கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மருத்துவக் கல்வி கலந்தாய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருத்துவக் கல்வி கலந்தாய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மாணவி மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொண்டாரா? இல்லையா? - வழக்கில் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு...

 மருத்துவ படிப்பில் மகளுக்கு இடம் ஒதுக்கக்கோரி தாய் தொடர்ந்த வழக்கில், சம்பந்தப்பட்ட மாணவி கலந்தாய்வில் கலந்து கொண்டாரா? இல்லையா? என்பது குறித்த ஆதாரங்களை சமர்ப்பிக்க மருத்துவ கல்வி தேர்வுக்குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


விழுப்புரம் மாவட்டம் ரோசனை பகுதியை சேர்ந்த சந்திரலேகா. நீட் தேர்வில் 155 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் நேர்காணலுக்கான அழைப்போ அல்லது 7.5% ஒதுக்கீட்டிலான கலந்தாய்விற்கான அழைப்போ வராததால், அண்ணா பல்கலைக் கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் பி.இ. சிவில் என்ஜினியரிங் படிப்பில் தமிழ் வழியில் சேர்ந்துள்ளார்.


இந்நிலையில், சந்திரலேகா மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்டதாகவும், அரசு மருத்துவக் கல்லூரியில் 3 இடங்கள் இருந்த போதிலும் அந்த இடங்களை தேர்வு செய்ய விருப்பமின்றி விலகி இருக்கிறீர்கள் எனவும் அவரது முகவரிக்கு மாணவர் தேர்வு குழு மூலமாக கடிதம் வந்துள்ளது.


இந்த கடிதத்தை எதிர்த்து, அவரது தாயார் மகேஷ்வரி, தன் மகளை மருத்துவ படிப்பில் சேர்க்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


இந்த வழக்கு நீதிபதி பி. புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனோகரன், மருத்துவ கலந்தாய்வில் மாணவி கலந்து கொண்டதால்தான், அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், கலந்துகொள்ளவில்லை என்பது தவறான தகவல் என தெரிவித்தார்.


மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜேந்திரன், கல்ந்தாய்வில் கலந்துகொள்ள வாய்ப்பே வழங்காத நிலையில், இடத்தை தேர்வு செய்யவில்லை என எப்படி கூறமுடியும் என்றும், மாணவியின் தகுதியை ஆராய்ந்து இடம் வழங்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்தார்.


இதையடுத்து வழக்கு குறித்து தமிழக அரசும், தேர்வுக்குழுவும் பதிலளிக்க உத்தரவிட்டும், மாணவியை கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டாரா என்பது குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டும் வழக்கை மார்ச் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

காலியாகவுள்ள MBBS, BDS இடங்களுக்கு 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: மருத்துவக்கல்வி இயக்ககம்...

 


மருத்துவ, பல்மருத்துவ படிப்பில் காலியாகவுள்ள இடங்களில் சேர 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தரவரிசையில் இடம்பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. சுயநிதி மருத்துவ, பல் மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள 177 MBBS, 459 BDS இடங்களுக்கு கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு வழக்குத் தொடா்ந்த மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்க நீதிமன்றம் உத்தரவு...

 


மாநில அரசுக்கு திருப்பி அளிக்கப்பட்ட அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மறு கலந்தாய்வு நடைமுறையை மேற்கொள்ளவும், மறு கலந்தாய்வில் வழக்குத் தொடா்ந்த மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு தமிழக அரசு அரசானை வெளியிட்டது.

 ''கடலூா் மாணவிகள் தா்ஷினி, இலக்கியா ஆகியோருக்கு கலந்தாய்வில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தது. ஆண்டுக்கு ரூ.7 லட்சம் முதல் 8 லட்சம் வரை கட்டணம் செலுத்த முடியாத நிலையில் இருவரும் இருந்ததால் காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டனா். 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவா்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும்'' என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் அறிவிப்பு வெளியான பின்னரும் மாணவிகளுக்கு மருத்துவ இடம் வழங்கப்படவில்லை. இதனை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், ‘அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தமிழகத்தில் இருந்து வழங்கப்பட்ட இடங்களில் 227 இடங்கள் மீண்டும் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ், 26 இடங்கள் கிடைக்கும். 

