கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வேலைவாய்ப்பு அலுவலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேலைவாய்ப்பு அலுவலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோர் 50.14 லட்சம்...


வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோர் 50.14 லட்சம்...


அரசுப் பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை 50.14 லட்சம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.


ஒவ்வொரு மாதமும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை தொடா்பான புள்ளிவிவரங்களை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. ஆகஸ்ட் மாத நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 50 லட்சத்து 14 ஆயிரத்து 803-ஆக உள்ளது.


இதுகுறித்து, மாநில அரசு வெளியிட்ட தகவல்: ஆகஸ்ட் மாத நிலவரப்படி பதிவு செய்துள்ள மொத்த பதிவுதாரா்களில் பெண்களே அதிகம். 27 லட்சத்து 11 ஆயிரத்து 970 பெண்களும், 23 லட்சத்து 2 ஆயிரத்து 555 ஆண்களும், 278 மூன்றாம் பாலினத்தவரும் பெயா், படிப்பு விவரங்களைப் பதிவு செய்துள்ளனா்.


அவா்களில் 18 வயதுக்குள் பள்ளி மாணவா்களாக 9 லட்சத்து 95 ஆயிரத்து 449 பேரும், 19 முதல் 30 வயதுள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவா்களில் 21 லட்சத்து 72 ஆயிரத்து 50 பேரும், 31 முதல் 45 வயதுக்கு உட்பட்டவா்களில் 15 லட்சத்து 90 ஆயிரத்து 631 பேரும் தங்களது பெயா், விவரங்களைப் பதிவு செய்துள்ளனா்.


46 வயது முதல் 60 வயது வரையுள்ளவா்களில் 2 லட்சத்து 47 ஆயிரத்து 829 போ் பதிவு செய்துள்ளனா். 


அரசின் பணியில் இருந்து ஓய்வு பெறும் வயதான 60-க்கும் கடந்தவா்களில் 8,094 பேரும் தங்களது விவரங்களைப் பதிவு செய்திருக்கிறாா்கள். ஒட்டுமொத்த பதிவுதாரா்களில் 1.50 லட்சம் போ் மாற்றுத்திறனாளிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



28-02-2023ன் படி தமிழ்நாடு முழுவதும் 67,55,466 பேர் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு (67,55,466 people registered and waiting for employment across Tamil Nadu As on 28-02-2023 - Tamil Nadu Government Notification)...



>>> 28-02-2023ன் படி தமிழ்நாடு முழுவதும் 67,55,466 பேர் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பு -  தமிழ்நாடு அரசு அறிவிப்பு (67,55,466 people registered and waiting for employment across Tamil Nadu As on 28-02-2023 - Tamil Nadu Government Notification)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய..


வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கி அரசாணை (1டி) எண்: 548, நாள்: 02-12-2021 வெளியீடு (Re-issuance of opportunity to those who failed to renew Employment Registration - G.O. (1D) No: 548, Date: 02-12-2021)...



 வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கி அரசாணை (1டி) எண்: 548, நாள்: 02-12-2021 வெளியீடு (Re-issuance of opportunity to those who failed to renew Employment Registration - G.O. (1D) No: 548, Date: 02-12-2021)...


 2014, 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவினை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை மற்றும் 2017, 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவினை புதுப்பிக்க ஏற்கெனவே வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில் மேலும் மூன்று மாதங்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது...


>>> அரசாணை (1டி) எண்: 548, நாள்: 02-12-2021...


கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறைப் பட்டதாரிகள் மற்றும் தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்கள் ஆகியோருக்கு வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை வழங்குதல் மற்றும் வேலைவாய்ப்பகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் பின்பற்றப்பட்டு வரும் முன்னுரிமை முறையினை மறுசீரமைப்பு செய்தல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன (Orders are issued to give priority to Youth who have lost both their parents due to the Corona epidemic, First generation graduates and persons who have studied through Tamil Medium in Tamilnadu government schools and to Restored the Priority system followed in appointments made through Employment Offices)- மனிதவள மேலாண்மைத் (கே2) துறை, அரசாணை (நிலை) எண்: 122, நாள்:02.11.2021...

 


கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறைப் பட்டதாரிகள்  மற்றும் தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற  நபர்கள் ஆகியோருக்கு வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை வழங்குதல்  மற்றும் வேலைவாய்ப்பகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் பின்பற்றப்பட்டு வரும்  முன்னுரிமை முறையினை மறுசீரமைப்பு செய்தல் ஆணைகள்  வெளியிடப்படுகின்றன (Orders are issued to give priority to Youth who have lost both their parents due to the Corona epidemic, First generation graduates and persons who have studied through Tamil Medium in Tamilnadu government schools and to Restored the Priority system followed in appointments made through Employment Offices)- மனிதவள மேலாண்மைத் (கே2) துறை, அரசாணை (நிலை) எண்: 122, நாள்:02.11.2021...


