கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நிதியுதவி பெறும் பள்ளிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிதியுதவி பெறும் பள்ளிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Government aided schools face problem in getting salaries due to lack of allocation of funds



 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு இல்லாததால் சம்பளம் பெறுவதில் சிக்கல் - நாளிதழ் செய்தி 


Government aided schools face problem in getting salaries due to lack of allocation of funds - Daily News 



அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்களின் ஜனவரி மாத சம்பள பட்டியலை பதிவேற்றும்போது 'நிதி ஒதுக்கீடு இல்லை' என வருவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


தமிழகத்தில் 9000 அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு மாதந்தோறும் சம்பளப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வட்டார கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் கருவூலத்துறைக்கு அனுப்பப்படும்.


அங்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை இணையதளம் IFHRMS Website மூலம் சம்பள பட்டியல் தயார் செய்து பதிவேற்றம் செய்யப்படுகிறது.


அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாதந்தோறும் சம்பள பட்டியல் பள்ளி தாளாளர், செயலாளர் கையெழுத்து பெற்று அந்தந்த வட்டார கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.


அங்கிருந்து மாவட்ட கல்வி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகங்களில் சரி பார்க்கப்பட்டு கருவூலத்துறையின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.


ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதிக்குள் சம்பள பில்லை பதிவேற்றம் செய்வார்கள்.


சம்பள பட்டியலை பதிவேற்றம் செய்யும் போது 'சம்பள மானியம்' என்ற பகுதியில் உள்ளீடு செய்யும் போது 'நிதி ஒதுக்கீடு இல்லை' என்று தகவல் வருகிறது.


இதனால் ஜனவரி மாத சம்பளம் கிடைக்குமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Powers given to Government Aided School Correspondents to pay Teachers

 


அனைத்து வகை அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குகின்ற முழு அதிகாரமும் பள்ளி நிர்வாகிகளுக்கு வழங்கி உத்தரவு


The order gives full powers to school Correspondents to pay teachers in government aided schools


ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க அரசு உதவி பெறும் பள்ளி தாளாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது


அனைத்து வகை அரசு நிதி உதவி பெறும் பள்ளி தாளாளர்கள்/ செயலாளர்கள்/ நிர்வாகிகள்


*ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குகின்ற  முழு அதிகாரமும் பள்ளி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.


*அதற்காக தாங்கள் உடனடியாக DSC விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வேண்டும்


*முதல் கட்டமாக தாளாளரே DDO ஆக 1-3-2025 முதல் செயல்படுவார்



Commissioner of Treasuries and Accounts Proceedings Letter 

  >>> Click Here to Download...



Guideline for DSC  

>>> Click Here to Download...

Guidelines for Approval of Appointment of Teacher Posts in Government Aided Elementary and Middle Schools - Government Secretary's Letter

 

அரசு நிதி உதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌  ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ நியமன ஒப்புதல்‌ வழங்க வழிகாட்டு நெறிமுறைகள்‌ - பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர்‌ செயல்முறைகள் கடிதம், நாள்: 10-05-2024


Guidelines for Approval of Appointment of Teaching Posts in Government Aided Primary and Middle Schools - Education Department Government Secretary's Proceedings Letter, Dated: 10-05-2024


 அரசுக் கடிதம் எண் 4132/தொ.க.2(1)/2024, பள்ளிக்கல்வித்துறை நாள்: 10.05.2024-ல் அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் நியமன ஒப்புதல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வருத்து ஆணையிடப்பட்டுள்ளது. இதில், சிறுபான்மைப் பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் ஆசிரியர் நியமனங்களுக்கும் பதவி உயர்வுகளுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி பெற வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.


பள்ளிக்கல்வித்துறை

தலைமைச் செயலகம்

சென்னை 9


Efile கடிதம் எண் 4132/தொ.க.2(1)/2024, பள்ளிக்கல்வித்துறை நாள்: 10.05.2024


அனுப்புநர்‌
திரு. ஜெ.குமரகுருபரன்‌, இ.ஆ.ப....
அரசு செயலாளர்‌.

