கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பதவி உயர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதவி உயர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

November 2025ல் TETல் தேர்ச்சி பெற்றவர்களுக்கே முதலில் பதவி உயர்வு - உயர்நீதிமன்றத்தில் புதிய Affidavit தாக்கல்

 


November 2025ல் TETல் தேர்ச்சி பெற்றவர்களுக்கே முதலில் பதவி உயர்வு - உயர்நீதிமன்றத்தில் புதிய Affidavit தாக்கல் - வாட்ஸ்அப் பகிர்வு 


* November 2025 ல் TET ல் தேர்ச்சி பெற்ற எங்களுக்கே முதலில் பதவி உயர்வு தர வேண்டும் என்று மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் உயர் நீதி மன்றத்தில் தாக்கல் 


* நவம்பர் 2025 TET தாள்–II தேர்ச்சி அடிப்படையில் தங்களுக்கே பதவி உயர்வு தர வேண்டும் என்று புதிய பிரமாண பத்திரத்தை உயர்நீதிமன்றத்தில் ராம்குமார் உள்ளிட்ட சில பட்டதாரி ஆசிரியர்கள்  தங்களுடைய பணி மூப்பு அடிப்படையிலும் தாங்கள் நவம்பர் 2025-ல் TET பாஸ் செய்திருப்பதாலும் தங்களுக்கு மட்டுமே பதவி உயர்வு தர வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்


* தற்பொழுது நடைபெற்று வரும் ஆண்டு வாரியான பேனல் மேல் முறையீட்டு வழக்கில் ( WA 2733 /2026)  இந்த பிரமாண பத்திரம் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு : ஆசிரியர் சங்கம் அறிக்கை



உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு :

💥💥💥💥💥💥💥

 பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்:


💥💥💥💥💥💥💥

 *எமது இயக்கத்தின் 18 ஆண்டுக்கால போராட்டம் நிறைவடைகிறது!* 


💥💥💥💥💥💥💥

எல்லா தரப்பு வாதங்களும் நிறைவடைந்துவிட்டன. ஆன்லைனில் அனைவரும் பார்த்திருப்பீர்கள்.


பட்டதாரி ஆசிரியர்கள் சார்பாக எடுத்து வைக்க வேண்டிய அனைத்து வாதங்களும் நம்முடைய மூத்த வழக்கறிஞர்கள் மூலம் உச்ச நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுவிட்டன.

💥💥💥💥💥💥💥

 *மூத்த வழக்கறிஞர்கள்:* 

1.திரு. ரவிபிரகாஷ் மெஹரோட்ரா

2.திரு.எஸ்.எஸ்.சுந்தர்

3.திரு.அஜ்மல்கான்


ஆகியோர் பட்டதாரி ஆசிரியர்களின் சார்பாக வழக்காடிய மூத்த வழக்கறிஞர்கள்.


அரசு தரப்பு வாதத்தின் மூலமாக இறுதி நாள் விசாரணை தொடங்கியது.


 *அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது.* 


1.உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்குத் தகுதியானவர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே!


2.பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு விதிகளின்படி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க முடியாது!


3.தற்போதுள்ள சுமார் 1200க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் காலிப் பணியிடங்கள் அனைத்துக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும்.


4.சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அரசு தரப்பு ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்த தயாராக உள்ளது.


5.முதுகலை ஆசிரியர் பணியில் இருந்து உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களாகப் பணி மாறுதலில் 2018,2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் சென்ற 1212 பேரை மீளவும் முதுகலை ஆசிரியர்களாகவே திருப்பி அனுப்ப வேண்டும் என்பதிலிருந்து மட்டும் விலக்களிக்குமாறு கோரிக்கை வைக்கப்படுகிறது.


6.1212 பேரை மீளவும் முதுகலை ஆசிரியர்களாகத் திருப்பி அனுப்புவதால் அரசு தரப்புக்கு ஏராளமான நிர்வாகச் சிக்கல் ஏற்படுவதாலும், மாணவர்களின் நலன் கருதியும், தகுதித் தேர்வு பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டும்  Reversion ஐ மட்டும் கைவிட அனுமதிக்குமாறு அரசு தரப்பு கோரியுள்ளது.


7.பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் மேல்நிலைக் கல்வித் தொகுதியில் நிரந்தர உறுப்பினர்களாவர்.எனவே அவர்களுக்கான அடுத்த பதவி உயர்வு அப்பணித் தொகுதியில் இருக்கும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணி மட்டுமே.


8.confirmation order அதாவது தகுதிகாண் பருவம் முடித்த பின்பு பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஆணை வழங்க வேண்டும் என்பது விதியில் தெரிவிக்கப்பட்டிருக்கும் போதிலும், 1994 ஆம் ஆண்டு முதல் அதை பின்பற்றவில்லை.