இந்த இடங்களை 60 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மறு கலந்தாய்வு நடத்தி ஒதுக்கப்படும்’ என தெரிவித்திருந்தாா். அதையடுத்து, ‘கலந்தாய்வில் கலந்துகொள்ளும் 60 மாணவா்களில் யாருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது குறித்து தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்’ என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், ‘வழக்குத் தொடா்ந்த மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டாா். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி,மாநில அரசுக்கு திருப்பி அளிக்கப்பட்ட அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மறு கலந்தாய்வு நடைமுறையை மேற்கொள்ளவும், மறு கலந்தாய்வின்போது, வழக்குத் தொடா்ந்த அரசுப் பள்ளி மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜனவரி 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

7.5% இடஒதுக்கீடு: மருத்துவ இடங்களை அதிகரிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் - தேசிய மருத்துவ ஆணையம்...

 தமிழக அரசு கொண்டு வந்த 7.5% உள் ஒதுக்கீடு சட்டத்தின் கீழ், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் வழங்கப்பட்டது. உள் ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் சீட் பெறும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


இதையடுத்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை முன் தேதியிட்டு அமல்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, முதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு தனியார் கல்லூரிகளில் இடம் பெற்று கட்டணம் செலுத்த முடியாமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 60 மாணவர்களுக்கு மருத்துவ கல்வி இடங்கள் கிடைக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தலா 2 இடங்களை அதிகரிப்பது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.


இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் இடம் உருவாக்க கூடாது என ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதால், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தைத் தான் அணுக வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

27 மதிப்பெண் எடுத்துவிட்டு 610 மதிப்பெண் என போலி NEET சான்றிதழ் - ராமநாதபுரம் மாணவி மீது வழக்குப்பதிவு...

 


மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் போலி நீட் சான்றிதழ் கொடுத்ததாக மாணவி மற்றும் அவரது தந்தை மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை எழுதி முடிப்பவர்களுக்கு, என்டிஏ எனப்படும் தேசிய தேர்வு முகமை மதிப்பெண் சான்றிதழை அளிக்கிறது. மருத்துவ கலந்தாய்வுக்கு கொண்டு வரப்படும் இந்த சான்றிதழ்கள் சரியானவையா என்பதை குறித்து ஆராய பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் நடத்தும் ஆய்வில், ஆன்லைன் மூலம் என்டிஏ வழங்கியிருக்கும் சான்றிதழ் விவரங்களை உடனுக்குடன் சரிபார்க்க முடியும்.

இந்த நிலையில், கலந்தாய்வுக்கு வந்த மாணவி ஒருவரின் சான்றிதழை, ஆன்லைனில் இருக்கும் என்டிஏ சான்றிதழுடன் ஒப்பிடும் போது மதிப்பெண்ணில் பெரிய அளவு வித்தியாசம் இருந்துள்ளது. அதாவது, என்டிஏ வழங்கியிருந்த சான்றிதழில் 27 மதிப்பெண்களும், மாணவி கொண்டுவந்த சான்றிதழில் 610 மதிப்பெண்கள் இருந்தது கண்டறியப்பட்டது.

என்டிஏ சான்றிதழின் நகலைதான் கொண்டு வந்திருப்பதாக மாணவி தரப்பிலிருந்து கூறப்பட்ட நிலையில், மதிப்பெண்களில் பெரிய அளவு வித்தியாசம் இருந்ததால் போலி சான்றிதழாக இருக்கலாம் எனக்கூறி சென்னை பெரியமேடு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து மாணவி மற்றும் அவரது தந்தை மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதியப்பட்டது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த அந்த மாணவியின் தந்தை, பல் மருத்துவராக இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

2020-2021 - இன்று (24-11-2020) நடைபெற இருந்த மருத்துவ படிப்பு கலந்தாய்வு - நவம்பர் 30க்கு ஒத்திவைப்பு...

 2020-2021 - இன்று (24-11-2020) நடைபெற இருந்த மருத்துவ படிப்பு கலந்தாய்வு - நவம்பர் 30க்கு ஒத்திவைப்பு...

நிவர் புயல் காரணமாக போக்குவரத்து  இடையூறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இன்று (24.11.2020) செவ்வாய் கிழமை நடைபெற இருந்த மருத்துவ படிப்பு கலந்தாய்வு 2020-2021 வரும் (30.11.2020) திங்கட்கிழமை அன்று நடைபெறும் வகையில்  கலந்தாய்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



🍁🍁🍁 நேற்று மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற 262 மாணவர்களில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...

 



🍁🍁🍁 313 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் பயில இடம் கிடைத்துள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி...