பெறுநர்‌

தொடக்கக்கல்வி இயக்குநர்‌.
சென்னை -6.

அய்யா,

பொருள்‌: பள்ளிக்‌ கல்வி - உதவி பெறும்‌ பள்ளிகள்‌ - அரசு நிதியுதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ உள்ள தலைமை ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ நியமன ஒப்புதல்‌ அளிக்க அறிவுரைகள்‌ வழங்கப்பட்டதை தொடர்ந்து ஏனைய பிற ஆசிரியர்‌ நியமனங்களுக்கும்‌ - நியமன ஒப்புதல்‌ வழங்க வழிகாட்டு நெறிமுறைகள்‌ வெளியிடுதல்‌ - தொடர்பாக.


பார்வை. 1. மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‌ கிளையில்‌ தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு WA(MD)No.76 of 2019etc. batches. இடைக்கால தீர்ப்பாணை நாள்‌.09.04.20%9.

2. அரசாணை (நிலை) எண்‌ 185.பள்ளிக்‌ கல்வித்துறை, நாள்‌.17.09.2019

3. மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‌ கிளை வழக்கு, WA(MD)No.76 of 2019etc, batches, தீர்ப்பாணை நாள்‌.3103.2021.

4. மாண்பமை புதுதில்லி உச்சநீதிமன்ற சிறப்பு அனுமதி மனு SLP (c) No.15702of 2021, தீர்ப்பாணை நாள்‌.16.02.2024.

5. மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‌ கிளையில்‌ தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்குகள்‌ WA(MD) Nos. 320 of 2023 and 689of 2022 தீர்ப்பாணை நாள்‌.20:11.2023.

6. பள்ளிக்‌ கல்வி ஆணையர்‌ மற்றும்‌ தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ இணை செயல்முறைகள்‌ ந.க. எண்‌. 34116/ டி1/ இ4/ 2013, நாள்‌.29-03-2023.

7. தொடக்கக்கல்வி இயக்குநரின்‌ கடித நக.எண்‌. 004126/எச்/ஜி/2024, நாள்‌ 08.05.2024.


பார்வை 7ல்‌ காணும்‌ கடிதத்தில்‌ தொடக்ககல்வி இயக்குநர்‌, தூத்துக்குடி மாவட்டம்‌, கோவில்பட்டி சரகம்‌, வெங்கடாசலபுரம்‌, புனித ஜார்ஜ்‌ இனிகோ தொடக்கப்பள்ளியின்‌ இடைநிலை ஆசிரியை திருமதி 1, இருதய அமலி என்பவரின்‌ நியமனம்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலரால்‌ ஒப்புதல்‌ அளிக்கப்படாத நிலையில்‌, மேற்படி ஆசிரியர்‌ தணது. நியமனத்திற்கு ஒப்புதல்‌ கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‌ கிளையில்‌ தொடரப்பட்ட வழக்கு பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பாணையில்‌, கீழ்க்காணுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



>>> அரசுக் கடிதம் எண் 4132/தொ.க.2(1)/2024, பள்ளிக்கல்வித்துறை நாள்: 10.05.2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் பணியிட மாறுதல் செய்தல் - பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை (நிலை) எண் : 146, நாள்: 28-06-2024 வெளியீடு...

 


G.O. Ms. No. 146, Dated: 28-06-2024 


அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் பணியிட மாறுதல் செய்தல் - பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை (நிலை) எண் : 146, நாள்: 28-06-2024 வெளியீடு...


அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் மாவட்டத்திற்கு உள்ளேயும் அதன் பின்னரும் உபரி ஆசிரியர் இருந்தால் மாவட்டத்திற்கு வெளியேயும் பணியிட மாறுதல் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு...



>>> அரசாணை (நிலை) எண் : 146, நாள்: 28-06-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பள்ளிக் கல்வி - அரசு உதவிபெறும் பள்ளிகள் - 2023-2024ஆம் கல்வி ஆண்டிற்கான பணியாளர் நிர்ணய அறிக்கையின்படி அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் உபரிப் பணியிடங்களில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது.

