கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நோபல் பரிசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நோபல் பரிசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Nobel Prizeஐ வாங்க மரியா கொரினா நார்வே சென்றால் நடவடிக்கை - வெனிசுலா அரசு எச்சரிக்கை

 


நோபல் பரிசை வாங்க மரியா கொரினா நார்வே சென்றால் நடவடிக்கை - வெனிசுலா அரசு எச்சரிக்கை


Venezuela warns of action if Maria Corina goes to Norway to receive Nobel Prize


இந்த ஆண்டின் நோபல் பரிசு நார்வே நாட்டின் அஸ்லோ நகரில் அறிவிக்கப்பட்டது. அதன்படி அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுலா நாட்டைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது. லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் போராளி மரியா கொரினா மச்சாடோ ஆவார். வெனிசுலாவின் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடியவர் ஆவார். இவர் கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற வெனிசுலா அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தவர். இவர் கடந்த 1967ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி வெனிசுலா நாட்டின் கராகாஸ் என்ற நகரில் பிறந்தவர் ஆவார்.


முன்னதாக, தனக்கு இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பலமுறை கோரிக்கை வைத்திருந்தார். எனவே, இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட உள்ளது என்ற எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உலக மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது. பல நாடுகளில் போர் ஏற்படும் என்ற நிலைப்பாட்டை மாற்றியுள்ளேன். போர் நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன் என அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால் அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுலா நாட்டைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் அதிபர் டிரம்ப்க்கு ஏமாற்றமே மிஞ்சியது.



இந்த நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மரியா கொரினா மச்சாடோவுக்கு தற்போது விருதை வாங்க சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவர்களுக்கு, அதனை வழங்கும் விழா நார்வே நாட்டில் டிசம்பர் 10ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த விழாவில் கலந்து கொள்ள மரியா கொரினா மச்சாடோ சென்றால், நடவடிக்கை எடுக்க வெனிசுலா அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மரியா கொரினா மீது சதி, பயங்கரவாதம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதால், நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்றும், அவ்வாறு வெளியே சென்றால் தப்பியோடியதாக கருதப்படுவார் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.


Bajaj Pygmy Go 178MM Mini Fan with LED Lighting | Rechargeable | USB Charging | 4-hours Battery Backup | 3 Speed | 2-Light Brightness Setting | High Speed | Portable【Blue】


https://amzn.to/4oRIpth





Nobel Prize winners 2025

 


2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் பெற்றவர்கள் பட்டியல் 


List of Nobel Prize winners for 2025


1. அமைதிக்கான நோபல் பரிசு (வெனிசுலாவில் ஜனநாயக இயக்கம்) - மரியா கொரினா மச்சாடோ


2. இலக்கியத்திற்கான நோபல் பரிசு - லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய் (ஹங்கேரிய நாவலாசிரியர்)


3. இயற்பியலுக்கான நோபல் பரிசு (குவாண்டம் இயற்பியல்) - ஜான் கிளார்க், மைக்கேல் எச். டெவோரெட், ஜான் எம். மார்டினிஸ்.


4. வேதியியலுக்கான நோபல் பரிசு (மூலக்கூறு கட்டிடக்கலை) - சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன், ஒமர் எம். யாகி.


5. உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு (நோய் எதிர்ப்பு அமைப்பு) - மேரி இ. பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல், ஷிமோன் சகாகுச்சி.


🍁🍁🍁 2020 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு...

 

பால் மில்க்ரோம், ராபர்ட் வில்சன் ஆகிய இருவருக்கு நோபல் பரிசு.

புதிய ஏல முறைகள் கண்டுபிடிப்புக்காக இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிப்பு.



🍁🍁🍁 2020 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இயற்பியலுக்கான நோபல் பரிசை அறிவித்தது தேர்வுக்குழு.

இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 நபருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

ரோஜர் பென்ரோஸ், ரீனீஹார்ட் கென்செல், ஆன்ட்ரியா கெஸ் ஆகிய மூவருக்கு பகிர்ந்தளிப்பு.

விண்மீனின் மையத்தில் அதிசயத்தக்க பொருளை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு அறிவிப்பு.

🍁🍁🍁 2020ஆம் ஆண்டு - மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு...

 


ஹெபாடிடிஸ் சி வைரஸ் என்ற கிருமியை கண்டுபிடித்ததற்காக மூன்று பேருக்கு நோபல் பரிசு அறிவிப்பு.

ஹார்வே ஜே.ஆல்டர், மைக்கேல் ஹங்டன், சார்லஸ் எம்.ரைஸ் ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்