கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தகவல் அறியும் உரிமை சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தகவல் அறியும் உரிமை சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் / பெற்றோர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய RTI தீர்ப்பு



தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் /  பெற்றோர்கள் அவசியம் அறிந்துகொள்ள  வேண்டிய RTI  தீர்ப்பு


✒ அனைத்து தனியார் (மெட்ரிக்) பள்ளிகள் CBSC மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் முதல்வர்களுக்கும் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தினை (Fee Structure) பொதுமக்கள் கேட்காமலேயே தங்கள் பள்ளிகளின் நுழைவு வாயிலில் பொதுமக்களின் பார்வைக்கு பள்ளியின் விளம்பர பலகையில் விளம்பரம் செய்தும் அனைத்து பள்ளிகளின் இணையதளங்களில் வெளியிடவும் உத்தரவு


✒ தனியார் ( மெட்ரிக்) பள்ளிகள், CBSC மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின் வலியை போக்கும்  ஒர் மகத்தான தீர்ப்பு.


✒ பெற்றோர்கள் தங்கள் நிகழ்கால அத்யாவசிய தேவைகளைக் கூட ஒதுக்கி வைத்து விட்டு தங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு செலவிடக்கூடிய ஒவ்வொரு காசிலும் பெற்றோரின் உழைப்பும் இரத்தமும், வியர்வையும் தங்கள் பிள்ளைகள் வெல்ல வேண்டும் என்ற பேரவாவும் அடங்கியுள்ளது.


✒ தங்கள் பொருளாதார தகுதியை மீறி  ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக அளிக்கும் கல்வி கட்டணத்தின் ஒவ்வொரு ரூபாய்க்கும் அவர்களுக்கு வெளிப்படை தன்மையோடு கூடிய கணக்கு வழக்குகளை  கல்வி நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டியது இந்தியா போன்ற உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் அடிப்படையான அவசியமான ஒன்றாகும்.


✒ மாணவர்களின் கல்விக் கட்டணம் என்பது பொது நலன் சார்ந்தது ஆகும்.


✒ மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் கல்வி நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மை மிகமிக அவசியமான ஒன்றாகும்.


✒ RTI தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) ல் தகவல் கோரி இரண்டரை ஆண்டுகளாக தகவல் வழங்காத பொது தகவல் அலுவலர் 

 RTI  பிரிவு 19(8)(b) -ன்கீழ் ரூ.25,000 இழப்பீடு வழங்க உத்தரவு.


✒உரிய காலத்திற்குள் தகவல் வழங்காத  பொது தகவல் அலுவலர் மீது  பிரிவு 20(2)ன் கீழ்  துறை ரீதியான நடவடிக்கை ஏன் மேற்கொள்ளக்கூடாது என்பதற்கான எழுத்து மூலம்  விளக்கம் அளிக்கவும் உத்தரவு..


✒ தகவல் ஆணையத்தின் ஆணையினை சிறிதும் மதிக்காமலும் பொருட்படுத்தாமலும் இருந்த பொது தகவல் அலுவலரை ஆணையம் வன்மையாக  கண்டிக்கிறது.


✒ RTI பிரிவு 19(8XaX2) ன்படி இயக்குநர், (தனியார் பள்ளிகள்) பள்ளிக்கல்வித்துறை சென்னை அவர்களை  பொது தகவல் அலுவலராக நியமிக்க கூடும் எனவும் ஆணையம் எச்சரிக்கின்றது.


✒ மாநில தகவல் ஆணையர் திரு.வி.பி.ஆர். இளம்பரிதி, MA., B.L., M.Phil., அவர்கள்  உத்தரவு 


வழக்கு எண் : 

 

SA 4827/A/2023 &  SA 17794/A/2023 

ஆணை நாள் :  25.05.2026


தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005

RTIACT2005



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


வருகைப் பதிவேட்டில் ஆசிரியர்களின் பெயர் எழுதும் முறை - RTI தகவல்


 வருகைப் பதிவேட்டில்  ஆசிரியர்களின் பெயர் எழுதும் முறை - தகவல் அறியும் உரிமைச்  சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதில்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



 மூத்தோர், இளையோர் - வருகைப் பதிவேட்டில் முதலில் யார் பெயர் எழுத வேண்டும்? மற்றும் தலைமை பொறுப்பு எந்த ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும் - RTI தகவல்


Seniors vs. Juniors: Whose name should be entered first in the attendance register? And to which teacher should the incharge responsibility be assigned? — RTI Information.



தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005


பொது நகவல் வழங்கும் அலுவலர்


வட்டாரக் கல்வி அலுவலகம், குருவிகுளம் 

ந.க.எண்.747/அ2/2018, நாள்.30-08-2018


பொருள்.


தகவல் அறியும் உரிமைச்சட்டம்-2005-மனுதாரர் திரு. க.நடராஜன் என்பாருக்கு உரிய தகவல் அளித்தல் - சார்பு


பார்வை-


1. திருநெல்வேலி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக பொது தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் நேர்முக உதவியாளர் அவர்களின் சுடித எண்.5283/ஆ3/2017, நாள்.-11-12-2017.


2 குருவிகுளம் சரகம், பழங்கோட்டை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர் திரு. சு. நடராஜன் என்பாரது மனு. நாள்.06-12-2017.


பார்வை காணும் கடிதத்தின் ஆணைக்கிணங்க மற்றும் பார்வை(2)ல் காணும் மனுதாரரின் மனுவினை ஆய்வு செய்து தகவல் உரிமைச் சட்டம் பிரிவு6(3)ன் கீழ் மனுதாரருக்கு கீழ்கண்டவாறு தகவல் அளிக்கப்படுகிறது.


பார்வை(2)ல் காணும் மனுவின் படி திரு. சந்திரசேகரன் என்பார் 15-10-2010 ல் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணிநிலையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, திருமதி. து.சுப்புரத்தினம் என்பார் 23-07-2012 ல் ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


மேற்படி, நிகழ்வில் பட்டதாரி ஆசிரியரான திரு. ஷ. சந்திரசேகரன் என்பாரை விட ஆங்கில பட்டதாரி ஆசிரியையான திருமதி. து.சுப்புரத்தினம் என்பார் இளையவரே ஆவார்.



மனுதாரரின் கேள்வி & கேள்விக்கான விளக்கம்


1. ஆசிரியர் வருகைப் பதிவேட்டில் இருவரில் யாருடைய பெயர் முதலில் எழுதப்பட வேண்டும்


பட்டதாரி ஆசிரியர் பணி நிலையில் மூத்தோரின் பெயரே முதலில் எழுதப்பட வேண்டும்


2. தலைமை ஆசிரியர் விடுப்பு எடுத்தால் பொறுப்பை யாரிடம் ஒப்படைக்க வேண்டும்


மூத்தோருக்கே முதலில் இவ் பொறுப்பினை பெறும் உரிமை உண்டு.


வட்டாரக் கல்வி அலுவலகம்

குருவிகுளம்


பெறுநர்

திரு.சு.நடராஜன்,

தலைமை ஆசிரியர்,

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,

பழங்கோட்டை,

குருவிகுளம் சரகம்.


நகல்.

மாவட்டக் கல்வி அலுவலர்,

மாவட்டக் கல்வி அலுவலகம்,

சங்கரன்கோவில் - தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது.


TET தேர்ச்சி சான்றிதழ் Genuineness பெறுதல் - TRB இணை இயக்குநரின் கடிதம்

 

 

ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி சான்றிதழ் உண்மைத்தன்மை பெறுதல் - விண்ணப்பிக்கும் முறை - ஆசிரியர் தேர்வு வாரியம் இணை இயக்குநரின் கடிதம் 


Obtaining Genuineness of Teacher Eligibility Test Pass Certificate - Letter from the Joint Director, Teachers Recruitment Board



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


குருநானக் ஜெயந்தி RH / RL குறித்த RTI தகவல்


 குருநானக் ஜெயந்தி வரையறுக்கப்பட்ட விடுப்பு RH / RL குறித்த RTI தகவல்


நண்பர்களே வணக்கம் 🙏


என்ன இது மறுபடியும் முதலில் இருந்தா?

