கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

துய்க்காத பணியேற்பிடைக் காலத்தை (Unavailed Joining Time) ஈட்டிய விடுப்பு இருப்புக் கணக்கில் வரவு வைத்தல் சார்பான பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறையின் 3 அரசாணைகள் [ G.O.(Ms.)No.: 21, Dated : 10-02-2020, G.O.(Ms.)No.: 37, Dated : 30-04-2019 & G.O.(Ms.)No.: 207, Dated : 14-08-1997 ]- ஒரே கோப்பில்...

 துய்க்காத பணியேற்பிடைக் காலத்தை (Unavailed Joining Time) ஈட்டிய விடுப்பு இருப்புக் கணக்கில் வரவு வைத்தல் சார்பான பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறையின் 3 அரசாணைகள் 

  1. G.O.(Ms.)No.: 21, Dated : 10-02-2020, 
  2. G.O.(Ms.)No.: 37, Dated : 30-04-2019, 
  3. G.O.(Ms.)No.: 207, Dated : 14-08-1997

 - ஒரே கோப்பில்...


>>> Click Here to Download G.O.s...




பள்ளிக் கல்வி- நிர்வாக சீர்திருத்தங்கள் - நிர்வாக சீர்திருத்தக் குழுவின் பரிந்துரைகள்- நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

 


பள்ளிக் கல்வி- நிர்வாக சீர்திருத்தங்கள் - நிர்வாக சீர்திருத்தக் குழுவின் பரிந்துரைகள்- நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Proceedings of the School Education Director R.C.No.:57936/A1/S4/2020, Dated: 15-12-2020...

>>> Click Here to Download Proceedings of the School Education Director R.C.No.:57936/A1/S4/2020, Dated: 15-12-2020...


அதிகமாக செலுத்தப்பட்ட வருமான வரி - வங்கிக் கணக்குக்கு திருப்பி அனுப்பிய தகவல் அறிய Refund Status Website...

தவறுதலாக (அல்லது) அதிகமாக செலுத்தப்பட்ட வருமான வரியை மீண்டும் நமது வங்கிக் கணக்குக்கு திருப்பி அனுப்பியுள்ளது வருமான வரித்துறை.  சரிபார்த்துக்கொள்ள  Refund Status Link...


இன்றைய செய்திகள் தொகுப்பு... 31.12.2020 (வியாழன்)...

 

🌹பல வருட பாசத்தையும் பந்தத்தையும் நொடியில் முறித்து விடும் பயங்கரமான ஆயுதம் தான் மனிதனின் நாக்கு.!

🌹🌹வார்த்தை எப்பொழுதெல்லாம்                                   எல்லை மீறுகிறதோ அப்போதெல்லாம் மெளனமாய் இருக்கவேண்டும்.

ஏனெனில் வார்த்தைகளால் வாழ்க்கையை இழந்தவர்கள் ஏராளம்.!!

🌹🌹🌹பணக்காரர்களுக்கு வருமான வரி சோதனை 

ஏழைகளுக்கு                                       வருமானமே ஒரு சோதனை.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🎀🎀TRB - அரசு மேல்நிலைப்பள்ளி கணினி பயிற்றுநருக்கான ஆன்லைன்  கலந்தாய்வு தேதி அறிவிப்பு : ஜனவரி 2 & 3 தேதிகளில் நடைபெறும்.

🎀🎀தொலைதூரப் படிப்புகளுக்கும் ஆன்லைனிலேயே தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு : தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

🎀🎀பிற்படுத்தப்பட்டோர் , மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பகுதி நேர துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்குதல் சார்ந்த அரசாணை வெளியீடு.

🎀🎀சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் ஆலோசனை கூட்டம் , கருத்தரங்கம் உள்ளிட்டவை நடத்த நீதிபதி குலசேகரன் ஆணையம் முடிவு.

🎀🎀மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறக்கப்படுவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

🎀🎀10,11,12,-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் குறைப்பது, எவ்வாறு பாடம் நடத்துவது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். பாடத்திட்டம் குறைக்கப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு இறுதித்தேர்வு நடத்தப்படும் எனவும் கல்வி கட்டணத்தை காரணம் காட்டி தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையை தடுக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

🎀🎀சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் குறித்து மிக முக்கியமான அறிவிப்பு  இன்று  மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

🎀🎀ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகள் படிக்க வாய்ப்பு: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு 

🎀🎀ஜனவரியில் 8 மண்டலங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள்: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தகவல்.

🎀🎀கற்போம் எழுதுவோம் இயக்கம்” – TN EMIS கைபேசி வாயிலாக கற்போர் மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் மைய வருகை விவரம் 31.12.2020 க்குள் முழுமையாக மேற்கொள்ள இயக்குநர் அறிவுறுத்துதல்

🎀🎀National Scholarship Portal மூலம் Onlineல் பதிவு செய்ய தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்து சான்றளிப்பு செய்யக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

🎀🎀GPF இறுதித் தொகை (Final Withdrawal) – 6 மாதங்கள் / ஓராண்டிற்கும் மேலாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு தீர்வு காணுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்கக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள் வெளியீடு

🎀🎀தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவது குறித்து ஆலோசனை- கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்

🎀🎀தெலுங்கானா மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, ஓய்வூதிய வயது அதிகரிப்பு – மாநில அரசு அறிவிப்பு

🎀🎀மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் தளத்தில் போலியாக பெயர்கள் பதிவு- ஆய்வு செய்ய உத்தரவு

🎀🎀பழைய பயண அட்டையை கொண்டு அரசு கல்லூரி மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம்: எம்டிசி அறிவிப்பு

🎀🎀இங்கிலாந்தில் இருந்து உத்ரகாண்ட் மாநிலத்திற்கு வந்த 25 பேரை தேடும் பணி தீவிரம்

🎀🎀திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் கிராமசபை கூட்டங்கள் அறிவிப்பு.🎀🎀உருமாற்றம் பெற்ற கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த தற்போது கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் உதவும் என்று மத்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர்  உறுதியளித்துள்ளார்.

🎀🎀தடுப்பூசி மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கான சர்வதேச கூட்டமைப்பின்  உறுப்பினராக டாக்டர் ஹர்ஷ்வர்த்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

🎀🎀தேவைப்பட்டால் எல்லை தாண்டி இந்தியா தாக்குதல் நடத்தும் - பாகிஸ்தானுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை.

🎀🎀பணியில் இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டால் அதை விபத்தாக தான் கருத வேண்டும்: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

🎀🎀இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்கமாட்டேன்- தமிழருவி மணியன்

🎀🎀அமெரிக்காவில் பெருகி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கண்டறியப்பட்ட தடுப்பூசியை கமலா ஹாரிஸ் போட்டுக் கொண்டார். அவருக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்தப்பட்டது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.

🎀🎀தமிழகத்தில் நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு சீருடை வழங்கப்படும்; நியாய விலைக் கடை ஊழியர்கள் சீருடை அணியாமல் இருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் 

-அமைச்சர் செல்லூர் ராஜூ

🎀🎀இனி நான் மட்டும் அல்ல நாம் தமிழர் கட்சியே ரஜினியை கொண்டாடும் 

அரசியலுக்கு வந்திருந்தால் ரஜினியால் இகழ்ச்சியை தாங்க முடியாது

 - சீமான்

🎀🎀தேர்தலுக்கு பிறகு பெரும்பான்மையை பொறுத்து முதல்வர் வேட்பாளர் பற்றி முடிவு செய்யப்படும்-சி.டி.ரவி பாஜக

🎀🎀ரஜினி மீது அரசியல் ரீதியாக வைத்த கடும் விமர்சனங்கள் அவரையோ, குடும்பத்தாரையோ, ரசிகர்களையோ காயப்படுத்தியிருந்தால் அதற்கு நான் வருந்துகிறேன் - சீமான்

🎀🎀பட்டாசு , தீ பெட்டி தயாரிப்பு தொழிலாளர்களுக்கு தனியே அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

🎀🎀புதிய வகை கொரோனா பரவல்; ஃபைசரை தொடர்ந்து ஆக்ஸ்ஃபோர்டின் ஆஸ்ட்ராசென்கா தடுப்பு மருந்திற்கும் பிரிட்டன் அரசு அனுமதி

🎀🎀பதற்றமான பகுதியாக அறிவித்து நாகலாந்து மாநிலத்தை அடுத்த 6 மாதங்களுக்கு ஆயுதப் படைகளின் கட்டுப்பாட்டில் மத்திய அரசு ஒப்படைத்து உத்தரவு.

🎀🎀2020-21ம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிப்பு

🎀🎀சர்வதேச விமானப்போக்குவரத்திற்கான தடை அடுத்தமாதம் இறுதிவரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது. இருப்பினும் சரக்கு விமானப்போக்குவரத்திற்கு இந்த தடை பொருந்தாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

🎀🎀சென்னை பெரும்பாக்கத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1152 வீடுகள் கட்டும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நாளை திறந்து வைக்கிறார்.இதில் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து பங்கேற்கின்றனர்.

