தெலங்கானாவில் ஜூலை 1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
முதல் & இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு...
தமிழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பு குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டு உள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த வருட மார்ச் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. பின்னர் தொற்று குறைந்த காரணத்தால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் டிசம்பர் மாத மத்தியில் இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. பிற ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு நேற்று முதல் தமிழகம் முழுவதும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி செயல்பட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதில் பொறியியல், கலை-அறிவியல், பாலிடெக்னிக் உட்பட அனைத்து கல்லூரிகளிலும் முதல் மற்றும் 2ம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவது குறித்து இன்னும் 2 நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.
மேலும் கல்லூரிகளில் ஒரு வகுப்பறையில் 30 மாணவர்கள் வீதம், ஒரு நாளைக்கு காலை, மாலை என இரு நேரம் வகுப்புகள் நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் கூறி உள்ளார். ஏற்கனவே முதல் மற்றும் 2ம் ஆண்டு மாணவர்களுக்கு விரைந்து கல்லூரிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்குமாறு கல்லூரி பேராசிரியர்கள் கோரிக்கை வைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த மாதம் கல்லூரிகள் திறப்பு...
* தமிழகத்தில் முதலாமாண்டு மற்றும் 2-ம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் நேரடி வகுப்புகள் தொடங்க உயர்கல்வித்துறை திட்டம்
* மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தபிறகு விடுதிகளில் அனுமதிக்க பரிசீலனை
அதிகமாக விடுமுறை எடுக்கும் ஆசிரியர்களின் பட்டியல் கேட்கிறது உயர்கல்வித்துறை...
''தேவையில்லாமல் அதிகமாக விடுமுறை எடுத்துள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பட்டியலை அனுப்ப கல்லூரி கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.''
அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் கொரோனோ தொற்று மற்றும் உடல் நலன் சார்ந்த காரணங்களைத் தவிர அதிகமாக விடுமுறை எடுத்து நிர்வாகப் பணிகளை ஒழுங்காக மேற்கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களை கல்லூரி கல்வி இயக்குநருக்கு அனுப்ப வேண்டுமென கல்லூரி கல்வி இயக்குநர் ராமலட்சுமி அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து தேவையற்ற காரணங்களுக்காக அதிகமாக விடுமுறை எடுத்துள்ளவர்களிடம் விளக்கம் கேட்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் பலர் உடல்நலன் சார்ந்த காரணங்களைத் தவிர்த்து பலர் தேவையில்லாமல் விடுமுறை எடுப்பதன் காரணமாக அரசுக் கல்லூரிகளில் கற்பித்தல் மற்றும் நிர்வாக பணிகளில் தொய்வு ஏற்படுவதாக வந்த புகாரையடுத்து கல்லூரிக் கல்வித் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கொரோனோ காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு மேல் கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில், கடந்த 7ம் தேதி முதல் நேரடியாக மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பல பேராசிரியர்கள் கல்லூரிகள் திறக்கப்பட பிறகும் விடுமுறையில் இருந்து வருவது கல்லூரி கல்வி இயக்ககத்தின் கவனத்திற்கு வந்தது. இதனால் சிறப்பு விடுமுறை தவிர்த்து தேவையில்லாமல் விடுமுறை எடுத்துள்ள பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் பட்டியல் சேகரிக்கப்படுகிறது.
பேராசிரியர் மற்றும் பேராசிரியர் அல்லாத பணியாளர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்ட பின்னர், அதிக விடுமுறை எடுப்பதற்கான விளக்கம் கேட்கப்படும். உரிய விளக்கம் அளிக்காத பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைை எடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக கல்லூரி கல்வி இயக்குநரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பட்டியல் தயாரிக்கும் பணியை அரசுக் கல்லூரி முதல்வர்கள் துவக்கியுள்ளதால் விரைவில் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேவையற்ற விடுமுறை எடுத்துள்ள நாட்களுக்கான ஊதியத்தைப் பிடிப்பதற்கான வாய்ப்புள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கும் 15 நாட்களுக்கு ஒருமுறை கரோனா பரிசோதனை...
