கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (01-12-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

டிசம்பர் 01, 2022



மனதிற்கு மகிழ்ச்சி தரும் வகையிலான செய்திகள் கிடைக்கும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் லாபமும், அனுபவமும் உண்டாகும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். சமூகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபமும், வாய்ப்பும் சாதகமாக அமையும். பரிசு கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்




அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : மேன்மை ஏற்படும். 


கிருத்திகை : மந்தத்தன்மை குறையும். 

---------------------------------------



ரிஷபம்

டிசம்பர் 01, 2022



விடாப்பிடியாக செயல்பட்டு இழுபறியான காரியங்களை செய்து முடிப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். பெற்றோர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தொழில் நிமிர்த்தமான புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். மாற்றமான சிந்தனைகளின் மூலம் புதுவிதமான அனுபவங்களும், சூழ்நிலைகளும் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




கிருத்திகை : உதவி கிடைக்கும்.


ரோகிணி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


மிருகசீரிஷம் : அனுபவம் கிடைக்கும்.

---------------------------------------



மிதுனம்

டிசம்பர் 01, 2022



உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உறவினர்களின் மூலம் சாதகமான சூழ்நிலையும், உற்சாகமும் ஏற்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். மேன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் குறையும். 


திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும்.


புனர்பூசம் : திருப்தியான நாள்.

---------------------------------------



கடகம்

டிசம்பர் 01, 2022



நிர்வாகம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வியாபாரம் சம்பந்தமான விஷயங்களில் சற்று பொறுமையுடன் முடிவெடுப்பது நல்லது. நண்பர்களுடன் தேவையற்ற கருத்துக்கள் பகிர்வதை தவிர்க்கவும். வழக்கு சார்ந்த பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் அஞ்ஞான சிந்தனைகள் மேம்படும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு




புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.


பூசம் : கருத்துக்களை தவிர்க்கவும்.


ஆயில்யம் : அலைச்சல்கள் உண்டாகும். 

---------------------------------------



சிம்மம்

டிசம்பர் 01, 2022



கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. நண்பர்களின் வழியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான விரயங்கள் உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெறுவீர்கள். வர்த்தகம் சார்ந்த பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். இழந்த பொருட்களை மீட்பதற்கான உதவி கிடைக்கும். தனவரவு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




மகம் : நெருக்கம் அதிகரிக்கும். 


பூரம் : விரயங்கள் உண்டாகும். 


உத்திரம் : உதவி கிடைக்கும்.

---------------------------------------



கன்னி

டிசம்பர் 01, 2022



வியாபாரம் சார்ந்த பணிகளில் லாபம் அதிகரிக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபகரமான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மேன்மை உண்டாகும். வாகன பழுதுகளை சீர் செய்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு தெளிவினை ஏற்படுத்தும். உழைப்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




உத்திரம் : அறிமுகம் கிடைக்கும். 


அஸ்தம் : லாபகரமான நாள்.


சித்திரை : தெளிவு ஏற்படும்.

---------------------------------------



துலாம்

டிசம்பர் 01, 2022



இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு கற்பனை திறன் மேம்படும். எண்ணிய சில காரியங்களை நினைத்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். கடன் சார்ந்த நெருக்கடிகள் படிப்படியாக குறையும். உத்தியோக பணிகளில் உள்ள சில சூட்சுமங்களை அறிந்து செயல்படுவீர்கள். புதிய முயற்சிகளின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




சித்திரை : காரியசித்தி உண்டாகும். 


சுவாதி : ஆதரவு கிடைக்கும்.


விசாகம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.

---------------------------------------



விருச்சிகம்

டிசம்பர் 01, 2022



திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். விவசாய பணிகளில் இருப்பவர்களுக்கு பாசனம் தொடர்பான வசதிகள் மேம்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். மூலிகை சார்ந்த வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் வாடிக்கையாளர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். உயர்வான நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




விசாகம் : திறமைகள் வெளிப்படும்.


அனுஷம் : மகிழ்ச்சியான நாள். 


கேட்டை : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------



தனுசு

டிசம்பர் 01, 2022



உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மற்றும் ஆலோசனைகள் கிடைக்கப் பெறுவீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய சொத்துக்களை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். உறவினர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




மூலம் : ஆர்வம் அதிகரிக்கும்.


பூராடம் : தைரியம் மேம்படும்.


உத்திராடம் : வெற்றி கிடைக்கும். 

---------------------------------------



மகரம்

டிசம்பர் 01, 2022



எதிர்பாராத தனவரவு கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். பத்திரம் சார்ந்த பணிகளில் கவனத்துடன் செயல்படவும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலமான வாய்ப்பும், புதிய நபர்களின் அறிமுகமும் கிடைக்கும். பெருமை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




உத்திராடம் : ஒற்றுமை அதிகரிக்கும். 


திருவோணம் : மாற்றமான நாள்.


அவிட்டம் : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------



கும்பம்

டிசம்பர் 01, 2022



சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். புதிய முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். புதுவிதமான சிந்தனைகளின் மூலம் புத்துணர்ச்சியான தருணங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் சாதகமான முடிவு கிடைக்கப் பெறுவீர்கள். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




அவிட்டம் : செல்வாக்கு மேம்படும். 


சதயம் : புத்துணர்ச்சி உண்டாகும்.


பூரட்டாதி : சாதகமான நாள்.

---------------------------------------



மீனம்

டிசம்பர் 01, 2022



வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆசை அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். மனதில் உலகியல் வாழ்க்கையை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். புதுமையான நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




பூரட்டாதி : நெருக்கடிகள் குறையும். 


உத்திரட்டாதி : மாற்றம் ஏற்படும்.


ரேவதி : தெளிவு பிறக்கும்.

---------------------------------------


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.12.2022 - School Morning Prayer Activities...


 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.12.2022 - School Morning Prayer Activities...


  திருக்குறள் :


பால்: அறத்துப்பால் 


இயல்: இல்லறம்; 


அதிகாரம்: அன்புடைமை. 


அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.


விளக்கம்:

அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.


பழமொழி :

It is never too late to learn.


கற்பதற்கு காலம், நேரம் கிடையாது


இரண்டொழுக்க பண்புகள் :


1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு எனும் விதைகளை விதைத்து செல்வேன்.


