கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிகள் திறப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பள்ளிகள் திறப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பள்ளிகள் திறப்பு - மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள்



பள்ளிகள் திறப்பு - மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள்


இன்று (26.05.2026) நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு சம்பந்தப்பட்ட கூட்டத்தில் கூறிய அறிவுரைகள்


அனைத்து வகைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

 கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4ஆம் தேதி அன்று பள்ளி திறக்கப்பட இருப்பதால் தங்கள் பள்ளியில் மேல்நிலைநீர்த்தொட்டிகள் அல்லது நிலத்தடி நீர்த்தொட்டிகள் இருப்பின் அவற்றை தூய்மைப்படுத்திட வேண்டும்.

 கடைசியாக தூய்மைப்படுத்த நாள் குறிப்பிடப்பட்ட சுவரொட்டி ஒட்டப்பட்டு இருக்க வேண்டும்.

 கழிவறைகள் தூய்மைப்படுத்தப்பட்டு மாணவ,மாணவியரின் பயன்பாட்டிற்கு ஏதுவாக தண்ணீர் வசதி செய்யப்பட்டு இருக்க வேண்டும்.  

இத்துடன் சமையலறைகள் தூய்மைப்படுத்தப்பட்டு பாத்திரங்கள் மற்றும் மாணவர்கள் சாப்பிடும் தட்டுகள், டம்ளர்கள் தூய்மையாக வைத்திருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்த விவரங்களில் மிகுந்த கவனம் செலுத்திட அறிவுறுத்திட கேட்டுக்கொள்ளபடுவதாக கூறினார்கள்.

ஆய்வு அலுவலர்கள் பார்வையிட உள்ளதால் வருகின்ற வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு கவனம் செலுத்திட அனைத்து தலைமை ஆசிரியர்களையும் கேட்டுக் கொள்ளப்படுகிறது..


- முதன்மைக் கல்வி அலுவலர், கரூர்


1 - 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறப்பு

 


1 - 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 04-06-2026 அன்று பள்ளிகள் திறப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு 


Schools to open on June 4 for students of classes 1 - 12 - Tamil Nadu Government Press Release



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



திருத்தப்பட்ட

செய்திக் குறிப்பு எண் : 096 , நாள்: 26.05.2026

பள்ளிக் கல்வித் துறை

தமிழ்நாடு அரசு

செய்தி வெளியீடு


2026-2027 கல்வியாண்டில், 4 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் 01.06.2026 அன்றும், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் 04.06.2026 அன்றும் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை முன்னதாக அறிவித்திருந்தது.


அதனைத் தொடர்ந்து, நிர்வாக வசதியை உறுதி செய்வதற்கும், வெவ்வேறு வகுப்புகளில் படிக்கும் பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தவிர்ப்பதற்கும், அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே மாதிரியான மீண்டும் திறக்கும் தேதியைக் கோரி பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகளும் முறையீடுகளும் பெறப்பட்டன.


மேலும், ஜூன் முதல் வாரத்திற்கான தற்போதைய வானிலை நிலவரங்களும் முன்னறிவிப்புகளும், மாநிலத்தின் பல பகுதிகளில் பருவமழைக்கு முந்தைய செயல்பாடுகள் தொடர்வது, விட்டுவிட்டுப் பெய்யும் மழை, ஈரப்பதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வெப்ப நிலைகள் நிலவக்கூடும் என்பதைக் காட்டுகின்றன. பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு முன்னர், சுகாதாரம், குடிநீர் வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் ஒட்டுமொத்த வளாகத் தயார்நிலை தொடர்பான பள்ளிகளின் ஆயத்தத் தேவைகளையும் அரசாங்கம் ஆய்வு செய்துள்ளது.


தொடர்புடைய அனைத்து காரணிகளையும் கவனமாகப் பரிசீலித்த பின்னர், தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தல்களின்படி,  தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிகுலேஷன் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளும், ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை, வியாழக்கிழமை, 04.06.2026 அன்று ஒரே சீராக மீண்டும் திறக்கப்படும் என்று மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.


பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னர் தேவையான ஆயத்தப் பணிகள் முடிக்கப்படுவதையும், மாணவர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்விற்கான போதுமான ஏற்பாடுகள் செய்யப்படுவதையும் உறுதி செய்யுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகங்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு கோரப்படுகிறது.


வெளியிட்டவர்:- டிஐபிஆர், செயலகம், சென்னை - 9



Revised

Press Release No : 096 , Date: 26.05.2026

SCHOOL EDUCATION DEPARTMENT

GOVERNMENT OF TAMIL NADU

PRESS RELEASE

The School Education Department had earlier announced that schools for the academic year 2026-2027 would reopen on 01.06.2026 for Classes IV to XII and on 04.06.2026 for Classes I to III.

