கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

MBBS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
MBBS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு ஆன்லைனில் இன்று தொடக்கம்: டெல்லி எய்ம்ஸை தேர்வு செய்தார் முதலிடம் பிடித்த ரஜனீஷ்...

 

MBBS / BDS 2024 - 2025ஆம் ஆண்டு


எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு ஆன்லைனில் இன்று தொடக்கம்: டெல்லி எய்ம்ஸை தேர்வு செய்தார் முதலிடம் பிடித்த ரஜனீஷ்...


சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று ஆன்லைனில் தொடங்குகிறது. சிறப்பு பிரிவினர் மற்றும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சென்னையில் நாளை நேரடியாக கலந்தாய்வு நடைபெறுகிறது.


தமிழகத்தில் 36 அரசு மருத்துவ கல்லூரிகள், சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி, 22 தனியார் மருத்துவ கல்லூரிகள், 3 அரசு பல் மருத்துவ கல்லூரிகள், 20 தனியார் பல் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில், அரசு கல்லூரிகளில் மொத்தம் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீதம், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது.


அரசு கல்லூரிகளில் எஞ்சிய 85 சதவீத இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 6,630 எம்பிபிஎஸ் இடங்கள், 1,683 பிடிஎஸ் இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதில், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 496 எம்பிபிஎஸ் இடங்கள், 126 பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதுதவிர, தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,719 எம்பிபிஎஸ் இடங்கள், 430 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.


ஒரு இடத்துக்கு 4 பேர் போட்டி: மாணவர் தரவரிசை பட்டியல் கடந்த 19-ம் தேதி வெளியிடப்பட் டது. இதில், அரசு ஒதுக்கீட்டு இடங்கள் பிரிவில் 28,819 பேர், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு பிரிவில் 3,683 பேர், நிர்வாக ஒதுக்கீடு பிரிவில் 13,417 பேர் இடம்பெற்றுள்ளனர். அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 10,462 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ள நிலையில் தரவரிசை பட்டியலில் 42,236 மாணவ, மாணவிகள் இடம்பெற்று உள்ளனர். இதன்மூலம் ஒரு இடத்துக்கு 4 பேர் போட்டியிடுகின்றனர்.


இந்நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு https://tnmedicalselection.net என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் இன்று தொடங்குகிறது.


அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு பிரிவில் தரவரிசை பட்டியலில் உள்ளவர்கள் இன்று காலை 10 மணி முதல் 27-ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்து, கட்டணம் செலுத்தி, இடங்களை தேர்வு செய்யலாம். 28-ம் தேதி தரவரிசை பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். தற்காலிக ஒதுக்கீடு விவரங்கள் 29-ம் தேதியும், இறுதி ஒதுக்கீடு விவரங்கள் 30-ம் தேதியும் இணையதளத்தில் வெளியிடப்படும். ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 5-ம் தேதி நண்பகல் 12 மணி வரை இடங்கள் ஒதுக்கீட்டு ஆணையை இணையதளத்தில் இருந்து பதி விறக்கம் செய்துகொள்ளலாம். ஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் செப்டம்பர் 5-ம் தேதி மாலை 5 மணிக்குள் சேர வேண்டும்.


மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் ஆகிய சிறப்பு பிரிவினர் மற்றும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளை (ஆகஸ்ட் 22) சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நேரடியாக நடைபெற உள்ளது. இதுபற்றி மேலும் விவரங்களை சுகாதாரத் துறை இணையதளங்களில் அறியலாம்.


இதற்கிடையே, நீட் தேர்வில் 720-க்கு 720 மதிப்பெண் எடுத்து அகில இந்திய அளவில் முதல் இடம் பிடித்த நாமக்கல் பள்ளி மாணவர் பி.ரஜனீஷ், தமிழக அரசின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்திருந்தார். இவர் அகில இந்திய கலந்தாய்வில் பங்கேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியை தேர்வு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


ஆக.23-ல் அகில இந்திய கலந்தாய்வு முடிவு: நாடு முழுவதும் அரசு மருத்துவ, பல் மருத்துவ கல்லூரிகளில்இருந்து 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. இந்த இடங்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர்,நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவ கலந்தாய்வு குழு (எம்சிசி) ஆன்லைனில் நடத்தி வருகிறது.