 2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக் கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.


பொன்மொழி :


கல்வியின் நோக்கம் மாணவர்களின் மனதை உண்மைகளால் நிரப்புவது அல்ல. அவர்களுக்கு சிந்திக்கக் கற்றுக் கொடுப்பதே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். --ராபர்ட் மேனார்ட் ஹட்சின்ஸ்



பொது அறிவு :


1. காட்டு பூனையின் அறிவியல் பெயர் என்ன? 


பெலிஸ் டைகிரினா. 


2. இண்டிகா என்ற நூலை எழுதியவர் யார்? 


மெகஸ்தனிஸ்.


English words & meanings :


ceiling -top of a room, noun. ஒரு அறையின் கூரை. sealing - setting, closing an important document or things. மூடி சீல் வைத்தல். வினைச் சொல். both homonyms


ஆரோக்ய வாழ்வு :


கஸ்டர்ட் ஆப்பிள் என்று அழைக்கப்படும் சீத்தாப்பழம் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த மூலமாகும். இது பல்வேறு உயிரியல் செயல்முறைகளுக்கு முக்கியமானது. வைட்டமின்கள் ஏ மற்றும் சி உடன், இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் தாமிரம் ஆகியவற்றின் கணிசமான அளவு இதில் உள்ளது. குளிர்காலத்தில் செரிமானம் குறையும் போது ஏற்படும் மலச்சிக்கலை இந்த உணவில் உள்ள நார்ச்சத்து மூலம் குணப்படுத்தும்.


NMMS Q


3,9,27,4,16,64,5,25,______


விடை: 125


டிசம்பர் 01


உலக எய்ட்ஸ் நாள்


உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 இல் நடைபெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன. 1981-ஆம் ஆண்டிலிருந்து 2007-ஆம் ஆண்டு வரை எய்ட்ஸ் நோயால் இறந்தவரின் எண்ணிக்கை 250 லகரங்களுக்கு மேல்.[1] மற்றும் 2007-ஆம் ஆண்டு வரை 332 லகரம் மக்கள் இந்நோயுடன் வாழ்ந்து வருகின்றனர்.இதனால் இந்நோய் வரலாற்றிலேயே மிக கொடூரமான தொற்றுநோயாக கருதபடுகிறது. சமீபத்திய சிகிச்சை முறைகளின் முன்னேற்றம் மற்றும் கண்காணிப்பின் கீழ் இருந்தும், எய்ட்ஸ் நோயால் உலகெங்கிலும் 2007-ஆம் ஆண்டில் 20 லகரம் உயிரிழப்பு ஏற்பட்டது.


நீதிக்கதை


சிங்கமும் கழுதைப்புலியின் பங்கும்


அன்று ஒரு நாள் சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. அடுத்தநாள் சிங்கம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கை வாங்கிவரச் சொன்னது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம். 


கழுதைப் புலியோ, நீ ஏன் குடலை மட்டும் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்கு கேட்கவில்லையா என்று கேட்டது. பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வர முடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும் என்றது குட்டி கழுதைப்புலி. 


அதைக்கேட்டு கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது. சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஒய்வெடுத்துக் கொண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு ஏன் இங்கே வந்தாய்? என்று கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது. 


பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி பயந்து தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு ராஜ சிங்கமே! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம். 


குடலை சிங்கத்திடம் கொடுத்துவிட்டுதிரும்பிய கழுதைப்புலியிடம் பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்துவிட்டு வருகிறீர்களே? என்று கேட்டது குட்டி கழுதைப்புலி. 


மகனே! சிங்கம் மிகக் கொடூரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கிவிட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டிவிட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக என்றது தாய் கழுதைப்புலி. 


நீதி :

நம்மைவிட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.


இன்றைய செய்திகள்


01.12.22


* தமிழக கல்வித்துறை வளாகம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என அழைக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.


* தமிழகத்தில்  நவம்பர்-29வரை 26.04 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.


* கங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்த மாளிகைமேட்டில் கிடைத்த பொக்கிஷங்களைப் பாதுகாக்கும் வகையில், அங்கு அரசு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


* தமிழகம் முழுவதும் 38 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள 1,635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.


*எதிரிகளின் ட்ரோன்களை அழிக்க பருந்துகளை பயன்படுத்தும் இந்திய ராணுவம்.


* உலகிலேயே முதல்முறையாக மூக்கு வழி கரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி: பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது.


* வாரத்துக்கு 4 நாட்கள் வேலை திட்டம்: இங்கிலாந்து நிறுவனங்கள் அறிமுகம்.


* 48,500 ஆண்டுகள் பழமையான ஜோம்பி வைரஸ்: ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.


* கடைசி ஒருநாள் போட்டியும் மழையால் ரத்து. 1-0 என தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து.


* இளவேனில் வாலறிவன், பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜுனா விருது - ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.


* உலகக்கோப்பை கால்பந்து : ஈரானை வீழ்த்தி அமெரிக்க அணி வெற்றி.


Today's Headlines


* Tamil Nadu Education Department Campus to be called Professor Anbazhagan Education Campus: Chief Minister Stalin's announcement.


 * Minister Senthil Balaji said that 26.04 lakh electricity connections have been linked to Aadhaar in Tamil Nadu till November 29.


*  Tamil Nadu Chief Minister M.K.Stalin has said that a government museum will be set up there to protect the treasures found in the mansion next to Gangaikonda Cholapuram.


 * 1,635 corruption cases pending for 38 years across Tamil Nadu should be completed expeditiously: Madras High Court orders.


 * Indian Army uses hawks to destroy enemy drones.


 * World's First Nasal Corona Vaccine Approved developed by Bharat Biotech.


 * 4 Days a Week Scheme: Introduction to UK Companies


 * 48,500-year-old zombie virus: discovery by European scientists


 * The last ODI was also canceled due to rain.  New Zealand won the series 1-0.


 * Arjuna Award to Pragnananda ,ilavenil and valarivan presented by President Draupathi Murmu.


* Football World Cup: USA team wins by defeating Iran.


ஒரு மாவட்டத்தில் 3 பள்ளிகள் வீதம் 38 மாவட்டங்களில் சிறந்த தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கான பெயர் பட்டியல் 2020-2021 (Name List of Best Elementary / Middle Schools 2020-2021 in 38 Districts with 3 Schools per District)...