ஐஐடி சென்னையில் பயிலும் மாணவர்களுக்குக் கரோனா தொற்று பரவியுள்ளதைக் கண்டறிந்ததால், மாநிலம் முழுவதும் அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவியருக்கும் 15 நாட்களுக்கு ஒரு முறை கரோனா தொற்றுப் பரிசோதனை செய்யப்படும் எனச் சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் இன்று (17-ம் தேதி) சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் ஆய்வுப் பணி மேற்கொண்டார். அரசு மருத்துவமனையில் உள்ள காது, மூக்கு தொண்டைப் பிரிவு, பிரசவ வார்டு, கேன்டீன்களில் ஆய்வு செய்தார்.
கேன்டீனில் மக்கள் கூட்டமாகவும், முகக்கவசம் அணியாமல் இருந்ததையும் பார்வையிட்ட ராதாகிருஷ்ணன், அனைவரும் முகக்கவசம் அணியவும், கட்டாயம் தனிமனித இடைவெளியைப் பின்பற்றிட வேண்டும் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
''கரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் குறித்து மூத்த மருத்துவர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. தினமும் 75 ஆயிரம் பேருக்கு நடத்தப்படும் பரிசோதனையில், கரோனா தொற்று எண்ணிக்கை ஆயிரத்து 100 என்ற எண்ணிக்கையில்தான் உள்ளது.
2 ஆயிரம் பேருக்குக் கரோனா தொற்றுப் பரிசோதனை செய்வதில், பத்து முதல் 20 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று இருப்பது உறுதியாகிறது. சேலத்தில் இதுவரை 767 பேருக்குக் கரோனா தொற்றுக்குச் சிகிச்சை அளித்துவந்த நிலையில், தற்போது, 83 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
மாநிலம் முழுவதும் கரோனா தொற்று உயிரிழப்பு ஒரு சதவீதமாக உள்ளது. கரோனா பாதிப்பு இரண்டு சதவீதமாக உள்ளது. இதனைப் பூஜ்ஜிய நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் விடுதிகள், கேன்டீன்கள், மேன்ஷன்கள், மெஸ்களில் மாணவ, மாணவியர்கள் கூட்டமாக இருக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளோம்.
மூடிய அறையில் 20க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் இருக்கக்கூடாது. முகக்கவசம் அணிவதைக் கைவிடக்கூடாது. தடுப்பூசி, பயன்பாட்டுக்கு வரும்வரை களப்பணியாளர்கள் உள்பட அனைவரும் கரோனா தொற்று விதிமுறைகளைப் பின்பற்றிட வேண்டும்.
சென்னை ஐஐடியில் மாணவர்களுக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, இரண்டு பிளாக்கில் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்திலும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இறுதியாண்டு மற்றும் முதுநிலை மாணவ, மாணவியர்கள் கல்லூரிகளுக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
எனவே, மாநிலம் முழுவதும் அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவியருக்கும் 15 நாட்களுக்கு ஒருமுறை கரோனா தொற்றுப் பரிசோதனை செய்யப்படும். அதனால், மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை. பல கல்லூரிகளில் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. அதனை மாணவர்கள் பின்பற்றலாம்.
கரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளவர்களுக்கு மனநல பாதிப்பு வந்து விடக்கூடாது என்பதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மனநல நிபுணர்களைக் கொண்டு கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பதாகப் பொதுமக்கள் புகார் அளித்தால், உடனடியாக ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்''
இவ்வாறு முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
இந்த ஆய்வுப் பணியில் டீன் பாலாஜிநாதன், கண்காணிப்பாளர் தனபால், சேலம் மனிதவள மேம்பாட்டுப் பயிற்சி நிறுவன இயக்குனர் பூங்கொடி மற்றும் மருத்துவக் கல்லூரித் துறைத் தலைவர்கள் சுமதி, சுரேஷ்கண்ணா, சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஜனவரி முதல் ஜூலை கல்வியாண்டு வரை கோடை விடுமுறையை தவிர்க்க கல்வி இயக்குனரகம் கர்நாடகாவில் முடிவு...