🎀🎀102 ஆண்டுகளை கடந்துள்ள உடுமலை நகராட்சியில் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்த 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

🎀🎀எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்பது வேதவாக்கு.

இதற்கு இடையில் யார் வந்தாலும் வீணாய் போய்விடுவார்கள். ஒதுக்கி வைத்து விடுவோம்

- அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி.

🎀🎀ஆகாஷ் ரக ஏவுகணைகளை விற்பனை செய்ய அனுமதி.

வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படும் ஆகாஷ் ஏவுகணை, இந்திய படைகளில் பயன்பாட்டில் உள்ளதில் இருந்து மாறுபட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🎀🎀இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் நீட்டிப்பு.

🎀🎀கமல்ஹாசன் கூறும் மய்யம் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எல்லோருக்கும் தெரியும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்முத்தரசன் கூறியுள்ளார்.

தனது கட்சிக்கான கொள்கை என்னவென்று கமல்ஹாசன் இதுவரை அறிவிக்கவில்லை  என தெரிவித்துள்ளார். தான் ஒரு விவசாயி என கூறும் முதல்வர், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கவேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்

🎀🎀வேளாண் சட்டங்களை எக்காரணம் கொண்டும் திரும்ப பெற முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

🎀🎀வேளாண் சட்டங்களுக்கு எதிராக 35 நாளாக போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 6-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. குறைந்தபட்ச ஆதார விலை பேச்சுவார்த்தைக்கு முன் போராட்டத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

🎀🎀பாஜக-வுடன் கூட்டணி வைத்தால் அ.தி.மு.க-வுக்கு படுதோல்விதான்': 

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்

🎀🎀அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டும் பொங்கல் பரிசு வழங்கப்படும் -சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம்.

👉அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு என இன்று மாலை 5 மணிக்குள் சுற்றறிக்கை வெளியிட வேண்டும் - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

👉கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் துறை வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்படும் எனவும் தமிழக அரசு உறுதி.

🎀🎀இந்தியா - பிரிட்டன் இடையிலான விமான சேவைக்கு விதிக்கப்பட்ட தடை ஜனவரி 7ந் தேதி வரை நீட்டிப்பு

டிசம்பர் 31ந் தேதி வரை இந்தியா - பிரிட்டன் இடையிலான விமான சேவைக்கு விதிக்கப்பட்ட தடை ஜனவரி 7ந் தேதி வரை நீட்டிப்பு.                                           ஜனவரி 7ந் தேதிக்கு பிறகு கடுமையான வழிமுறைகளை பின்பற்றி பிரிட்டன் - இந்தியா விமானப்போக்குவரத்து அனுமதிக்கப்படும்.

🎀🎀தமிழகத்தில் நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு சீருடை வழங்கப்படும்

நியாய விலைக் கடை ஊழியர்கள் சீருடை அணியாமல் இருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் -அமைச்சர் செல்லூர் ராஜூ

🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀

🌹🌹National Scholarship Portal மூலம் Onlineல் பதிவு செய்ய தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்து சான்றளிப்பு செய்யக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!..

👉பள்ளிக் கல்வி - National Scholarship Portal மூலம் Onlineல் பதிவு செய்தல் - தனியார் Browsing Centre மூலம் அதிக மாணவர்களை தவறாகச் சேர்த்தல் - மறு ஆய்வு செய்து தலைமையாசிரியர்கள் சான்றளிப்பு செய்யக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு...

சிறுபான்மையினர் நலத்துறையின் கடிதங்களில் ஒரு சில மாநிலங்களில் சிறுபான்மையினர் உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கும் மாணவர்களின் சார்பாக அப்பள்ளித் தலைமையாசிரியர்கள் அருகாமையிலுள்ள தனியார் இணையவழிச்சேவை மையங்களின் மூலம் பதிவு செய்வதாகவும் அதற்காக , தங்களுக்கென பிரத்யேகமாகக் கொடுக்கப்பட்ட User Name மற்றும் Password அம்மைய நிர்வாகிகளுக்கு கொடுப்பதாகவும் , அத்தனியார் மைய நிர்வாகிகளில் ஒரு சிலர் அதைத் தவறாகப் பிரயோகித்து மிக அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை online மூலம் National Scholarship Portal - ல் சேர்த்து சந்தேகிக்கப்படும்படியான ஒரே வங்கிக்கணக்கு எண்களைக் கொடுத்து பதிவு செய்திருப்பதைக் கண்டறிந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே , இதுகுறித்து , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு காணொலிக்காட்சி மூலமாக நடந்த கூட்டத்தில் அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு வலியுறுத்தப்பட்டது. எனவே , பார்வையிற்காண் கடிதங்களில் குறிப்பிட்டுள்ளவாறு அனைத்து தலைமையாசிரியர்களும் தங்கள் User Name மற்றும் Password பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்தம் தகவல்களுக்கு தாமே பொறுப்பு என்பதால் அவற்றை மறு ஆய்வு செய்து சான்றளிப்பு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. மேலும் , அனைத்து தலைமையாசிரியர்களும் அடுத்த இரு தினங்களுக்குள் ( 31.12.2020 ) இப்பணியை விரைந்து முடிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀                               

 🌹🌹முறைகேடுகளைத் தடுக்கப் போட்டித் தேர்வுகளில் புதிய கட்டுப்பாடுகள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

👉தேர்வர்களின் நலனுக்காகவும், எவ்விதத் தவறுகள் நேராமல் இருப்பதற்காகவும் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

👉இதுதொடர்பாகத் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தேர்வர்கள் காலை 9.15 மணிக்குள் தேர்வுக் கூடத்துக்குச் செல்ல வேண்டும். இதற்கு முன் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு, தேர்வு தொடங்கப்படும் வரை தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், தற்போது அந்த நடைமுறை கைவிடப்பட்டுள்ளது.

விடைத்தாளில் விவரங்களைப் பூர்த்தி செய்யவும், விடைகளைக் குறிக்கவும் கருப்பு நிற மை கொண்ட பந்து முனைப் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

விடைத்தாளில் உரிய இரு இடங்களில் கையொப்பமிட்டு, இடது கை பெருவிரல் ரேகையைப் பதிக்க வேண்டும். அப்போது பிற இடங்களில் மை படாமலும், விடைத்தாள் சேதமடையாமல் இருப்பதையும் உறுதி செய்யவேண்டும்.

வினாத்தாள் கேள்விகளுக்கு விடை தெரியவில்லை என்றால் (E) என்ற வட்டத்தைக் கருமையாக்க வேண்டும்.

விடைத்தாளில் (A), (B), (C), (D) மற்றும் (E) என ஒவ்வொரு விடைக்கும் எத்தனை வட்டங்கள் கருமையாக்கப்பட்டுள்ளன என்பதை எண்ணி, மொத்த எண்ணிக்கையை உரிய கட்டங்களில் நிரப்பிக் கருமையாக்க வேண்டும். தவறினால் 5 மதிப்பெண்கள் குறைக்கப்படும். இந்தச் செயலை மேற்கொள்ளத் தேர்வு முடிந்த பிறகு கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும்.

தேர்வர்களின் நலனுக்காகவும், எவ்விதத் தவறுகளும் நேராமல் இருப்பதற்காகவும் தேர்வாணையம் மேற்குறிப்பிட்ட அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது’’.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கணினி பயிற்றுநர் நிலை - 1 ஆக தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு 02.01.2021 முதல் பணிநியமன கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவிப்பு...

 ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கணினி பயிற்றுநர் நிலை - 1 ஆக தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு 02.01.2021 முதல் பணிநியமன கலந்தாய்வு -  பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 8101/ வி1/இ2/ 2019, நாள்: 30-12-2020...

>>> பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 8101/ வி1/இ2/ 2019, நாள்: 30-12-2020 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> மாவட்ட வாரியான காலிப்பணியிட விவரங்கள் அறிய இங்கே சொடுக்கவும்...



TNPSC - புதிதாக நடைமுறைப்படுத்தப்படும் விதிமுறைகள் - தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செய்தி வெளியீடு - நாள் : 30.12.2020...

 >>> TNPSC - புதிதாக நடைமுறைப்படுத்தப்படும் விதிமுறைகள் - தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செய்தி வெளியீடு - நாள் : 30.12.2020, தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


GPF இறுதித் தொகை (Final Withdrawal) - 6 மாதங்கள் / ஓராண்டிற்கும் மேலாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு தீர்வு காணுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்கக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள்...

 GPF இறுதித் தொகை (Final Withdrawal) - 6 மாதங்கள் / ஓராண்டிற்கும் மேலாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு தீர்வு காணுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்கக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள் RC.No.: 29083/ H/ S3/ 2020, Dated: 16-12-2020...

