கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்கள் பொதுத்தேர்வின் போது அதே பள்ளிகளில் பணியாற்ற அனுமதி வேண்டுவது குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் கடிதம் (Tamil Nadu Legislative Assembly Speaker's letter regarding seeking permission for ministerial employees working in government-aided schools to work in the same schools during the public examination)...
அரசு உதவி பெறும் பள்ளிகளில்1முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் / மாணவியருக்கு வழங்கப்படும் 4 இணை விலையில்லா சீருடைகளை முறையாக அணிந்து வர வேண்டும் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Students in Government Aided Schools from 1st to 8th class should properly wear 4 set uniforms provided free of cost - Proceedings of the School Education Commissioner) ந.க.எண்: 53550/இ/இ1/2021, நாள்: 08-12-2021...
மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம்: உயர் நீதிமன்றம் உத்தரவு...
💢நெல்லை ஹைகிரவுண்ட் மு.ந.அப்துர் ரஹ்மான் மேல் நிலைப்பள்ளி தாளாளர் முகமது நாசர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
💢எங்கள் பள்ளியில் 706 மாணவர்கள் பயில்கின்றனர். 18 ஆசிரியர்கள், 2 ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் உள்ளனர்.
💢2019-ல் பள்ளிக்கல்வித்துறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7 முதல் 10 வகுப்புகளில் தமிழ் வழி பிரிவுக்கு இணையாக ஆங்கில வழி பிரிவு தொடங்க அனுமதி வழங்கியது. அதன்படி எங்கள் பள்ளியில் ஆங்கில வழி பிரிவு தொடங்கப்பட்டது.
💢ஆங்கில வழிப்பிரிவுக்கு ஆசிரியர்கள் நியமிக்கவும், அறிவியல் ஆசிரியர் உபரியாக இருப்பதாக அறிவித்ததை ரத்து செய்யவும், பள்ளியில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக 3 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கவும் அனுமதி கோரி முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்தோம். அவர் மனுவை நிராகரித்து உத்தரவிட்டார்.
💢அவரது உத்தரவை ரத்து செய்து ஆங்கில வழி பிரிவுக்கு ஆசிரியர் நியமனத்துக்கும், கூடுதலாக 3 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கவும் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
💢இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பினேகாஸ் வாதிட்டார். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
💢ஒவ்வொரு பள்ளியையும் தனி அலகாக கருத வேண்டும். 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் பணி நியமனம் இருக்க வேண்டும். ஆசிரியர் நியமனம் தொடர்பாக மனு அளிக்கும் போது, அந்த மாவட்ட பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் உபரி ஆசிரியர் எண்ணிக்கையை சமன் செய்யத பிறகே புதிய ஆசிரியர் நியமனத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
💢இதன் அடிப்படையில் மனுதாரர் அனுப்பிய மனுவை முதன்மைக் கல்வி அலுவலர் நிராகரித்தது செல்லாது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்வது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும்.
💢இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
அரசு உதவிபெறும் பள்ளிகள் அங்கீகாரத்தை புதுப்பிக்காவிடில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் -பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் எச்சரிக்கை...
அரசு உதவிபெறும் பள்ளிகள் அங்கீகாரத்தை புதுப்பிக்காவிடில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் -பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் எச்சரிக்கை...
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 2.5% இட ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசிக்க உள்ளதாக தகவல்...
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி பயில 2.5% உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருடன் 10-06-2021 மாலை 4.30 மணிக்கு ஆலோசிக்க உள்ளதாக தகவல்...
🍁🍁🍁 அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் TET நிபந்தனை ஆசிரியர்கள் கோரிக்கைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்...
தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் அளிக்கும் விழாவில் பங்கேற்க நேற்று ( 07-11-2020 ) மதுரைக்கு வருகைபுரிந்த மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு K.A.செங்கோட்டையன் அவர்களிடம் அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் அற்ற பள்ளிகளில் பணிபுரியும் TET நிபந்தனை ஆசிரியர்கள் தங்களது TET விலக்கு தொடர்பான கோரிக்கைகளை, நினைவூட்டல் மனுவாக முன்வைத்தனர்.