கர்நாடகாவில் நடப்பு கல்வியாண்டு தொடங்கி இன்னும் பள்ளி, கல்லூரிகள் திறக்காமல் இருப்பதால் வரும் ஜனவரி முதல் ஜூலை வரை கல்வியாண்டை நிர்ணயம் செய்வதுடன் வரும் கோடைகால விடுமுறையை தவிர்க்க மாநில கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
நடப்பு கல்வியாண்டு தொடங்கி 6 மாதங்கள் முடிந்துள்ள நிலையில் இன்னும் திறக்கவில்லை. பள்ளி, கல்லூரிகள் திறப்பது தொடர்பாக பெற்றோர்களுடன் அரசு தரப்பில் நடத்திய ஆலோசனையில் பெரும்பான்மையான பெற்றோர்கள் முழுமையாக கொரோனா முடிவுக்கு வந்தபின் தான் திறக்க வேண்டும் என்று உறுதியாக வெளிப்படுத்தினர்.
மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கவில்லை என்றாலும் பெரும்பான்மையான தனியார் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் ஆன்லைன் வகுப்பு நடத்தி வருகிறார்கள். ஆனால் அரசு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு கிடைக்காமல் வஞ்சித்து வருகிறார்கள். தனிடையில் கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு வெளியிட்ட கோவிட்-19 வழி காட்டுதலில் 9, 10ம் வகுப்புகள் மற்றும் முதல். இரண்டாமாண்டு முதல்நிலை கல்லூரிகள் திறக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது.
ஆனால் கொரோனா தொற்று அதிகமிருப்பதால் பள்ளி, கல்லூரிகள் திறக்கவில்லை. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டின் 6 மாதங்கள் முடிந்துள்ளதால் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்காமல் இருக்க வேண்டும். அதே சமயத்தில் கொரோனா தொற்று பரவல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து 9 மற்றும் 10ம் வகுப்பு பள்ளிகள் மற்றும் முதல் மற்றும் இரண்டாண்டு முதல்நிலை கல்லூரிகள் திறக்கும் யோசனையை முதல்வர் எடியூரப்பாவிடம் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பாக மாநில கல்வி இயக்குனரக ஆணையர் அன்புகுமார், மாநில கல்வி அமைச்சக முதன்மை செயலாளர் உமாசங்கர் ஆகியோருடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். இதில் வரும் ஜனவரி 4ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான அதிகாரப்பூர்வமாக முடிவெடுத்து முறைப்படி அறிவிக்கப்படும் என்று அரசு வட்டாரம் மூலம் தெரியவருகிறது. பள்ளி, கல்லூரிகள் திறக்கும் பட்சத்தில் மாணவர்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு என்னென்ன வழிகாட்டுதல் முறைகள் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து விரிவாக அரசாணை வெளியிடப்படும் என்றும் தெரியவருகிறது.
நடப்பு கல்வியாண்டின் முதல் 6 மாதங்கள் முடிந்துள்ளதால், வரும் ஜனவரி தொடங்கி ஜூலை இறுதி வரை 2020-21ம் கல்வியாண்டாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பியூசி இரண்டாமாண்டு தேர்வுகளை இந்த கால கட்டத்தில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களின் வகுப்பு பாதிக்காமல் தவிர்க்க வரும் கோடை காலத்தில் வழக்கமாக விடப்படும் விடுமுறை ரத்து செய்யும் யோசனையில் கல்வி இயக்குனரகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜனவரி 4ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான அதிகாரபூர்வ முடிவெடுத்து முறைப்படி அறிவிக்கப்படும் என்று அரசு வட்டாரம் மூலம் தெரியவருகிறது.
மறுபரிசீலனை செய்ய வேண்டும்
நடப்பு கல்வியாண்டை வரும் 2021 ஜூலை வரை நீடிப்பது நல்ல முடிவு என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் கோடை விடுமுறையை முழுமையாக தவிர்க்ககூடாது. குறைந்தது 15 முதல் 20 நாட்கள் கோடை விடுமுறை விட வேண்டும். வெயில் உச்சத்தில் இருக்கும் சமயத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது சரியாக இருக்காது. விடுமுறை ரத்து செய்யும் யோசனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கர்நாடக மாநில ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை பள்ளி ஆசிரியர் சங்க தலைவர் வி.எம்.நாராயணசாமி தெரிவித்தார்.