>>> Click Here to Download Proceedings of the Financial Controller (Director of School Education) RC.No.: 29083/ H/ S3/ 2020, Dated: 16-12-2020...


பள்ளிகள் திறக்கப்படுவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியீடு - பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தகவல்...

 


தெலுங்கானா மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, ஓய்வூதிய வயது அதிகரிப்பு – அரசு அறிவிப்பு...

 


அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, ஓய்வூதிய வயது அதிகரிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மாநில அரசு பணியாளர்களுக்கு புத்தாண்டு பரிசாக ஊதியம் உயர்வு மற்றும் ஓய்வூதிய வயது அதிகரிப்பு போன்ற சலுகைகளை அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் அறிவித்து உள்ளார். இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம்:

தெலுங்கானா மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய வயது அதிகரிப்பதாக அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். மேலும் அம்மாநிலத்தில் காலியான அரசு பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும் அனைத்து அரசுத் துறைகளுக்கும் மேலதிக வயது மற்றும் கூடுதல் பணியாளர்களை நியமிப்பதற்கான வயதை அதிகரிப்பதற்கான முடிவை அவர் அறிவித்தார். இதன் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் பயனடைவார்கள்.

இதுகுறித்து அம்மாநில முதல்வர் கூறியதாவது, “இந்த திட்டத்தின் மூலம் சுமார் 9,36,976 அரசு ஊழியர்கள் பயனடைவார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக தலைமைச் செயலாளர் சோமேஷ்குமார் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி மானிய உதவி ஊழியர்கள், வசூலிக்கும் ஊழியர்கள், தினசரி கூலிகள், முழுநேர படைப்பிரிவு ஊழியர்கள், பகுதிநேர படை ஊழியர்கள், வீட்டு காவலர்கள், அங்கன்வாடி தொழிலாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள், அவுட்சோர்சிங் உள்ளிட்ட தொழிலாளர்கள், ஆஷா தொழிலாளர்கள், வித்யா தன்னார்வலர்கள், ஓய்வூதியம் பெறும் மக்கள் ஆகியோர் பயனடைவார்கள்.

சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கும் கூட அதிக சம்பளம் கிடைக்கும். தேவைப்பட்டால், ஆர்டிசி மீதான நிதிச் சுமையை மாநில அரசு ஏற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலமாக பிப்ரவரி மாதத்திற்குள் ஊழியர்கள் தொடர்பான அனைத்து சேவை சிக்கல்களும் விரிவாக தீர்க்கப்படும். ஓய்வூதிய வயதை தவிர்த்து, அரசாங்கம் பதவி உயர்வுகளைத் தீர்த்து, தேவையான இடங்களில் இடமாற்றங்கள், சேவை விதிகளை எளிமைப்படுத்துதல் மற்றும் இரக்கமுள்ள நியமனங்கள் ஆகியவற்றை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து துறைகளிலும் உள்ள காலியிடங்களை அடையாளம் கண்டு பிப்ரவரி முதல் அரசு சேவையில் ஆட்சேர்ப்பு தொடங்கும்,” என்றும் அவர் கூறினார்.

மேலும் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கிய சில காலத்திலேயே ஊழியர்களின் சம்பளத்தை அரசாங்கம் உயர்த்தியதை அவர் நினைவு கூர்ந்தார். இப்போது மற்றொரு உயர்வுக்கான நேரம். அரசாங்கத்தின் நிதி வரம்புகளுக்குள், குறைந்த அளவு சம்பளத்தை உயர்த்த முடிவு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

வருமான வரி கணக்கு தாக்கல் (Income Tax E-filing) செய்ய 2021, ஜனவரி 10 வரை கால அவகாசம் நீட்டிப்பு...

 


வருமான வரி கணக்கு தாக்கல் (Income Tax E-filing) செய்ய 2021, ஜனவரி 10 வரை கால அவகாசம் நீட்டிப்பு...

The Due dates of Filing has been extended as follows:

  • Income Tax Returns Last Date for Non Tax Audit Assessees – 10th January, 2021
  • Income Tax Returns Last Date for Tax Audit Assessees – 15th February, 2021
  • Tax Audit Report Last Date – 15th January, 2021
  • Vivad Se Viswas Last Date – 31st January, 2021

வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நீட்டிப்பு.. மத்திய அரசு உத்தரவு

தனிநபர்கள் 2019 - 20ம் ஆண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பிப்ரவரி 15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று ( டிசம்பர் 31) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மத்திய அரசு அவகாசத்தை நீட்டித்துள்ளது.


முன்னதாக கொரோனா பாதிப்பு காரணத்தை காட்டி மத்திய அரசு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலஅவகாசத்தை பலமுறை நீட்டித்திருந்தது. இதனால் டிசம்பர் 31ம் தேதிக்கு பின்னர் நீட்டிக்குமா என்ற கேள்வி எழுந்தது.

 government extended the date for filing income tax returns to January 10 

அதேநேரம் நிதியச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முன்னாள் வர்த்தக அமைச்சரான சுரேஷ் பிரபு உள்பட பல்வேறு தரப்பினர், 2019-20ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலஅவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இதையடுத்தே 2019 - 20ம் ஆண்டிற்கான தனிநபர்கள் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது நிறுவனங்கள் தாக்கல் செய்ய பிப்வரி 15ம் தேதி வரை அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

2019 - 20ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கலை கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி, 4.37 கோடி பேர் தாக்கல் செய்துள்ளதாக நிதியமைச்சகம் கூறியிருந்தது. தற்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் மேலும் பலர் தாக்கல் செய்வார்கள் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது. நாட்டில் 135 கோடி மக்கள் வசிக்கும் நிலையில் 5 கோடி மக்கள் மட்டுமே வருமான வரி செலுத்துகிறார்கள். அதாவது ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளதாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்கிறார்கள்.

முன்னதாக, வருமான வரித்துறை எஸ்எம்எஸ் மற்றும் இமெயில் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று அலர்ட் செய்து வந்தது. அதாவது நீங்கள் வருமான வரி தாக்கல் செய்திருப்பீர்கள் என நம்புகிறோம். அப்படி செய்யாவிட்டால் கால தாமதம் செய்ய வேண்டாம். அதோடு வருமான வரி தாக்கலை இன்றே செய்திடுங்கள் என்று கூறியிருந்தது.

நாளை மாலை பொதுத் தேர்வு அறிவிப்பு வெளியீடு... (TOMORROW IS THE DAY! STAY TUNED - MINISTRY OF EDUCATION)...

 


நாளைக்குள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யாவிட்டால், இருமடங்கு அபராதம்...

 நாளைக்குள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யாவிட்டால், கடந்த ஆண்டைவிட, இருமடங்கு அதிகமாக அபராதம் செலுத்த வேண்டியதாகிவிடும்.வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதில், கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் இடையே முக்கியமான வித்தியாசம், உரிய காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்யாதபட்சத்தில், விதிக்கப்படும் அபராதம் தான்.கடந்த ஆண்டு அபராதம், 5 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இது, இந்த ஆண்டு, இரு மடங்கு உயர்த்தப்பட்டு, 10 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.இருப்பினும், அபராதம் அல்லது தாமதமாக தாக்கல் செய்வதற்கான கட்டணம், உங்கள் நிகர மொத்த வருமானம் அதாவது, தகுதியான கழிவுகள் மற்றும் வரி விலக்குகளை கோரிய பிறகான வருமானம், 5 லட்சம் ரூபாயை தாண்டினால் மட்டுமே வசூலிக்கப்படும்.உங்கள் நிகர மொத்த வருமானம், குறிப்பிட்ட நிதியாண்டில், 5 லட்சத்துக்கு மிகாமல் இருந்தால், அபராதமாக ஆயிரம் ரூபாய் மட்டுமே விதிக்கப்படும்.வழக்கமாக, வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்தவற்கு, தனிநபர்களுக்கு, ஒவ்வோர் ஆண்டும், ஜூலை, 31ம் தேதி கடைசி தேதியாகும்.ஒருவேளை இதற்குள் தாக்கல் செய்ய முடியாமல் போய்விட்டால், அதே ஆண்டில், டிசம்பர், 31ம் தேதிக்குள், தாமத மாக தாக்கல் செய்யலாம்.