இந்நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2024-25கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வு https://mcc.nic.in/ என்ற இணையதளத்தில் கடந்த 14-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இன்றும், நாளையும் தரவரிசை பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இடங்கள் ஒதுக்கீடு பெற்றவர்களின் விவரங்கள் 23-ம் தேதி வெளியிடப்பட உள்ளன. ஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் 24-ம் தேதி முதல் 29-ம் தேதிக்குள் சேர வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் 30, 31-ம் தேதிகளில் நடைபெறும்.


மொத்தம் 3 சுற்று கலந்தாய்வு மற்றும் காலியாக உள்ள இடங்களுக்கான சிறப்பு கலந்தாய்வு அக்டோபர் இறுதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


MBBS / BDS 2024 - 2025ஆம் ஆண்டு - தமிழ்நாடு அரசு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பதாரர்களுக்கான தற்காலிக தரவரிசைப் பட்டியல்...

 

MBBS / BDS 2024 - 2025ஆம் ஆண்டு - தமிழ்நாடு அரசு ஒதுக்கீட்டின் கீழ்  விண்ணப்பதாரர்களுக்கான தற்காலிக தரவரிசைப் பட்டியல்...


 PROVISIONAL RANK LIST FOR MBBS / BDS 2024 - 2025 SESSION (GOVERNMENT QUOTA)



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... 


MBBS / BDS 2024 - 2025ஆம் ஆண்டு - 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் தமிழ்நாடு அரசுப் பள்ளி விண்ணப்பதாரர்களுக்கான தற்காலிக தரவரிசைப் பட்டியல்...

 

MBBS / BDS 2024 - 2025ஆம் ஆண்டு - 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் தமிழ்நாடு அரசுப் பள்ளி விண்ணப்பதாரர்களுக்கான தற்காலிக தரவரிசைப் பட்டியல்...


 PROVISIONAL RANK LIST FOR MBBS / BDS 2024 - 2025 SESSION - TAMILNADU GOVT SCHOOL CANDIDATES UNDER 7.5% RESERVATION...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... 


மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்...




 மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்...


Minister Ma.Subramanian released the ranking list for medical studies...



Medical Counselling Ranking List: மருத்துவப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். பொதுப் பிரிவிற்கான கலந்தாய்வு ஆக.21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், அரசு சார்பில் சைதாப்பேட்டையில் ஆரம்பிக்கப்பட்ட நீட் தேர்வு மையத்திலிருந்து, தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் 4 அரசுப் பள்ளி மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட அமைச்சர்


சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் 2024 - 25ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம் (MBBS), பல் மருத்துவம் (BDS) மற்றும் மருத்துவம் சார்ந்த (Paramedical) பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பித்து, தகுதி பெற்ற மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "2024 -25ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம் (MBBS), பல் மருத்துவம் (BDS), மருத்துவம் சார்ந்த (Paramedical) பட்டப் படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரியில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரியில் உள்ள நிர்வாக மருத்துவர் இடங்கள் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 31 முதல் ஆக.9 வரை ஆன்லைன் மூலம் பெறப்பட்டன.இந்தாண்டு 43,063 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. கடந்த ஆண்டைக் காட்டிலும் 2,721 அதிகம். இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டிற்கு 3,733 விண்ணப்பங்களும், விளையாட்டுப் பிரிவில் 343 விண்ணப்பங்களும், முன்னாள் படை வீரர் பிரிவு ஒதுக்கீட்டில் 455 விண்ணப்பங்களும் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவிற்கு 133 விண்ணப்பங்களும் பெறப்பட்டன.


எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் 6,630 அரசு ஒதுக்கீட்டு இடங்களும், அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள பிடிஎஸ் படிப்பில் 1,683 இடங்களும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் படிப்பில் 496 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 126 இடங்களும் உள்ளன.அரசின் ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு 29,429 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 28,819 விண்ணப்பம் தகுதி பெற்றுள்ளது. அவர்களில் 10,704 மாணவர்களும், 18,114 மாணவிகளும், திருநங்கை ஒருவரும் விண்ணப்பம் செய்துள்ளனர்.அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டிற்கு 3,733 மாணவர்கள் விண்ணப்பம் செய்ததில், 3,683 மாணவர்கள் தகுதி பெற்றனர். அவர்களில் 1,041 மாணவர்களும், 2,642 மாணவிகளும் ஆவர். தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்வதற்கு 13,417 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.கடந்த ஆண்டை விட 150 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அன்னை கல்லூரியில் 50 இடங்களும், கன்னியாகுமரி ஆராய்ச்சி மையத்தில் 100 இடங்களும் கூடுதலாக கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் 9,200 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 2,150 இடங்கள் உள்ளது.


அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளியில் படித்த ரூபிகா என்ற மாணவி 669 மதிப்பெண் பெற்றுள்ளனர். அரசு சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்க தொடங்கப்பட்ட சைதாப்பேட்டை சீர்மிகு பயிற்சி மையத்தில் படித்த மாணவர்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முதல் 10 பேரில் நான்கு மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.ஆகஸ்ட் 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைன் மூலம் பொதுப் பிரிவிற்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இடஒதுக்கீடு, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றத்திறனாளிகள் மற்றும் விளையாட்டுப் பிரிவு உள்ளிட்ட சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு 22ம் தேதி ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் நேரடியாக கலந்தாய்வு நடைபெறும்.திருநங்கை ஒருவரும் தேர்வாகி இருப்பதாகவும், அரசு ஒதுக்கீட்டில் அவருக்கு இடம் கிடைத்துள்ளதாகவும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அரசு தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறது. நீட் தேர்விற்கு அகில இந்திய அளவில் எதிர்ப்புகள் கிளம்பி துவங்கி உள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு தர வேண்டும் என்று அகில இந்திய தலைவர்கள் கேட்டுள்ளனர். மாநில உரிமைகளை எப்போதும் திமுக விட்டு கொடுக்காது.எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களில் பொதுப் பிரிவு தரவரிசைப் பட்டியலில் 2023-24ம் கல்வியாண்டில் படித்த மாணவர்கள் 7,791 பேரும், அதற்கு முந்தைய ஆண்டுகளில் படித்த மாணவர்கள் 21 ஆயிரத்து 25 பேரும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் 2023-24 ம் கல்வியாண்டில் 472 மாணவர்களும், அதற்கு முந்தைய ஆண்டுகளில் படித்த மாணவர்கள் 3 ஆயிரத்து 309 பேரும் இடம் பெற்றுள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் இடம் பெற்றுள்ள 10 மாணவர்களும் 2023-24 ம் கல்வியாண்டிற்கு முந்தைய ஆண்டுகளில் படித்தவர்கள்.அரசு மருத்துவக்கல்லூரிகளில் கூடுதலாக இடங்களை அதிகரிக்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளோம். அதன்படி 2025-26 ம் கல்வியாண்டில் கூடுதல் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். தமிழ்நாட்டில் மேலும் 6 புதிய மருத்துவக்கல்லூரிகளை துவங்குவதற்கு நிதி கேட்டுள்ளோம். அதனை பெறுவதற்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்" என தெரிவித்தார்.


MBBS கலந்தாய்வு : நீட் கட்-ஆஃப் வெளியானதாக வதந்தி...


 எம்பிபிஎஸ் கலந்தாய்வு : நீட் கட்-ஆஃப் வெளியானதாக வதந்தி...


MBBS Counseling : NEET Cut-Off Released Rumors...




மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் பட்டப் படிப்புகளில் (MBBS & BDS Degree) சேர 28.06.2023 முதல் 10.07.2023 வரை இணையவழியாக விண்ணப்பம் செய்யலாம் (Online Application for Admission in Medical & Dental Degree Courses (MBBS & BDS Degree) from 28.06.2023 to 10.07.2023)...

மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் பட்டப் படிப்புகளில் (MBBS & BDS Degree) சேர 28.06.2023 முதல் 10.07.2023 வரை இணையவழியாக விண்ணப்பம் செய்யலாம் (Online Application for Admission in Medical & Dental Degree Courses (MBBS & BDS Degree) from 28.06.2023 to 10.07.2023)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய..

எம்.பி.பி.எஸ். 2021-22 கல்வியாண்டிற்கான இணைந்த மருத்துவக் கல்லூரிகள்/நிறுவனங்கள் & இடங்கள் - தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை (M.B.B.S. Affiliated Medical Colleges/Institutions & Seats for the Academic Year 2021-22 - THE TAMIL NADU Dr. M.G.R. Medical University, Chennai)...