9.அதற்குக் காரணம், விதியில் shall be given என்று அதாவது, தேவைப்பட்டால் தரலாம் என்றவாறு தெரிவிக்கப்பட்டுள்ளதால், வழங்க வேண்டிய கட்டாயம் எழவில்லை. அது சார்ந்த சில ஆணைகள் பிறப்பிக்கப்பட்டதையும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.


10.அரசு தரப்பு வாதத்தின் மூலம், பட்டதாரி ஆசிரியர்களின் உரிமை நிலைநாட்டப்பட்டது. பல்வேறு குழப்பங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.


 Temporary பிரச்சனை தெறித்து ஓடியது!


 Approved probationer பிரச்சனை அப்புறப்படுத்தப்பட்டது!


Confirmation பிரச்சனை காணாமல் போய்விட்டது!


உண்மை வெளி வந்தது! தர்மம் தலை தூக்கியது!


 *மூத்த வழக்கறிஞர் திரு. அஜ்மல்கான் அவர்கள்:* 


கடந்த விசாரணையிலேயே அரை மணி நேரத்தில் ஒட்டு மொத்த வழக்கின் நிலைப்பாட்டையும் உச்ச நீதிமன்றத்தில் பட்டியலிட்டு விளக்கினார்கள்!


2015 ஆம் ஆண்டே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழக்கு நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு தடை வழங்கப்பட்டமையையும் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெறத் தகுதியானவர்கள் என்றும் வாதிட்டு, உரிய விதிகளை எடுத்து வைத்தார்கள்.


 *மூத்த வழக்கறிஞர் திரு. எஸ்.எஸ்.சுந்தர் அவர்கள்:* 


அரசு தரப்பில் வழங்க வேண்டிய confirmation குறித்த விளக்கங்களைத் தாம் பட்டியலிட்டு விளக்கினார்கள். பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் மேல்நிலைக் கல்வித் தொகுதியில் நிரந்தர உறுப்பினர்களே என்பதை மேலும் உறுதிபடுத்தினார்கள்.


பணி மாறுதல் குறித்த பல்வேறு விளக்கங்களை எடுத்து வைத்து பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்  பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பதை மேலும் உறுதி செய்தார்கள்!


 *மூத்த வழக்கறிஞர் திரு. ரவிபிரகாஷ் மெஹரோட்ரா அவர்கள்:* 


56000 க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். சுமார் 3000 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் மட்டுமே உள்ளன. 28000 முதுகலை ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களுக்கும் சுமார் 3000 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் உள்ளன.


எனவே எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தாலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே உயர்நிலைப் பள்ளி த் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.


ஒரே பணியாளர் இரண்டு பணித் தொகுதிகளில் உறுப்பினர்களாக இருக்க முடியாது. ஏதாவது ஒன்றில் மட்டும்தான் உறுப்பினராக இருக்க முடியும்! எனவே பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் இரண்டு பணித் தொகுதிகளிலும் மாறி மாறி பணி மாறுதல் பெறுவது விதிகளுக்குப் புறம்பானது!


1212 பேர் மீளவும் முதுகலை ஆசிரியர்களாக அனுப்பப்பட்டால் எந்த பாதிப்பும் இல்லை.


 அவர்களுக்கு மேல்நிலைப் பணித் தொகுதியில் அடுத்த பதவி உயர்வு காத்திருக்கிறது. பணப்பலனும் காத்திருக்கிறது!


1212 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களும் பட்டதாரி ஆசிரியர்களுக்குச் சொந்தமானவை. அவர்களுக்கு உரியதை இவர்களுக்குத் தருவது உரிமையைப் பறிப்பதாகும். 1000 பணியிடங்களை மீண்டும் பெற வேண்டுமானால், குறைந்தபட்சம் பத்தாண்டுகள் பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருக்க வேண்டும்!


Lien கிடையாது! எனவே 01.01.2016 முதல் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அதாவது 1212 பேர் கட்டாயம் reversion செய்யப்பட வேண்டும்!


 *நீதிபதிகளின் முடிவு:* 


மேற்கண்ட எல்லா தரப்பு வாதத்தையும் கேட்டறிந்த பிறகு அரசு தரப்பினரை அழைத்து மீண்டும் அபிடவிட் தாக்கல் செய்யுமாறு கீழ்க்கண்டவாறு ஆணையிட்டு வழக்கை வரும் 17.11.2026 அன்று ஒத்தி வைத்தது.


Heard learned counsel for the parties.


