief Application Form for Storm Damaged Crops