என தவறாக நினைக்க வேண்டாம்


5/11/25 RH/RL Guru Nanak jayanti உண்டு என பதிவு செய்து இருந்தோம் 🙏...


சிலர் இல்லை என்று மறுத்துள்ளனர்...


சிலர் DEO office இல் கேட்டோம்... கிடையாது என்று சொல்லி விட்டனர்...


சிலர் தவறாக RL/RH போட்டால் பின்னர் தணிக்கை தடை ஊதியம் திருப்பி செலுத்த வேண்டும் என்ற சொன்னார்கள்..


ஒரு படி மேலே சென்று சிலர் முதலில் RL ok என்று சொல்லி விட்டு 5/11/25 அன்று கடைசியில் இல்லை சார் RL கொடுத்தவர்களுக்கு CL என போட்டு உள்ளார்கள் என விதவிதமான பதிவுகள் 🙏


RL/RH இல்லை என்ற தங்களின் நிலைப்பாட்டை உறுதி செய்ய..

2019 இல் guru nanak jayanti எடுத்து விட்டார்கள்???

2022 அரசாணை 14 பதிவு செய்தேன்...


இல்லை சார் 2024 இல் ஒரு அரசாணை மூலம் guru nanak jayanti நீக்கப்பட்ட தாம் என சொன்னார்கள் 🙏


ஒரு சிலர் list of holiday GO 792 ஐ பகிர்ந்து இதில் Guru Nanak jayanti இல்லை என்றார்கள் 🫣


நிற்க 🙏


5/11/25 

RH/RL உள்ளது என்பதை உறுதி செய்ய வேண்டிய நிலையில்

RTI மூலம் 7/11/25 இல் தகவல் கேட்டேன்

இன்று 12/11/25 இல் கிடைக்கப் பெற்ற RTI படி

அரசாணை எண் 14, நாள் 01.02.2022 இன் படி வரிசை எண் 25 இல் குரு நானக் ஜெயந்தி RH/RL உண்டு 🙏




தகவலுக்காக

க.செல்வக்குமார்

தலைமை ஆசிரியர்

அரசு மேல்நிலைப் பள்ளி

மோ சுப்புலாபுரம்...

மதுரை மாவட்டம் 🙏



PANCA Stainless Steel Paneer Maker Mould Big Size, Paneer Press With Lid, Tofu Press Mould Maker, Whey Seperator (Square, 550ml Capacity)


https://amzn.to/4p7jCRU




ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு தொடர்பாக மனித வள மேலாண்மைத் துறை பொதுத் தகவல் அலுவலர்/ அரசு சார்புச் செயலாளர் அவர்களின் விளக்கக் கடிதம்

 


ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு தொடர்பாக மனித வள மேலாண்மைத் துறை பொதுத் தகவல் அலுவலர்/ அரசு சார்புச் செயலாளர் அவர்களின் விளக்கக் கடிதம், நாள் : 15-09-2025


RTI letter from the Public Information Officer/Deputy Secretary to the Government, Human Resource Management Department, regarding the Surrender of Earned Leave, Date: 15-09-2025



EL Surrender Clarification RTI Reply 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005

மனித வள மேலாண்மைத் (அவி.3) துறை.

தலைமைச் செயலகம்.

சென்னை 600 009.

தொலைபேசி: 044 2566 5252

மின்னஞ்சல்: usfr2.hrm@tn.gov.in


கடித எண்.11588824/அவி-3(2)/2025-1,நாள் 15.09.2025

அனுப்புநர்

திரு.அ.ரெ.ராஜன், பி.எஸ்.சி., பி.எட்., எம்.ஏ.

பொதுத் தகவல் அலுவலர்/

அரசு சார்புச் செயலாளர் (அவி-2).


