கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NEET COACHING லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
NEET COACHING லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கல்வி மாவட்ட அளவில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் கால அட்டவணை - 25.03.2024 முதல் 02.05.2024 வரை நடைபெறுதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...


கல்வி மாவட்ட அளவில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் - 25.03.2024 முதல் 02.05.2024 வரை நடைபெறுதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...


Education District Level NEET Coaching Classes - Conducted from 25.03.2024 to 02.05.2024 - Proceedings of Director of School Education...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகள் நூலகமாக மாற்றமா? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்....

 மத்திய அரசின் நீட், ஜெஇஇ போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி தரும் அளவுக்கு அரசு பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை என்றும், அதனால் தான் தனியார் மூலம் ஆன்லைனில் மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார். 


மேலும் நீட் தேர்வுக்கு 21 ஆயிரம் விண்ணப்பித்திருந்த நிலையில் 5,800 பேர் மட்டுமே இலவச பயிற்சி எடுக்கின்றனர். சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும். அதனையடுத்து 12-ம் வகுப்பு செய்முறை தேர்வு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 


10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளை நூலகமாக மாற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம் என தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 


இந்தநிலையில் நேற்று 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் இல்லை. அதற்கு பதில் 6 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசு உதவியுடன் டேப் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது

அரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு நேரடி 'நீட்' பயிற்சி அளிக்க திட்டம்...

 பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 'நீட்' பயிற்சி வகுப்புகளையும் நேரடியாக நடத்த, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.தமிழகம் முழுதும், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், ஜன., 19ல் திறக்கப்பட்டன. பொதுத் தேர்வை எழுத உள்ள, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேரடியாக வகுப்புகள் துவங்கியுள்ளன.


அனைத்து மாணவர்களும் தேர்வுக்கு தயாராகும் வகையில், முக்கிய பாடப் பகுதிகளை முதலில் நடத்தவும், மீதமுள்ள பாடங்களை மார்ச்சில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில், 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால், அரசு பள்ளி மாணவர்களை, நீட் தேர்வின் தேர்ச்சிக்கும் தயார் செய்ய வேண்டியுள்ளது.


பத்து மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், 'ஆன்லைன்' வழியே, 'இ- - பாக்ஸ்' நிறுவனத்தின் சார்பில், நீட் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சிகளை, அடுத்த மாதம் முதல், பள்ளிகளில் நேரடியாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்காக தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்வது, அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணிகள் விரைவில் துவங்க உள்ளன. 


ஏற்கனவே, சில ஆசிரியர்கள் பயிற்சிகளை பெற்றுள்ள நிலையில், புதிதாக பயிற்சி பெற விரும்புவோருக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பின், அவர்கள் வழியே, நீட் பயிற்சி வகுப்புகள் நேரடியாக பள்ளிகளில் நடத்தப்படும் என, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன..

🍁🍁🍁 நீட் தேர்வு பயிற்சிக்கு நேற்று 20 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர் - அமைச்சர் செங்கோட்டையன்.

 நீட் பயிற்சிக்காக நேற்று முன்தினம் வரை 9,842 பேர் பதிவு செய்திருந்த நிலையில், நேற்று 20 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். நீட் பயிற்சி வகுப்பு விரைவில் தொடங்கும் என ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கூறினார்.

🍁🍁🍁 குறைவாக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு 2ம் முறையாக நீட் பயிற்சி அளிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்...

 


குறைவாக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு 2 ஆம் முறையாக நீட் பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘நீட் தேர்வில் குறைவான மார்க் எடுத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் முறையாக ஆன்லைனில் நீட் பயிற்சி அளிக்கப்படும். பிளஸ் டூ முடித்த 9,438 மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்’ என்றார்.

🍁🍁🍁 பிளஸ் 2 மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பாடங்களை வழங்க பள்ளிக் கல்வித்துறை புதிய ஏற்பாடு...

பிளஸ் 2 மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பாடங்களை வழங்க பள்ளிக் கல்வித்துறை புதிய ஏற்பாடு

பிளஸ் 2 மாணவர்களுக்கு, அவர்களின் இலவச, 'லேப்டாப்'பில், 'நீட்' தேர்வுக்கான பாடங்களை வழங்க, பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. 

தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, 14 வகை இலவச நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. 

அவற்றில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, இலவச லேப்டாப் வழங்கும் திட்டமும் ஒன்று.இந்த திட்டத்தில், இரண்டு ஆண்டுகளாக பிளஸ் 1 படிக்கும்போதே, லேப்டாப் வழங்கப்படுகிறது.

 இவ்வாறு வழங்கப்பட்ட லேப்டாப்பை, பிளஸ் 2 பொது தேர்வுக்கான பயிற்சிக்கு பயன்படுத்துமாறு, ஆசிரியர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்த ஆண்டு, இலவச லேப்டாப்பில், பிளஸ் 2 தொடர்பான வீடியோ பாடங்கள், பதிவேற்றம் செய்து வழங்கப்பட்டுள்ளன.

 இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்கள், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில், அவர்களுக்கு லேப்டாப்பிலேயே, நீட் தொடர்பான வீடியோ பாடங்களை பதிவேற்றம் செய்து வழங்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் அதிக தேர்ச்சி பெறும் வகையில், அரசின் சார்பில் இலவச நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும், ஆசிரியர்கள், தங்களுக்கு கிடைக்கும் நீட் தொடர்பான பாடக் குறிப்புகளை, அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'வாட்ஸ் ஆப்' குழுக்கள் வழியே வழங்கி வருகிறோம்.மேலும், நீட் பயிற்சியில் நடத்தப்படும் பாடங்களை வீடியோ முறையில் தயாரித்து, இலவச லேப்டாப்பில், பதிவேற்றம் செய்து தருகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

🍁🍁🍁 இலவச நீட் பயிற்சி அளிக்க தனியார் நிறுவனங்களுக்கு அரசு அழைப்பு...

 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று கூறியதாவது:

நீட் தேர்வுக்காக 412 மையங்களில் 6 ஆயிரத்து 618 மாணவர்களுக்கு அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் அரசுப் பள்ளியைச் சேர்ந்த 747 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பெரியகுளத்தைச் சேர்ந்த ஜீவித் குமார் என்ற மாணவர், இந்தியாவிலேயே அரசுப் பள்ளியில் படித்து 664 மதிப்பெண்ணை எடுத்து முதலிடம் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

தமிழகத்தில் 412 நீட் பயிற்சி மையங்களை உருவாக்கவும், கட்டமைப்பு வசதி செய்யவும் கடந்த இரு ஆண்டுகளில் ரூ.57 லட்சம் செலவு செய்யப்பட்டது. அதன்பின்னர், நீட் பயிற்சிக்காக தனியார் நிறுவனத்துக்கு ஒரு ரூபாய்கூட அரசு வழங்குவதில்லை. மாணவர்களுக்கும் செலவு செய்வதில்லை. தகுதி வாய்ந்த தனியார் நிறுவனம் இலவசமாக நீட் பயிற்சி அளிக்க முன்வந்தாலும், அதனை ஏற்கத் தயாராக இருக்கிறோம். இதுதான் அரசின் கொள்கை. அரசின் நிதியை இதற்கென செலவிடும்போது, டெண்டர் உள்ளிட்ட நடைமுறைகள் மற்றும் ஏன் இதற்காக செலவிட்டார்கள் என்பது போன்ற கேள்விகள் எழும் வாய்ப்புகள் உள்ளன. நடப்பு ஆண்டு நீட் பயிற்சி அளிப்பதற்கான பட்டியல் டிசம்பர் மாத இறுதிக்குள் தயார் செய்யப்படும். அதன் பின்னர் மாணவர்களை தேர்வு செய்து, பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

🍁🍁🍁 அரசு பள்ளி மாணவருக்கு முழுநேரம் 'நீட்' பயிற்சி - மாவட்ட வாரியாக மையம் அமைக்க வலியுறுத்தல்...

 


அரசு பள்ளி மாணவருக்கு, முழு நேரம், 'நீட்' பயிற்சி அளிக்க, விடுதியுடன் கூடிய மையங்கள் அமைக்க, ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்டவைக்கு, 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில், சேர்க்கை நடத்தப்படுகிறது.

 இதனால், தனியார் மையங்களில், பல லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி, தனியார் பள்ளி மாணவ, மாணவியர், ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்டுக்கு, முழு நேர பயிற்சியில் ஈடுபடுகின்றனர். அவர்களோடு போட்டியிட முடியாமல், அரசு பள்ளி மாணவ, மாணவியர், மருத்துவர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தை கைவிட வேண்டிய கட்டாயம் உருவாகிறது.

இதை தவிர்க்க, அரசு சார்பில், ஒன்றியம் வாரியாக, மையங்கள் அமைத்து, விடுமுறை நாள், மாலை நேரங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, பல கோடி ரூபாய் செலவழிக்கப்படுகின்றன. ஆனாலும், இதில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை.

 3,500க்கும் மேற்பட்ட மருத்துவ சீட்களில், ஒற்றை இலக்கத்தை எட்டி பிடிக்கவே போராடும் நிலை உள்ளது. நடப்பு கல்வியாண்டில், 'நீட்' தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் ஜீவித்குமாரும், பள்ளிப்படிப்பை முடித்து, முழு நேரம், ஓராண்டு 'நீட்' தேர்வுக்கு பயிற்சி பெற்ற பின்பே சாதிக்க முடிந்தது.

இதன்மூலம் உரிய பயிற்சி அளிக்கப்பட்டால், தமிழக அரசு பள்ளி மாணவர்கள் மற்ற மாநிலங்களை விட, சாதித்து காட்ட முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of winners of Thirukkural competitions

திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் பெயர்ப் பட்டியல் வெளியீடு List of winners of Thirukkural competitions >>> தரவிறக்கம் ச...