கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

MATERNITY LEAVE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
MATERNITY LEAVE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

'மகப்பேறு விடுப்பு (Maternity Leave)' நாட்களை பணிக்காலமாக கருத முடியாது' - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ('Maternity Leave' days cannot be considered as working time' - High Court order)...

 

 'மகப்பேறு விடுப்பு (Maternity Leave)' நாட்களை பணிக்காலமாக கருத முடியாது' - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ('Maternity Leave' days cannot be considered as working time' - High Court order)...


பேறுகால விடுமுறையை பணிக் காலமாக கருதும்படி உத்தரவிட, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.


திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்றிய நாகஜோதி என்பவர், சென்னை மாவட்டத்துக்கு, 2018 ஆகஸ்ட்டில் இடமாற்றம் செய்யப்பட்டார்; 2019 ஜனவரியில் துணை தாசில்தாராக பதவி உயர்வு பெற்றார். இரண்டு ஆண்டு பயிற்சி காலத்தின்போது, 2020 மார்ச் முதல் டிசம்பர் 1 வரை, 9 மாதங்கள் பேறுகால விடுமுறை எடுத்தார்.


இந்த விடுமுறை காலத்தை பணிக் காலமாக கருதாததால், தன்னை விட இளையவர்கள், தாசில்தாராக பதவி உயர்வு பெற்று விட்டதாகவும், எனவே, பேறுகால விடுமுறையை பணிக் காலமாக கருதி, தாசில்தாராக பதவி உயர்வு வழங்க கோரியும், உயர் நீதிமன்றத்தில், நாகஜோதி வழக்கு தொடர்ந்தார்.


மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.டி.பெருமாள், ''முழு சம்பளத்துடன், பேறுகால விடுமுறை எடுக்க உரிமை உள்ளபோது, அந்த விடுமுறை நாட்களை பணிக் காலமாகதான் கருத வேண்டும்.


''கேரளாவில் உள்ள பணி விதிகளின்படி, பயிற்சி காலத்தின்போது பேறுகால விடுமுறை எடுத்தால், பணி காலமாக கருதப்படும். அந்த விதி, தமிழகத்தில் இல்லை என்றாலும், மகளிருக்கு அந்த சலுகையை வழங்க வேண்டும்,'' என்றார்.


அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் எம்.அழகு கவுதம், ''விடுமுறை நாட்களை, முழு பணிக் காலமாக கருத முடியாது,'' என்றார்.


மனுவை விசாரித்த, நீதிபதி என்.சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:


வருவாய் பணி விதிகளின்படி, இரண்டு ஆண்டுகள் பயிற்சி காலத்தை முடிக்க வேண்டும். அதனால், பயிற்சி காலத்துக்கு முழு விலக்கு கோர முடியாது. பயிற்சி காலத்தின் போது, பல தேர்வுக்கு உட்பட வேண்டும்.


பயிற்சி காலத்தை பூர்த்தி செய்யும்பட்சத்தில், நிரந்தர பணியில் வரன்முறை செய்யப்படுவர். எனவே, பயிற்சி காலத்தை வெறும் சம்பிரதாயமாக கருத முடியாது.


பேறுகால விடுமுறையை, பயிற்சி காலத்தின்போது எடுத்திருந்து, அந்த நாட்களை பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால், பயிற்சி காலத்தை நீட்டிக்க, நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது. விதிகளில் எந்த திருத்தங்களையும் கொண்டு வருவது, அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது.


அதற்காக, அரசுக்கு நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. பேறுகால விடுமுறையை, பணிக் காலமாக கருதும்படி உத்தரவு பிறப்பிக்க முடியாது. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.


இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


மகப்பேறு காலத்தில் மனைவியை கவனிக்க கணவருக்கு விடுமுறை வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் - நாளிதழ் செய்தி (Husband should be given leave to take care of wife during maternity, High Court - Daily News)...