பள்ளிக் கல்வி - அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2023- 2024 ஆம் ஆண்டிற்கான பணியாளர் நிர்ணயத்தின்படி, உபரியாகப் பணிபுரிந்துவரும் இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் / மாற்றுப்பணி வழங்க அனுமதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை (நிலை) எண்: 139, நாள்: 19-06-2024 வெளியீடு...


பள்ளிக் கல்வி - அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2023-2024ஆம் ஆண்டிற்கான பணியாளர் நிர்ணயத்தின்படி, உபரியாகப் பணிபுரிந்துவரும் இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் / மாற்றுப்பணி வழங்க அனுமதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை (நிலை) எண்: 139, நாள்: 19-06-2024 வெளியீடு...


School Education - Permission and guidelines for Deployment / deputation of surplus Secondary Grade / Graduate Teachers in government aided primary and middle schools as per staff fixation schedule for the year 2023-2024 - G.O.Ms.No. 139, Dated: 19-06-2024 Released...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2023-2024ஆம் கல்வி ஆண்டு - அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் செய்வது சார்ந்த வழிகாட்டுதல்கள் - பணி நிரவல் கலந்தாய்வு 20-12-2023 அன்று நடைபெறுதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 48834/ டி1/ இ4/ 2023, நாள்: 09-11-2023 (Academic Year 2023-2024 - Guidelines for Counselling of Surplus Teachers in Government Aided Schools - Surplus Counseling to be held on 20-12-2023 - Director of School Education Proceedings Rc.No: 48834/ D1/ E4/ 2023, Dated: 09-11-2023)...

 

2023-2024ஆம் கல்வி ஆண்டு - அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் செய்வது சார்ந்த வழிகாட்டுதல்கள் - பணி நிரவல் கலந்தாய்வு 20-12-2023 அன்று நடைபெறுதல் -  பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 48834/ டி1/ இ4/ 2023, நாள்: 09-11-2023 (Academic Year 2023-2024 - Guidelines for Counselling of Surplus Teachers in Government Aided Schools - Surplus Counseling to be held on 20-12-2023 - Director of School Education Proceedings Rc.No: 48834/ D1/ E4/ 2023, Dated: 09-11-2023)...



>>> பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 48834/ டி1/ இ4/ 2023, நாள்: 09-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசு நிதி உதவி பள்ளிகள் - பணியாளர் நிர்ணயம் சார்ந்து இணை இயக்குநர் கடிதம் ந.க.எண்: 48834/ டி1/ இ4/ 2023, நாள்: 04-08-2023 (Government Aided Schools - Joint Director's Letter No: 48834/ D1/ E4/ 2023, Dated: 04-08-2023 regarding Staff Fixation)...


>>> அரசு நிதி உதவி பள்ளிகள் - பணியாளர் நிர்ணயம் சார்ந்து இணை இயக்குநர் கடிதம் ந.க.எண்: 48834/ டி1/ இ4/ 2023, நாள்: 04-08-2023 (Government Aided Schools - Joint Director's Letter No: 48834/ D1/ E4/ 2023, Dated: 04-08-2023 regarding Staff Fixation)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் (Surplus Teachers Deployment) செய்திட பள்ளிச்செயலாளர்கள் / தாளாளர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்திட விருதுநகர் மாவட்டம் - சிவகாசி மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள் (Proceedings of Sivakasi District Education Officer (Elementary Education) Virudhunagar District to hold a consultation meeting with School Secretaries / Correspondent to fill up Surplus Teachers in Government Aided Primary / Middle schools)...

 

>>> அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் (Surplus Teachers Deployment) செய்திட பள்ளிச்செயலாளர்கள் / தாளாளர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்திட  விருதுநகர் மாவட்டம் - சிவகாசி மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள் (Proceedings of Sivakasi District Education Officer (Elementary Education) Virudhunagar District to hold a consultation meeting with School Secretaries / Correspondent to fill up Surplus Teachers in Government Aided Primary / Middle schools)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு மறுக்கப்படும் அரசின் சலுகைகள் (Benefits denied to Government Aided Schools)...