>>> எம்.பி.பி.எஸ். 2021-22 கல்வியாண்டிற்கான இணைந்த மருத்துவக் கல்லூரிகள்/நிறுவனங்கள் & இடங்கள் - தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை (M.B.B.S. Affiliated Medical Colleges/Institutions & Seats for the Academic Year 2021-22 - THE TAMIL NADU Dr. M.G.R. Medical University, Chennai)...



>>> எம்.பி.பி.எஸ். கற்பிக்கும் கல்லூரிகளின் பட்டியல் - என்எம்சி - தேசிய மருத்துவ கவுன்சில் (LIST OF COLLEGES TEACHING MBBS - NMC (National Medical Council))...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ESIC இன் கீழ் தகுதியான விண்ணப்பதாரர்கள் MBBS, BDS இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் (Candidates eligible under ESIC can apply for MBBS, BDS seats)...

 


அன்பான சகோதர சகோதரிகளே...

நீங்கள் பணி செய்யும் நிறுவனம் அல்லது தொழிற்சாலையில் உங்களுக்கு (ESI) இ.எஸ்.ஐ. பிடித்தம் செய்யப்படுகிறதா? ஆம் எனில் உங்கள் மகள்/மகன் மருத்துவ  படிப்பில் (M.B.B.S) சேர்ப்பதற்கான  வாய்ப்பு உள்ளது.

அதாவது ESI பிடித்தம் செய்யப்படும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்காக இந்தியா முழுவதும் ESI கோட்டாவில் 437 M.B.B.S.சீட்டுகள்  உள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு கோவை மற்றும் சென்னையில்  45 சீட்டுகள் உள்ளது. இதற்கான முழு விபரம் வேண்டும் என்றால் அருகில் உள்ள இ.எஸ்.ஐ. கிளைஅலுவலகத்தை (ESI Branch office) அனுகவும். 

இதற்காக விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதி 13.07.2022முதல் 27.07.2022வரை மட்டுமே.

என்பதையும் அன்போடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

நன்றி...

அன்புடன் 

ESI Branch office

Sivakasi


ESIC இன் கீழ் தகுதியான விண்ணப்பதாரர்கள் MBBS, BDS இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் (Candidates eligible under ESIC can apply for MBBS, BDS seats)...


Candidates seeking admission in UG medical courses (MBBS/BDS) under Employees State Insurance Corporation (ESIC) can now submit applications online for the ‘Ward of Insured Person' (IP) Certificate 2022–23 from July 5 to 26. The applicants should submit the printed copy to the respective ESIC branches before July 27.


There are 437 MBBS and 28 BDS seats all over India (including Chennai and Coimbatore) reserved for the children of ESI-insured persons.


The children of the ESI holders with the 'Ward of Insured Person' who qualify in National Eligibility-cum- Entrance Test (UG)-2022 [NEET (UG) - 2022] can apply at the ESIC Medical/Dental and some government medical colleges under seats allocated for the I academic session 2022-23.


For details, candidates may visit www.esic.nic.in and www.mcc.nic.in or contact the ESIC Branch office concerned.





ஜூலை 1ல் ஜிப்மரில் எம்.பி.பி.எஸ்., வகுப்புகள் தொடக்கம்...



 ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., வகுப்பு ஜூலை 1ம் தேதி துவங்குகிறது. ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் புதுச்சேரி, காரைக்கால் ஜிப்மர் மையங்களில் பயிலும் எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு மாணவர்கள், பி.எஸ்சி., நர்சிங் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள், பி.எஸ்சி., துணை மருத்துவ மாணவர்களுக்கு, வரும் ஜூலை, 1ம் தேதி முதல் வகுப்புகள் துவங்க உள்ளன. எம்.பி.பி.எஸ்., இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தனியாக அறிவிப்பு வெளியிடப்படும். ஜிப்மர் வளாகத்தில், மாணவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசியை எங்கு செலுத்தியிருந்தாலும், இரண்டாவது தவணை தடுப்பூசியை ஜிப்மர் வளாகத்தில் செலுத்திக் கொள்ளலாம்.கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள், கொரோனா பரிசோதனைக்கு பிறகே ஜிப்மர் மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். மற்ற மாணவர்கள், நேரடியாக அவரவருக்கு ஒதுக்கப்பட்ட விடுதி அறைகளுக்குச் செல்லலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

25-01-2025 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: குடிமை குறள...