Subsequently, requests and representations were received from parents, teachers,and various stakeholders seeking a uniform reopening date for all classes in order to ensure administrative convenience and to avoid difficulties faced by families having children studying in different classes.

Further, the prevailing weather conditions and forecasts for the first week of June indicate the likelihood of continued pre-monsoon activity, intermittent rainfall, humidity,and associated heat conditions in several parts of the State. The Government has also reviewed the preparedness requirements of schools relating to sanitation, drinking water facilities, transportation arrangements, and overall campus readiness prior to reopening.

After careful consideration of all relevant factors, and as per the instructions of The Hon'ble Chief Minister of Tamil Nadu, Thiru. Raj Mohan, the Hon'ble Minister for School Education, Tamil Development and Information has informed that all schools in Tamil Nadu, including Government, Government-aided, Matriculation, and Private Schools, shall uniformly reopen for Classes I to XII on Thursday, 04.06.2026.

All Chief Educational Officers and District Educational Officers have been instructed to ensure that necessary preparatory measures are completed before reopening and that adequate arrangements are made for the welfare, safety, and well-being of students.

The cooperation of parents, teachers, school managements, and the general public is solicited.

Issued By:- DIPR, Secretariat, Chennai - 9




வானிலை ஆய்வு மையத்தின் தகவல் கிடைத்தவுடன் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்



வானிலை ஆய்வு மையத்தின் தகவல் கிடைத்தவுடன் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்


ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என சொல்லி இருந்தோம்; அதனை மறுஆய்வு செய்யுமாறு கோரிக்கைகள் வந்துள்ளன; ஒரு வாரத்திற்கு வெப்ப அலை, மழை இருக்குமா என வானிலை மையத்திடம் கேட்டுள்ளோம்; அங்கிருந்து தகவல் வந்ததும் முதலமைச்சருடன் கலந்து பேசி ஆலோசிக்கப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்


பள்ளிகள் திறப்பை ஒரு வாரம் தள்ளி வைக்க கோரிக்கை



தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பை ஒரு வாரம் தள்ளி வைக்க வேண்டும்: தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை


தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதாலும் வெப்ப அலை வீசுவதாலும் பள்ளிகள் திறப்பை ஒரு வாரம் தள்ளி வைக்க வேண்டும் என தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை.


ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறப்பு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. 



01-06-2026 முதல் பள்ளிகள் திறப்பு - பள்ளி திறப்புக்கு முன் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் - DSE செயல்முறைகள்

 

2026-27- School Reopening - Hon'ble Educational Minister Review _ Instructions


01.06.2026 முதல் பள்ளிகள் திறப்பு - பள்ளி திறப்புக்கு முன் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் - பள்ளிக்கல்வி இயக்குநரின் DSE செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06. 

முன்னிலை: முனைவர் ச.கண்ணப்பன்

ந.க.எண் : 016677/எம்1/இ1/2026, நாள் : 18.05.2026


பொருள்: மாண்புமிகு பள்ளிக் கல்வி தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 18.05.2026 அன்று ஆய்வு கூட்டம் 2026-2027 ஆம் கல்வியாண்டு தொடங்கும் முன்னர் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அறிவுரைகள் - தொடர்பாக.


மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 18.05.2026 அன்று பள்ளிக்கல்வித் துறை சார்பான நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இவ்வாய்வு கூட்டத்தில் ஒன்று. இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள ஒன்பது பாட நூல்கள் வெளியிடப்பட்டது.


மாணவர்கள் எளிதில் புரிந்து கற்று தனித்திறன் மிக்கவர்களாக உருவாகும் வகையிலும், மாணவர்களிடம் எதிர்நோக்கப்படும் கற்றல் விளைவுகளை அடையும் வகையிலும் இப்பாட நூல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.


குழந்தைமைய கற்றல் அணுகுமுறையை ஊக்குவிக்கும் வகையில் குழந்தைகள் மிகவும் விரும்பும் கதைகள், பாடங்கள், கற்றல் செயல்பாடுகள் மூலம் கற்கும் வகையிலும், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையிலும் பாடநூல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன


மேலும், மாணவர்களது உடல் இயக்க திறன்கள் (Motor ) சமூக மனவெழுச்சித் திறன்கள். விழுமியங்கள், வாழ்க்கை திறன்களை உள்ளடக்கிய பாடப்பொருட்களோடு அழகிய வண்ண வடிவமைப்புடன் இப்பாட நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.


அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளும் கோடை விடுமுறைக்குப்பின் 01.06.2026 திங்கள் கிழமையன்று திறக்கப்படும் எனவும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.


பள்ளி திறக்கப்படும் நாளன்று, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கும் வகையில், தேவையான பாடநூல்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் மூலம் அச்சிடப்பட்டு மாவட்டங்களுக்கு அனுபப்பட்டுள்ளது. இப்பாட நூல்களை பள்ளி திறக்கும் நாளன்று மாணவர்களுக்கு வழங்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள மாண்புமிகு அமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.


இக்கல்வியாண்டில் புதிய பாட புத்தகங்கள் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் 1 முதல் 3ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புதிய பாடநூல் மற்றும் கற்பித்தல் நுட்பங்கள் சார்ந்த பயிற்சி 01.06.2026 முதல் 03.06.2026 வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


பள்ளிகள் கோடை விடுமுறைக்குப்பின் திறக்கப்படவுள்ள நிலையில் அனைத்துப் பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து பின்வரும் அறிவுரைகளை வழங்கப்பட்டுள்ளது.


* 2026-27ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா நலத்திட்டங்கள் (பாடபுத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடை புத்தக பைகள்) மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி திறக்கும் நாளன்று கிடைத்திட உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள அனைத்து கல்வி அலுவலர்கள். தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.


* பள்ளிகளில் உள்ள திறன் பலகைகள் (Smart Board) மற்றும் உயர் தொழில் நுட்பக் கணினி ஆய்வகங்கள் (HI--Tech Lab) பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உரிய இணைய வசதியுடன் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.


* பள்ளி வளாகம், வகுப்பறைகள், சமையலறை, கழிப்பறைகள், குடிநீர் தேக்கத் தொட்டி மற்றும் கை கழுவும் இடம் ஆகியவை தூய்மையாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும்.


* பள்ளி வளாகத்திலோ அல்லது வருப்பறைகளிலோ தேவையற்ற/பயன்பாடற்ற பொருட்கள் இருப்பின் அவற்றினை அப்புறப்படுத்த வேண்டும். மாணவர்கள் பயன்பாட்டிற்கான குடிநீர்த் தொட்டியை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து தூய்மையான மற்றும் பாதுகாப்பான குடிநீர் மாணவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.


* கழிப்பறைகள் மாணவர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் தண்ணீர் வசதியுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.


* கழிவுநீர் சேகரிப்பு தொட்டிகள் (Septic Tanks) கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் (Borewell) பள்ளி வளாகத்தில் திறந்த நிலையில் இல்லாதவாறு மூடியிட்டு மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் பராமரிக்கப்பட வேண்டும்.


* தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பினை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு EMIS வழியாக உடனடியாக மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டும்.


* 2025-26ஆம் கல்வியாண்டில் ஐந்தாம் வகுப்பு / எட்டாம் வகுப்பு நிறைவு செய்யும் மாணவர்கள் அருகில் உள்ள அரசு / அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளி / உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப் பள்ளிகளில் முறையே ஆறாம் வகுப்பு / ஒன்பதாம் வகுப்பில் சேர்க்கப்படுவதை சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும். பள்ளி வளாகத்தில் பெண்குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்திடல் வேண்டும்.


மேற்கண்ட அறிவுரைகளை  தலைமையாசிரியர்களும் பின்பற்றுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள்/ அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்  ( இடைநிலை மற்றும் தொடக்கக் கல்வி) / மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் இதனை கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


பள்ளிக்கல்வி இயக்குநர்


பெறுநர்


1. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள். 

2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை) 

3. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி)


நகல்


1. அரசு கூடுதல் தலைமைச் செயலளார். பள்ளிக் கல்வித் துறை, தலைமைச் செயலகம், சென்னை-00 அவர்களுக்கு பணிவுடன் அனுப்பப்படுகிறது. 

2. மேலாண்மை இயக்குநர். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை-06. அவர்களுக்கு பணிவுடன் அனுப்பப்படுகிறது. 

3. மாநிலத் திட்ட இயக்குநர் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை-06. அவர்களுக்கு பணிவுடன் அனுப்பப்படுகிறது.

4. தொடக்கக் கல்வி இயக்குநர், சென்னை-6 அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பப்படுகிறது.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


பள்ளிகள் திறப்பு – தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள்

 

 பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி திறக்கின்றன – தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள்


தமிழ்நாட்டில் பள்ளி திறக்கும் நாளில் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குள் நுழைகின்றனர்.