2.Though, as of now, arguments stand concluded; however, the

State is directed to file a detailed affidavit bringing on record

any proposal/scheme as to how the State proposes to deal with the

present scenario in a way that equities can be balanced and there

is no infraction of the law.


3.List on 17.11.2026 at 3.30 p.m.


 *அநேகமாக அன்றே தீர்ப்பும் வழங்கப்பட்டுவிடும் .  அல்லது தீர்ப்பு தேதி மட்டும் தள்ளி வைக்கப்படும்.* 

💥💥💥💥💥💥

வழக்கினை இறுதி வரை நகர்த்தி முடித்து வைக்கத் தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் எமது பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.🙏🙏🙏


TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் உயர் பதவிகளுக்கான அடுத்தகட்டப் பதவி உயர்வுகளுக்குத் தகுதியற்றவர்கள் - சிறப்பு அரசு வழக்கறிஞர்



ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் உயர் பதவிகளுக்கான அடுத்தகட்டப் பதவி உயர்வுகளுக்குத் தகுதியற்றவர்கள் - சிறப்பு அரசு வழக்கறிஞர் 


WA No.3501 of 2023



However, learned Special Government Pleader would submit that the appointment alone is protected by Courts, and in respect of teachers, who have not passed TET are not eligible for further promotions to the higher posts.




>>> உயர்நீதிமன்ற தீர்ப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


பதவி உயர்வுக்கு 01-03-2026ன் படி TET தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் அனுப்ப உத்தரவு

 


Order issued to submit details of those who have passed the TET as of 01-03-2026 for promotion


 உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு 01-03-2026இன் படி TET தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் அனுப்ப ஆதிதிராவிடர் நலஇயக்குனர் உத்தரவு

28.7 2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


PG to HSS HM Promotion Counseling News



PG to HSS HM Promotion Counseling News


முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவியில் இருந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு தகவல்கள்


Today PG to HSSHM Promotion counselling


HM vacancy: 540 

CALLED: 439 

SELECTED: 333

RELINQUISHED: 106 

VACANCY: 207


G.O.Ms.No.122 | CEOs Transfer & DEOs Promotion | DSE Proceedings



முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாறுதல் மற்றும் DEO to CEO பதவி உயர்வு - அரசாணை, பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு


G.O.Ms.No.122 , Dated : 01-07-2026 - CEOs Transfer & DEOs Promotion DSE Proceedings Order



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்க இயலாது - உயர்நீதிமன்றம்



ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின்   பதவி உயர்வு சார்ந்த எந்த கோரிக்கைகளையும் ஏற்க இயலாது - உயர்நீதிமன்றம்


Requests regarding the promotion of teachers who have not passed the Teacher Eligibility Test cannot be entertained – High Court



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

DATED: 04-06-2026

CORAM

THE HON'BLE MR JUSTICE S. M. SUBRAMANIAM

AND

THE HON'BLE MR.JUSTICE N.SENTHILKUMAR

WP No. 30300 of 2023

and

W.M.P.Nos.29889, 29890 & 29891 of 2023


Writ Petition filed under Article 226 of the Constitution of India to issue a Writ of Declaration, declaring that the Special Rules for the Tamilnadu Elementary Education Subordinate Service issued in GO Ms. No 12 School Education (EE1(1)) Department dated 30.01.2020 insofar as it prescribes a pass in Teacher Eligibility Test (TET) only for direct recruitment for the post of headmaster / Headmistress of Middle School and Headmaster / Headmistress of primary school and not for promotion thereto in Annexure Class 1(1) category 2 and class 1(iii) category 1 respectively, are illegal being ultravires the Right of Children to Free and Compulsory Education Act 2009 and the Rules framed thereunder and the NCTE Notification dated 23.08.2010 and 29.07.2011 and for the consequential direction to the respondents to hold that a pass in TET is mandatory eligibility criterion for the appointment to the post of headmaster / head mistress Primary school and Middle School by promotion as well as direct recruitment.


For Petitioner(s):

Mr.R.Ramachandran


For Respondent(s):

Dr.R.Gouri, Government Counsel for R1 to R4


ORDER


(Order of the Court was made by S.M.Subramaniam J.)


Writ of Declaration has been instituted to declare the Special Rules for TamilNadu Elementary Education Subordinate Service issued in G.O.Ms.No.12 School Education (EE1(1)) Department dated 30.01.2020.


2. The issues are no more res integra. In the context of Section 23 of the Right of Children to Free and Compulsory Education Act, 2009, the Hon'ble Supreme Court of India ruled that passing of Teacher Eligibility Test (TET) is mandatory to hold the teaching post in the Education Department. The directives issued by the National Council for Teachers Education prescribing Teacher Eligibility Test has been validated by the Hon'ble Supreme Court of India. That being the factum, the relief as such sought for, in the present writ petition, cannot be considered by this Court.