 


அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு மறுக்கப்படும் அரசின் சலுகைகள் (Benefits denied to Government Aided Schools)...


சென்னையில் 1715-இல் நிறுவப்பட்ட செயின்ட் ஜாா்ஜ் பள்ளியும், திருச்சியில் 1762-இல் நிறுவப்பட்ட பிஷப் ஹீபா் பள்ளியும்தான் தமிழகத்தின் தோற்றுவிக்கப்பட்ட முதல் இரண்டு பள்ளிகள். இவற்றிலிருந்து தொடா்கிறது அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் வரலாறு.


முதல் எஸ்எஸ்எல்சி தோ்வு நடைபெற்ற 1911-இல் தமிழகத்தில் இருந்த அனைத்துப் பள்ளிகளும் நிதி உதவி பெறும் பள்ளிகள்தான்.


கல்வியை அனைவருக்கும் வழங்குவதற்காக அரசு பள்ளிகளுக்கு இணையாக கிராமம் தோறும் நிதி உதவிபெறும் பள்ளிகள் லாப நோக்கமின்றி, சேவை எண்ணம் உடையவா்களால் தொடங்கப்பட்டன. உட்கட்டமைப்பை மட்டும் உருவாக்குங்கள் ஆசிரியா்களுக்கான ஊதியத்தை நாங்கள் தருகிறோம் என அரசு அறிவித்ததைத் தொடா்ந்து தொடங்கப்பட்ட நிதி உதவி பெறும் பள்ளிகள் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள மாணவா்களுக்கும் ஆரம்பக் கல்வியை அளித்தன.


இன்றைய சூழலில் தமிழகத்தில் மூன்று வகையான பள்ளிகள் இயங்குகின்றன. முதல் வகை அரசின் நேரடி நிா்வாகத்தில் உள்ள அரசு பள்ளி, ஊராட்சி ஒன்றிய பள்ளி, நகராட்சி பள்ளி ஆகியவை. இந்த வகை பள்ளிகளின் கட்டமைப்பு, ஆசிரியா் நியமனம், ஆசிரியருக்கான ஊதியம் என அனைத்தும் அரசின் பொறுப்பாகும்.


இரண்டாவது வகை, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள். இப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு, ஆசிரியா் பணியமா்த்துதல் ஆகியவை தனியாா் நிா்வாகத்தின் கீழ் வரும். ஆனால் ஆசிரியா்களுக்கான ஊதியத்தை அரசே வழங்கும்.


மூன்றாவது வகை, நா்சரி, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ எனும் தனியாா் பள்ளிகள். இந்தப் பள்ளிகளின் உட்கடமைப்பு ஆசிரியா் நியமனம் ஆசிரியா் ஊதியம் என அனைத்தும் தனியாரின் கட்டுப்பாட்டில் வரும்.


முதல் இரண்டு வகை பள்ளிகளிலும் மாணவா்களிடம் பள்ளி நிா்வாகம் எவ்வித கட்டணமும் வசூலிப்பது கிடையாது. வசூலிக்கவும் கூடாது. ஆனால் மூன்றாவது வகை தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் கண்டிப்பாக கட்டணம் செலுத்த வேண்டும்.


இந்த வகைப்படுத்தலை வைத்தே முதல் இரண்டு வகை பள்ளிகளில் பயில்பவா்கள் பெரும்பாலும் பொருளாதார ரீதியில் கட்டணம் செலுத்த இயலாதவா்கள் அல்லது விரும்பாதவா்கள் எனப் புரிந்துக் கொள்ளலாம். மூன்றாவது வகை தனியாா் பள்ளியில் பயிலும் மாணவா்கள் விரும்பியோ விரும்பாமலோ கட்டணம் செலுத்திப் பயிலும் மாணவா்கள். கட்டணம் செலுத்தும் அளவிற்கு வருமானமுள்ள குடும்பத்துப் பிள்ளைகள்தான் தனியாா் பள்ளிகளில் பயில்கின்றனா்.