>>> மனிதவள மேலாண்மைத் (கே2) துறை, அரசாணை (நிலை) எண்: 122, நாள்:02.11.2021...


2014, 2015, 2016-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் புதுப்பிக்க வாய்ப்பு? (Chance to Renew Employment Office Registration ) - அமைச்சர் அறிவிப்பு...



 2014, 2015, 2016ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர் கணேஷ் கோரிக்கை விடுத்திருந்தார்.


இதற்கு பதிலளித்த தமிழக அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2017, 2018, 2019ஆம் ஆண்டு ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு ஏற்கனவே புதுப்பிக்க தவறியவர்களுக்கு மாபெரும் ஒரு வாய்ப்பை உருவாக்கியும் தந்தார் எனவும், அந்த பதிவை புதுப்பித்துக் கொள்ள மூன்று மாதம் அவகாசம் கொடுக்கப்பட்டுளளது எனவும் தெதெரிவித்தார்‌.


மேலும் 2014, 2015 ,2016 ஆம் ஆண்டு களுக்கும் வேலைவாய்ப்பு பதிவுகளை புதுப்பிக்க ஏராளமான இளைஞர்கள் தவறியுள்ளார்கள் என்றும் உறுப்பினரின் சேர்க்கையை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று ஆலோசித்து நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்துள்ளார்.


வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள் 28.05.2021 முதல் 27.08.2021 வரை புதுப்பிக்கும் முறை - அரசின் செய்தி வெளியீடு...

 வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள் 28.05.2021 முதல் 27.08.2021 வரை புதுப்பிக்கும் முறை - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு எண்: 181, நாள்: 30-05-2021...


>>> தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு எண்: 181, நாள்: 30-05-2021...


>>> வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவினைப் புதுப்பிக்க தவறியவர்களுக்கு ஒரு வாய்ப்பு - அரசாணை வெளியீடு...






வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவினைப் புதுப்பிக்க தவறியவர்களுக்கு ஒரு வாய்ப்பு - அரசாணை வெளியீடு...



 அரசாணை எண்:204, நாள்.28.05.2021 - வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 2017, 2018 & 2019 ஆம் ஆண்டுகளில் பதிவினைப் புதுப்பிக்கத் தவறிய மனுதாரர்கள் பயன் பெறுவதற்கு சிறப்பு சலுகை குறித்த அரசாணை வெளியீடு...


>>> அரசாணை எண்: 204, நாள்: 28-05-2021...


மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகம் வாயிலாக அனுப்பப்படும் பரிந்துரை பட்டியல்களின் செல்லுபடி காலத்தை உயர்த்தி அரசாணை வெளியீடு...

 


அரசாணை (நிலை) எண். 30, நாள்.  16.02.2021, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை - வேலைவாய்ப்பு பிரிவு - மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகம் வாயிலாக அனுப்பப்படும் பரிந்துரை பட்டியல்கள் - பட்டியலின் செல்லுபடி காலத்தை உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது...

>>> அரசாணை (நிலை) எண். 30, நாள்.  16.02.2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


🍁🍁🍁 பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்ய மாணவர்கள் செய்ய வேண்டியது...

 பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு அலுவலக பதிவு நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தி.மலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தங்களது கல்வித் தகுதியை பதிவு செய்ய ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை எண், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளில் எடுத்து வர வேண்டும். வரும் 28-ம் தேதி வரை வேலைவாய்ப்பு பதிவு பணி நடைபெற உள்ளது. மேலும். www.tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்புத் துறையின் இணையதள வழியாக பதிவு செய்து கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

🍁🍁🍁 பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 23.10.2020 முதல் வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்ளப்படுவதால் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பதிவு 22.10.2020 வரை மட்டுமே மேற்கொள்ள முடியும் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் அறிவிப்பு...

 





🍁🍁🍁 +2 தேர்ச்சி தகுதியை பதிவு செய்யும்பொழுது Group / Stream என்பதில் செய்ய வேண்டிய பதிவு குறித்து வேலைவாய்ப்பு அலுவலகம் அறிவுறுத்தல்...

 +2 தேர்ச்சி தகுதியை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்யும் பொழுது இறுதியாக Group / Stream என்பதில் கீழ்கண்டவாறு பதிவு செய்ய வேலைவாய்ப்பு அலுவலகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

👇👇👇

Group 1 - Maths - Biology

Group 2 - Pure Science 

Group 2a - Maths - Computer 

Group 3 - Commerce - Accountancy

Group 4 - Other than the above.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...