பெறுநர்


ஐயா.

பொருள்: தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 - சில தகவல்கள் கோரியது பதில் வழங்குவது தொடர்பாக.

பார்வை: தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 இன் கீழ் பெறப்பட்ட தங்களின் மனு நாள் 28.08.2025.

(இத்துறையில் பெறப்பட்ட நாள் 03.09.2025).


பார்வையில் கண்டுள்ள மனுவின் மீது தங்களின் கவனம் ஈர்க்கப்படுவதுடன், அம்மனுவில் தாங்கள் கோரியுள்ள தகவல்கள், கேள்விகள் / தெளிவுரைகளாக உள்ளதால், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005-ன் கீழ் உள்ள பிரிவு 2(f) இன் படி அதற்கு பதிலோ/ விளக்கங்களோ/ தெளிவுரைகளோ வழங்க வழிவகையில்லை. இருப்பினும் அரசாணை (நிலை) எண்.35, மனித வள மேலாண்மைத் (அ.வி.III) துறை, நாள் 30.06.2025 இல் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.10.2025 முதல் 15 நாட்கள் ஈட்டிய விடுப்பினை முன்னர் ஒப்புவிப்பு செய்த நாளினை அடிப்படையாகக் கொண்டும், தற்போது சரண் செய்து பணப்பலன்களை பெறுவதற்கு அனுமதி அளித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அவ்வரசாணையில் 27.04.2020 முதல் 30.09.2025 வரை புதிதாகப் பணியில் சேர்ந்த பணியாளர்கள் எவ்வாறு ஈட்டிய விடுப்பினை சரண் செய்து பணப்பலன் பெறுவது குறித்தும் ஆணையிடப்பட்டுள்ளது.


மேலும், மேற்காண் இரண்டு நிகழ்வுகளுக்கும் உட்படாமல், இதுவரை ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யாத அரசுப் பணியாளர்கள் 01.10.2025 முதல் 15 நாட்கள் ஈட்டிய விடுப்பினை அவரவர் விருப்பப்பட்ட நாளில் ஒப்படைப்பு செய்து பணப்பலன் பெற்றுக் கொள்ளலாம் என்பதனைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.


தங்கள் உண்மையுள்ள,

அ.ரெ.ராஜன்

(அ.ரெ.ராஜன்) 17.09.2025

பொதுத் தகவல் அலுவலர்/

அரசு சார்புச் செயலாளர் (அவி-2).

15.09-25



கோப்புகள் காணவில்லை என்று RTI பதில் வழங்கப் பெற்றால், துறைரீதியான நடவடிக்கை


 கோப்புகள் காணவில்லை என்று RTI பதில் வழங்கப் பெற்றால், துறைரீதியான நடவடிக்கை : தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு


RTI தகவல் சார்ந்து கோப்புகள் காணவில்லை என்று பொதுத் தகவல் அலுவலரால் பதில் வழங்கப் பெற்றால், துறைரீதியான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு


அலுவலகத்தில் கோப்பு காணாமல் போய்விட்டது என்று பொது தகவல் அலுவலரால்  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கூறப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு தகவல் ஆணையம் பரிந்துரை செய்த உத்தரவு நகல்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


பணி நிரவல் செய்யப்படும் முறை - RTI தகவல்


பணி நிரவல் செய்யப்படும் முறை - தகவல் அறியும் உரிமை சட்ட RTI பதில் 


பணி நிரவல் கலந்தாய்வில் (surplus) கலந்து கொள்ள, பள்ளியில் பணிபுரியும் மூத்த (senior most) ஆசிரியரின் பெயர் இடம் பெற வேண்டுமா? அல்லது இளையவரின் (Junior most) பெயர் இடம் பெற வேண்டுமா? - RTI Reply 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