3. Learned Government Counsel would submit that necessary actions are taken for appropriate orders/amendments in the rules. This Court made it clear that such actions are to be initiated as expeditiously as possible in order to avoid any further unnecessary claims from unqualified teachers who does not possess TET qualification.


4. With these observations, the Writ Petition stands disposed of. No costs. Consequently, W.M.P.No.29889 of 2023 is ordered on payment of separate court fee and C.M.P.Nos.29890 & 29891 of 2023 are closed.


தீர்ப்பின் தமிழாக்கம் (Google Translate மூலம் மொழிபெயர்க்கப்பட்டது)


மெட்ராஸ் உயர் நீதிமன்றம்

தேதி: 04-06-2026

முன்னிலை

மாண்புமிகு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம்

மற்றும்

மாண்புமிகு திரு. நீதிபதி என். செந்தில்குமார்

WP எண் 30300, 2023

2023-ஆம் ஆண்டின் WMP எண்கள் 29889, 29890 மற்றும் 29891

இந்திய அரசியலமைப்பின் 226-வது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்த ரிட் மனுவில், 30.01.2020 தேதியிட்ட அரசாணை எண் 12, பள்ளிக் கல்வி (EE1(1)) துறையின்படி வெளியிடப்பட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்புப் பணிக்கான சிறப்பு விதிகள், அதாவது நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் / தலைமை ஆசிரியை மற்றும் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் / தலைமை ஆசிரியை ஆகிய பதவிகளுக்கு நேரடி நியமனம் பெறுவதற்கு மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், இணைப்பு வகுப்பு 1(1) பிரிவு 2 மற்றும் வகுப்பு 1(iii) பிரிவு 1 ஆகியவற்றில் முறையே பதவி உயர்வு பெறுவதற்கு அல்ல என்றும் குறிப்பிடுவது, குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009, அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் மற்றும் 23.08.2010 மற்றும் 29.07.2011 தேதியிட்ட NCTE அறிவிப்புகளுக்கு முரணானதால் சட்டவிரோதமானவை என அறிவிக்கக் கோரியும், அதன் விளைவாக, நியமனத்திற்கு TET தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயத் தகுதி அளவுகோல் என முடிவு செய்யுமாறு எதிர்வாதிகளுக்கு உத்தரவிடக் கோரியும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் / தலைமை ஆசிரியை பதவிகள் பதவி உயர்வு மற்றும் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்.


மனுதாரர்(கள்) சார்பாக:

திரு. ஆர். ராமச்சந்திரன்

பதிலளிப்பவர்(கள்) சார்பாக:

டாக்டர் ஆர். கௌரி, ஆர்1 முதல் ஆர்4 வரையிலானவர்களுக்கான அரசு வழக்கறிஞர்


ஆர்டர்

(நீதிமன்றத்தின் உத்தரவை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்தார்.)

30.01.2020 தேதியிட்ட அரசாணை எண்.12 பள்ளிக் கல்வி (EE1(1)) துறையில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி துணைநிலை சேவைக்கான சிறப்பு விதிகளை அறிவிக்க, அறிவிப்பு ஆணை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2. இந்தப் பிரச்சினைகள் இனி புதிதல்ல. 2009 ஆம் ஆண்டின் இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைச் சட்டத்தின் 23 ஆம் பிரிவின்படி, கல்வித் துறையில் ஆசிரியர் பதவியை வகிக்க ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும் என்று மாண்புமிகு இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வை பரிந்துரைத்து தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வழங்கிய வழிகாட்டுதல்கள் மாண்புமிகு இந்திய உச்ச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த உண்மையின் அடிப்படையில், தற்போதைய ரிட் மனுவில் கோரப்பட்டுள்ள நிவாரணத்தை இந்த நீதிமன்றம் பரிசீலிக்க முடியாது.

3. விதிகளில் பொருத்தமான உத்தரவுகள்/திருத்தங்கள் செய்வதற்கான அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கற்றறிந்த அரசுத் தரப்பு வழக்கறிஞர் சமர்ப்பித்துள்ளார். TET தகுதி இல்லாத தகுதியற்ற ஆசிரியர்களிடமிருந்து மேலும் தேவையற்ற கோரிக்கைகளைத் தவிர்ப்பதற்காக, அத்தகைய நடவடிக்கைகள் முடிந்தவரை விரைவாகத் தொடங்கப்பட வேண்டும் என்பதை இந்த நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

4. இந்தக் கருத்துக்களுடன், இந்த ரிட் மனு முடித்து வைக்கப்படுகிறது. செலவுகள் இல்லை. அதன் விளைவாக, WMP எண் 29889/2023 தனி நீதிமன்றக் கட்டணம் செலுத்துவதன் பேரில் உத்தரவிடப்படுகிறது மற்றும் CMP எண்கள் 29890 மற்றும் 29891/2023 முடித்து வைக்கப்படுகின்றன.