>>> ஒரு மாவட்டத்தில் 3 பள்ளிகள் வீதம் 38 மாவட்டங்களில் சிறந்த தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கான பெயர் பட்டியல் 2020-2021 (Name List of Best Elementary / Middle Schools 2020-2021 in 38 Districts with 3 Schools per District)...


Dear DEOs the above ☝️list is the schools selected for best school awards under Elementary Education. The function will be on coming Saturday at Anna centenary library auditorium. I.e. on 3rd December. For each school one HM, one teacher and concerned BEO can attend the function. Please instruct concerned school Hms and BEO.


Please be present at ACL by 9.30 a.m. sharp on coming Saturday.

Our respected Director instruction.


>>> அரசு / அரசு உதவிபெறும் / ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2020-21ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான கேடயங்கள் வழங்குதல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 028875/ 22/ 2021, நாள்: 22-02-2022 & சிறந்த பள்ளியைத் தேர்ந்தெடுப்பதற்கான மதிப்பீட்டுப் பட்டியல்(Awarding of Best School Shields to Government / Government Aided / Panchayat Union / Municipality / Corporation Primary / Middle Schools for the year 2020-21 - Proceedings of the Director of Elementary Education & Evaluation List for Selecting the Best School)... 



இன்றைய (30-11-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


இன்றைய (30-11-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

நவம்பர் 30, 2022



உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார அபிவிருத்தி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பணிகளில் இருந்து சுபச்செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். உதவி கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்




அஸ்வினி : ஒத்துழைப்பு கிடைக்கும்.


பரணி : சுபமான நாள்.


கிருத்திகை : மகிழ்ச்சி உண்டாகும்.

---------------------------------------



ரிஷபம்

நவம்பர் 30, 2022



வியாபார பணிகளில் வாடிக்கையாளர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை கூறும் பொழுது சிந்தித்து செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




கிருத்திகை : பொறுமையுடன் செயல்படவும்.


ரோகிணி : மந்தத்தன்மை குறையும். 


மிருகசீரிஷம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

---------------------------------------



மிதுனம்

நவம்பர் 30, 2022



திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். எதிர்பாராத தனவரவு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மனதில் சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




மிருகசீரிஷம் : வெற்றி கிடைக்கும். 


திருவாதிரை : ஈடுபாடு உண்டாகும். 


புனர்பூசம் : அனுகூலமான நாள்.

---------------------------------------



கடகம்

நவம்பர் 30, 2022



உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைகளை அறிந்து கருத்துக்களை கூறவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமற்ற சூழல் அமையும். சுபகாரியம் தொடர்பான விரயங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்படவும். பயனற்ற விவாதங்களையும், எண்ணங்களையும் தவிர்ப்பதன் மூலம் மனதில் அமைதி உண்டாகும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் இருந்தாலும் புதிய அனுபவமும் கிடைக்கும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




புனர்பூசம் : சூழ்நிலையறிந்து செயல்படவும்.


பூசம் : விரயங்கள் உண்டாகும். 


ஆயில்யம் : விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------



சிம்மம்

நவம்பர் 30, 2022



உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். உயர் பதவியில் இருப்பவர்களின் சந்திப்பால் மாற்றமான சூழல் அமையும். தைரியமான செயல்பாடுகளின் மூலம் பொறுப்புகளும், பாராட்டுகளும் கிடைக்கப் பெறுவீர்கள். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




மகம் : மாற்றம் ஏற்படும்.


பூரம் : திருப்திகரமான நாள்.


உத்திரம் : பாராட்டுகள் கிடைக்கும்.

---------------------------------------



கன்னி

நவம்பர் 30, 2022



எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மேன்மை உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் ஆன்மிகம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் உள்ள சில நுணுக்கமான விஷயங்களை அறிவீர்கள். கூட்டு வியாபார பணிகளில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பாராட்டுகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்




உத்திரம் : மேன்மை உண்டாகும்.


அஸ்தம் : இழுபறிகள் குறையும்.


சித்திரை : நுணுக்கங்களை அறிவீர்கள்.

---------------------------------------



துலாம்

நவம்பர் 30, 2022



மகிழ்ச்சியான பழைய நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு கற்பனைத்திறன் மேம்படும். வாழ்க்கை துணையின் வழியில் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகளின் மூலம் பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். சிந்தனைகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




சித்திரை : கற்பனைத்திறன் மேம்படும். 


சுவாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


விசாகம் : நெருக்கடிகள் குறையும். 

---------------------------------------



விருச்சிகம்

நவம்பர் 30, 2022



கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வாகன பயணங்களில் நிதானத்துடன் செயல்படவும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் அலைச்சலும், புரிதலும் உண்டாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




விசாகம் : நிதானத்துடன் செயல்படவும்.


அனுஷம் : புரிதல் உண்டாகும்.


கேட்டை : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------



தனுசு

நவம்பர் 30, 2022



சகோதரர்களின் வழியில் நன்மை உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். சூழ்நிலைகளை அறிந்து அதற்கு தகுந்தாற் போல் செயல்படுவீர்கள். வழக்கு சார்ந்த பணிகளில் இருந்துவந்த காலதாமதம் குறையும். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




மூலம் : நன்மை உண்டாகும். 


பூராடம் : ஆர்வம் அதிகரிக்கும். 


உத்திராடம் : காலதாமதம் குறையும்.

---------------------------------------



மகரம்

நவம்பர் 30, 2022



கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவும், புரிதலும் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபமும், புதிய வாய்ப்பும் சாதகமாக அமையும். துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகள் மனதிற்கு தெளிவினை ஏற்படுத்தும். அரசு சார்ந்த உதவி சிலருக்கு சாதகமான பலன்களை உண்டாக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சுபகாரியம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். விருத்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




உத்திராடம் : புரிதல் உண்டாகும். 


திருவோணம் : வாய்ப்புகள் அமையும்.


அவிட்டம் : சாதகமான நாள்.

