கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நிதி ஒதுக்கீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிதி ஒதுக்கீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பசுமைப் பள்ளித் திட்டம் - Green School Scheme - 2023-2024 ஆம் ஆண்டு - பள்ளிக்கு ரூ.20 லட்சம் வீதம் 46 பள்ளிகளுக்கு ரூ.9.20 கோடி அனுமதி - அரசாணை & 46 பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் வெளியீடு...

 


சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் - பசுமைப் பள்ளித் திட்டம் - 2023-2024 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு - பள்ளிக்கு ரூ.20 லட்சம் வீதம் 46 பள்ளிகளுக்கு ரூ.9.20 கோடி நிதியை மாற்ற அனுமதி - அரசாணை & 46 பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் வெளியீடு Environment, Climate Change and Forest (EC-1) Department G.O.(Ms).No.39, Dated: 08.03.2024...


Environment, Climate Change - Green School Scheme - Announcement for the year 2023-2024 - Permission to transfer the fund of Rs.9.20 Crores to 46 Schools at Rs.20 lakhs per School - Orders -Issued.



>>> அரசாணை G.O.(Ms).No.39, Dated: 08.03.2024 & 46 பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Environment, Climate Change and Forest (EC-1) Department

G.O.(Ms).No.39, Dated: 08.03.2024

Read:

1. G.O. (Ms) No.12, Environment, Climate Change and Forest (EC.1) Department, Dated: 18.01.2024

2. From the Director, Department of Environment and Climate Change, Letter No.477/2023/DoE&CC/TNCCM/2023, Dated: 02.02.2024...


ORDER:

In the Government order first read above, the Government had accorded administrative approval, for a sum of Rs.10 crore [Rs. 20 lakh per School for 50 Government Schools] for implementing the "Green School Scheme" from the Tamil Nadu Pollution Control Board's fund and the Director, Department of Environment and Climate Change was requested to forward the list of 50 Schools to Government for implementing the above scheme.


2. In the letter second read above, the Director, Department of Environment and Climate Change has furnished a list of 46 schools to implement the Green School Scheme for the year 2023-2024.


3. The Government after careful consideration accept the request and permit the Director, Department of Environment and Climate Change for transferring the fund of Rs.9.20 Crores for 46 Schools at Rs.20 lakhs per School, as listed in the Annexure to this order, to the Commissioner of School Education to implement the "Green School Scheme". The above expenditure will be met from Tamil Nadu Pollution Control Board's Fund and should be incurred as detailed in the Government Order first read above along with the Green Protocol mentioned therein.


(BY ORDER OF THE GOVERNOR)

SUPRIYA SAHU

ADDITONAL CHIEF SECRETARY TO GOVERNMENT

To

The Director,

Department of Environment and Climate Change,

Chennai-15.


ஊராட்சி ஒன்றிய / அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக் கழிவறைகள் பராமரிப்பு, வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகம் தூய்மை செய்தல் - நவம்பர் 2021 முதல் ஏப்ரல் 2022 வரையிலான 6மாதங்களுக்கு நிதி ஒதுக்கீடு - அரசாணை (G.O.Ms.No.:37, Dated: 23-03-2022 ) வெளியீடு (Panchayat Union / Government Elementary, Middle, Secondary and Higher Secondary Schools Toilet Maintenance, Classroom and School Campus Cleaning - Allocation funds for 6 months from November 2021 to April 2022 - G.O.Ms.No.:37, Dated: 23-03-2022 Released)...



>>> ஊராட்சி ஒன்றிய / அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக் கழிவறைகள் பராமரிப்பு, வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகம் தூய்மை செய்தல் - நவம்பர் 2021 முதல் ஏப்ரல் 2022 வரையிலான 6மாதங்களுக்கு நிதி ஒதுக்கீடு - அரசாணை (G.O.Ms.No.:37, Dated: 23-03-2022 ) வெளியீடு (Panchayat Union / Government Elementary, Middle, Secondary and Higher Secondary Schools Toilet Maintenance, Classroom and School Campus Cleaning - Allocation funds for 6 months from November 2021 to April 2022 - G.O.Ms.No.:37, Dated: 23-03-2022 Released)...

"பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு" (Safety & Security at School Level) என்ற தலைப்பில் பள்ளி ஒன்றுக்கு ரூ.500/- வீதம் நிதி ஒதுக்கீடு...