HSS HM Promotion Panel தொடர்பான தகவல்கள்

 

DSE - HSS HM Panel 2026


 HSS HM Promotion Panel தொடர்பான தகவல்கள் 


நண்பர்களே வணக்கம் 🙏

1.1.26 HSS HM Promotion Panel கோரப்பட்டுள்ளது

முதுகலை ஆசிரியர்கள் பொருத்தவரை..

1) 2022 ஜனவரி HM பதவி உயர்வு கலந்தாய்வில் தற்காலிக துறப்பு செய்தவர்கள்.

2) 2003-04 TRB ( July 2004 நியமனம்)

3) 2004-05 TRB ( Feb 2005 நியமனம்)

4) 2005-06 TRB ( Feb 2006 நியமனம்)

மேற்கண்ட (1/6/2006 பணி வரன் முறை) நியமன ஆசிரியர்கள்  துறை தேர்வு எழுதி தகுதியானவர்கள்.

5) 2006-07 TRB ( Dec 2006 நியமனம்) 

List enclosed from DSE, 

( Chemistry commerce economics subjects missing in the list, இருப்பினும் அவர்களும் கட்டாயம் உள்ளடக்கம்...)

6) 1.6.2006 க்கு முன் நியமனம் பெற்று... துறைத் தேர்வு எழுதி தகுதி அடைந்து உள்ள முதுகலை ஆசிரியர்கள்...

இவை பள்ளி கல்வி இயக்குநர் செயல்முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய ஆண்டில் நடைமுறை அடிப்படையில்

7) *31/12/2006 வரை பதவி உயர்வு பெற்று* முதுகலை ஆசிரியராக தற்போது பணியில் உள்ள (Promoted PGT) ஆசிரியர்...

(missing in proceedings but understood)

8) *மாற்றுத்திறனாளிகள்*

 4% இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது 

எனவே அவர்கள் *2010-2011* வரை உள்ள நியமனம் ( 31/12/2011 வரை நியமனம் பெற்ற மாற்றுத் திறனாளி முதுகலை ஆசிரியர்கள்) 

 *High school HM* 

9) 2015-16 வரை மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு விருப்பம் தெரிவித்து மீதம் உள்ளவர்கள்

10) 1.1.22 panel relinquish செய்தவர்கள்...

 *1.1.26 HSS HM panel not eligible categories*

1) 17 a கண்டனம் ( ஓர் ஆண்டு தண்டனை காலம் நிறைவு செய்யாதவர்கள்)

2) 17 b இல் உள்ளோர்.

தண்டனை காலம் நிறைவு செய்யாதவர்கள்

3) நான்கு துறைத் தேர்வுகள் முடிக்காதவர்கள் 

4) 1.1.23, 1.1.24, 1.1.25 panel இல் இடம் பெற்று relinquish செய்தவர்கள் 

5) 1.1.26 நிலவரப்படி இந்த panel

எனவே துறைத் தேர்வு TNPSC result bulliten 1.1.26 அன்று கையில் இருக்க வேண்டும்...

Dec 2025 துறைத் தேர்வு Bulliten 1.1.26 க்கு பிறகு தான் வெளிவரும்...

எனவே *Dec 2025* துறைத் தேர்வு தேர்ச்சி பெற்று இருந்தாலும் தகுதி இருக்காது.

 ( *கடந்த ஆண்டுகளில்* அனுமதிக்கவில்லை) 

எதற்கும், கூடுதல் விவரங்களுக்கு தங்களின் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள்

பதவி உயர்வு பெற உள்ள அனைவருக்கும் வாழ்த்துகள்..

தகவலுக்காக *க.செல்வக்குமார்* 

தலைமை ஆசிரியர்

மதுரை மாவட்டம் 🙏 

7/5/26

https://drive.google.com/file/d/1n-eTotGQ6UQ9yWetkD9cjia9N_V17W3s/view?usp=drivesdk

..

https://docs.google.com/document/d/1XeeLa6J6BlZljfBwIdKakP8zQOJL98QV/edit?usp=drivesdk&ouid=103202377801921426421&rtpof=true&sd=true


01.01.2026 நிலவரப்படி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்தல் தொடர்பாக DSE செயல்முறைகள் - இணைப்பு: கருத்துரு படிவம் & 2006-2007 PGTRB Selection List

 

DSE - HSS HM Panel 2026


மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முன்னுரிமை பட்டியல் - தயார் செய்யக் கருத்துக்கள் கோருதல் - தொடர்பாக


DSE Proceedings regarding the preparation of the Priority List for the Promotion of Higher Secondary School Headmasters as of 01.01.2026 — Enclosures: Proposal Format & 2006-2007 PGTRB Selection List.