அதன்படி, ஏற்கனவே TET நிபந்தனைகளுடன் கடந்த எட்டு வருடங்களுக்கும் மேலாக பணியில் உள்ள ஆசிரியர்களைக் காத்து, அவர்களின் குடும்ப வாழ்வாதாரம் பாதிக்காதபடி தாய்மை உள்ளத்துடன் தற்போதைய அம்மா அரசு என்றும் துணை நிற்கும் என ஏற்கனவே தமிழக கல்வி அமைச்சர் அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு உறுதியளித்தையும் அவர்கள் அமைச்சரிடம் நினைவூட்டினர்.
23/08/2010 முதல் 16/11/2012 வரையிலான காலகட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் TET நிபந்தனைகள் ஏதும் இல்லாமல் ஆசிரியர்களாகப் பணி நியமனம் பெற்றவர்களுக்கு 16/11/2012 க்குப் பிறகே முன்தேதியிட்டு TET
கட்டாயம் என்ற நிபந்தனைகளுக்குக் கீழே இந்த வகை ஆசிரியர்கள் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை உயர்நீதிமன்றமும் ஆசிரியர்கள் பாதிக்கப்படாதவாறு முடிவுகளை எடுக்க ஏற்கனவே பலமுறை தமிழக அரசினை அறிவுறுத்தியும் உள்ளது.
ஆகவே 16/11/2012 க்கு முன்பு பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு TET லிருந்து முழுவதுமாக விலக்கும், அதற்கு மாற்றாக புத்தாக்கப் பயிற்சியும் அளிக்க பலமுறை வேண்டுகோள்கள் விடுத்து வந்தோம். எங்கள் நியாயமான கோரிக்கையை கருணை உள்ளத்தோடு இந்த தமிழக அரசு நிறைவேற்றித்தரும் என்று எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளதாக தமிழ்நாடு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த கோரிக்கை அடங்கிய மனுக்கள், அவ்விழாவில் கலந்து கொண்ட மாண்புமிகு தமிழக வருவாய் / பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு ஆர். பி. உதயகுமார் அவர்கள் மற்றும் மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ். எஸ். சரவணன் ஆகியோரின் மேலான கவனத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டன.
🍁🍁🍁 பழைய அரசாணையால் சிக்கல் - பணி நியமனம் பெற இயலாமல் விழிபிதுங்கும் பட்டதாரிகள்...
பழைய அரசாணையை காரணம் காட்டி, அரசு உதவி பெறும் பள்ளிகளில், புதிய நியமனத்திற்கு ஒப்புதல் வழங்காததால், பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுக்க, மாணவர் சேர்க்கை சரிந்ததால், உபரியாக உள்ள ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்காக, உதவி பெறும் பள்ளிகளில், புதிய நியமனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதற்காக, முதன்மைச் செயலராக இருந்த பிரதீப் யாதவ், 2019 செப்., மாதம், அரசாணை வெளியிட்டார். இந்த உத்தரவுக்கு முன்பே, பல உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்களை நியமிக்க, கல்வித் துறையில் ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால், அரசாணையை காரணம் காட்டி, நியமன ஒப்புதல் பெற்றவர்களுக்கு, பணி ஆணை வழங்காமல் இழுபறி நீடிக்கிறது.
தற்போது, உதவி பெறும் பள்ளிகளில், சேர்க்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. புதிய ஆசிரியர்களை நியமிக்காவிடில், கற்பித்தல் பணிகள் தேக்கம்அடையும் என்ற புகார் எழுந்துள்ளது.தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தணிக்கையாளர் அருளானந்தம் கூறியதாவது: அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியிடங்களை நிரப்ப, நிர்வாகிகளுக்கு உரிமை வழங்கப் பட்டுள்ளது. அதிக மாணவர்கள் சேர்ந்து உள்ள பள்ளிகளில், ஊழியர்களை நியமிக்க ஒப்புதல் வழங்க, அரசாணையை திருத்தம் செய்ய வேண்டும்.
ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது குறைக்கப்பட்டுள்ள நிலையில், அரசாணையை திருத்துவதில் தாமதம் நீடித்தால், நிரந்தர பணிக்காக காத்திருக்கும் பட்டதாரிகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகி விடும். இவ்வாறு, அவர் கூறினார்.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Husband should be given leave to look after wife during maternity - High Court
மகப்பேறு காலத்தில் மனைவியை கவனிக்க கணவருக்கு விடுமுறை வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் Husband should be given leave to look after wife durin...