---------------------------------------



கும்பம்

நவம்பர் 30, 2022



வியாபார பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு காலதாமதமாக கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவும் பொழுது சிந்தித்து செயல்படவும். உடன்பிறந்தவர்களின் வழியில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பயணங்கள் தொடர்பான விஷயங்களில் இருந்து புதிய அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். சில பணிகளை செய்து முடிப்பதில் வேகத்தை விட விவேகம் அவசியமாகும். தேர்ச்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




அவிட்டம் : இழுபறியான நாள்.


சதயம் : கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.


பூரட்டாதி : விவேகம் வேண்டும். 

---------------------------------------



மீனம்

நவம்பர் 30, 2022



மறைமுகமாக இருந்துவந்த விமர்சனங்கள் குறையும். நிலுவையில் இருந்துவந்த தனவரவு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சலும், அனுபவமும் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




பூரட்டாதி : விமர்சனங்கள் குறையும். 


உத்திரட்டாதி : அனுபவம் உண்டாகும்.


ரேவதி : ஒற்றுமை அதிகரிக்கும்.

-------------


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.11.2022 - School Morning Prayer Activities...


>>> பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.11.2022 - School Morning Prayer Activities...


 திருக்குறள் :


பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: அன்புடைமை


குறள் : 71

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்.


பொருள்:

உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்.


பழமொழி :

Learning is youth is an engraving on a rock.


இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து.


இரண்டொழுக்க பண்புகள் :


1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு எனும் விதைகளை விதைத்து செல்வேன்.


 2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக் கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.


பொன்மொழி :


கல்வியே சிறந்த நண்பன். கற்றவர் எல்லா இடங்களிலும் மதிக்கப்படுகிறார். கல்வி அழகையும் இளமையையும் வெல்லும். --சாணக்யா



பொது அறிவு :


1. அணிலின் அறிவியல் பெயர் என்ன ? 


 ரோடன்ஷியா ஸ்குயிரஸ். 


 2. பாம்புகளிடம் சுரக்கப்படும் விஷத்திற்கு என்ன பெயர் ? 


 வெனம்.


English words & meanings :


capital - chief City. noun. தலை நகரம். பெயர்ச் சொல். Capitol - a place where legislatives meet. noun. அரசு ஆள்பவர்கள் ஆலோசனை மண்டபம் 


ஆரோக்ய வாழ்வு :


குளிர்காலத்தில் பசி எடுக்கும் போது, கொய்யா ஒரு சிறந்த சிற்றுண்டியாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான பழமாக கொய்யா உள்ளது. நாளின் நடுப்பகுதியில் உங்கள் சர்க்கரை பசியை தணிக்கிறது, மேலும் பாதாம் அல்லது அக்ரூட் பருப்புகள் போன்ற சில பருப்புகளுடன் சேர்த்து சாப்பிட்டால், அது உண்மையிலேயே ஆரோக்கியத்தை அதிகரிக்கும். மேலும் இதில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் குளிர்கால காய்ச்சலை தடுக்க உதவுகிறது.


NMMS Q


If "all the child are men" மற்றும் "All the men are women" எனில்: a) all the men are child. b) all the women are child. c) all the women are men. d) all the child are women


விடை: all the child are women


நவம்பர் 30


சர் ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாள்... 

சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Jagadish Chandra Bose) (1858-1937) தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர்.[1] போசு வானொலி அறிவியலின் முன்னோடிகளில் ஒருவர் என ஐஇஇஇ அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது.


நீதிக்கதை


கழுகின் நன்றியுணர்ச்சியும், நரியும்


ஒரு நாள் வேடன் ஒருவன் வேட்டையாட சென்றிருந்தான். அவன் விரித்திருந்த வலையில் கழுகு ஒன்று சிக்கிக்கொண்டது. அந்த கழுகின் சிறகுகளை மட்டும் வெட்டி சங்கிலியால் கட்டிப் போட்டான். அவ்வழியே சென்ற ஒருவர், கழுகின் மீது இரக்கப்பட்டு வேடனிடம் காசு கொடுத்து அந்தக் கழுகை வாங்கி, தன் வீட்டில் அன்புடன் வளர்த்தார். 


இறக்கைகள் நன்கு வளர்ந்தது, பின் அதைப் பறக்க செய்தார். கழுகு பறந்து செல்லும் போது ஒரு முயலைப் பார்த்தது. அதை தூக்கி வந்து தன்னை வளர்த்தவரிடம் காணிக்கையாகக் கொடுத்தது. 


இதைப் பார்த்த நரி, உன்னைப் பிடித்த வேடன் மறுபடியும் பிடிக்க வரலாம், நீ இந்த முயலை அவனிடம் கொடுத்திருந்தால், மறுபடியும் அவன் உன்னைப் பிடிக்காமல் இருப்பான். எதற்காக அவரிடம் கொடுத்தாய் என கழுகிடம் கேட்டது. 


இல்லை நீ சொல்வது தவறு. வேடனிடம் நான் முயலைக் கொடுத்தாலும், பிற்காலத்தில் அவன் என்னை பிடிக்காமல் இருக்கபோவதில்லை, ஆனால் நான் ஆபத்தில் இருந்தபோது என்னைப் காப்பாற்றியவருக்கு என் நன்றியையும், விசுவாசத்தையும் தெரிவிக்கவே முயலைக் காணிக்கையாகச் கொடுத்தேன் எனப் பதில் கூறியது கழுகு. 


நீதி :

உதவி செய்தவரிடம் நன்றியோடு இருப்பது தான் பண்புள்ள செயல்.

இன்றைய செய்திகள்


30.11.22


சென்னை - மெரினா கடற்கரையில் விரைவில் இலவச வைஃபை சேவை.


விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


தமிழகம் முழுவதும் 4 நாட்கள் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமில் 17 லட்சம் பேர் மனு கொடுத்துள்ளனர். இதில் 7.57 லட்சம் பேர் பெயரைச் சேர்ப்பதற்காக விண்ணப்பித்துள்ளனர்.



புதிதாக கட்டப்பட்டு வரும் கல்லூரிகள் அடுத்த கல்வியாண்டில் திறக்கப்படும்: அமைச்சர் பொன்முடி தகவல்.


மின்சாரத்தில் இயங்கும் முதல்பந்தய காரை சென்னை ஐஐடிமாணவர்கள் அறிமுகம் செய்துள்ளனர். 


தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில்,பல ஆண்டுகளாக விற்பனையாகாமல் உள்ள 8,000 வீடுகளை, குறைந்த விலையில் விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.


கொலீஜியம் நடைமுறை இந்த மண்ணின் சட்டம் என்றும் இதை மத்திய அரசு பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


சீனாவின் பல்வேறு நகரங்களில் பொது முடக்கம் அமலில் இருப்பதை எதிர்த்து மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல்வேறு நகரங்களுக்கும் போராட்டம் பரவுவதால், சீன அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், சீனாவில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.


ஹாக்கி லீக் போட்டியில் எச்.வி.எப். அணி வெற்றி பெற்றது.


உலகக்கோப்பை கால்பந்து: உருகுவே அணியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது போர்ச்சுக்கல் அணி.


ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்.


Today's Headlines


CHENNAI - Free Wi-Fi soon at Marina Beach.


 The Government of Tamil Nadu has announced that you can apply online to benefit under the Special Scholarship Scheme for Sportspersons.


 17 lakh people have submitted petitions in the 4-day special voter camp across Tamil Nadu. Out of this 7.57 lakh people have applied for inclusion of names.



 Newly constructed colleges to open next academic year: Minister Ponmudi informs.


 IIT Chennai students have introduced the first race car that runs on electricity.


 Housing Minister Muthusamy has said that the Tamil Nadu Housing Board has decided to sell 8,000 houses that have not been sold for many years at a low price.


 The Supreme Court has categorically stated that collegium practice is the law of the land and the central government should follow it.


 People are holding protests against the general shutdown in various cities of China. As the protest spreads to various cities, the Chinese government is in crisis. Due to this, Corona restrictions are being relaxed in China.


 HVF won the Hockey League  


 Football World Cup: Portugal beat Uruguay to advance to the 2nd round.


 Australia-West Indies first test match starts today.

 

ஒரே பதவியில் தேர்வுநிலை கோரும் விண்ணப்பப்படிவம், முகப்புக் கடிதம், பணிக்காலம் சரிபார்ப்பு, பணிக்காலம் கணக்கீடு, பதிவுத்தாள், இணைக்கப்பட்டுள்ள விவரங்கள் (Selection Grade Application Form, Covering Letter, Service Verification, Service Calculation, Registration Form, Attachments Details)...


>>> ஒரே பதவியில் தேர்வுநிலை கோரும் விண்ணப்பப்படிவம், முகப்புக் கடிதம், பணிக்காலம் சரிபார்ப்பு, பணிக்காலம் கணக்கீடு, பதிவுத்தாள், இணைக்கப்பட்டுள்ள விவரங்கள் (Selection Grade Application Form, Covering Letter, Service Verification, Service Calculation, Registration Form, Attachments Details)...


🌟 அன்பார்ந்த ஆசிரிய சகோதர சகோதரிகளே,


வணக்கம்.. 🙏🙏🙏


வருகின்ற டிசம்பர் மாதம் TET 2012 நியமனம் பெற்ற  இடைநிலை ஆசிரியர்களுக்கு 10 ஆண்டுகள் முடிந்து தேர்வுநிலை வருகிறது. தேர்வு நிலை வருவதால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தங்களது பணிப் பதிவேடுகளைப் பெற முறையான கடிதம் அலுவலகத்திற்கு கொடுத்து பணிப்பதிவேடு பெற்று தேவையான பதிவுகளை சரி பார்க்கவும். விடுபட்ட பதிவுகள் இருப்பின் வட்டாரக் கல்வி அலுவலர் அவர்களிடம் தெரிவித்து சரி செய்து கொள்ளவும்.


தற்போதைக்கு கீழ்க்கண்ட படிவத்தை ஒரு பிரிண்ட் மட்டும் எடுத்து நிரப்பி வைத்து அனைத்து இணைப்புகளையும் தயார் செய்து கொள்ளவும். (SR பார்த்து நிரப்ப வேண்டிய பதிவுகளை நிரப்பி கொள்ளவும்).


SR-ல் விண்ணப்பத்தில் இணைக்க தேவையான பக்கங்களை நகல் எடுத்து கொள்ளவும். பதிவுகள் விடுபட்டு இருப்பின் சரி செய்த பின் நகல் எடுக்கவும். (முடிந்த வரை அனைத்து பக்கங்களையும் நகல் எடுத்து வைத்துக்கொள்ளவும்)


தேர்வு நிலை யார் வழங்குவது குறித்து தெளிவுரை கேட்கப்பட்டுள்ளதாக தகவல். எனவே தெளிவுரை வந்த பிறகு யாருக்கு விண்ணப்பம் கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கு  2 செட் தயார் செய்து கொள்ளலாம்.


17/12/2022-ல் தான் தேர்வுநிலை வருகிறது. அதன் பிறகு தேர்வு நிலை விண்ணப்பம் 2 செட் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும் அல்லது ஜனவரி குறைதீர் முகாமில் கொடுக்கலாம்.


Loss Of Pay போட்டவர்களுக்கு தேர்வு நிலை தள்ளி போகும். JACTTO-GEO போராட்ட கால Loss Of Pay முறைப்படுத்தப்பட்டது. எனவே அது பணிக்காலம் தான்.


Covering Letter

தேர்வுநிலை விண்ணப்ப படிவங்கள்,

பிற்சேர்க்கை,

பதிவுத்தாள்

பணிக்காலம்  சரிபார்த்தல்,

பணிக்காலம் கணக்கீட்டுத்தாள்.



நகல்கள் கீழ்க்கண்ட வரிசைப்படி வைக்கவும்.

Xerox:

SSLC Mark Sheet

SSLC Mark Sheet Genuiness

+2 Mark Sheet

+2 Mark Sheet Genuiness

D.T.Ed. Certificates

D.T.Ed. Certificate Genuiness

Appointment Orders

Probation order



SR  PAGES Xerox:

First Bio data pages(2 pages)

First Appointment entry page,

Probation page , 

10, 12, DTEd genuiness SR entry pages


எந்த LOP-வும் இல்லாதவர்களுக்கு:

10 ஆண்டுகள் முடியும் நாள்:16/12/22 பிற்பகல்

 தேர்வுநிலை கோரும் நாள்:17/12/22 முற்பகல்


🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடங்கள் மாற்றம்‌ செய்யப்பட்ட ஒன்றியங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு நவம்பர்‌ 2022 மாதம்‌ ஊதியம்‌ மற்றும்‌ பிற பணப்பலன்கள்‌ பெற்று வழங்க அறிவுறுத்தல் - தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ (Instructions for payment of salary and other benefits for the month of November 2022 to the teachers in the Unions where Block Educational Officers have been transferred - Proceedings of the Director of Elementary Education, TamilNadu) ந.க.எண்‌.28688/ஐ1/2022, நாள்‌: 29.11.2022...