01.01.2026 நிலவரப்படி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு முன்னுரிமைப் பட்டியல் Promotion Panel தயார் செய்தல் தொடர்பாக DSE செயல்முறைகள் - இணைப்பு: கருத்துரு படிவம் & 2006-2007 PGTRB Selection List



>>> செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> படிவம் & Selection List தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



BEO பதவிக்கும் TET தேவை - உயர்நீதிமன்றத்தில் வழக்கு

 

BEO பதவிக்கும் TET தேவை -  உயர்நீதிமன்றத்தில் வழக்கு


வாட்ஸ்அப் பகிர்வு


அனைவருக்கும் வணக்கம்🙏


MSHM TO BEO பதவி உயர்வு ஆனது,ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் II முடித்த MSHM களை வைத்து தான் நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 


எனவே இது தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Challenge செய்யப்பட்டுள்ளது.

Stay கேட்கப்பட்டுள்ளது.

DEE PROCEEDINGS ஐ QUASH செய்யவும்,

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பதவி உயர்வு கலந்தாய்வு நடை பெறுகிறதா என்பதை உறுதி செய்ய , தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க சொல்லி  (CALL FOR RECORDS) PRAYER  வைக்கப்பட்டுள்ளது


Without TET II,

MSHM TO BEO PROMOTION ஆனது

Supreme court of India வின் 01-09-2025 தீர்ப்புக்கு முற்றிலும் எதிரானது என்று Prayer வைக்கப்பட்டுள்ளது


முதல் Hearing சென்ற வாரம் நடை பெற்றது.


அடுத்த hearing அடுத்த வாரம் பட்டியலிடப்பட்டுள்ளது.


Counter affidavit தாக்கல் செய்ய சொல்லி அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு மாண்புமிகு நீதிபதி திருமதி P T ASHA அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.


இவ்வழக்கில் கூறப்பட்டுள்ள தகவல்கள் :

1) SUPREME COURT OF INDIAவின் 01-09-2025 நாளிட்ட TET PROMOTION CASE ன் JUDGEMENT 100 % மீறப்பட்டுள்ளது.


2) RTE ACT 2009 வின் விதிகள் பின்பற்றப்படவில்லை.


3) NCTE RULES/NCTE ACT மீறப்பட்டுள்ளது.


4) அரசாணை 12 திட்டமிடப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது


5) இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமையாக கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது.



முடிவுக்கு வருகிறது தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழக்கு

 

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வழக்கு முடிவுக்கு வருகிறது - விவரம் (வாட்ஸ்அப் தகவல்)


உச்சநீதிமன்றத்தில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வழக்கு  13.02.2026 அன்று ஒரு மணி நேரம் நடைபெற்றது.


12.05 to 1.05 (One hour)


ஒரு ஆசிரியர் உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கு உரிய Feeder Category ல் PG ASSISTANT உண்டா என்ற கேள்வியை நீதியரசர் திரு மகாதேவன் கேட்ட பொழுது இல்லை என்ற பதிலை திரு.ப.சிதம்பரம் அவர்கள் அளித்துள்ளார்.


Rule 39(A)(1) பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.


தீர்ப்பு யாருடைய பக்கம் சாதகமாக அமைந்தாலும் கூட, வழக்கறிஞர் திரு.ப.சிதம்பரம் அவர்கள், ஒரு வழக்கறிஞராக மிகச்சிறப்பாக தன்னுடைய தரப்பு ஆசிரியர்களுக்காக வாதிட்டார்


"முதுகலை ஆசிரியர் நிலையிலிருந்து உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுவது என்பது மரபாகப் பின்பற்றப் படுகிறதே தவிர Rule ல் இல்லை என்பது தற்பொழுது நடந்த வாதங்களின் மூலம் மிகத்தெளிவாக  நீதியரசர்கள் உறுதி செய்துள்ளனர்.


உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெறுவதற்குரிய  Feeder Category ல் BT ASSISTANT மட்டுமே  உள்ளனர் PG ASSISTANT இல்லை என்பதையும் நீதியரசர்கள் உறுதி செய்துள்ளனர்.


PG ASSISTANT TO HIGHER SECONDARY HM க்கும் செல்ல முடியும்; Same time


PG TO HSHM க்கும் செல்ல முடியும் என்ற கருத்தை நீதியரசர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.