 


தமிழகத்தில் 313 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைத்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார். யாருமே கோரிக்கை வைக்காத நிலையில் 7.5 % இட ஒதுக்கீடு மூலம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

🍁🍁🍁 முதல் நாள் கவுன்சிலிங்கில் எத்தனை பேருக்கு இடம் - மருத்துவ கல்வி இயக்ககம் விளக்கம்...

 2020-21-ம் கல்வியாண்டு மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியலை நேற்று முன்தினம் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டார். தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து கலந்தாய்வுக்கான பணிகள் தொடங்கின.

அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவப்படிப்பில் சேர இருக்கும் அனைத்து பிரிவு 951 மாணவ- மாணவிகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கி நாளை  (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற இருப்பதாக மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் ஜி.செல்வராஜன் கூறியிருந்தார்.

அதன்படி நேற்று காலை சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் கலந்தாய்வு தொடங்கியது. 

 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அடிப்படையில் பயன்பெற இருக்கும் மாணவர்களின் தரவரிசை பட்டியலின்படி காலை 9 மணி முதல் 11 மணி வரை, 1 முதல் 151 தரவரிசையில் (நீட் தேர்வில் 664 மதிப்பெண் முதல் 249 மதிப்பெண் வரை) இருக்கும் மாணவர்களுக்கும், 11 மணியில் இருந்து, 152 முதல் 267 தரவரிசையில் (நீட் தேர்வில் 248 முதல் 190 மதிப்பெண் வரை) உள்ள மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற்றது.

நேற்று நடைபெற்ற கலந்தாய்வுக்கு 270 மாணவ- மாணவிகள் அழைக்கப் பட்டிருந்தனர். அவர்களில் 262 பேர் கலந்தாய்வில்  கலந்து கொண்டனர். இவர்களில் 235 பேருக்கு கல்லூரிகள் ஒதுக்கப்பட்டன. 27 பேர் காத்திருக்கும் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

🍁🍁🍁 எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசை பட்டியல் வெளியீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 405 இடங்கள் கிடைக்க வாய்ப்பு சென்னை நேரு விளையாட்டரங்கில் கலந்தாய்வு நாளை தொடக்கம்...

எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசை பட்டியல் வெளியீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 405 இடங்கள் கிடைக்க வாய்ப்பு சென்னை நேரு விளையாட்டரங்கில் கலந்தாய்வு நாளை தொடக்கம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, கலந்தாய்வு சென்னையில் நாளை தொடங்குகிறது. இதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 405 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் 26 அரசு மற்றும் 15 தனியார் மருத்துவக் கல்லூரிகள், 2 அரசு மற்றும் 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 2020-21ம் கல்வி ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண் ணப்பித்தனர். அரசு ஒதுக்கீட்டு இடங் களுக்கு 24,712 பேரும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,511 பேரும் விண்ணப்பித்திருந்தனர். பரிசீலனைக்குப்பின் அரசு ஒதுக்கீட்டுக்கு 23,707, நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 14,276 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

இதற்கான தர வரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் சென்னையில் நேற்று வெளி யிட்டார். சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மாணவர் தேர்வுக்குழு செயலாளர் ஜி.செல்வ ராஜன் ஆகியோர் அப்போது உடன் இருந்தனர்.

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் நீட் தேர்வில் 720-க்கு 710 மதிப்பெண்கள் எடுத்த திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலைச் சேர்ந்த ஆர்.ஜன் அகில இந்திய அளவில் 8-வது இடத்தையும் தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்தார். நாமக்கல்லைச் சேர்ந்த மோகனபிரியா ரவிச்சந்திரன் (705) 2-வது இடத்தையும் சென்னை புழுதிவாக்கத்தைச் சேர்ந்த ஜி.ஸ்வேதா (701) 3-வது இடத்தையும் பிடித்தனர்.

தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் தலா 5 மாணவர்களும் மாணவிகளும் இடம்பெற்றுள்ளனர். நிர்வாக ஒதுக்கீட்டுக்கான தரவரிசையில் ஷமீல் கல்லாடி 700 மதிப்பெண்களுடன் முதலிடத்தையும் அம்மு மரியம் அனில் (695) 2-ம் இடத்தையும் ஜெய் முரேகர் (691) 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

தமிழகத்தில் 313 எம்பிபிஎஸ் இடங் கள், 92 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 405 இடங்கள் 7.5 சதவீதம் உள் ஒதுக் கீட்டின்படி அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த இடங்களுக்கு விண்ணப்பித்த 972 பேரில் 951 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதன்படி, நீட் தேர்வில் 644 மதிப்பெண் கள் எடுத்த தேனி பெரியகுளம் சில்வார் பட்டியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர் ஜீவித் குமார் முதலிடம் பிடித்தார். கள்ளக்குறிச்சி எஸ்.அன்பரசன் (646) 2-வது இடத்தையும் சென்னை எஸ்.திவ்யதர்ஷினி (620) 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