2025-26 கல்வியாண்டிற்கான தமிழக பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி, திங்கட்கிழமை அன்று திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் இந்தத் தேதியில் செயல்படத் தொடங்க உள்ளன.


பள்ளி திறப்பதற்கு முன், பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. இவை மாணவர்களின் பள்ளி வாழ்க்கையை சீராகவும், பயனுள்ளதாகவும் மாற்றும் வகையில் அமைந்துள்ளன.



*1. பாடப்புத்தகங்கள் விநியோகம்*


பள்ளி திறக்கும் நாளிலேயே மாணவர்களுக்கு சமச்சீர் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.


அனைத்து வகுப்புகளுக்கும் தேவையான புத்தகங்கள் ஏற்கனவே மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.


தலைமையாசிரியர்கள், புத்தகங்களை வரிசையாக வகுப்புகளின்படி தயார் செய்து வைக்க வேண்டும்.



*2. பள்ளி வளாக சுத்தம் மற்றும் பராமரிப்பு*


பள்ளி வளாகம் முழுமையாக சுத்தம் செய்யப்பட வேண்டும்.


கழிவுநீர் சேகரிப்பு, கழிப்பறை வசதி, குடிநீர் உபகரணங்கள் ஆகியவை சீரமைக்கப்பட வேண்டும்.


மாணவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.



*3. பாடத்திட்டம், நாட்காட்டி மற்றும் கால அட்டவணை*


புதிய கல்வியாண்டுக்கான பாடத்திட்ட திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.


வாராந்திர கால அட்டவணை மற்றும் ஆண்டு நாட்காட்டி தயார் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.



*4. மாணவர் நலத்திட்டங்கள்*


இலவச நோட்டுப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் போன்றவை சரியாக பதிவு செய்யப்பட்டு, ஒழுங்காக வழங்கப்பட வேண்டும்.


மாணவர்களின் விலாச விவரங்கள், ஆதார் இணைப்பு உள்ளிட்டவை பரிசீலிக்கப்பட வேண்டும்.



*5. வாகன பாதுகாப்பு பரிசோதனை*


பள்ளி வாகனங்கள் அனைத்தும் RTO சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.


அனுமதி சான்றுகள், வாகனப் பராமரிப்பு, டிரைவர் தகவல்கள் உள்ளிட்டவை புதுப்பிக்கப்பட வேண்டும்.



*6. தொடர்பு முறைமைகள் மற்றும் பெற்றோர் தொடர்பு*


மாணவர்களின் பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்புகள், கால அட்டவணை, விழாக்கள் பற்றிய தகவல்களை SMS / வாட்ஸ்அப் வாயிலாக தெரிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.


பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்கள் குறித்து திட்டமிடப்பட வேண்டும்.



*7. வெப்ப அலை / மழை முன்னெச்சரிக்கை*


இந்நேரத்தில் வெப்ப அலை / மழை காரணமாக முன்னெச்சரிக்கைகள் அவசியம்.


தேவையான இடங்களில் கூடுதல் குடிநீர் வசதிகள் மற்றும் நிழலிடங்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். 


Term 3 - Some important tasks to be observed in the third term once the schools open on 02.01.2025



 அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு வணக்கம்


 02.01.2025 அன்று பள்ளிகள் திறந்தவுடன் மூன்றாம் பருவத்தில் கவனிக்க வேண்டிய சில முக்கிய பணிகள்


 1.பள்ளி வளாகம் தூய்மையாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.


 2. வகுப்பறைகள் அனைத்தும் நேரடியாக பார்வையிட்டு மாணவ மாணவிகள் அனைவரும் பாதுகாப்புடன் அமர்ந்து படிக்க உகந்ததாக உள்ளதா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.


 3. இறைவணக்க கூட்டம் முடிந்தவுடன் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் நோட்டு புத்தகங்கள் வழங்கிட வேண்டும். உரிய பதிவேட்டில் முறையாக பதிந்து பராமரித்திட வேண்டும்.


 4 .ஆசிரியர்களின் வருகைப்பதிவு, மாணவ மாணவிகளின் வருகை பதிவுகளை App-ல் பதிவேற்றம் செய்திட வேண்டும்.


 5. முதல் பருவம், இரண்டாம் பருவம், மூன்றாம் பருவத்திற்கு வழங்கப்பட்ட விலையில்லா நோட்டு புத்தகம் மற்றும் இதர நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரத்தை TNSED App-ல் முழுமையாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதை உறுதிபடுத்த வேண்டும்.


 6. மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் பங்கு பெறும் மாணவ மாணவிகளை தயார் படுத்தி உரிய நேரத்தில் கலந்துகொள்ள உரிய பாதுகாப்பு ஏற்பாட்டுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.


7. தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டம் சார்ந்த verification - ஐ தினந்தோறும் பார்த்து update செய்தல் வேண்டும்.


8.  இன்டர்நெட் கனெக்சன் சார்ந்த OTC, Monthly Charges receipts ஐ upload செய்ய வேண்டும்.


9. ஜனவரி 6 முதல் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ள எண்ணும் எழுத்தும் சார்ந்த மூன்றாம் பருவ பயிற்சிகளில் அவர்களுக்கு உரிய நாட்களில் தவறாமல் பங்கு பெறுதல் வேண்டும்.


 10. மாணவ மாணவிகளின் ஹெல்த் செக்கப் முடிக்காத பள்ளிகள் இப்பணியை முழுமையாக முடித்திருக்க வேண்டும். 


11. 6, 7 ,8 வகுப்புகளின் அரையாண்டுத்தேர்வு மதிப்பெண்களை EMIS-இல் அப்லோடு செய்திருக்க வேண்டும்.


 12. SMC புதிய உறுப்பினர்கள் அனைவரையும் EMIS-இல் முழுமையாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதை உறுதிப்படுத்த வேண்டும்.


13. *UDISE+* சார்ந்த பதிவுகளை முழுமையாக நிறைவு செய்து இருக்க வேண்டும்.


 14. புதிய பாரத எழுத்தறிவு திட்டம் சார்ந்த பணிகளை ITK தன்னார்வலர் மற்றும் BRTE யுடன் இணைந்து செயல்படுத்திட வேண்டும்.


 15. அனைத்து வகுப்பு மாணவ மாணவிகளும் சரளமாக வாசிப்பதையும் எழுதுவதையும் உறுதிப்படுத்திட வேண்டும்.


- வட்டாரக் கல்வி அலுவலர்கள்

தமிழ்நாட்டில் நிலவும் கடும் வெப்ப அலையின் காரணமாக அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஜூன் 9ஆம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிப்பு - ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு...

 

 தமிழ்நாட்டில் நிலவும் கடும் வெப்ப அலையின் காரணமாக அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஜூன் 9ஆம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிப்பு - ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு...



>>> பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் செய்திக்குறிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...







2024-2025ஆம் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறத்தல் - மேற்கொள்ள வேண்டிய கல்வி, கல்வி இணை மற்றும் கல்வி சாராச் செயல்பாடுகள் - DSE & DEE இணைச் செயல்முறைகள்...


2024-2025ஆம் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறத்தல் - மேற்கொள்ள வேண்டிய கல்வி, கல்வி இணை மற்றும் கல்வி சாராச் செயல்பாடுகள் - பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர்களின் DSE & DEE இணைச் செயல்முறைகள் ந.க.எண்: 17605/ எம்/ இ1/ 2024, நாள்: 25-05-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு...

 

 கோடை விடுமுறை முடிந்து 06.06.2024 அன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வி இயக்குனரின் பத்திரிக்கை செய்தி...



>>> பள்ளிக்கல்வி இயக்குனரின் பத்திரிக்கை செய்தி - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




*🔸2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு வருகின்ற ஜூன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு*


2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜூன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும். 


எனவே, குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர். 


அனைத்து பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்திடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகின்றது. தெரிவித்துள்ளது பள்ளிக் கல்வித்துறை


*பள்ளிக் கல்வி இயக்குநர்*







2023-2024ஆம் ஆண்டு - அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...


 2023-2024ஆம் ஆண்டு - அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 45454/ எம்/ இ1/ 2023, நாள்: 22-12-2023...


>>> பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 45454/ எம்/ இ1/ 2023, நாள்: 22-12-2023...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

“கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படுமா?” - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பேட்டி ("Will schools continue to function on Saturdays after the summer holidays are over?" - School Education Minister Anbil Mahesh's interview)...



>>> “கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படுமா?” - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பேட்டி ("Will schools continue to function on Saturdays after the summer holidays are over?" - School Education Minister Anbil Mahesh's interview)...


 பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதன் காரணமாக, சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த முடிவு...


"கோடைவிடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர பற்றாக்குறை ஏற்படும்"


"பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், பாடங்களை நடத்துவதற்கு ஏதுவாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும்"


"மாணவர்களுக்கு பாடச்சுமை இல்லாதபடியும், ஆசிரியர்கள் பயிற்சியில் பாதிப்பு ஏற்படாத வகையிலும் சனிக்கிழமை வகுப்புகள் நடத்தப்படும்"


பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பேட்டி...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பள்ளிகள் திறப்பு - சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டிய தகவல்கள் (Opening of Schools - Information to check and confirm)...