ஆனால், தாமதக் கட்டணமாக, 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டியதிருக்கும். ஒருவேளை, டிசம்பர், 31ம் தேதிக்குப் பிறகு, மார்ச், 31ம் தேதிக்கு முன்ன ராக தாக்கல் செய்யப்படும்பட்சத்தில், தாமதக் கட்டணம், 10 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும்.இம்முறை தாக்கல் செய்வதற்கான கெடு, டிசம்பர், 31வரை நீட்டிக்கப்பட்டதால், வழக்கமாக விதிக்கப்படும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட மாட்டாது.ஆனால், ஜனவரி, 1ம் தேதி முதல், மார்ச் இறுதிக்குள் தாக்கல் செய்யப்படும்பட்சத்தில், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தியாக வேண்டும். ஏனென்றால், இம்முறை தாமதமாக தாக்கல் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டாலும், தாமதக் கட்டணத்தை வசூலிப்பதற்கான வருமான வரிச் சட்டத்தில், எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.தாமதக் கட்டணம் குறித்த, வருமான வரி சட்டத்தின், 234எப் பிரிவில், இரண்டு அடுக்கு அமைப்பு உண்டு.அதன் படி, 5 ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம் ரூபாய் என, குறிப்பிட்ட தேதிகளுக்கு பிறகு கட்டணம் வசூலிக்கப்படும்.இந்த பிரிவில் மாற்றம் செய்யப்படாததால்,நேரடியாக, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.எனவே, இரு மடங்கு அபராதத்தை தவிர்க்க, நாளைக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக கூறி வெளியாகும் அதிகாரப்பூர்வமற்ற தகவலை நம்ப வேண்டாம்...

 அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, அரசு கல்லூரி, பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியில் அண்ணா பல்கலைக்கழகம் முனைப்பாக செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையில், ஆசிரியர் பணியிடம் வாங்கித்  தரகர்கள் தருவதாக சில, அங்கீகரிக்கப்படாத நபர்கள் தங்களை அணுகுவதாக, சில விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.

 இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஆசிரியர் பணி தொடர்பாக வரும் நம்பகத்தன்மை இல்லாத, அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்படாத நபர்கள் சில விண்ணப்பதாரர்களை தொடர்பு கொண்டு, பணி வாங்கித் தருவதாக கூறுவதாக புகார்கள் வந்துள்ளன. இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு - அமைச்சர் செங்கோட்டையன்...


 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு குறித்து ஆலோசனை நடைபெறுகிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சிறப்பு வகுப்புக்கு முதல்வர் ஒப்புதல் அளித்தவுடன் அட்டவணை வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் இறுதியில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. சில நாட்களுக்கு முன்னர் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இருப்பினும் பள்ளிகள் திறப்பில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இதனால் மாணவர்கள் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை கற்று வருகின்றனர். கடந்த ஆண்டில் கொரோனா அச்சத்தால் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அரையாண்டு, காலாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இம்முறையும் புதிய வகை கொரோனா பரவல், சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் பொதுத்தேர்வு நடத்துவதில் சிக்கல்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும் பூஜ்யம் கல்வியாண்டாக நடப்பு கல்வியாண்டை அறிவிக்க வாய்ப்பில்லை எனவும் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் தேதிகளை பொறுத்தே பொதுத்தேர்வு தேதிகள் முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். இந்நிலையில் இன்று பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், சிறப்பு வகுப்புக்கு முதல்வர் ஒப்புதல் அளித்தவுடன் அட்டவணை வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பள்ளிக் கல்வி - National Scholarship Portal மூலம் Onlineல் பதிவு செய்தல் - தனியார் Browsing Centre மூலம் அதிக மாணவர்களை தவறாகச் சேர்த்தல் - மறு ஆய்வு செய்து தலைமையாசிரியர்கள் சான்றளிப்பு செய்யக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு...


 >>> பள்ளிக் கல்வி - National Scholarship Portal மூலம் Onlineல் பதிவு செய்தல் - தனியார் Browsing Centre மூலம் அதிக மாணவர்களை தவறாகச் சேர்த்தல் - மறு ஆய்வு செய்து தலைமையாசிரியர்கள் சான்றளிப்பு செய்யக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கடன்களுக்கு வங்கிகள் எப்படி வட்டிவிகிதம் கணக்கிடுகின்றன..?

 


கடன்களுக்கு வங்கிகள் எப்படி வட்டிவிகிதம் கணக்கிடுகின்றன தெரியுமா? 

7 வங்கிகளில், குறிப்பாக தனியார் வங்கிகளில் அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்களில் நீங்கள் கடன் வாங்கும்போது ஒரு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அது வட்டி விகிதக் கணக்கு.

கடைசி அத்தியாயத்தின் முடிவில், பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் எதில் தனிநபர் கடன் வாங்கினால் வட்டி குறைவாக இருக்கும் என்று கேட்டிருந்தோம். இந்தக் கேள்விக்கு சரியான பதிலை அதாவது, பொதுத்துறை வங்கிகள்தான் எனப் பலரும் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். சரியான பதில் சொன்ன அனைவருக்கும் பாராட்டுகள்.

அது மட்டுமல்ல, கடந்த அத்தியாயத்தைப் படித்த மதுக்கூர் மணி என்பவர் ஒரு ஆலோசனை கேட்டிருக்கிறார். அவர் கேட்டிருப்பதாவது...

கடன் வாங்கினேன், திரும்பக் கட்ட முடியவில்லை...

``நான் தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தபோது தனியார் வங்கியில் எனது பெயரில் சம்பளத்தின் அடிப்படையில் வேறு எந்த பிணையும் வைக்காமல் தனிநபர் கடன் வாங்கினேன். தற்போது கொரோனாவின் காரணமாகக் கடந்த ஒன்பது மாதமாக வேலையின்றி இருக்கிறேன். இந்த நிலையில, கடன் தவணையைக் கட்ட வேண்டும் என்று வீட்டுக்கு வந்து தொந்தரவு செய்கின்றனர். நான் என்ன செய்ய வேண்டும்? தயவு செய்து கூறுங்கள்!’’ என்று கேட்டிருக்கிறார். அவருக்கான பதில்...

6 மாத காலத்திற்கு ரிசர்வ் வங்கி வகுத்துள்ள வழிகாட்டுதலின்படி, கடன் தவணை தள்ளிவைப்பு (Loan Moratorium) வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கொரோனா பிரச்னையின் காரணமாக அனைத்து வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆறு மாத காலம் மாதத் தவணைகளை தள்ளி செலுத்தும் வசதியைக் கொடுக்குமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. இதற்குக் கூடுதல் வட்டி வசூலிக்கப்பட்டாலும் சாதாரண வட்டிக்கும், கூட்டு வட்டிக்கும் உள்ள வித்தியாசத் தொகையை மத்திய அரசு சலுகையாக வழங்குகிறது. இது கொரோனா காலத்துக்கு முன்பு தாங்கள் கடனை ஒழுங்காக செலுத்தி இருக்கும்பட்சத்தில், ரிசர்வ் வங்கி விதிமுறைகளுக்கு உட்பட்டு வங்கிகள் இந்த வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்குத் தருகின்றன. அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே நான் அவருக்கு அளிக்கும் பதில்.

ரூ.2 லட்சம் கடனுக்கு எவ்வளவு வட்டி?

சரி, இந்த அத்தியாயத்துக்கு வருவோம். வங்கிகளில், குறிப்பாக தனியார் வங்கிகளில் அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்களில் நீங்கள் கடன் வாங்கும்போது ஒரு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அது வட்டி விகிதக் கணக்கு. உதாரணமாக, தனியார் வங்கி ஒன்றில் தனிநபர் கடன் ரூ.2 லட்சத்துக்கு விண்ணப்பிப்பதாக வைத்துக்கொள்வோம். அவர்கள் வட்டி விகிதம் 24% எனில் (தற்போதைய சூழ்நிலையில் தனிநபர் கடன் வட்டி விகிதம் 16 சதவிகிதத்திலிருந்து 24% வரை தரப்படுகிறது), நம்மில் பலர் மாதம் இரண்டு வட்டி என்ற முறையில் நம்மிடம் வட்டி பணம் வசூலிக்கிறது என்று நினைக்கிறார்கள்.

அதாவது, வருடத்துக்கு 24% வட்டி என்றால் மாதத்துக்கு 2% வட்டி என்று கணக்கிடுகிறார்கள். இது தவறு. ரூ.2 லட்சத்துக்கு 24% வட்டிக்கு மூன்று வருடங்களுக்கு மாதாந்தரத் தவணை ரூ.7,847 என்று வரும். அப்படி மூன்று வருடங்களுக்குச் செலுத்தினால், மொத்த வட்டி செலுத்திய தொகை ரூ.82,476 என்று வரும்.

இதுவே நாம் நடைமுறையில் பேசும் இரண்டு வட்டி என்று கணக்கிட்டால், நாம் செலுத்த வேண்டிய மொத்த வட்டி தொகை மூன்று வருடங்களுக்கு ரூ.1.44 லட்சம் (ரூ.4,000 மாத வட்டி x 36 மாதங்கள்) என்று வரும். இதிலிருந்து நாம் சாதாரணமாக வட்டி கணக்கிடுவதற்கும் வங்கிகள் வட்டி கணக்கிடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் உணரலாம்.