இதில் சில விதிவிலக்குகளும் உண்டு. கட்டணம் கட்ட வசதி இருப்பவா்களும் அருகில் உள்ள அரசு பள்ளியின் தரம் சிறப்பாக இருந்தால் அங்கு தங்கள் பிள்ளைகளை சோ்க்கின்றனா். அதேபோல் பணம் கட்ட வசதி இல்லாதவா்களும் கடன் வாங்கியாவது கட்டணம் கட்டி தங்கள் பிள்ளைகளை தரமான தனியாா் பள்ளியில் படிக்க வைக்கின்றனா்.


பொதுவாக அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் அரசின் சலுகைகளைப் பெற தகுதியானவா்கள். இந்த கல்வி ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் உள்ள 8,400 உதவி பெறும் பள்ளிகளில் சுமாா் 28 லட்சம் மாணவா்கள் பயின்று வருகின்றனா்.


இதுவரை ஆட்சியில் இருந்த அரசுகள் அரசு பள்ளி மாணவா்களையும் உதவி பெறும் பள்ளி மாணவா்களையும் சமமாகவே கருதி சலுகைகளை வழங்கி வந்தன. மதிய உணவு, சீருடை, காலணி, மிதிவண்டி, பாடநூல், பாடக் குறிப்பேடுகள் புத்தகப்பை, மடிக்கணினி பிற்படுத்தப்பட்டோா் - தாழ்த்தப்பட்டோா் உதவித்தொகை என அனைத்து வகையான சலுகைகளையும் அரசு பள்ளி மாணவா்களைப் போலவே உதவி பெறும் பள்ளி மாணவா்களும் பெற்று வந்தனா்.


அண்மைக்காலமாக இந்த நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் அரசு பள்ளி மாணவா்கள் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றால் மருத்துவக் கல்லூரியில் 7.5% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இந்த சலுகை மூலம் ஆண்டுதோறும் சுமாா் 300 அரசு பள்ளிமாணவா்கள் மருத்துவ கல்லூரியில் சேரும் வாய்ப்பு ஏற்பட்டது. இது பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள மாணவா்களுக்கு மருத்துவ கல்வி பயிலும் வாய்ப்பை உருவாக்கியது.


ஆனால் சமீபத்திய அரசு உத்தரவுப்படி இந்த சலுகையை அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் பெற முடியாது. இதுநாள் வரையில் அனைத்து சலுகைகளையும் பெற்று வந்த அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் இந்த உத்தரவினால் பெரும் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.


இதே போல் தற்போதைய அரசால் அறிவிக்கப்பட்டு இருக்கும் மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் கல்வி உதவி திட்டத்தின்படி அரசு பள்ளியில் பயின்று கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு ரூபாய் 1000 உதவித்தொகை அளிக்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பின்படியும் உதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவிகள் உதவித்தொகை பெற இயலாத நிலை உள்ளது.


தமிழக அரசுப்பணி வாய்ப்புகளில் அரசு பள்ளியில் பயின்ற மாணவா்களுக்கு 20% முன்னுரிமை வழங்கப்படும் என்ற அரசாணை வரவேற்கத்தக்கது. ஆனாலும் இந்த வாய்ப்பிலும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவா்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்படவில்லை.


அண்மையில் அரசால் தொடங்கப்பட்டுள்ள பள்ளி மாணவா்களுக்கான காலை உணவு திட்டத்திலும் உதவிபெறும் பள்ளிகள் சோ்க்கப்படவில்லை. ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும் உபகரணங்கள் உதவிபெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை.


அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு சலுகைகள் தொடா்ந்து மறுக்கப்படுவது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது. பெற்றோா்களும் தங்கள் குழந்தைகளை உதவி பெறும் பள்ளியில் சோ்த்ததனால் அவா்களுக்கான வாய்ப்புகள் பறிபோகிறது என்ற மன உளைச்சலில் உள்ளனா்.


இந்த நிலை தொடருமானால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் பெரிதும் பாதிப்படைவா். மேலும், அப்பள்ளிகளில் மாணவா் சோ்க்கை படிப்படியாகக் குறைந்து அவற்றை மூட வேண்டிய நிலை உருவாகக் கூடும்.


அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 28 லட்சம் மாணவா்களின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு முன்போல் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கும் அரசின் சலுகைகளை வழங்கிட வேண்டும்.


நன்றி: தினமணி



நிதியுதவி பெறும்‌ துவக்க/ நடுநிலைப்‌ பள்ளிகளுக்கு 2021-2022ஆம்‌ ஆண்டு இறுதி கற்பிப்பு மற்றும்‌ பராமரிப்பு மானியம்‌ விடுவித்தல்‌ சார்பான அறிவுரைகள் சார்ந்து - தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள் (Proceedings of the Director of Elementary Education - Based on Advice on Release of Final Teaching and Maintenance Grants 2021-2022 for Aided Primary / Middle Schools) ந.க.எண்‌.5510/சி1/2021, நாள்‌.13.01.2022....



>>> தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, சென்னை-6 ந.க.எண்‌.5510/சி1/2021, நாள்‌.13.01.2022...


பொருள்‌: தொடக்கக்‌ கல்வி - நிதியுதவி பெறும்‌ துவக்க/ நடுநிலைப்‌ பள்ளிகளுக்கு 2021-2022ஆம்‌ ஆண்டு இறுதி கற்பிப்பு மற்றும்‌ பராமரிப்பு மானியம்‌ விடுவித்தல்‌ சார்பான அறிவுரைகள் - சார்ந்து.

பார்வை: 1. அரசாணை எண்‌.1228, கல்வி, அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்பத்துறை, நாள்‌.30:12:1994.

2.அரசாணை எண்‌:174, பள்ளிக்‌ கல்வித்‌ (பி2) துறை, நாள்‌.23.06.2000.

3.அரசாணை எண்‌.231, பள்ளிக்‌ கல்வித்‌ துறை. நாள்‌.11.08.2010.

4. அரசாணை (நிலை) எண்‌.101பள்ளிக்‌ கல்வித்துறை. நாள்‌.18.05.2018.

5, அரசாணை (நிலை) எண்‌.108 பள்ளிக்‌ கல்வித்துறை, நாள்‌.28.05.2018.

6.அரசாணை (நிலை) எண்‌.,261, பள்ளிக்‌ கல்வித்‌ (ப௧6) துறை, நாள்‌. 20.12.2018.

7. அரசாணை (நிலை) எண்‌ 119, பள்ளிக்‌ கல்வித்‌ (தொ.க,2(2) துறை, நாள்‌.29.06.2019.

8.தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌. ந.க.எண்‌.005510/சி1/2021, நாள்‌:12.04.2021.

9.தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.005510/சி1/, நாள்‌.10.05.2021.


>>> தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, சென்னை-6 ந.க.எண்‌.5510/சி1/2021, நாள்‌.13.01.2022...

பள்ளிக்கல்வி - வரவு செலவு திட்டம் - 2021 -22ஆம் ஆண்டிற்கான திட்ட மதிப்பீடு இடைக்கால வரவு செலவு திட்டம் - IFHRMS ல் HOD to BCO படி நிலைகளில் சார்நிலை அலுவலர்களுக்கு நிதி ஒதுக்கீடு பகிர்வு செய்தல்...

 


தமிழ்நாடு முழுவதும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கான இம்மாத ஊதியம் பட்ஜெட் வெளியீடு - அடுத்த வாரத்தில் இருந்து அவர்களுக்கு ஊதியம் கிடைக்கும் - பள்ளிக்கல்வித் துறை நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் செயல்முறைகள் ந.க.எண்: 019560/ பி1/ இ1/ 2021, நாள்:09-04-2021 வெளியீடு...

>>> பள்ளிக்கல்வித் துறை நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் செயல்முறைகள் ந.க.எண்: 019560/ பி1/ இ1/ 2021, நாள்:09-04-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

26-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-01-2025 - School Morning Prayer Activities 76வது குடியரசு தின வாழ்த்துகள்... திருக்குறள்: பால்: ...