 

மகப்பேறு காலத்தில் மனைவியை கவனிக்க கணவருக்கு விடுமுறை வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் - நாளிதழ் செய்தி (Husband should be given leave to take care of wife during maternity, High Court - Daily News)...


மகப்பேறு காலத்தில் மனைவியை உடனிருந்து கவனிக்க கணவருக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன். இவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: என் மனைவி கர்ப்பமாக உள்ளார். பிரசவ காலத்தில் மனைவியுடன் இருப்பதற்காக எனக்கு மே 1 முதல் 90 நாட்கள் விடுமுறை கேட்டு உயர் அதிகாரிகளுக்கு விண்ணப்பித்தேன். எனக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பின்னர் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி எனக்கு வழங்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டது.


இதை எதிர்த்து உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தேன். அதனை விசாரித்த உயர் நீதிமன்றம், என் விடுமுறை விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட்டது. இதையடுத்து மே 1 முதல் 30 நாள் எனக்கு விடுமுறை வழங்கப்பட்டது. மே 31-ல் மனைவிக்கு குழந்தை பிறந்தது. இதனால் என்னால் பணிக்கு திரும்ப முடியவில்லை. இது குறித்து காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப் வழியாக தகவல் அனுப்பினேன். இதனை ஏற்க மறுத்து நடத்தை விதிகளை மீறியதாக எனக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை அனுப்பப்பட்டது. இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.


இந்த மனுவை விசாரித்து நீதிபதி எல்.விக்டோரியாகவுரி பிறப்பித்த உத்தரவு: இந்தியாவில் மனைவியின் மகப்பேறு காலத்தில் மனைவியை உடனிருந்து கவனிக்க தந்தைக்கு விடுமுறை வழங்க வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக பேசப்படுகிறது. குழந்தை பிறக்கும்போது தந்தையும் உடனிருப்பது அவசியமானது. குழந்தை வளர்ப்பதில் தாய், தந்தை இருவருக்கும் முக்கிய பங்கு உண்டு.


பல்வேறு நாடுகளில் மகப்பேறு காலத்தில் தாயுடன் தந்தைக்கும் சேர்த்து விடுமுறை வழங்கப்படுகிறது. இந்தியாவில் மனைவியின் மகப்பேறு காலத்தில் தந்தைக்கு விடுமுறை அளிப்பதற்கான தனிச் சட்டம் இல்லை. இருப்பினும் மத்திய குடிமைப் பணிகள் (விடுமுறை) விதியில் தந்தையருக்கான விடுப்பு குறித்து கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் மகப்பேறு காலத்தில் மனைவியுடன் கணவர் இருப்பதற்கு தனிச்சட்டம் நிறைவேற்ற அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் மனுதாரர் பொறுப்புள்ள தந்தையாக செயல்பட்டுள்ளார். இதனால் அவருக்கு வழங்கப்பட்ட குற்றச்சாட்டு குறிப்பாணை ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.



இந்தியாவில் தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை, குழந்தை பெறும்போது தந்தையருக்கு விடுப்பு வழங்கப் படுவதில்லை. ஆனால், Central Civil Services (Leave) Rules, 1972-ல் மகப்பேறு காலத்தில் தந்தைக்கும் விடுப்பு வழங்குவது குறித்து கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு உட்பட இது எந்த மாநிலத்திலும் நடைமுறையில் இல்லை.