கடன் வரலாற்றைப் பொறுத்தே வட்டி

இதில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒவ்வொரு மாதமும் வட்டியை மட்டும் செலுத்திவிட்டு, அசலை எப்போது வேண்டுமானாலும் பகுதி பகுதியாகவோ, மொத்தமாகவோ செலுத்தும் வசதி இருக்கிறது. அவ்வாறு பகுதி பகுதியாகச் செலுத்தும்போது அதற்கு ஏற்றவாறு வட்டித் தொகை குறையும். இத்தகைய கடன் திட்டம் பெரும்பாலும் தங்க நகைக் கடன்களில் வழங்கப்படுகிறது.


ஒரே விதமான கடனுக்கு, வட்டி விகிதம் என்பது ஒவ்வொரு வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு இடையே மாறுபடலாம். மேலும், ஒவ்வொரு நபருக்கும் மாறுபடலாம். ஒருவரின் தனிப்பட்ட அல்லது நிறுவனத்தின் வயது, கல்வித்தகுதி, தொழில், வருமானம், கூடுதல் வருமானம், சொத்து மதிப்பு, கடன் தகவல் அறிக்கையில் எந்த பாதகமான விஷயங்களும் இடம்பெறாதது ஆகியவற்றைக் கொண்டு வட்டி விகிதம் தீர்மானிக்கப்படுகிறது. மேற்சொன்ன அம்சங்கள் உங்களுக்கு சாதகமாக இருந்தால், வட்டி விகிதம் குறைவாக இருக்கும்.

ஆப்ஸ் மூலம் கடனா, ஜாக்கிரதை!

மேற்சொன்ன அம்சங்கள் மட்டுமல்லாமல், இப்போது வந்திருக்கும் ஃபின்டெக் (Fintech) நிறுவனங்கள் தங்களின் சமூகத்தொடர்புக் கணக்குகள், கடன் அட்டை பயன்பாடுகள், வெளிநாட்டு பயணங்கள், கடன் தேவையின் அவசரம் ஆகியவற்றைக் கொண்டு தங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய கடன் அளவையும் வட்டி விகிதத்தையும் தீர்மானிக்கின்றன. ஆகவே, நீங்கள் எந்த வங்கியிலோ, வங்கிசாரா நிதி நிறுவனத்திலோ கடன் வாங்குவதற்கு முன்னால், அந்த வட்டி விகிதம்தான் தங்களுக்கு கிடைக்கக்கூடிய குறைந்த வட்டி விகிதம் என்று உறுதிப்படுத்திக் கொண்டு எடுப்பது நல்லது. ஆப்ஸ் மூலம் கடன் தரும் நிறுவனங்களிலிருந்து முடிந்தவரை கடன் பெறாமலே இருப்பது நல்லது.

இப்போது மாதாந்தரத் தவணை கணக்கீட்டு முறையையும் வட்டி விகிதங்கள் பற்றியான தகவல்களையும் பற்றி ஓரளவுக்கு தெளிவடைந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி: விகடன்

STAFF SELECTION COMMISSION - Combined Graduate Level Examination, 2020 - Notification- published... Last Date: 31-01-2021...

 STAFF SELECTION COMMISSION - Combined Graduate Level Examination, 2020 - Notification- published... Date for submission of online applications: 29-12-2020 to 31-01-2021...

>>> Click Here to Download Notification...


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும்- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் - திரு.தொல்.திருமாவளவன். M.P. - அறிக்கை...

 பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும்- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் - திரு.தொல்.திருமாவளவன். M.P. - அறிக்கை...








இன்றைய செய்திகள் தொகுப்பு... 30.12.2020 (புதன்)...

 


🌹வாழ்க்கையில் யாரையும் சார்ந்து வாழ்ந்து விடாதீர்கள்.

ஏனெனில் உங்கள் நிழல் கூட வெளிச்சம் உள்ளவரைதான் துணைக்கு வரும்.!

🌹🌹நம்மை மதிப்பவரிடம் தாழ்ந்து பேசவேண்டும்.

நம்மை மிதிப்பவர்களிடம் வாழ்ந்து பேசவேண்டும்.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌈🌈சூழ்நிலைக்கு ஏற்ப ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் எந்தெந்த வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடத்தலாம் எனக் கல்வியாளர்களுடன் கலந்து பேசி தமிழக முதல்வர் முடிவெடுப்பார் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார் 

🌈🌈பொறியியல் முதல் மற்றும் 2ம் பருவ தேர்வுகளுக்கான தேதிகள் குறித்த அறிவிப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ளது

🌈🌈கல்வித்துறை சார்ந்த நீதிமன்ற வழக்கு பணிகளை கவனித்தல் குறித்து CEO/DEO க்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின்  செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

🌈🌈கல்வி, 'டிவி' நிகழ்ச்சிகளுக்கு, சர்ச்சைக்குரிய அம்சங்கள் இல்லாமல், வீடியோ பாடங்கள் தயாரிக்கப்பட வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர் 

🌈🌈தமிழக தேர்தல் தேதிகளை பொறுத்தே பொதுத்தேர்வு தேதி முடிவு செய்யப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 

🌈🌈மயிலாடுதுறையில் பழைய இரும்புக்கடையில் இலவச பாடப்புத்தகங்களை விற்பனை செய்த பள்ளிக்கல்வித்துறை ஊழியர் கைது பழைய இரும்புக்கடை உரிமையாளரும்  கைது 

🌈🌈அரசு மற்றும் நகராட்சி மேனிலைப் பள்ளிகளில் கடந்த 2018-2019ம் ஆண்டில் ஏற்பட்ட வேதியியல் பாடத்துக்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பணிநியமன கலந்தாய்வு இன்று நடைபெறுகின்றது 

🌈🌈புத்தாண்டு-2021 கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு . G.O 787 

🌈🌈சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு  எழுதக் கூடுதல் அவகாசம் தேவை: மத்திய அமைச்சருக்கு மாணவர்கள் கோரிக்கை

🌈🌈TRB - கணினி பயிற்றுநர்  நேரடி நியமனம் Grade I (PG Cadre) - 2019 - திருத்தப்பட்ட  உத்தேச தேர்வுப் பட்டியல் வெளியீடு.

🌈🌈இன்று டிசம்பர் 30 இல் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு விடுத்துள்ள அழைப்பை ஏற்கிறோம் - விவசாய சங்கங்கள் அறிவிப்பு.

🌈🌈இந்தியாவில் பஞ்சாப், குஜராத், ஆந்திரா, அசாம் ஆகிய மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை பணி தொடங்கியுள்ளது : CoWin’ என்ற பிரத்யேக செயலி மூலம் ஒத்திகை தகவல்கள் சேமிக்கப்படும். 

🌈🌈நீதிமன்ற வழக்குகள் சம்பந்தப்பட்ட பணிகளை கவனித்தல் குறித்து உரிய அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து-பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு 

🌈🌈MBBS சேர்ந்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச ஆங்கிலப் பயிற்சி:  நமது நண்பர்கள் அமைப்பு ஏற்பாடு

🌈🌈அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சர்வதேச வானியல் போட்டியில் கலந்து கொள்ள இலவச பதிவு மேற்கொள்வது குறித்த பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு

🌈🌈எஸ்.சி., எஸ்.டி. பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

🌈🌈நவம்பர் 25-ல் இருந்து டிசம்பர் 23ம் தேதி நள்ளிரவு வரை 33,000 பேர் இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களுக்கு இங்கிலாந்தில் இருந்து வந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

🌈🌈போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில், இரட்டை வேடம் போடுகிறது மத்திய அரசு - அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு குற்றச்சாட்டு

🌈🌈வெளிநாட்டில் இருந்து வரும் பயணி-களை தீவிரமாக கண்காணிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

🌈🌈பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி

- சுகாதார துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

🌈🌈விரைவில் வருகிறது அனைத்து கார்களிலும் முன்பக்க சீட்டுகளில் AIR BAG கட்டாயம் என்ற உத்தரவு 

ஓட்டுநருக்கான இருக்கை மட்டுமல்லாமல் முன்பக்க சீட்டு அமைந்திருக்கக் கூடிய பகுதியிலும் air bag அமைக்கப்பட வேண்டுமென மத்திய அரசு வரைவு வெளியீடு

🌈🌈நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என அறிவிப்பு.