>>> வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடங்கள் மாற்றம்‌ செய்யப்பட்ட ஒன்றியங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு நவம்பர்‌ 2022 மாதம்‌ ஊதியம்‌ மற்றும்‌ பிற பணப்பலன்கள்‌ பெற்று வழங்க அறிவுறுத்தல் - தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ (Instructions for payment of salary and other benefits for the month of November 2022 to the teachers in the Unions where Block Educational Officers have been transferred - Proceedings of the Director of Elementary Education, TamilNadu) ந.க.எண்‌.28688/ஐ1/2022, நாள்‌: 29.11.2022...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.28688/ஐ1/2022, நாள்‌: 29.11.2022...


 பொருள்‌: தொடக்கக்‌ கல்வி - நிர்வாக சீரமைப்பு - வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடங்களை தேவையுள்ள ஒன்றியங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டது -  பணியிடம்‌ மாற்றம்‌ செய்யப்பட்ட ஒன்றியங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு அக்டோபர்‌ 2022 மாதம்‌ பின்பற்றப்பட்ட நடைமுறையின்‌ படி ஊதியம்‌ பெற்று வழங்க வட்டாரக்‌ கல்வி அலுவலர்களை அறிவுறுத்த தெரிவித்தல்‌ - தொடர்பாக


பார்வை: 

1. அரசாணை (நிலை) எண்‌:84, பள்ளிக்‌ கல்வித்‌ (பக(1)) துறை, நாள்‌.09.09.2022

2. தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.26666/ஐ1/2022, நாள்‌.23.09.2022

3. தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.229610/சி2/2022, நாள்‌:10.10.2022

4, தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.28688/ஐ1/2022, நாள்‌:10.10.2022


பார்வை 1 இல்‌ கண்டுள்ள அரசாணையில்‌ பள்ளிகளை ஆய்வு மேற்கொள்ளவும்‌, மாணாக்கர்களுக்கு சிறந்த கல்வியினை வழங்கும்‌ பொருட்டும்‌ பள்ளிக்‌ கல்வி துறையில்‌ உள்ள நிர்வாகத்தினை சீரமைத்து ஆணை வழங்கப்பட்டது. 


மேற்கண்ட நிர்வாக சீரமைப்பினை தொடர்ந்து, பார்வை 1 இல்‌ கண்டுள்ள அரசாணையில்‌ அனுமதிக்கப்பட்ட 75 வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடங்களை தேவையுள்ள ஒன்றியங்களுக்கு பகிர்ந்தளித்தும்‌, உபரியாக கண்டறியப்பட்ட 47 வட்டாரக் கல்வி அலுவலர்‌ பணியிடத்திகனை தேவைப்படும்‌ ஒன்றியங்களுக்கு பணியிடம்‌ மாற்றம்‌ செய்தும்‌ பார்வை 2 இல்‌ கண்டுள்ள செயல்முறைகளின்‌ வாயிலாக ஆணையிடப்பட்டது.


வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடம்‌ என்பது அப்பணியிடத்தின்‌ ஆளுமையின்‌ கீழ்‌ உள்ள பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ ஆசிரியர்கள்‌ மற்றும்‌ அலுவலகப் பணியாளர்களுக்கு ஊதியம்‌ பெற்று வழங்கும்‌ பணியிடமாகும்‌.


வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடம்‌ மாற்றம்‌ செய்யப்பட்ட ஒன்றியத்தில்‌ அப்பணியிடத்திற்கென புதியதாக DDO Code மற்றும்‌ IFHRMS Office Code ஆகியவை பெறப்படவேண்டும்‌. மேலும்‌, ஒன்றியங்களில்‌ கூடுதலாகப் பெறப்பட்ட வட்டாரக்‌ கல்வி அலுவலரின்‌ கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ சில பள்ளிகளை கொண்டு வந்து, அப்பள்ளிகளில் பணிபுரியும்‌ ஆசிரியர்களை கூடுதலாக அனுமதிக்கப்பட்ட வட்டாரக்‌ கல்வி அலுவலரின்‌ DDO Codeயின்‌ கீழ்‌ IFHRMS மூலம்‌ Post Mapping செய்த பின்னர்தான்‌ அவர்களுக்கு ஊதியம்‌ மற்றும்‌ பிற பணப்பலன்கள்‌ பெற்று வழங்க இயலும்‌.


மேற்கண்ட பணிகளை மேற்கொள்ள கால அவகாசம்‌ தேவைபடுவதால்‌, கூடுதலாக வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடம்‌ அனுமதிக்கப்பட்ட ஒன்றியங்களில்‌ ஏற்கனவே பணிபுரியும்‌ வட்டாரக்‌ கல்வி அலுவலர்களே அவ்வொன்றியத்தில்‌ உள்ள ஆசிரியர்களுக்கு நவம்பர்‌ 2022 மாத (30.11.2022) ஊதியம்‌ பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ (தொடக்கக்‌ கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்‌.


தொடக்கக்கல்வி இயக்குநர்

பெறுநர்
சார்ந்த மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ (தொடக்கக்‌ கல்வி)

பேரூராட்சிகளில் (நகர பஞ்சாயத்துகளில்) தெருவிளக்கு அமைப்பு, நீர் வழங்கல் அமைப்பு, பாதாள சாக்கடை அமைப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை செயல்பாடுகளுக்கு - ஒப்பந்த அடிப்படையில் தனியார் சேவை வழங்குநர்/ ஒப்பந்ததாரர்/ ஏஜென்சிகளுக்கு அனுமதி - அரசாணை (G.O.(Ms) No.139 Dated: 03.10.2022) வெளியீடு (Town Panchayats Implementation of Solid Waste Management Rules, 2016 in Town Panchayats - Maintenance of Street Light System- Water Supply System - Underground Sewerage System through Service Provider/ Agency/Contractor based on Key performance indicators orders - Issued)...