அரசு ஒதுக்கீட்டுக்கான தரவரிசைப் பட்டியலில் மாநில அரசு கல்வித் திட்டத்தில் படித்த 15,885 பேர், சிபிஎஸ்இ உள்ளிட்ட மத்திய பாடத்திட்டங்களில் படித்த 7,822 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் 9,596 பேர் நடப்பாண்டு படித்த வர்கள். 14,111 பேர் பழைய மாணவர்கள்.

சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: தரவரிசைப் பட்டியல்கள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. கலந்தாய்வு 18-ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. முதலில் சிறப்பு பிரிவினருக்கும் அடுத்ததாக 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும். இதையடுத்து, பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கும்.

கரோனா தொற்று தடுப்பு விதி முறைகளின்படி கலந்தாய்வு நடைபெற உள்ளது. தினமும் 500 மாணவர் கள் அழைக்கப்படுவார்கள். மாணவருடன் வர ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். எந்த தேதி, நேரத்தில் கலந்தாய்வுக்கு வரவேண்டும் என்று எஸ்எம்எஸ் மூலமும் இணையதளத்திலும் தகவல் தெரிவிக்கப்படும். மாணவர்களின்  சான்றிதழ்களை சரிபார்க்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

🍁🍁🍁 மருத்துவ படிப்பு கலந்தாய்வின் பொழுது சமர்ப்பிக்கப்பட வேண்டிய சான்றுகள் விவரம்...

 


🍁🍁🍁 18-11-2020(புதன்) முதல் மருத்துவ படிப்பு கலந்தாய்வு தொடக்கம்... TENTATIVE COUNSELLING SCHEDULE FOR MBBS/BDS COURSE 2020-2021 SESSION (7.5% SEAT RESERVATION FOR TAMIL NADU GOVERNMENT SCHOOL STUDENTS ONLY)...

 


🍁🍁🍁 மருத்துவ படிப்பு - 2020-2021 - தரவரிசை பட்டியல் வெளியீடு... (2020-2021 MBBS Rank list published...)

 >>> PROVISIONAL RANK LIST FOR MBBS / BDS COURSE 2020-2021 SESSION GOVERNMENT QUOTA...


>>> PROVISIONAL RANK LIST FOR MBBS / BDS COURSE 2020 - 2021 SESSION FOR 7.5% RESERVATION (Government School students)...


>>> PROVISIONAL RANK LIST FOR MBBS / BDS COURSE 2020 - 2021 SESSION (MANAGEMENT QUOTA)...


🍁🍁🍁 மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு நாளை மறுநாள் முதல் தொடங்கும்...

 





🍁🍁🍁 மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு - இன்று முதல் 12-ம் தேதி வரை விண்ணபிக்கலாம். 16-ம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் என அறிவிப்பு...

 GOVERNMENT OF TAMILNADU

PROSPECTUS FOR ADMISSION TO MBBS / BDS DEGREE COURSES IN

TAMILNADU GOVERNMENT MEDICAL / DENTAL COLLEGES,

GOVERNMENT ERODE MEDICAL COLLEGE AND HOSPITAL,

PERUNDURAI, ERODE AND

GOVT. SEATS IN SELF FINANCING MEDICAL /

DENTAL COLLEGES AFFILIATED TO

THE TAMILNADU DR.M.G.R. MEDICAL UNIVERSITY

&

RAJAH MUTHIAH MEDICAL / DENTAL COLLEGE

AFFILIATED TO ANNAMALAI UNIVERSITY, CHIDHAMBARAM. 

ESIC MEDICAL COLLEGE AND PGIMSR, K.K.NAGAR, CHENNAI. 

 2020-2021 SESSION

As per G.O (D) No. 06, Health and Family Welfare Dept.,

 dated 03.11.2020 and as amended from time to time).

Last date for submission of online application form

12 .11.2020 upto 5.00 P.M

Website : www.tnhealth.tn.gov.in

 www.tnmedicalselection.org

>>> Click here to Download Tamilnadu MBBS / BDS Admission - (2020-2021 Session) Prospectus...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Government Relief Application Form for Storm Damaged Crops

 புயலில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு நிவாரண விண்ணப்ப படிவம் மாதிரி Government Relief Application Form for Storm Damaged Crops