என்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை எனவும் அறிக்கை

நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்; இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும் 

- ரஜினிகாந்த்

🌈🌈திரையரங்குகளில் ஜனவரி 13-ல் வெளியாகிறது மாஸ்டர்: அதிகாரபூர்வ அறிவிப்பு

🌈🌈தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை பொறுத்தே பொதுத்தேர்வு தேதிகள் முடிவு செய்யப்படும்

- அமைச்சர் செங்கோட்டையன்

🌈🌈ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்பது முன்பே தெரியும்  - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி

🌈🌈நடிகர் ரஜினிகாந்த் எடுத்துள்ள முடிவை வரவேற்கிறேன்; ரஜினியின் ஆன்மிக அரசியல் குரல், தேர்தலில் எதிரொலிக்கும்; திராவிட கட்சிகளுக்கு எதிராக ரஜினி முன்னெடுத்த ஆன்மிக அரசியல் வெற்றிபெறும்

- அர்ஜூன் சம்பத்

🌈🌈ஆசிரியர்கள் & அரசு ஊழியர்களுக்கான சங்கங்களின் கூட்டமைப்பு  கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும்  மேலாக நியாயமான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறது.  அக்கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும் 

- திருமாவளவன்

🌈🌈ரஜினிகாந்த் தனது உடல்நலனைக் கருத்திற்கொண்டு எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்கிறேன்: சீமான்

🌈🌈விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் சிங்கு எல்லைப்பகுதியில் இலவச wi-fi வசதி 

- அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

🌈🌈ரஜினி அரசியலுக்கு வர வலியுறுத்தி அவரது இல்லத்தின் முன் ரசிகர்கள் தர்ணா

🌈🌈குளிர்காலத்தில் அதிக மக்கள்

தொகை உள்ள பகுதிகளில் உருமாறிய

கொரோனா தொற்று அதிகரிக்கும்; இந்த

வைரஸ் குறித்து யாருக்கும் கவனக்குறைவோ, அலட்சியமோ இருக்கக் கூடாது

- சுகாதாரத்துறை

🌈🌈புதிய  கொரோனா வைரஸ் மாறுபாட்டின் முதல் தொற்று பாகிஸ்தானில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

🌈🌈"பொங்கலுக்கு பின் நல்ல செய்தி வரும்" : நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் பேட்டி

🌈🌈Distance Education - ல் Engineering, MCA, MBA, Architecture பயிலும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஜனவரியில், ஆன்லைன் மூலம் நடைபெறும்.

தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் இன்று முதல் பதிவு செய்யலாம்.

ஓரிரு நாளில் அட்டவணை வெளியாகிறது.

🌈🌈என்னுடைய சொத்து விவரத்தை வேட்புமனு தாக்கலின்போது குறிப்பிட்டுள்ளேன்

முதல்வர் பழனிசாமிக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பதில்

🌈🌈ரஜினி ரசிகர்கள் மனோநிலைதான் எனக்கும்; சற்றே ஏமாற்றம்

கமல்ஹாசன், ம.நீ.ம. தலைவர்

🌈🌈திருச்சி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்யும் பணி தொடக்கம்

🌈🌈கொரோனா சோதனைகளை தீவிரப்படுத்தி, மாதிரிகளை ஆய்வகங்களுக்கு அனுப்பிவைக்க மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.

🌈🌈"பெரிய திரைப்படத்தை முதலில் OTT-யில் வெளியிட்ட ஒரு குடும்பத்தின் படங்களை தமிழகத்தில் உள்ள எந்த திரையரங்கிலும் வெளியிட விரும்பவில்லை

திரையரங்கு உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் பேட்டி

🌈🌈ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று ஆவலோடு காத்திருந்த பாஜகவுக்கு ஏமாற்றம் கிடைத்துள்ளது; அவரை பலிகடாவாக ஆக்க பாஜக முயற்சித்தது, அதிலிருந்து தப்பித்துக் கொண்டார் - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் காங்கேயத்தில் பேட்டி

🌈🌈உருமாறிய கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது சுகாதாரத்துறை அமைச்சகம்

🌈🌈வறட்டு கவுரவம் பார்க்காமல் ரஜினிகாந்த் ஒரு துணிச்சலான முடிவை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது

திருமாவளவன், விசிக

🌈🌈டிச.31ஆம் தேதி உதகையில் மலை ரயில் சேவை தொடங்கப்படும்

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

🌈🌈மிகுந்த வருத்தமான சூழல் ரஜினிகாந்தின் இதயத்தில் தற்போது இருப்பதை அறிகிறேன்; ரஜினியின் முடிவுக்கு முழு ஆதரவு அளிக்கிறேன் - அர்ஜுன மூர்த்தி

🌈🌈அதிக மக்கள் தொகை உள்ள பகுதிகளில் உருமாறிய கொரோனா தொற்று அதிகரிக்கும் 

சுகாதாரத்துறை

🌈🌈சுதந்திரத்துக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்த நிலை தற்போதும் நீடிக்கிறது!

சோனியா காந்தி

🌈🌈ரசிகர்களும், மக்களும் மன்னியுங்கள் 

அரசியலுக்கு வராமல் மக்கள் பணி செய்வேன்

நடிகர் ரஜினிகாந்த்

🌈🌈தமிழகத்தில் இந்த மூன்று கட்சிகள் மட்டுமே அங்கீகாரம் உள்ளவை

👉அஇஅதிமுக, திமுக மற்றும் தேமுதிக ஆகிய 3 கட்சிகள் மட்டுமே தமிழகத்தில்  மாநில கட்சி தகுதி பெறுகிறது: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

🌈🌈ஆசிரியர் பணி தொடர்பாக வரும் நம்பகத்தன்மையற்ற தகவலை யாரும் நம்பி ஏமாற வேண்டாம்

அங்கீகரிக்கப்படாத நபர்கள், சில விண்ணப்பதாரர்களைத் தொடர்பு கொண்டு பணி வாங்கி தருவதாகக் கூறியுள்ளனர்

- அண்ணா பல்கலைக்கழகம்

🌈🌈இங்கிலாந்தில் இருந்து பரவும் கொரோனா தொற்று எதிரொலி; தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்.

🌈🌈நாட்டின் இளம் மாநகராட்சி மேயராக கல்லூரி மாணவி பதவியேற்பு: திருவனந்தபுரம் மேயராக பொறுப்பேற்ற ஆர்யா ராஜேந்திரனுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து.

🌈🌈அடுத்த ஆண்டு முதல் மத்திய அரசு பணிகளுக்கு இணையவழியில் பொதுத் தகுதி தேர்வு - அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்.

🌈🌈திபெத்தில் அமெரிக்க தூதரகம் திறக்கவும், சீனாவின் எந்த தலையீடும் இல்லாமல் அடுத்த தலாய் லாமாவை திபெத் புத்த மதத்தினர் சுதந்திரமாக தேர்ந்தெடுக்க சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை பெறும்சட்ட மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்றுமுன்தினம் கையெழுத்திட்டார்.

🌈🌈சீனாவில் கொரோனா பரவத் தொடங்கிய காலகட்டத்தில், வுஹானிலிருந்து கொரோனா வைரஸ் தொடர்பான தகவலை வெளியிட்டதாக ஜாங் ஜான் என்னும் பெண் பத்திரிக்கையாளர் மீது சீன அரசு நான்கு பத்திரிகையாளர்களை கைது செய்தது.

🌈🌈கடந்த 10 ஆண்டுகளாக கிராம சபை கூட்டங்களையே அதிமுக நடத்தவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அனந்தலையில் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். மேலும் கொலை, கொள்ளை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, ஊழல்களில் அதிமுக அரசு முதலிடத்தில் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்

🌈🌈அரசியல் வருவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் ஒருபோதும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்ததில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் மிகப்பெரிய நிர்பந்தத்துக்கு உள்ளாக்கப்பட்டார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என அவர் தெரிவித்துள்ளார். 

🌈🌈ரஜினி அரசியலுக்கு வந்தாலும், வரலனாலும் திமுகவை பாதிக்காது என தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.

🌈🌈சசிகலா வெளியேவந்தால் அவரது குடும்பத்தில் தான் மாற்றம் நிகழும், அதிமுகவில் மாற்றம் நிகழாது என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். தன் நிலையை கருத்தில் கொண்டு கட்சி தொடங்கவில்லை என்ற முடிவை ரஜினி எடுத்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.                                                 

🌈🌈தமிழகத்தில் மூன்றாவது அணி எடுபடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில்  முத்தரசன் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘நியாயமான கோரிக்கைகளுக்கு டெல்லியில் விவசாயிகள் போராடுகின்றனர். அதனைப் பொதுமக்களும் ஆதரிக்கின்றனர். எனவே, விவசாயிகளுக்கு எதிராக இயற்றப்பட்ட வேளாண் சட்டத்தை நீக்க வேண்டும். தமிழக அரசு இந்த சட்டத்தை ஆதரிக்கிறது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தேர்ந்தோர் பட்டியல் - அளிக்கப்பட வேண்டிய விவரங்கள் - படிவம் (BT PANEL - Individual Form)...

 >>> உடற்கல்வி ஆசிரியர் / சிறப்பு ஆசிரியர் நிலையிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தேர்ந்தோர் பட்டியல் - அளிக்கப்பட வேண்டிய விவரங்கள் - படிவம் (BT PANEL - Individual Form) தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஜனவரி 1 முதல் பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ள மாநிலங்கள்...