>>> பேரூராட்சிகளில் (நகர பஞ்சாயத்துகளில்) தெருவிளக்கு அமைப்பு, நீர் வழங்கல் அமைப்பு, பாதாள சாக்கடை அமைப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை செயல்பாடுகளுக்கு - ஒப்பந்த அடிப்படையில் தனியார் சேவை வழங்குநர்/ ஒப்பந்ததாரர்/ ஏஜென்சிகளுக்கு அனுமதி - அரசாணை (G.O.(Ms) No.139 Dated: 03.10.2022) வெளியீடு (Town Panchayats Implementation of Solid Waste Management Rules, 2016  in Town Panchayats - Maintenance of Street Light System- Water  Supply System - Underground Sewerage System through Service Provider/  Agency/Contractor based on Key performance indicators orders - Issued)...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



-------


Municipal Administration and Water Supply (TP.1) Department G.O.(Ms) No.139 Dated: 03.10.2022


Ref: 1. G.O. (Ms) No.205, Rural Development Department,  Dated 23.03.1989. 

2. G.O. (Ms) No.72, Municipal Administration And Water  Supply (TP.1) Department, Dated 05.05.1998. 

3. G.O. (Ms) No.198, Municipal Administration and Water  Supply (ME.3) Department, Dated 26.10.1998. 

4. G.O. (Ms) No.199, Municipal administration and water  supply (TP.2) Department, Dated 12.08.1997. 

5. G.O. (Ms) No.242, Municipal Administration and Water  Supply (TP.1) Department, Dated 10.12.2009. 

6. G.O. (Ms) No.111, Municipal Administration and Water  Supply (ME.3) Department, Dated 17.08.2022. 

7. G.O. (Ms) No.112, Municipal Administration and Water  Supply (ME.3) Department, Dated 17.08.2022. 

8. G.O. (Ms) No.113, Municipal Administration and Water  Supply (ME.3) Department, Dated 17.08.2022. 

9. G.O. (Ms) No.116, Municipal Administration and Water  Supply (ME.3) Department, Dated 24.08.2022. 

Read also:-

10. From the Commissioner of Town Panchayats letter Na.Ka.No. 13908/2022/A4, dated. 29.08.2022.


The Government after careful examination of the proposal of the  Commissioner of Town Panchayats, hereby orders as follows: 


i. To permit the Commissioner of Town Panchayats to accord permissioon  to the Executive Officers of Town Panchayats to engage Private Service  Provider / Contractor / Agency to operate and maintain the Street  Light System, Water Supply System, Underground Sewerage System  and Solid Waste Management activities on contract basis for a period  of three years following the Tamil Nadu Tender Transparency Act, 1998  and Rule, 2000. 


ii. To engage Private Service Provider/ Contractor / Agency to operate  and maintain the Street Light System, Water  Underground Sewerage System and Solid Waste Management activities on contract basis based on the Key performance index. 


iii. To  permit to follow the lowest rate among the Schedule of Rates of  Public Works Department or Tamil Nadu Water Supply and Drainage  Board or District Collector to prepare estimate and to ascertain the  cost need to incur towards Private Service Provider/Contractor/Agency  on contract basis for operation and maintenance of Street Light  System, Water Supply System, Underground Sewerage System and  Solid Waste Management activities in Town Panchayats. 


iv.  To Permit to incur the said expenditure from Revenue Fund of  Town Panchayats.


கனமழை காரணமாக 12.11.2022 அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 12.11.2022 due to heavy rain) விவரம்...


கனமழை காரணமாக 29.11.2022 அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 29.11.2022 due to heavy rain) விவரம்...


💥 தொடர் மழை காரணமாக விருதுநகர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (29.11.2022) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


💥 தொடர் மழை காரணமாக தேனி பள்ளிகளுக்கு இன்று (29.11.2022) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு.





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.11.2022 - School Morning Prayer Activities...


>>> பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.11.2022 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: மக்கட்பேறு


குறள் : 70

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்


பொருள்:

ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெரும்பேறு, என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்


பழமொழி :

Labour conquers everything.


உழைப்பு அனைத்தையும் வெல்லும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு எனும் விதைகளை விதைத்து செல்வேன்.


 2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக் கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.


பொன்மொழி :


நீங்கள் தாமதிக்கலாம், ஆனால் நேரம் தாமதிக்காது. --பெஞ்சமின் பிராங்க்ளின்


பொது அறிவு :


1. கண்ணீர் சுரப்பிக்குப் பெயர் என்ன ?


 லாச்ரிமல் கிளாண்ட்ஸ். 


2.கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார்? 


கெப்ளர்.


English words & meanings :


blew - wind moving and creating air current. verb. ஊதுதல். வினைச் சொல். blue - a color. noun. நீல நிறம். பெயர்ச் சொல். both homonyms


ஆரோக்ய வாழ்வு :


அஞ்சீர் என்றும் குறிப்பிடப்படும் அத்திப்பழங்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது நீண்ட நேரம் உங்களை நிறைவாக உணர உதவும். இது 'ஃபிசின்' என்ற நொதியைக் கொண்டுள்ளது, இது உணவை சிறந்த மற்றும் விரைவான செரிமானத்தை ஊக்குவிக்கிறது. இது தொப்பை கொழுப்பை இழக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. இதில் தாமிரம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.


NMMS Q


9, 28, 65, ____, 217. 


விடை : 126. 


விளக்கம் : 2 x 2 x 2 =8 + 1 =9; 3 x 3 x 3 = 27 + 1= 28; 4 x 4 x 4 = 64 + 1 = 65; 5 x 5 x 5 = 125 + 1 = 126; 6 x 6 x 6 = 216 + 1 = 217


நீதிக்கதை


பிடிவாதம் கொண்ட சிறுமி


ஒரு ஊரில் கீதா என்ற ஒரு சிறுமி இருந்தாள். அவள் நன்றாகப் படிப்பாள், அவளிடம் கொடுக்கும் வேலையை சரியாக செய்து முடிக்கும் திறமைசாலியானவள், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் அன்பாகவும், பணிவாகவும் நடந்து கொள்வாள். 