IGNOU B.Ed பட்டம் Evaluation செய்ய வேண்டியதில்லை - RTI Reply



IGNOU B.Ed பட்டம் Evaluation செய்ய வேண்டியதில்லை - RTI Reply 


புதுடெல்லி இந்திரா காந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் பி.எட் (B.Ed) பட்டம் பிற பல்கலைக் கழகங்களால் வழங்கப்படும் பி எட் (B.Ed) பட்டத்திற்கு இணையானது என மதிப்பீடு செய்ய வேண்டிய தேவையில்லை - RTI மூலம் பெறப்பட்ட பதில்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசு ஊழியர்களின் சொத்துகள் மற்றும் கடன்கள் விவரம் - தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு



அரசு ஊழியர்களின் சொத்துகள் மற்றும் கடன்கள் விவரம் - தமிழ்நாடு தகவல் ஆணையம்  உத்தரவு


அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை வெளியிட முடியாது - தமிழ்நாடு தகவல் ஆணையம்


பொதுநலன் இல்லாமல் தனிப்பட்ட விவரங்களை வெளியிட முடியாது.


காளிப்பிரியன் ஊழல் செய்திருந்ததாக கருதினால் உரிய அமைப்புகளிடம் புகார் அளிக்கலாம்.


அரசு ஊழியர்களின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்களை வெளியிட முடியாது என்று தமிழ்நாடு தகவல் ஆணையம் அதிரடியாக தெரிவித்துள்ளது.


மேலும், பொதுநலன் இல்லாமல் தனிப்பட்ட விவரங்களை வெளியிட முடியாது என்றும் தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


கிருஷ்ணகிரியில் நீர்த்தேக்க திட்ட உதவி பொறியாளராக பணியாற்றிய காளிப்பிரியனின் சொத்து, கடன், வருமான வரி விவரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சீனிவாசன் என்பவர் கோரி இருந்தார்.


மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் ஆர்.ப்ரியக்குமார், விண்ணப்பத்தை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


காளிப்பிரியன் ஊழல் செய்திருந்ததாக கருதினால் உரிய அமைப்புகளிடம் புகார் அளிக்கலாம் என்றும் மாநில தகவல் ஆணையர் உத்தரவிட்டார்.


Procedures to be followed on RTI Act petitions and appeals



தகவல் பெறும் உரிமைச் சட்ட மனுக்கள் மற்றும் மேல் முறையீட்டு மனுக்களின் மீது பொதுத் தகவல் அலுவலர்கள் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் வெளியீடு


Promulgation of procedures to be followed by Public Information Officers and Appellate Officers on Right to Information Act petitions and appeals



தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் புறப்படும் மனுக்கள் மீது பொது தகவல் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Can I take leave ( CL , EL ) on the day the school starts after the end of term vacation? School Education Department RTI Response

 


பருவ விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் நாளில் விடுப்பு ( CL , EL ) எடுக்கலாமா? பள்ளிக்கல்வித்துறை தகவல் அறியும் உரிமை சட்ட RTI பதில்


Can I take leave ( CL , EL ) on the day the school starts after the end of term vacation? School Education Department RTI Response


பருவ விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் நாளில் (9+1=10) த.வி எடுக்க கூடாது, கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் முதல் நாளில் விடுப்பு எடுக்க கூடாது என நாமே விதி வகுத்துக்கொள்கிறோம். உண்மை விதி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.


பள்ளிக்கல்வித்துறை மூலம் 2007 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட RTI பதில்.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


எண்ணும் எழுத்தும் - Lesson plan கணினியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம் - RTI...

 


எண்ணும் எழுத்தும் - Lesson plan கணினியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம் - RTI...


Lesson plan can be typed on the computer and a Print Out copy can be kept - RTI...


மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரின் தகவல் அறியும் உரிமைச் சட்ட பதில் கடிதம் ந.க.எண்: 25235 /F2/ 2023, நாள் 11.08.2023...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பொருள்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-இன்படி, தூத்துக்குடி மாவட்டம், திரு. மா.முருகேசன் என்பாரின் மேல்முறையீடு - தகவல் அளித்தல் - தொடர்பாக.


பார்வை

தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த திரு. மா.முருகேசன், என்பாரது மனு நாள்:24.07.2023.