07-12-2020 முதல் செயல்பட உள்ள இறுதியாண்டு மாணவர்களுக்கான கல்லூரி திறப்பு குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...
07-12-2020 முதல் செயல்பட உள்ள இறுதியாண்டு மாணவர்களுக்கான கல்லூரி திறப்பு குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை எண்: 707, நாள்: 05-12-2020 வெளியீடு...
G.O.(Ms.) No.707, Dated: 05-12-2020...
>>> கல்லூரி திறப்பு குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை எண்: 707, நாள்: 05-12-2020 ...
பள்ளி, கல்லூரி திறப்பு - கவனிக்க வேண்டியவை...
கடந்த மார்ச் மாதம் தொடங்கி கரோனா பெருந்தொற்றுப் பேரிடரால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது கல்லூரிகள் செயல்படும் என்னும் அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அநேகமாக பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்களே, கல்லூரிகளில் அனுமதிக்கப்படுவார்கள். அதேநேரம் பள்ளி, கல்லூரி வளாகத்துக்கு உள்ளேயும் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கல்வியாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கு பரிசோதனைக் கூடங்களில் பயிற்சிகள் நடைபெறலாம். இதுபோன்று பள்ளியில் பயன்படுத்தப்படும் கருவிகளை தகுந்தமுறையில் கிருமிநாசினி மூலம் நாள்தோறும் சுத்தப்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன் வகுப்புகள் நடைபெறும் இடங்களில் போதுமான அளவுக்கு காற்றோட்டமும் வெளிச்சமும் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு இடையே தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவதை உறுதிசெய்வது போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும். பள்ளிகளில் இருக்கும் விளையாட்டு மைதானங்களிலும் திறந்தவெளி வராண்டாக்களிலும் வகுப்புகளை நடத்துவது மாணவர்கள், ஆசிரியர்கள் இருவருக்குமே நன்மை அளிப்பதாக இருக்கும்.
என்.சி.இ.ஆர்.டி. தயாரித்து அளித்துள்ள மாற்றுக்கல்வி அட்டவணையை அடிப்படையாகக் கொண்டு, முழுக் கல்வி ஆண்டுக்கும் விரிவான அட்டவணையை பள்ளிகள் உருவாக்க வேண்டியது அவசியம். அவசரகால உதவிக் குழு, பொதுப் பாதுகாப்புக் குழு, சுகாதாரப் பரிசோதனைக் குழு போன்ற செயல்பாட்டுக் குழுக்கள் பள்ளிகளில் உருவாக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
இதுவரை ஆறு மாதங்களுக்கு மேலாக வீட்டிலிருந்தபடி இணையத்தின் மூலமாக கல்வி கற்ற மாணவர்கள், மீண்டும் பள்ளியில் நேரடியாக ஆசிரியரிடம் கல்வி கற்கும் முறைக்கு மாறுவதற்கு சிறிது கால அவகாசத்தை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அளிக்க வேண்டும்.
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் உடல்நலனுக்கு உதவும் ஊட்டச்சத்தான மதிய உணவை தகுந்த முறையில் அளிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
கரோனா பாதுகாப்பை கண்காணிக்க பிரத்யேக குழு அமைப்பு - 8 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு - 70 சதவீத மாணவர்கள் வருகை...
தமிழகத்தில் கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள், 8 மாதங்களுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டன. சென்னை ராணி மேரி கல்லூரியில் முகக் கவசம் அணிந்து வந்த முதுகலை இறுதியாண்டு மாணவிகளுக்கு சமூக இடைவெளியைப் பின்பற்றி, உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.
கரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த கல்லூரிகள் 8 மாதங்களுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டன. முதல்நாளில் 70 சதவீத மாணவர்கள் கல்லூரிக்கு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றால் பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் இணையவழியில் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.
ஆராய்ச்சி, முதுகலை படிப்புகள்
மேலும், நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகளும் இணையவழியில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முதல்கட்டமாக ஆராய்ச்சி மற்றும் முதுநிலை 2-ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் டிச.2-ம் தேதி முதல் கல்லூரிகளைத் திறக்க அரசு முடிவு செய்தது.