 பள்ளிகள் திறப்பு - சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டிய தகவல்கள் (Opening of Schools - Information to check and confirm)...


1. 7.6.2023 முதல் 9.6.2023 தேதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி திறக்கும் நாளில் மாணவர்கள் பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.


2.தூய்மைப் பணிகள் மேற்கொள்வதை புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ளவும்.


3. 9.6.2023 அன்று   நடைபெற உள்ள SMC கூட்டம் 26.3.2023 அன்று அனைத்து பள்ளிகளிலும் தவறாமல் உரிய வழிகாட்டுதல்படி நடத்திட வேண்டும்.


3. EMIS இல் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கிட வேண்டும்.

இம் மாணவர்கள் அடுத்த உயர் வகுப்பில் சேர்ந்துள்ள பள்ளி விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.


4. தங்கள் ஊரில் உள்ள பள்ளி வயது 5+ குழந்தைகள் அனைவரும் பள்ளியில் சேர்ந்துள்ளதை உறுதி செய்தல் வேண்டும்.


5. பள்ளியில் சேர்த்த மாணவர்களை EMIS தளத்தில் உடனுக்குடன் பதிவு செய்ய வேண்டும்.


6. அனைத்து ஆசிரியர்களுக்கான TIME TABLEஐ EMIS தளத்தில் பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும்.


7. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கி அடுத்த உயர் வகுப்பில் மாணவர்கள் பெயர் விடுபடாமல் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.


8. தங்கள் பள்ளி EMIS தளத்தில் ஆசிரியர்கள் எண்ணிக்கை மற்றும்  பெயர் சரியாக உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.


9. Attendance App இல் வகுப்பு வாரியாக மாணவர்கள் பெயர்கள் சரியாக உள்ளதை உறுதி செய்ய வேண்டும். (மாணவர்கள் வருகை பதிவு செய்யும் வகையில்)


10.  குடிநீர் கழிவறை மின்வசதிகள் பள்ளி வளாகம் பயன்படுத்த ஏற்றதாக உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.


11. எண்ணும் எழுத்தும் வகுப்பறைகளை புதிய பொலிவுடன் மாணவர்களுக்கு மனமகிழ்ச்சி தரும் வகையில் அமைத்தல் வேண்டும்.


12. பள்ளிகளுக்கு தற்போது பிரிண்டர் வழங்கப்பட்டு வருகிறது. பிரிண்டருடன் இணைத்து செயல்படும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் கணிணிகளை/ மடிக்கணிகளை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளிக்கல்வி - 2023-2024ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் திறத்தல் - தேதி மாற்றம் - ஆய்வு அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள் ந.க. எண்: 17605/ எம்/ இ1/ 2023, நாள்: 05-06-2023 (School Education - Opening of schools in the academic year 2023-2024 - Change of date - Joint proceedings of Tamil Nadu Directors of School Education and Elementary Education regarding giving instructions to Inspection Officers Rc. No: 17605/ M/ E1/ 2023, Dated: 05-06-2023)...

 

>>> பள்ளிக்கல்வி - 2023-2024ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் திறத்தல் - தேதி மாற்றம் - ஆய்வு அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள் ந.க. எண்: 17605/ எம்/ இ1/ 2023, நாள்: 05-06-2023 (School Education - Opening of schools in the academic year 2023-2024 - Change of date - Joint proceedings of Tamil Nadu Directors of School Education and Elementary Education regarding giving instructions to Inspection Officers Rc. No: 17605/ M/ E1/ 2023, Dated: 05-06-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி திறக்கும் முன்னர் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை சுகாதாரப் பணிகள் ஆய்வுப் படிவம் (Basic works to be carried out in schools before opening of school - Inspection form)...

பள்ளி திறக்கும் முன்னர் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை சுகாதாரப் பணிகள் ஆய்வுப் படிவம் (Basic works to be carried out in schools before opening of school - Inspection form)...


>>> பள்ளி திறக்கும் முன்னர் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை சுகாதாரப் பணிகள் ஆய்வுப் படிவம் (Basic works to be carried out in schools before opening of school - Inspection form)...