PG TO HSHM LIEN CUT ஆகும் என்பதே நீதியரசர்களின் கருத்தாக வாதங்களில் அமைந்துள்ளதை அறிய முடிகிறது.


இந்த வழக்கின் தீர்ப்பு வந்த பின்னர் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது."


தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலராக பதவி உயர்வு

 


தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலராக பதவி உயர்வு: பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தரவு


மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்குத் தகுதியான பள்ளி தலைமை ஆசிரியர்களின் விவரங்களை அனுப்பி வைக்குமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதற்கு நிகரான பணியிடங்களுக்கு 2026-27-ம் ஆண்டுக்கான உத்தேச காலிப்பணியிடங்கள் குறித்து அரசுக்கு கருத்துருக்கள் அனுப்பப்பட்டு, ஆணைகள் எதிர்நோக்கப்படுகின்றன.


பெயர் பட்டியல் தயாரிப்பு: மேலும், பணி மாறுதல் மூலம் மாவட்டக் கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்குவதற்கு தகுதியானவர்கள் பெயர்ப் பட்டியலும் தயார் செய்யப்பட உள்ளது. இதற்கான முன்னுரிமைப் பட்டியலில் இருந்து தகுதியான தலைமை ஆசிரியர்களின் விவரங்கள் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள, தங்கள் மாவட்டத்தில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின் விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும்.


வழிகாட்டுதல்கள்: இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும். வருங்காலத்தில் இதில் புகார் ஏதும் பெறப்பட்டால், பரிந்துரை செய்த முதன்மைக் கல்வி அலுவலரே பொறுப்பேற்க நேரிடும். எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



>>> தரம் மற்றும் வசதிகளுடன் கூடிய சில சிறந்த Neckband (Bluetooth Earphones) மாடல்களின் விவரம்...



Promotion Counselling Cancelled - DSE Proceedings



பதவி உயர்வு கலந்தாய்வு ரத்து - பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்


இளநிலை உதவியாளர் பதவியில் இருந்து உதவியாளர் ஆக பதவி உயர்வு முன்னுரிமை எண் 146 முதல் 399 முடிய உள்ளவர்களுக்கு  15-12-2025 திங்கள்கிழமை நடைபெற இருந்த கலந்தாய்வு  ரத்து செய்யப்படுகிறது - பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 12-12-2025


Cancellation of Promotion Counselling - Proceedings of the Joint Director of School Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Weird Wolf Electric Mosquito Bat | Rechargeable Mosquito Killer Racket with Built-in Plug | Lithium Battery | Durable & Strong Design | 6-Month Warranty


https://amzn.to/3XSqcQG




JA to Assistant Promotion - DSE Proceedings

 

இளநிலை உதவியாளர் பதவியில் இருந்து உதவியாளர் ஆக பதவி உயர்வு முன்னுரிமை எண் 146 முதல் 399 முடிய உள்ளவர்களுக்கு கலந்தாய்வு 15-12-2025 திங்கள்கிழமை காலை 11-00 மணிக்கு கூகுள் மீட் மூலம் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெறும் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 11-12-2025 


Counseling for those who are going to be promoted from Junior Assistant to Assistant with priority number 146 to 399 will be held on Monday, 15-12-2025 at 11:00 AM through Google Meet at the respective District Chief Education Office - Proceedings of the Joint Director of School Education, Date: 11-12-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



OnePlus Nord Buds 3r TWS Earbuds up to 54 Hours Playback, 2-mic Clear Calls, 3D Spatial Audio, AI Translation, 12.4mm Drivers, Dual-Device Connectivity, 47ms Low Latency - Aura Blue


https://amzn.to/4rQFMdh




DEO Promotion : DSE Proceedings , Dated: 02-12-2025

 

16 அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 02-12-2025


Promotion of Headmasters of Government High/ Higher Secondary Schools to the post of District Education Officer: Proceedings of the Director of School Education, Date: 02-12-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



wipro Garnet 10W LED Bulb for Home & Office |Cool Day White (6500K) | B22 Base|220 degree Light coverage |4Kv Surge Protection |400V High Voltage Protection |Energy Efficient | Pack of 1


https://amzn.to/48u3fb7




G.O.(Ms) No.: 246, Dated: 04-11-2025 : 11 CEOs Transfer & 26 DEOs Promotion as CEOs

 

11 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் மற்றும் 26 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி அரசாணை (நிலை) எண் : 246, நாள் : 04-11-2025 வெளியீடு


Government Order G.O.(Ms) No.: 246, Dated: 04-11-2025, regarding transfer of 11 District Chirf Education Officers and promotion of 26 District Education Officers to the post of Chief Education Officers