மகப்பேறு காலத்தில் மனைவியுடன் கணவர் இருப்பதற்கு தனி சட்டம் உருவாக்கப்படுவது அவசியமாக உள்ளது, இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் பொறுப்புள்ள தந்தையாகச் செயல் பட்டுள்ளார். அதனால் அவருக்கு விளக்கம் கேட்டு வழங்கப்பட்ட அழைப்பாணை ரத்து செய்யப்படுகிறது. மேலும், அவர் கடையம் காவல் நிலையத்தில் காவல் அதிகாரியாகப் பணியில் சேர உத்தரவிடப்படுகிறது’ எனத் தீர்ப்பளித்துள்ளார். மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அடிப்படை விதிகள் - மகப்பேறு விடுப்பு - 3வது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவதற்கான பிரார்த்தனையுடன் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் தொடர்பாக எதிர் அஃபிடவிட்கள் / ரிட் மேல்முறையீடுகளை தாக்கல் செய்தல் - வழிமுறைகள் - சம்பந்தமாக - மனிதவள மேலாண்மை (FR-III) துறை செயலாளர் அரசுக் கடிதம் எண்.3312185/ FR-Ill /2022-2, தேதி: 19-12-2022 (Fundamental Rules - Maternity leave — Filing of Counter Affidavits/Writ Appeals in respect of Writ Petitions filed with a prayer for grant of Maternity Leave for 3rd child - Instructions —Regarding - Human Resources Management (FR-III) Department Secretary to Government Letter (Ms) No.3312185/ FR-Ill /2022-2, Dated: 19-12-2022)...


>>> அடிப்படை விதிகள் - மகப்பேறு விடுப்பு - 3வது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவதற்கான பிரார்த்தனையுடன் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் தொடர்பாக எதிர் அஃபிடவிட்கள் / ரிட் மேல்முறையீடுகளை தாக்கல் செய்தல் - வழிமுறைகள் - சம்பந்தமாக - மனிதவள மேலாண்மை (FR-III) துறை செயலாளர் அரசுக் கடிதம் எண்.3312185/ FR-Ill /2022-2, தேதி: 19-12-2022 (Fundamental Rules - Maternity leave — Filing of Counter Affidavits/Writ  Appeals in respect of Writ Petitions filed with a prayer for grant of Maternity Leave for 3rd child - Instructions —Regarding - Human Resources Management (FR-III) Department Secretary to Government Letter (Ms) No.3312185/ FR-Ill /2022-2, Dated: 19-12-2022)...



Human Resources Management (FR-III) Department, Secretariat, Chennai-600 009. 

Letter (Ms) No.3312185/ FR-Ill /2022-2, Dated: 19-12-2022... 

From 

Tmt. Mythili K. Rajendran IAS 

Secretary to Government.

To 

All Secretaries to Government Chennai-6. 

All Departments of Secretariat, Chennai-9. 

All Heads of Departments Including District Collector.(w.e) 

Sir/Madam, 

Sub: Fundamental Rules - Maternity leave — Filing of Counter Affidavits/Writ  Appeals in respect of Writ Petitions filed with a prayer for grant of Maternity Leave for 3rd child - Instructions —Regarding. 

Ref: The judgment of the High Court of Madras in W.A.No.1442/2022, dated 14.09.2022. 

I am directed to invite your kind attention to rule 101(a) of the Fundamental Rules of the Tamil Nadu Government which provides for the grant of maternity leave. Instruction 1 of the said Fundamental Rule 101(a) provides as follows:- 

(i) A competent authority may grant maternity leave on full pay to permanent married women Government servants and to non-permanent married women Government servants, who are appointed on regular capacity, for a period not exceeding 365 days, which may spread over from the pre-confinement rest to post confinement recuperation at the option of the Government servant. Non-permanent married women Government servants, who are appointed on regular capacity and join duty after delivery shall also be granted maternity leave for the remaining period of 365 days after deducting the number of days from the date of delivery to Government service (both days Inclusive) recuperation, for the post confinement.



மூன்றாவது பிரசவத்திற்கு "மகப்பேறு விடுப்பு" கோரி அரசுப்பள்ளி ஆசிரியர் வழக்கும் - உயர்நீதிமன்றத்தின் உத்தரவும் (Govt school teacher's case seeking "maternity leave" for third delivery - High Court orders)...



 மூன்றாவது பிரசவத்திற்கு "மகப்பேறு விடுப்பு" கோரி அரசுப்பள்ளி ஆசிரியர் வழக்கும் - உயர்நீதிமன்றத்தின் உத்தரவும் (Govt school teacher's case seeking "maternity leave" for third delivery - High Court orders)...


ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரான கதிஜா உமாமா தனது மூன்றாவது பிரசவத்திற்கு ஓராண்டு காலத்திற்கு விடுப்பு கோரி விண்ணப்பித்தார். விண்ணப்பம் மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 


இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தபோது, முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே விடுப்பு வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், பணியில் சேர்வதற்கு முன்பாகவே இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டது. பணியில் சேர்ந்த பின்னரே மூன்றாவது குழந்தைக்கு கருவுற்றதால் விடுப்பு பெற உரிமை உள்ளது. 


விடுப்பு கோரி மனுதாரர் கடந்த ஜூன் 27ம் தேதி ஈரோடு மாவட்ட கல்வி அதிகாரியிடம் மனு கொடுத்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டது என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அவரது  விண்ணப்பத்தை பரிசீலித்து ஜூலை 7ம் தேதி முதல் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்குவது குறித்து 12 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



மகப்பேறு விடுப்பில் இருக்கும் பெண் அரசு ஊழியர் சொந்த விருப்பத்தின் பேரில் பணிமாறுதல் பெற்றால் புதிய பணியிடத்தில் மகப்பேறு விடுப்பை தொடர்ந்து துய்க்க வழிவகை இல்லை - RTI Reply (If a Female Government Employee who is on Maternity Leave gets a Voluntary Transfer, there is no way to continue Maternity Leave in the New Workplace - RTI Reply)...



>>> மகப்பேறு விடுப்பில் இருக்கும் பெண் அரசு ஊழியர் சொந்த விருப்பத்தின் பேரில் பணிமாறுதல் பெற்றால் புதிய பணியிடத்தில் மகப்பேறு விடுப்பை தொடர்ந்து துய்க்க வழிவகை இல்லை - RTI Reply (If a Female Government Employee who is on Maternity Leave gets a Voluntary Transfer, there is no way to continue Maternity Leave in the New Workplace - RTI Reply)...




>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...






ஒரு பெண் அரசு ஊழியருக்கு, குழந்தை பிறந்த பின் சிறிது காலத்தில் இறந்த நிலையிலும் அரசாணை (நிலை) எண்: 84, நாள்: 23-08-2021ன் படி 365 நாட்களுக்கு மகப்பேறு விடுப்பு Post Confinement Recuperation என்ற அடிப்படையில் முழுமையாக துய்க்கலாம் என்பதற்கான மனித வள மேலாண்மைத் துறை அரசு செயலாளர் கடிதம் (Government letter to a female civil servant on the basis of Post Confinement Recuperation of Maternity Leave for 365 days as per G.O. (Ms) No: 84, Dated: 23-08-2021 even if the child dies shortly after birth) எண்: 2287786/ அ.வி.III/ 2022-1, நாள்: 02-05-2022...



>>> ஒரு  பெண் அரசு ஊழியருக்கு, குழந்தை பிறந்த பின் சிறிது காலத்தில் இறந்த நிலையிலும் அரசாணை (நிலை) எண்: 84, நாள்: 23-08-2021ன் படி 365 நாட்களுக்கு மகப்பேறு விடுப்பு Post Confinement Recuperation என்ற அடிப்படையில் முழுமையாக துய்க்கலாம் என்பதற்கான மனித வள மேலாண்மைத் துறை அரசு செயலாளர் கடிதம் (Government letter to a female civil servant on the basis of Post Confinement Recuperation of Maternity Leave for 365 days as per G.O. (Ms) No: 84, Dated: 23-08-2021 even if the child dies shortly after birth) எண்: 2287786/ அ.வி.III/ 2022-1, நாள்: 02-05-2022...

திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு அனுமதித்தல் - வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாணைகளின் நகல்கள் - மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குனரின் சுற்றறிக்கை ( Sanction of Maternity Leave to Married women Government Servants- Guidelines and copies of G.O.s Communicated Regarding - Circular of Director of Medical and Rural Health Services Ref: 50218/ E4/ 3/ 2021, Dated: 10-03-2022)...