>>> 2023-2024ஆம்‌ கல்வியாண்டில்‌ பள்ளிகள்‌ திறப்பதற்கு முன்பு செய்ய வேண்டிய செயல்பாடுகள்‌ மற்றும்‌ இந்தக்‌ கல்வியாண்டில்‌ செயல்படுத்த வேண்டிய கல்விச்‌ செயல்பாடுகள்‌, கல்வி இணைச்‌ செயல்பாடுகள்‌ மற்றும்‌ கல்விசாரா செயல்பாடுகள்‌ சார்ந்து பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்‌ - தமிழ்நாடு பள்ளிக்கல்வித்‌ துறை மற்றும்‌ தொடக்கக்‌ கல்வித்‌ துறையின்‌ இணைச்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌. 019528/எம்‌/இ1/2023, நாள்‌. 25.05.2023...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு (In Tamil Nadu, the opening of schools has been postponed as the summer heat has not abated)...




தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு (In Tamil Nadu, the opening of schools has been postponed as the summer heat has not abated)...


“1 முதல் 5 வகுப்புகளுக்கு ஜூன் 14ம் தேதியும், 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜுன் 12ம் தேதியும், திறக்கப்படும்”


- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

2023-2024ஆம்‌ கல்வியாண்டில்‌ பள்ளிகள்‌ திறப்பதற்கு முன்பு செய்ய வேண்டிய செயல்பாடுகள்‌ மற்றும்‌ இந்தக்‌ கல்வியாண்டில்‌ செயல்படுத்த வேண்டிய கல்விச்‌ செயல்பாடுகள்‌, கல்வி இணைச்‌ செயல்பாடுகள்‌ மற்றும்‌ கல்விசாரா செயல்பாடுகள்‌ சார்ந்து பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்‌ - தமிழ்நாடு பள்ளிக்கல்வித்‌ துறை மற்றும்‌ தொடக்கக்‌ கல்வித்‌ துறையின்‌ இணைச்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌. 019528/எம்‌/இ1/2023, நாள்‌. 25.05.2023 (Activities to be done before the opening of schools in the academic year 2023-2024 and procedures to be followed depending on the academic Curricular activities, co-curricular activities and non-academic Extra Curricular activities to be implemented in this academic year - Tamil Nadu Department of School Education and Elementary Education Department's Joint Proceedings Rc.No. 019528/M/E1/2023, Dated: 25.05.2023)...


 தமிழ்நாடு பள்ளிக்கல்வித்‌ துறை மற்றும்‌ தொடக்கக்‌ கல்வித்‌ துறையின்‌ இணைச்‌ செயல்முறைகள்‌, சென்னை- 6.

https://kalvianjal.blogspot.com/2023/05/2023-2024-01952812023-25052023.html

ந.க.எண்‌. 019528/எம்‌/இ1/2023, நாள்‌. 25.05.2023.

https://kalvianjal.blogspot.com/2023/05/2023-2024-01952812023-25052023.html

பொருள்‌: பள்ளிக்கல்வி - 2023-2024ஆம்‌ கல்வியாண்டில்‌ பள்ளிகள்‌ திறப்பதற்கு முன்பு செய்ய வேண்டிய செயல்பாடுகள்‌ மற்றும்‌ இந்தக்‌ கல்வியாண்டில்‌ செயல்படுத்த வேண்டிய கல்விச்‌ செயல்பாடுகள்‌, கல்வி இணைச்‌ செயல்பாடுகள்‌ மற்றும்‌ கல்விசாரா செயல்பாடுகள்‌ சார்ந்து பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்‌ - முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ மற்றும்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌ (தொடக்க கல்வி) ஆகியோர்களுக்கு அறிவுரைகள்‌ வழங்குதல்‌ - தொடர்பாக.

https://kalvianjal.blogspot.com/2023/05/2023-2024-01952812023-25052023.html

பார்வை: 1. அரசாணை (நிலை) எண்‌. 163/பள்ளிக்‌ கல்வி (ERT)த்‌ துறை, நாள்‌.10.07.2017https://kalvianjal.blogspot.com/2023/05/2023-2024-01952812023-25052023.html

2. பள்ளிக்கல்வி ஆணையர்‌ மற்றும்‌ தொடக்க கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌. 019528/எம்‌/இ1/2022, நாள்‌.11.06.2022.https://kalvianjal.blogspot.com/2023/05/2023-2024-01952812023-25052023.html

3. தொடக்க கல்வி இயக்குரின்‌ நேர்முக கடித எண்‌.007351/ஜெ2/2021, நாள்‌.08.10.2021https://kalvianjal.blogspot.com/2023/05/2023-2024-01952812023-25052023.html

2023-2024ம்‌ கல்வியாண்டில்‌ 6 முதல்‌ 12 வகுப்புகளுக்கு ஜூன்‌ 1 ஆம்‌ தேதியும்‌, 1 முதல்‌ 5 வகுப்புகளுக்கு ஜூன்‌ 5ஆம்‌ தேதியும்‌ பள்ளிகள்‌ திறக்கப்படும்‌ என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள்‌ திறப்பதற்கு முன்பு செய்யப்பட வேண்டிய செயல்பாடுகள்‌ குறித்து கீழ்காணும்‌ அறிவுரைகள்‌ அனைத்து கல்வி அலுவலர்களுக்கும்‌ வழங்கப்படுகிறது.