 


தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30,000க்கும் குறைந்து வரும் நிலையில், பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மீண்டும் பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளன.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. எனினும் கடந்த அக்டோர் முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதனைத் தொடர்ந்து ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், கொரோனா அதிகரிப்பால் அவை மீண்டும் மூடப்பட்டன. இந்நிலையில் வரும் ஜனவரி 1 முதல் பள்ளிக்ளை திறக்க சில மாநிலங்கள் முடிவு செய்துள்ளன. ஒரு சில மாநிலங்கள், மூத்த மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகளைத் திறக்க முடிவு செய்துள்ளன.

 பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை உள்துறை அமைச்சகம் வெளியிட்டது, அதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், பள்ளிகளை திறப்பது குறித்த முடிவுகளை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்த முடிவு அந்தந்த பள்ளி / நிறுவன நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து, நிலைமையை மதிப்பீடு செய்வதன் அடிப்படையில் எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியிருந்தது.

 ஜனவரி முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ள மாநிலங்கள் :

பீகார்: பீகாரில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் பயிற்சி மையங்கள் 2021 ஜனவரி 4 முதல் மீண்டும் திறக்கப்படும். ஆனால், முதற்கட்டமாக மேல்நிலை வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளன. மேலும் 15 நாட்களுக்கு நிலைமையை மதிப்பாய்வு செய்த பின்னர், ஜூனியர் பிரிவுகளும் மீண்டும் திறக்கப்படும்.

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஜனவரி 4 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். ஆரம்பத்தில், பள்ளிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அரை நாள் வகுப்புகள் நடைபெறும். ஜனவரி 18 முதல் முழு நாள் வகுப்புகள் இருக்கும். அனைத்து அடிப்படை பாதுகாப்பு விதிமுறைகளும் பின்பற்றப்படும் நிறுவனங்களால், கல்வி அமைச்சர் ஆர் கமலகண்ணன் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா: கர்நாடக அரசு ஜனவரி 1 முதல் 10 மற்றும் 12 ஆம் தேதிகளுக்கு வகுப்புகளை மீண்டும் தொடங்க அனுமதித்துள்ளது. இருப்பினும், பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு பெற்றோரிடமிருந்து எழுத்துப்பூர்வ அனுமதி தேவைப்படும். இந்த அறிவிப்பை வெளியிட்ட கர்நாடக கல்வி அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார், 6 முதல் 9 வகுப்புகளுக்கான வித்யாகம திட்டம் ஜனவரி 1 முதல் தொடங்கும் என்றும் கூறினார்.

அசாம்: இதேபோல், பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களை தொடக்க நிலை முதல் பல்கலைக்கழக நிலை வரை ஜனவரி 1 முதல் மீண்டும் திறக்க அசாம் அரசு முடிவு செய்துள்ளது.

புனே: புனே மாநகராட்சியில் உள்ள பள்ளிகள் ஜனவரி 4 முதல் மீண்டும் திறக்கப்படும். புனே மாநகராட்சி 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகள் ஜனவரி 4 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று கூறியுள்ளது. அனைத்து பள்ளிகளும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அது கூறியது.

தமிழ்நாடு: தமிழகத்தை பொறுத்த வரை கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் கலந்தாலோசித்து பின்னர் பள்ளிகள் திறப்பது குறித்து உரிய முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை..

இதற்கிடையில், மத்தியப் பிரதேசம், சிக்கிம், உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ஜார்க்கண்ட், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் ஏற்கனவே 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகளை மீண்டும் திறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

2021-22 முதல் 2023-24 வரை, 3 ஆண்டுகளுக்கு பள்ளி மேம்பாட்டு திட்டம் (School Development Plan) - படிவம்...


 >>> 2021-22 முதல் 2023-24 வரை, 3 ஆண்டுகளுக்கு பள்ளி மேம்பாட்டு திட்டம் (School Development Plan) - படிவம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்...

 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன், 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

இருக்கும் நாட்களுக்கு ஏற்ப, பாடத்திட்டங்களை மாற்றி அமைத்து, கல்வியாளர்களின் கருத்துகளை ஏற்று, முதலமைச்சரின் ஒப்புதலுடன் விரைவில் அட்டவணை வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாத பள்ளிகள் மீது பெற்றோர் உரிய முறையில் எழுத்துப்பூர்வமாக புகாரளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

எந்தெந்த வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு? - அமைச்சர் செங்கோட்டையன்...

 


எந்தெந்த வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு; சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு: அமைச்சர் செங்கோட்டையன்

 சூழ்நிலைக்கு ஏற்ப ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் எந்தெந்த வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடத்தலாம் எனக் கல்வியாளர்களுடன் கலந்து பேசி தமிழக முதல்வர் முடிவெடுப்பார் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பை பொறுத்து 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோவில்பட்டியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஆன்மிகவாதிகளும், திராவிடவாதிகளும் ஏற்றுக்கொள்ளும் அரசாக அதிமுக அரசு உள்ளது. மதநல்லினம் என்ற வகையில் அனைவரையும் அரவணைத்து செல்லும் முதல்வராக  உள்ளார்.

சூழ்நிலைக்கு ஏற்ப ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் எந்தெந்த வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடத்தலாம் என கல்வியாளர்களுடன் கலந்து பேசி தமிழக முதல்வர் முடிவெடுப்பார்.

நடப்பு கல்வியாண்டுக்கான 10, 12-ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு குறித்து இன்னும் 10 நாட்களுக்குள் முதல்வரின் அனுமதி பெற்று அட்டவணை வெளியிடப்படும். கரோனா ஊரடங்கு காரணமாக 10, 12-ம் வகுப்புகளுக்கு 100 சதவீத பாடங்களை எடுத்துச் செல்ல முடியவில்லை. 

குறிப்பிட்ட காலத்தில் பள்ளிகளை திறக்க முடியவில்லை. பள்ளிகள் திறக்கின்ற நாட்கள் குறைந்து வருவதால், அதற்கேற்ப பாடத்திட்டங்களை மாற்றியமைத்து அதிலுள்ள சாரம்சங்களை கொண்டு கேள்விகள் கேட்க வேண்டிய நிலையில் முதல்வர் உத்தரவு வழங்கி உள்ளார்.

அதனடிப்படையில், கல்வியாளர்களின் கருத்துகளை அறிந்து பணிகள் நிறைவடைந்துள்ளது. முதல்வரின் ஒப்புதல் பெற்றவுடன் செய்முறை தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும்.

வரும் சட்டப்பேரவை தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும். அதனை பொறுத்து 10, 12-ம் வகுப்புகளுக்கான பொது தேர்வுகள் தேதிகள் குறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்.

நீட் தேர்வு பயிற்சியை பொறுத்தவரை இன்றுவரை 28,150 பேர் பதிவு செய்துள்ளனர். இதில், தற்போது 5,020 பேருக்கு ஆன் லைன் வழியாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 11-ம் வகுப்பில் இருந்தே அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மூலமாக நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம்.

ஆனால், கரோனா ஊரடங்கு காரணமாக தடைபட்டது. பென் டிரைவ் மூலமாக ஸ்மார்ட் போர்டு வழியாக பயிற்சி வழங்கும் திட்டம். மேலும், ஐ.சி.டி. மூலம் மேல்நிலைப்பள்ளிக்கு 20 கணினிகளும், உயர்நிலைபள்ளிகளுக்கு 10 கணினிகளும் வழங்கப்பட்டு, அதில் அனைத்து பாடங்களையும் தரவிறக்கம் செய்து அதன் மூலம் பயிற்சி அளிக்க முடியுமா என அரசு பரிசீலித்து வருகிறது, என்றார் அவர்.

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்கள் - புதிய வரைபடம்... (MAP) TAMIL & ENGLISH VERSION...

 தமிழ்நாட்டின் 38 மாவட்டங்கள் - புதிய வரைபடம்... (MAP) 

தமிழ்நாடு வரைபடம் 

 

 TAMILNADUMAP

 (ENGLISH VERSION)



தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களின் பெயர்கள்...

Tamil Nadu 38 Districts Name List...