>>> திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு அனுமதித்தல் - வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாணைகளின் நகல்கள் - மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குனரின் சுற்றறிக்கை ( Sanction of Maternity Leave to Married women Government Servants- Guidelines and copies of G.O.s Communicated Regarding - Circular of Director of Medical and Rural Health Services Ref: 50218/ E4/ 3/ 2021, Dated: 10-03-2022)...

சமக்ர சிக்சா - தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு, கருச்சிதைவு, தத்தெடுப்பு விடுப்பு அனுமதித்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் வழிகாட்டுதல்கள் (Samagra Siksha - State Project Director's guidelines for granting maternity, abortion and adoption leave to female employees working on a Consolidated basis - SPD Letter No.2405/ SS/ A1/ 2020, Dated: 10-12-2021)...



>>> சமக்ர சிக்சா - தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு, கருச்சிதைவு, தத்தெடுப்பு விடுப்பு அனுமதித்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் வழிகாட்டுதல்கள் (Samagra Siksha - State Project Director's guidelines for granting maternity, abortion and adoption leave to female employees working on a Consolidated basis - SPD Letter No.2405/ SS/ A1/ 2020, Dated: 10-12-2021)...

பெண் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 365 நாளாக உயர்த்தப்பட்டது - தெளிவுரை வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு - (01.07.2021க்குப் பிறகு, அரசாணை வெளியிடப்பட்ட நாளான 23.08.2021க்கு இடைப்பட்ட காலத்தில் 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு முடிந்து மீண்டும் பணியில் சேர்ந்தவர்களும் 365 நாட்கள் துய்த்துக் கொள்ளலாம் என தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது)... Human Resources Management (FR-III) Department Chief Secretary to Government Letter(Ms) No.16049/FR-III/2021, Dated: 17-09-2021... Maternity leave for Female Government Servants has been increased to 365 days - Government Clarification Letter - ( It has been clarified that those who have completed 270 days, maternity leave between 01.07.2021 and 23.08.2021, After the date of publication of the G.O. can also avail 365 days)...

 


பெண் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 365 நாளாக உயர்த்தப்பட்டது - தெளிவுரை வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு - (01.07.2021க்குப் பிறகு, அரசாணை வெளியிடப்பட்ட நாளான 23.08.2021க்கு இடைப்பட்ட காலத்தில் 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு முடிந்து மீண்டும் பணியில் சேர்ந்தவர்களும் 365 நாட்கள் துய்த்துக் கொள்ளலாம் என தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது)...


Maternity leave for Female Government Servants has been increased to 365 days - Government Clarification Letter - ( It has been clarified that those who have completed 270 days,  maternity leave between  01.07.2021 and 23.08.2021, After the date of publication of the G.O. can also avail 365 days)...


>>> Click here to Download Human Resources Management (FR-III) Department Chief Secretary to Government Letter(Ms) No.16049/FR-III/2021, Dated: 17-09-2021...


>>> மகளிருக்கான மகப்பேறு கால விடுப்பு(Maternity Leave) 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்வு அரசாணை: G.O.(Ms). No.84, Dated: 23.08.2021... 


>>>  9 மாத மகப்பேறு விடுப்பில் இருப்பவர்கள் தற்போது 12 மாதங்களுக்கு விடுப்பை நீட்டித்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவம்(Maternity Leave Extension Application Format)...



மகப்பேறு விடுப்பு(Maternity Leave) வழங்குவதில் எந்த பாகுபாடும் காட்டுவதில்லை - தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் விளக்கம்...



 மகப்பேறு விடுப்பு வழங்குவதில் பணி வரன்முறை செய்யப்பட்ட ஊழியர்களுக்கும், வரன்முறைப்படுத்தப்படாத ஊழியர்களுக்கும் இடையில் எந்த பாகுபாடும் காட்டுவதில்லை - தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் விளக்கம்.


வரன்முறைப்படுத்தப்படாத ஊழியர்களும் பணியில் சேர்ந்து ஓராண்டு முடிந்திருந்தால் விடுப்பை பெற்றுக்கொள்ளலாம் - தமிழ்நாடு அரசு.