>>> 2023-2024ஆம்‌ கல்வியாண்டில்‌ பள்ளிகள்‌ திறப்பதற்கு முன்பு செய்ய வேண்டிய செயல்பாடுகள்‌ மற்றும்‌ இந்தக்‌ கல்வியாண்டில்‌ செயல்படுத்த வேண்டிய கல்விச்‌ செயல்பாடுகள்‌, கல்வி இணைச்‌ செயல்பாடுகள்‌ மற்றும்‌ கல்விசாரா செயல்பாடுகள்‌ சார்ந்து பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்‌ - தமிழ்நாடு பள்ளிக்கல்வித்‌ துறை மற்றும்‌ தொடக்கக்‌ கல்வித்‌ துறையின்‌ இணைச்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌. 019528/எம்‌/இ1/2023, நாள்‌. 25.05.2023 (Activities to be done before the opening of schools in the academic year 2023-2024 and procedures to be followed depending on the academic Curricular activities, co-curricular activities and non-academic Extra Curricular activities to be implemented in this academic year - Tamil Nadu Department of School Education and Elementary Education Department's Joint Proceedings Rc.No. 019528/M/E1/2023, Dated: 25.05.2023)...






பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து நாளை அறிவிக்கப்படும்-பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தகவல் (Schools opening date will be announced on tomorrow - School Education Minister Anbil Mahesh Poyyamozhi)...

 பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து நாளை அறிவிக்கப்படும்-பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தகவல் (Schools opening date will be announced on tomorrow - School Education Minister Anbil Mahesh Poyyamozhi)...


வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து மாவட்ட கல்வி அலுவலருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் காணொளி காட்சி மூலம் ஆலோசனை.


அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்களது ட்விட்டர் பதிவு:


வரும் கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த இணைய வழிக் கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது.


அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, பள்ளித் தூய்மை உறுதிசெய்வது, விலையில்லாப் பொருட்களை உடனே வழங்குவது, தமிழ் கட்டாய மொழிப்பாடம்  என்ற விதியை தனியார் பள்ளிகள் பின்பற்றுகிறதா? என்பதை கண்காணிப்பது உள்ளிட்ட கருத்துகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் வலியுறுத்தினேன்.




6-12 வகுப்புகளுக்கு ஜூன் 1 ஆம் நாள் பள்ளிகள் திறப்பு - 1-5 வகுப்புகளுக்கு ஜூன் 5 ஆம் நாள் திறப்பு - பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி(Opening of schools on 1st June for classes 6-12 - Opening on 5th June for classes 1-5 - School Education Minister Anbil Mahesh Poyyamozhi)...

 6-12 வகுப்புகளுக்கு ஜூன் 1 ஆம் நாள் பள்ளிகள் திறப்பு - 1-5 வகுப்புகளுக்கு ஜூன் 5 ஆம் நாள் திறப்பு - பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி(Opening of schools on 1st June for classes 6-12 - Opening on 5th June for classes 1-5 - School Education Minister Anbil Mahesh Poyyamozhi)...


பள்ளிகள் திறப்பு தகவல்...


6-12 வகுப்புகளுக்கு ஜூன் 1 ஆம் நாள் பள்ளிகள் திறப்பு 


1-5 வகுப்புகளுக்கு ஜூன் 5 ஆம் நாள் திறப்பு...


- பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி...









>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


2023-2024ஆம் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்கும் தேதிகள் அறிவிப்பு (Notification of opening dates of Schools in Academic Year 2023-2024)...



2023-2024ஆம்  கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்கும் தேதிகள் அறிவிப்பு (Notification of opening dates of Schools in Academic Year 2023-2024)...


* 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன்-5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு...


* 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன்- 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பு...


-அமைச்சர் அன்பில் மகேஷ்








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தொடக்கப் பள்ளிகளை ஒருங்கிணைக்கலாம் - நாளிதழ் கட்டுரை

 தொடக்கப் பள்ளிகளை ஒருங்கிணைக்கலாம் - நாளிதழ் கட்டுரை கட்டுரையாளர்: லோகநாதன் பழனிசாமி, எழுத்தாளர். தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டு 42.3 ...