  1.     சென்னை
  2.     கடலூர்
  3.     காஞ்சிபுரம்
  4.     செங்கல்பட்டு
  5.     திருவள்ளூர்
  6.     திருவண்ணாமலை
  7.     வேலூர்
  8.     விழுப்புரம்
  9.     கள்ளக்குறிச்சி
  10.     திருப்பத்தூர்
  11.     இராணிப்பேட்டை
  12.     அரியலூர்
  13.     மயிலாடுதுறை
  14.     நாகப்பட்டினம்
  15.     பெரம்பலூர்
  16.     புதுக்கோட்டை
  17.     தஞ்சாவூர்
  18.     திருச்சிராப்பள்ளி
  19.     திருவாரூர்
  20.    தருமபுரி
  21.     திண்டுக்கல்
  22.     கோயம்புத்தூர்
  23.     கரூர்
  24.     ஈரோடு
  25.     கிருட்டிணகிரி
  26.     நாமக்கல்
  27.     நீலகிரி
  28.     சேலம்
  29.     திருப்பூர்
  30.   கன்னியாகுமரி
  31.     மதுரை
  32.     இராமநாதபுரம்
  33.     சிவகங்கை
  34.     தேனி
  35.     தூத்துக்குடி
  36.     திருநெல்வேலி
  37.     தென்காசி
  38.     விருதுநகர்

மாவட்டங்கள் பிரிப்பு - வரலாறு

1947 ஆகத்து மாதம் இந்திய விடுதலை பெற்ற பின்னர், பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணமானது, சென்னை மாநிலம் என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1953 முதல் 1956 வரையிலான மாநில எல்லைகள் சீரமைப்புகளின் வாயிலாக தற்போதைய எல்லைகள் உருவாக்கப்பட்டன. சென்னை மாநிலமானது, 1969ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக, தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது. முந்தைய சென்னை மாகாணமானது 13 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை: செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, மெட்ராஸ், மதுரை, நீலகிரி, வட ஆற்காடு, இராமநாதபுரம், சேலம், தென் ஆற்காடு, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகியனவாகும். இம்மாவட்டங்கள் கீழ்க்காணும் வகையில் பிரிக்கப்பட்டு, தற்போதைய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

1966: சேலம் மாவட்டத்தைப் பிரித்து தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1974: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைப் பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1979: கோயம்புத்தூர் மாவட்டத்தைப் பிரித்து ஈரோடு மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1985: மதுரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களைப் பிரித்து, புதிதாக சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

1985: மதுரை மாவட்டத்தைப் பிரித்து திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1986: திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1989: வட ஆற்காடு மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

1991: தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

1993: தென் ஆற்காடு மாவட்டம், புதிதாக விழுப்புரம், கடலூர் ஆகிய இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.

1995: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

1996: மதுரை மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக தேனி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1997: சேலம் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக நாமக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1997: முந்தைய செங்கல்பட்டு மாவட்டமானது, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.

2004: தர்மபுரி மாவட்டத்திலிருந்து புதிதாக கிருட்டிணகிரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

2007: பெரம்பலூர் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

2009: கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு, புதிதாக திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

2019: விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம், (2019, சனவரி 8 ஆம் நாள் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரித்து, தமிழகத்தின் 33 வது மாவட்டமாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது); மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக செங்கல்பட்டு மாவட்டமும் (2019 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது); மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக தென்காசி மாவட்டமும் 2019 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தைப் பிரித்து, புதியதாக திருப்பத்தூர் மாவட்டமும் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டமும் 2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதி உருவாக்கப்பட்டன.

2020: நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து புதியதாக மயிலாடுதுறை மாவட்டம் ஆனது மார்ச் 24, 2020 அன்று உருவாக்கப்பட்டது.

G.O. 787, Dated: 22-12-2020 -புத்தாண்டு-2021 கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு...



புத்தாண்டு-2021 கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு...


சர்வதேச வானியல் போட்டியின் விவரங்கள் (INTERNATIONAL ASTRONOMY CONTEST : 2020-2021)...

 


>>> சர்வதேச வானியல் போட்டியின் விவரங்கள் (INTERNATIONAL ASTRONOMY CONTEST 2020-2021) தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளிக் கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 9,10 மற்றும் 11 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சர்வதேச வானியல் போட்டியில் கலந்து கொள்ள இலவச பதிவு மேற்கொள்வது குறித்த பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்... இணைப்பு: போட்டியின் விபரங்கள்...


பள்ளிக் கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 9,10 மற்றும் 11 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சர்வதேச வானியல் போட்டியில் கலந்து கொள்ள இலவச பதிவு மேற்கொள்வது குறித்த பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் R.C.No.:055492/M/S2/2020, Dated: 08-12-2020...

>>> பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>>இணைப்பு: போட்டியின் விபரங்கள்.




தமிழக ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு சம்பளம் உயர்வு - தமிழக அரசு திட்டம் (நாளிதழ் செய்தி)...

 


தமிழக ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு அவர்களின் கோரிக்கையை ஏற்று சம்பளத்தை ரூ. 6,000 வரை உயர்த்தி தமிழக அரசு அறிவிக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் அரசு மக்களுக்கு வழங்கும் முக்கிய நலத்திட்டங்கள் மற்றும் விலையில்லா பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மக்களுக்கு சேருகிறது. இதனை சிறப்பாக செய்வது ரேஷன் கடைகளில்

பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்கள் தான். இவர்களின் உதவி இல்லாமல் அரசின் திட்டங்கள் எதுவும் மக்களை சென்று சேர முடியாது.


ஊழியர்களின் கோரிக்கை:

பல வருடங்களாக ரேஷன் கடைகளில் பணியாற்றி வரும் பணியாளர்கள் தங்கள் சம்பளத்தை உயர்த்தக்கோரி அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். சம வேலைக்கு சம ஊதியம் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது. ஆனால் அரசிடம் இருந்து இதற்கு எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.

பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பாக மக்களுக்கு பரிசுத்தொகுப்பு வழங்குவது வழக்கம். இந்த வருடம் பரிசுத்தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கமும் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. இதை மக்களுக்கு வழங்கும் பொறுப்பு வழக்கம் போல் ரேஷன் கடை பணியாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த ரேஷன் கடை பணியாளர்கள் அரசு தங்களின் ஊதிய உயர்வை அறிவித்தால் மட்டுமே இந்த வருட பொங்கல் பரிசு தொகுப்பை மக்களுக்கு வழங்கும் பணியில் ஈடுபடுவோம் இல்லையென்றால் பணியை புறக்கணிப்போம் என்று அறிவித்தனர்.

இதனால் அரசு 33,000 ரேஷன் கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆலோசனை நடத்தி ஊதிய உயர்வை பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. இதன்படி, புதிதாக ரேஷன் கடைக்கு பணியில் சேருபவர்களுக்கு ரூ.12,000 சம்பளம் வழங்கப்படும். அனுபவத்தை பொறுத்து ரூ.2,500 முதல் ரூ. 6,000 வரை வரை ஊதியம் உயர்த்தப்படும் என்று அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அரசு தரப்பில் இருந்து இன்னும் அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

பணியாளர்களின் பணிக்கொடையில் அபராதப் பிடித்தம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு...

 பணியாளர்களின் பணிக்கொடையை நிறுத்தி வைக்க, தேவைப்பட்டால் அந்தத் தொகையை எடுத்துக்கொள்ளும் அதிகாரத்தையும் நிறுவனங்கள் எடுத்துக்கொள்ள முடியும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் பணியில் இருக்கும் பணியாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என்பது விதிமுறையாகும். பணியில் இருக்கும் ஒவ்வோர் ஆண்டுக்கும் தலா 15 நாள்கள் சம்பளத்தை பணிக்கொடையாக நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

கிராஜூவிட்டி நிறுத்தம்..

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (செயில்) நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் ஓய்வு பெற்ற பிறகும் நிறுவனத்தின் குடியிருப்பை காலி செய்யாமல் இருந்திருக்கிறார். அதற்கு வாடகையும் கொடுக்கவில்லை, வாடகை செலுத்தாதற்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், எந்தத் தொகையையும் செலுத்தவில்லை என்பதால் நிறுவனம் கொடுக்க வேண்டிய பணிக்கொடையை (Gratuity) நிறுத்தி வைத்தது.

இது தொடர்பான வழக்கு ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் நடந்தது. ஓய்வுக் காலத்துக்குப் பிறகு, குடியிருந்த காலத்துக்கு வழக்கமான வாடகை மட்டுமே வசூலிக்க முடியும். இதற்கு அபதாரம் விதிக்கக் கூடாது. மேலும் பணிக்கொடையை உடனடியாக வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்தநிலையில் இந்த வழக்கு மேல்முறையிட்டுக்குச் சென்றது. உச்ச நீதிமன்ற நீதிபதி கவுல் தலைமையில் விசாரணை நடந்தது. இதன் தீர்ப்பில் 2017-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள முடியாது. மேலும், செலுத்த வேண்டிய அபராத்தை பணிக்கொடையில் இருந்து நிறுவனம் எடுத்துக்கொள்ள எந்தத் தடையும் இல்லை எனத் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

பணி ஓய்வு பெற்ற பிறகும், நிறுவனத்தின் குடியிருப்பில் தங்கி இருந்தால் அபராதம் என்பது இயல்பானதுதான். அதனால் அந்த அபராதத்தை நிறுவனம் கொடுக்க வேண்டிய தொகையில் இருந்தும் எடுத்துகொள்ளலாம், பணிக்கொடையிலிருந்தும் எடுத்துக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருக்கிறது...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு... 27-04-2024 – Press News – Date Extension for Online Application - Direct R...