மகப்பேறு விடுப்பு 270 நாட்களில் இருந்து 365 நாட்களாக அதிகரித்து ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது.

9 மாத மகப்பேறு விடுப்பில் இருப்பவர்கள் தற்போது 12 மாதங்களுக்கு விடுப்பை நீட்டித்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவம்(Maternity Leave Extension Application Format)...



* மகப்பேறு விடுப்பானது 2021 ஜூலை 1முதல்,  270 நாள்களில் இருந்து 365 நாள்களாக உயர்த்தி  அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. (அரசாணை எண். 84. மனிதவள மேலாண்மைத் துறை, நாள். 23.08.2021)


* எனவே,  01.07.2021 அன்று அல்லது அதற்குப் பிறகு 270 விடுப்பு முடிந்து பணியில் சேர்ந்து இருந்தாலும் கூட அவர்கள் மீண்டும் விண்ணப்பித்து, ஏற்கனவே அனுபவித்த  270 விடுப்பு நாள்களுடன் சேர்த்து,  மொத்தம் 365 நாட்களுக்கு மிகாமல்  மகப்பேறு விடுப்பினை அனுபவித்துக் கொள்ளலாம்.

அதற்கான விண்ணப்பப் படிவம் ...

👇🏿👇🏿👇🏿


>>> 9 மாத மகப்பேறு விடுப்பில் இருப்பவர்கள் தற்போது 12 மாதங்களுக்கு விடுப்பை நீட்டித்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவம்...



>>>  மகளிருக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்வு அரசாணை: G.O.(M.S.). No.84, Dated: 23.08.2021...


மகளிருக்கான மகப்பேறு கால விடுப்பு(Maternity Leave) 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்வு அரசாணை: G.O.(Ms). No.84, Dated: 23.08.2021... [ Enhancement of Maternity Leave from 9 Months(270 Days) to 12 Months(365Days) ]...



 மகளிருக்கான மகப்பேறு கால விடுப்பு(Maternity Leave) 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்வு அரசாணை: G.O.(Ms). No.84, Dated: 23.08.2021... [ Enhancement of Maternity Leave from 9 Months(270 Days) to 12 Months(365Days) ]...


>>> Click here to Download G.O.(Ms). No.84, Dated: 23.08.2021... 


இவ்வாணையின் படி மகப்பேறு விடுப்பு 01-07-2021 முதல் 1 ஆண்டாக உயர்த்தி நடைமுறைப்படுத்தப்படுகிறது...


01-07-2021க்கு முன்பு மகப்பேறு விடுப்பு தொடங்கி தற்போது விடுப்பிலிருக்கும் பெண் பணியாளருக்கும் இவ்வாணை பொருந்தும்...


(1.7.2021க்கு முன்னதாக மகப்பேறு விடுப்பில் உள்ளவர்களும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 9 மாதத்திற்கு பதிலாக ஓராண்டு அதாவது 365 நாட்கள் வரை மகப்பேறு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்...)


>>> 9 மாத மகப்பேறு விடுப்பில் இருப்பவர்கள் தற்போது 12 மாதங்களுக்கு விடுப்பை நீட்டித்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவம்...


மகப்பேறு விடுப்பு(Maternity Leave) அனுமதிக்கும் பொழுது பாரபட்சம் கூடாது - உயர்நீதிமன்றம்...

 மகப்பேறு விடுப்பு அனுமதிக்கும் பொழுது பாரபட்சம் கூடாது - உயர்நீதிமன்றம்...


மகப்பேறு விடுப்பு வழங்கும் போது எந்த பாகுபாடும் காட்ட கூடாது-தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.


பணிவரன்முறை செய்யப்பட்ட ஊழியர்களுக்கும், பணிவரன்முறைப் படுத்தப்படாத ஊழியர்களுக்கும் இடையே பாகுபாடு காட்ட கூடாது.


அனைவருக்கும் ஒரே மாதிரியாக மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம்.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...