அதன்படி மாநிலம் முழுவதும் 8 மாதங்களுக்கு பின்னர் கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. கல்லூரிக்கு வந்த மாணவர்களுக்கு கரோனா பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அம்சங்கள் மற்றும் வளாகங்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை பேராசிரியர்கள் எடுத்துரைத்தனர்.
வகுப்பறையில் ஒரு மேஜைக்கு 2 மாணவர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்பட்டது. அதேபோல், முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்பாடு உள்ளிட்ட தற்காப்பு விதிகளும் முறையாகப் பின்பற்றப்பட்டன.
இப்பணிகளை கண்காணிக்க அனைத்து கல்லூரிகளிலும் பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதேநேரம் கரோனா அச்சம், புயல் எச்சரிக்கை உட்படசில காரணங்களால் பல கல்லூரிகளில் மாணவர்களின் வருகைகுறைவாக இருந்தது. ஒட்டுமொத்தமாக 60 முதல் 70 சதவீதம் மாணவர்கள் கல்லூரிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே இளநிலை படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு டிச.7-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 2ல் கல்லூரிகள் திறப்பு - உயர்கல்வி அமைச்சர் உறுதி...
இறுதியாண்டு மாணவர்களுக்கு வரும், 2ம் தேதி திட்டமிட்டபடி கல்லுாரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலால் மூடப்பட்ட கல்லுாரிகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மற்றும் பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., வழிகாட்டுதலின்படி, இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும், டிசம்பர், 2ல் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இதற்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டு ஏற்பாடுகளை, உயர் கல்வித்துறை செய்து வந்தது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும், வரும், 2ம் தேதி கல்லுாரிகளை திறந்து, பாடங்களை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
புயல் பாதிப்பு மற்றும் மழை காரணமாக, வரும், 2ம் தேதி கல்லுாரிகள் திறக்கப்படுமா; தள்ளி வைக்கப்படுமா என, மாணவர்கள் சந்தேகம் எழுப்பினர்.
இந்நிலையில், திட்டமிட்டபடி இறுதியாண்டு மாணவர்களுக்கு, கல்லுாரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படும் என, உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். புயல், கனமழை போன்றவை வந்தால், கல்லுாரிகளை வேறு தேதியில் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
🍁🍁🍁 கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் கர்நாடகாவில் கல்லூரிகள் இன்று முதல் திறப்பு - ஆன்லைனில் படிக்கவும் அனுமதி...
கர்நாடகாவில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புக்கான கல்லூரிகள் இன்றுமுதல் திறக்கப்படுகின்றன. நேரில் வர முடியாத மாணவர்கள் ஆன்லைன் வழியாககற்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக, மற்ற மாநிலங்களைப் போல கர்நாடகாவிலும் கடந்த மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. புதிய கல்வி ஆண்டுக்காகவும் கடந்த ஜூன் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் கர்நாடகாவில் கடந்த ஒரு மாதமாக வைரஸ் பரவலின் வேகம் குறைந்துள்ளது.
கரோனா புதிய நோயாளிகளின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 10 ஆயிரத்தில் இருந்து 2 ஆயிரமாக குறைந்துள்ளது. இதனால் கல்விநிலையங்களை திறப்பது குறித்துஅதிகாரிகளுடன் கர்நாடக அரசுஆலோசித்து வருகிறது. அதன்படி இந்த கல்வி ஆண்டுக்கான கலை, அறிவியல், பொறியியல்,சட்டம் உள்ளிட்ட பாடங்களுக்கான பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புக்கான கல்லூரிகளை 17-ம் தேதி (இன்று) திறக்க முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டார்.
இதையடுத்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கல்லூரி நிர்வாகங்கள் முடுக்கிவிட்டுள்ளன. கல்லூரி வளாகம், வகுப்பறை உட்பட அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தூர இடைவெளியுடன் இருக்கை கள் போடப்பட்டுள்ளன. கல்லூ ரிக்கு வரும் மாணவர்கள் மற்றும்ஆசிரியர்களுக்கு கரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாய மாக்கப்பட்டுள்ளது.