 


பார்வையில் காணும் மாநில திட்ட இயக்குநர் அவர்களின் கடிதத்தின்படி, 2020-2021 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி பாதுகாப்பு உணர்வுடன் கல்வி கற்கும் சூழலை உருவாக்குவதற்காக, “பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு" (Safety & Security at School Level) என்ற தலைப்பில் பள்ளி ஒன்றுக்கு ரூ.500/- வீதம் திட்ட ஏற்பளிப்புக் குழுவால் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

இதன் உயரிய நோக்கம், உலக அளவில் கோவிட் - 19 கிருமியின் காரணமாக நோய்த் தொற்று பரவும் அசாதாரணமான தற்போதைய சூழலில், பள்ளி மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி பள்ளிக்கு வருவதை உறுதிபடுத்துவதும், தன்சுத்தத்துடனும், பாதுகாப்பு உணர்வுடனும் கல்வி கற்கும் சூழலை பள்ளிகளில் ஏற்படுத்துவதும் ஆகும். எனவே பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிக்காக, பள்ளி ஒன்றுக்கு ரூ.500/- வீதம் அனைத்து வட்டார வளமையங்களுக்கு 1758 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்காக இணைப்பில் காணும் அட்டவணைப்படி நிதி விடுவிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.


வழிகாட்டுதல்கள்

மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டியவை:

மாவட்ட திட்ட அலுவலகத்திலிருந்து நிதி விடுவிக்கப்பட்டவுடன் சார்ந்த பள்ளிகள் திறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு நிதியை விடுவித்து பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் அனைத்தும் செய்யப்பட வேண்டும்.

மேலும், அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு" சார்ந்து குறிப்பாக கோவிட் - 19 நோய்த் தொற்று பற்றிய விழிப்புணர்வு சார்ந்து ஒருநாள் பயிற்சியும் அதற்கான பயிற்சி கட்டகமும் வழங்கப்பட உள்ளது. அது குறித்த விரிவான விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

பயிற்சி முடிந்தவுடன் மேற்காண் பொருள் சார்ந்த விழிப்புணர்வை மாணவர்கள் அவர்களின் பெற்றோர் ஆகியோரிடம் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

4. கோவிட் - 19 குறித்து அரசின் சுகாதாரத்துறை வாயிலாக வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.

மேற்காணும் வழிகாட்டுதல்கள் மற்றும் அனைத்து நடைமுறைகளையும் முறையாக பின்பற்றவும் விடுவிக்கப்பட்ட நிதியினை ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.500/- வீதம் வட்டார வளமையத்திலிருந்து PFMS வாயிலாக தொகை விடுவித்தல் வேண்டும். தொகை விடுவிக்கப்பட்ட விவரத்தினை 23.12.2020 க்குள் மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.

இணைப்பு : Safety & Security Block wise Fund Released Abstract

>>> முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


>>> ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்...



🍁🍁🍁 அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் "பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு & கோவிட் 19 விழிப்புணர்வு" ரூ.500 நிதி ஒதுக்கீடு மற்றும் ஒரு நாள் பயிற்சி – இயக்குநரின் செயல்முறைகள்...

 பள்ளிகள் மேற்கொள்ள வேண்டியவை

  பள்ளி திறப்பதற்கு முன்  : 

1. பள்ளிகளுக்கு நிதி விடுவிக்கப்பட்டவுடன் தலைமை ஆசிரியர்கள் SMC / SMDC உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டி பள்ளிகளையும் வகுப்பறைகளையும் மற்றும் மாணவர்களின் கைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிக்குத் தேவையான கொள்முதல் செய்ய வேண்டிய பொருள்கள் எவை என்பதையும் அதன் அளவினையும் முடிவு செய்து தீர்மானம் இயற்ற வேண்டும் . 

2. தீர்மானத்தின் அடிப்படையில் பொருள்களை விதிமுறைகளை பின்பற்றிக் கொள்முதல் செய்து அவற்றை பள்ளி இருப்புப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.


பள்ளிகள் திறந்த பின் : 

1. பள்ளிகள் திறந்த பிறகு , கோவிட் 19 கிருமியின் காரணமாக நோய்த் தொற்று பரவும் அசாதாரணமான சூழலில் , நோய்த் தொற்று பரவாமல் இருக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.

2. மேலும் அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் “ பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ” சார்ந்து குறிப்பாக கோவிட் – 19 நோய்த் தொற்று பற்றிய விழிப்புணர்வு சார்ந்து ஒருநாள் பயிற்சியும் அதற்கான பயிற்சி கட்டகமும் வழங்கப்பட உள்ளது . அது குறித்த விரிவான விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

3. பயிற்சி முடிந்தவுடன் மேற்காண் பொருள் சார்ந்த விழிப்புணர்வை மாணவர்கள் , அவர்களின் பெற்றோர் ஆகியோரிடம் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

4. கோவிட் – 19 குறித்து அரசின் சுகாதாரத்துறை வாயிலாக வழங்கப்படும் வழிக்காட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.








இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை விடுமுறை அறிவிப்பு - 29.11.2024

  கனமழை காரணமாக 29-11-2024 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools &am...