G.O.(Ms) No.: 246, Dated: 04-11-2025 : 11 CEOs Transfer & 26 DEOs Promotion as CEOs



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



👉 கிருஷ்ணகிரி - திரு மதன்குமார் 

 

👉 திருவண்ணாமலை திரு ஏ முனிராஜ் 


👉 ஈரோடு மான் விழி

 

👉 திருச்சி திரு ரவிச்சந்திரன் 


👉கடலூர் திரு ரமேஷ்


👉 செங்கல்பட்டு திருவாளர் செல்வி 


👉 திருவள்ளூர் கற்பகம் 


👉 வேலூர் திரு தயாளன் 


👉 சென்னை திரு கபீர்



7-Step Foldable Ladder : BonKaso Premium Steel Multipurpose Climb Easy Anti-Slip 7-Step Foldable Ladder with Safety Clutch Lock, Support Handle and Tool Tray for Home, Load Capacity Upto 120kg - (Orange & Black)




Actual Price: Rs. 9999

Offer Price : 3569

Benefit : Rs. 6430


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/3Lpzn80



பணியில் நீடிக்க மற்றும் பதவி உயர்வுக்கு TET தேவையில்லை - உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் - மாண்புமிகு அமைச்சர் அவர்களின் ஊடகப் பேட்டி

 


ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு மற்றும் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யபட்டது குறித்து மாண்புமிகு அமைச்சர் அவர்களின் ஊடகச் சந்திப்பு


பணியில் நீடிக்க மற்றும் பதவி உயர்வுக்கு TET தேவையில்லை - உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் - மாண்புமிகு அமைச்சர் அவர்களின் ஊடகப் பேட்டி


TET not required for continue in service and promotion - Tamil Nadu Government files review petition in Supreme Court - Hon'ble Minister's media interview



 >>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 




அரசு பணிகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு - அரசாணை வெளியீடு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 

 

பள்ளிக்கல்வி - அரசு பணிகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டது - மாற்றுத்திறனாளி நல ஆணையரகத்தில் இருந்து அரசாணை நகல் பெறப்பட்டது - சார்நிலை அலுவலர்களுக்கு அனுப்பி வைத்தல் சார்பு - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 10-09-2025 - இணைப்பு : அரசாணை (நிலை) எண்: 06, நாள் : 21-06-2025


Reservation in Promotion for the Persons with Benchmark Disabilities - G.O (MS) No. 6


School Education - Government Order issued regarding 4% reservation in promotions for differently abled persons working in government services - Copy of Government Order received from the Disabled Welfare Commission - Dispatch to Subordinate Officers - Proceedings of the Tamil Nadu Director of School Education, Dated: 10-09-2025 - Attachment: Government Order G.O. (Ms) No.: 06, Dated: 21-06-2025





பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு


 பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காணொளி


Supreme Court's verdict in the case of Teacher Eligibility Test is mandatory for promotion



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 





பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

 


பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு


5 ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் கால அளவைக் கொண்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை. 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் கால அளவு பெற்றுள்ள ஆசிரியர்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


29/7/2011க்கு பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தங்களது பணியில் தொடர இரண்டு ஆண்டுகளுக்குள் தகுதித்தேர்வு தேர்ச்சி அவசியம்.


29-07-2011க்கு முன்பு நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களும் பதவி உயர்வு பெற தகுதித்தேர்வு அவசியம்.


பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.


ஒரு ஆசிரியர் தனது பணியை தொடர இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது


 ஆசிரியர் தகுதி தேர்வில் எழுதி தேர்ச்சி பெற்றால் தான் அவர் அடுத்த நிலை பதவி உயர்வை அடைய முடியும் என்றும் தீர்ப்பு


 பதவி உயர்வைத் தாண்டி பணியில் தொடரவே ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமானது


இன்று வழங்கப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு தீர்ப்பின் குறிப்புகள் வருமாறு..


 அனைத்து ஆசிரியர்களும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


 சர்வீஸில் இறுதி நிலையில் இருக்கும் அதாவது 55 வயதுக்கு மேல் உள்ள ஆசிரியர்கள் அவர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் அவர்கள் பணியில் தொடரலாம்.


 ஆனால் பதவி உயர்வு வேண்டுமென்றால் அவர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


 அனைத்து ஆசிரியர்களும் இரண்டு ஆண்டுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கால நிர்ணயம்..


 பதவி உயர்வுக்கு கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.



தீர்ப்பின் முழுமையான விவரம் விரைவில்...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App New Version: 0.4.7 - Updated on 13-10-2026

    தற்போது TNSED Schools  App-ல் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது TNSED Schools App New Version: 0.4.7 - Updated on 13-10-2026 - SCERT Quiz an...