“கல்லூரிகளில் உரிய பாதுகாப்புடன் பாடம் கற்பிக்கும் அதே வேளையில், கரோனா தடுப்பு விதிமுறைகளை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும். பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்களை மட்டுமே வகுப்பறைக்குள் அனுமதிக்க வேண்டும். வகுப்புக்கு நேரடியாக வர விருப்பம் இல்லாத மாணவர்கள் ஆன்லைன் மூலமாக கற்க அனுமதிக்க வேண்டும்” என கல்லூரி நிர்வாகங்களுக்கு உயர்க்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
🍁🍁🍁 கல்லூரி பருவத் தேர்வுகளை மார்ச் மாதத்துக்குள் நடத்தி முடிக்க திட்டம்...
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு கல்லூரி பருவ தேர்வுகளை மார்ச் மாதத்துக்குள் நடத்தி முடிக்க உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி கல்லூரிகள் கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. அனைத்து மாணவர்களுக்கும் இணைய வழியில் தற்போது பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கல்லூரிகள் திறக்க நவம்பர் 16ஆம் தேதி முதல் அரசு அனுமதி அளித்துள்ளது. எனினும் கொரானா இரண்டாவது அலை மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக கல்லூரிகள் திறப்பை ஒத்திவைக்க பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக துறை அமைச்சர் மற்றும் நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி வியாழக்கிழமை ஆலோசனை நடத்த உள்ளார். அதன் பின்பு பள்ளி கல்லூரிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. இதையடுத்து கல்லூரி மாணவர்களுக்கான பருவத்தேர்வு ஜூலை விரைந்து மார்ச் மாதத்திற்குள் முடிக்க உயர்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது...
🍁🍁🍁 கல்லூரிகள் திறந்தால் மாணவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் - UGC அறிவிப்பு...
கல்லூரிகள் திறந்தால் விடுதிகளில் செய்ய வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து யுஜிசி அறிவுறுத்தல்கள் வெளியீடு.
அதன்படி, ஒரு அறைக்கு ஒரு மாணவர் மட்டுமே தங்கி இருக்க வேண்டும். மாணவர்கள் கொரோனா இல்லை என்று சான்றிதழ் வழங்கினாலும் 14 நாட்கள் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் நவம்பர் 16ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா ? என்பது குறித்து வரும் 12ஆம் தேதி அறிவிக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
🍁🍁🍁 ஆந்திராவில் நவ.2 முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் சித்தூரில் 150 ஆசிரியர்கள், 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று. அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் கொரோனா சோதனை செய்துகொள்ள சித்தூர் ஆட்சியர் பரத் குப்தா உத்தரவு...
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்தநிலையில் ஆந்திர மாநிலத்தில் , 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு மட்டும் திங்கள் முதல் பள்ளிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதனிடையே தொடங்கிய முதல் நாள் அன்றே, பள்ளிகளில் சுகாதாரத்துறை நடத்திய மருத்துவ பரிசோதனையில், 57 ஆசிரியர்கள் மற்றும் ஆறு மாணவர்களுக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் சித்தூர் மற்றும் நெல்லூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் பள்ளிகளை திறந்த அரசின் முடிவுக்கு ஆந்திர மாநிலத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
🍁🍁🍁 பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க அரசு பரிசீலனை என தகவல்... (தந்தி டிவி செய்திகள்)...
💥💥வரும் 16ஆம் தேதி 9,10,11,12ஆம் வகுப்புகள் தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது
💥💥தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தற்போது சரியான தருணம் அல்ல என எழுந்துள்ள கருத்துக்கள் எதிரொலி
💥💥பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்பு என தகவல்
💥💥கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் நேற்று திடீரென ஆலோசனை நடத்தியதாக தகவல்
💥💥கொரோனா பரவல், பருவமழையை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க அரசு பரிசீலனை என தகவல்
>>> செய்திக் காணொளியை காண இங்கே சொடுக்கவும்..
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Husband should be given leave to look after wife during maternity - High Court
மகப்பேறு காலத்தில் மனைவியை கவனிக்க கணவருக்கு விடுமுறை வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் Husband should be given leave to look after wife durin...