ஆனால் கீதாவின் பிடிவாத குணம் மட்டும் யாருக்கும் பிடிக்கவில்லை. கீதா அவள் அம்மா, அப்பாவிடம் எது கேட்டாலும் உடனே வாங்கி தந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் வீட்டையே போர்க்களம் போல ஆக்கிவிடுவாள். 


அடுத்த நாள் கீதாவின் பிறந்தநாள். ரொம்ப நாட்களாகக் கேட்டுக்கொண்டிருந்த விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை அன்றே வாங்கித் தரச்சொல்லி அடம்பிடித்தாள். 


கீதாவின் பெற்றோர் தங்கள் சூழ்நிலையைக் கூறி, அடுத்த மாதம் வாங்கித் தருகிறேன் என்றனர். அதெல்லாம் முடியாது நான் பள்ளிக்கூடத்திற்கு சென்று வீட்டிற்கு வரும்போது நான் கேட்ட கைகடிகாரம் வேண்டும். இல்லாவிட்டால் நடப்பதே வேறு என்று சொல்லிவிட்டுச் சென்றாள். 


கீதாவின் பெற்றோர் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர். பள்ளி முடிந்ததும் கீதா வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று மழை பெய்யத் தொடங்கியது. உடனே பக்கத்தில் இருந்த ஒரு குடிசை ஓரத்தில் ஒதுங்கி நின்றாள். அப்பொழுது அந்த வீட்டிற்குள் இருந்து வந்த சத்தத்தைக் கேட்டாள். 


அப்பா உங்க கால் ரொம்ப அடிப்பட்டிருக்கு. இருந்தும் ஏன் லீவு எடுக்காம வேலைக்குப் போறீங்க? என்று ஒரு சிறுமி பேசுவதை கேட்டாள். நீ தான், எல்லோரும் டூர் போறாங்க நானும் போகனும்னு சொன்னல்ல. நான் லீவு போடமா வேலைக்குப் போனாத்தான் உனக்கு டூர் போக பணம் தர முடியும் என்றார். 


அப்பா நான் டூர் போகலை. அடுத்தமுறை போய்க்கிறேன். நீங்க உங்க காலைப் பார்த்துக்கோங்கப்பா என்றாள். அந்த சிறுமியின் அம்மா, நீங்க ரெஸ்ட் எடுங்க, அவள் டூர் போகட்டும். ஒரு பெரிய வீட்டுல வேலை இருக்குதாம், நான் வேலைக்குப்போறேன். அந்த பணத்துல அவளுக்கு டூர் போகவும், உங்க காலுக்கு வைத்தியம் பார்க்கவும் சரியாக இருக்கும் என்றாள். 


ஒரு சிறுமி தன் அப்பாவின் கஷ்டத்தைப் புரிந்து கொண்டு விட்டுக்கொடுக்கிறாள், அவள் அம்மாவும் குடும்பத்திற்காக வேலைக்கு செல்கிறார். இதை பார்த்த கீதா அவளின் தவறினை உணர்ந்தால் இனி நாமும் அம்மா, அப்பாவுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று நினைத்தால். 


கீதா வீட்டிற்கு வந்ததும், பெற்றோர் கீதா என்று அவர்கள் வாயெடுக்க, அப்பா கைக்கடிகாரம் இப்போ இல்லைன்னா என்ன அடுத்த பிறந்த நாளைக்கு வாங்கித்தாருங்கள் என்று கூறினாள். கீதா பேசியதைக்கேட்டு வியப்படைந்தனர் அவளது பெற்றோர். தனது பிடிவாத குணத்தை மாற்றிக்கொண்டு மகிழ்ச்சியோடு பிறந்த நாளைக் கொண்டாடினாள் கீதா. 


நீதி :

வீட்டின் சூழ்நிலைகளை புரிந்து கொள்ளுதல் வேண்டும்.


இன்றைய செய்திகள்


29.11.22


* அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 'வானவில் மன்றம்' திட்டம்: திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


* சென்னையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் மஸ்கட், குவைத், புனே விமானங்கள் பெங்களூரு, ஹைராபாத்துக்கு திருப்பிவிடப்பட்டன.


* அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பணிமாறுதல் கலந்தாய்வுக்கு கால அட்டவணை வெளியீடு: நாளை முதல் கலந்தாய்வு தொடங்குகிறது.


* 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பாட்டில் இருக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வாகனங்கள் 2023 ஏப்ரல் முதல் அழிக்கப்படும் என்றும் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.


* லேசான காய்ச்சல் ஏற்படும்போது ஆன்டிபயாடிக் மருந்துகளை தவிருங்கள்: மருத்துவர்களுக்கு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்.


* அண்டத்தில் உள்ள கருந்துளையிலிருந்து வரும் ஒளிக்கற்றைகளின் எதிரொலிகளை ஒலி வடிவமாக நாசா வெளியிட்டுள்ளது.


* ஃபிஃபா கால்பந்து: மொராக்கோ வெற்றியால் ஆத்திரம்; பெல்ஜியத்தில் கலவரம்.


* இந்திய ஒலிம்பிக் சங்க முதல் பெண் தலைவராக தங்க மங்கை பி.டி. உஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.


* உலகக்கோப்பை கால்பந்து: ஸ்பெயின் , ஜெர்மனி அணிகளின் ஆட்டம் சமனில் முடிந்தது.


Today's Headlines


* 'Rainbow Forum' Scheme for Government School Students: Launched by Chief Minister Stalin in Trichy.


 *  Due to heavy fog in Chennai, Muscat, Kuwait and Pune flights were diverted to Bangalore and Hyrabad.


*  Time Table Released for Govt School Teachers Transfer Consultation: The consultation starts from tomorrow.


*  Union Road Transport Minister Nitin Gadkari has also said that vehicles of central and state governments which are in use for more than 15 years will be destroyed from April 2023.


*  Avoid antibiotics for mild fever: ICMR guidance for clinicians.


 * NASA has released the echoes of light rays from a black hole in the universe in the form of sound.


*  FIFA Football: Fury over Morocco win;  Riots in Belgium.


 * Thanga Mangai P.D. is the first woman president of the Indian Olympic Association.  Usha is elected unopposed.


*  World Cup Football: The match between Spain and Germany ended in a draw.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு... 27-04-2024 – Press News – Date Extension for Online Application - Direct R...