பார்வையில் காணும் மனுவில், தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005-இன் கீழ் திரு. மா. முருகேசன் என்பார் கோரிய தகவல் பின்வருமாறு அளிக்கப்படுகிறது.


கோரப்பட்ட தகவல்


எண்ணும் எழுத்தும் வகுப்பு 1 முதல் 3 வரை எண்ணும் எழுத்தும் வகுப்பு 1 முதல் 3 பாடக்குறிப்பினை (Lesson Plan) கணினியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக் கொள்ளக்கூடாது என்று அரசாணைகள், செயல்முறைகள் இருப்பின் அதன் நகல் கோரப்பட்டுள்ளது.


தகவலுக்கான பதில்


வரை பாடக் குறிப்பினை (Lesson Plan) கணினியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துகொள்ளலாம். ஆனால், இதற்கான அரசாணைகள், செயல்முறை ஆணைகள் ஏதும் இந்நிறுவனத்தில் இல்லை என்ற விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.


இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தனி ஊதியம் ₹2000/-ஐ ஓய்வூதியப் பணப்பயன்களுக்கு கணக்கில் கொள்ளலாம் - தகவல் அறியும் உரிமை சட்டம் RTI கடிதம்...


 இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தனி ஊதியம் PP ₹2000/-ஐ ஓய்வூதியப் பணப்பயன்களுக்கு கணக்கில் கொள்ளலாம் - தகவல் அறியும் உரிமை சட்டம் RTI - நிதித்துறை பொது தகவல் அலுவலர் மற்றும் அரசு சார்புச் செயலாளர் கடிதம் எண்: E7717204 / சிஎம்பிசி/ 2024, நாள்: 22-07-2024...



Personal Pay of ₹2000/- paid to Secondary Grade Teachers can be counted towards pension benefit - Right to Information Act RTI - Finance Department Public Information Officer and Private Secretary to Government Letter No: E7717204 / CMPC/ 2024, Dated: 22-07-2024...







ஆசிரியர் வருகை பதிவேட்டில் பெயர் எழுதப்பட வேண்டிய முறை - முதலமைச்சர் தனிப்பிரிவில் பெறப்பட்ட தகவல்...


ஆசிரியர் வருகை பதிவேட்டில் பெயர் எழுதப்பட வேண்டிய முறை - முதலமைச்சர் தனிப்பிரிவில் பெறப்பட்ட தகவல்...


அரசாணை 243ன் படி  பள்ளி ஆசிரியர் வருகை பதிவேட்டில் பணி மூப்பின் அடிப்படையில்  பெயர் எழுதப்பட வேண்டும் என்பதற்கான முதலமைச்சர் தனிப்பிரிவில் பெறப்பட்ட தகவல்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


சாதாரண குடிமகன் பச்சை மையினால் கையொப்பமிடக் கூடாது என்பதற்கான அரசாணைகள் எதுவும் இல்லை - மாவட்ட வருவாய் அலுவலர்...



 சாதாரண குடிமகன் பச்சை மையினால் கையொப்பமிடக் கூடாது என்பதற்கான அரசாணைகள் எதுவும் இல்லை - மாவட்ட வருவாய் அலுவலர்...



There are no ordinances that prevent ordinary citizens from signing in green ink - District Revenue Officer...





வாக்குச்சாவடிச் சீட்டு விநியோகம் செய்வதற்கான மதிப்பூதியம் - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் தகவல் அறியும் உரிமைச் சட்ட பதில் கடிதம்...

 


வாக்குச்சாவடிச் சீட்டு விநியோகம் செய்வதற்கான மதிப்பூதியம் - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் தகவல் அறியும் உரிமைச் சட்ட பதில் கடிதம்...


Remuneration for Distribution of Booth Slips - Tamil Nadu State Election Commission's Right to Information Act Reply Letter...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




நிலுவையில் உள்ள RTI மேல்முறையீட்டு மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வித் துறை உத்தரவு (School Education Department orders action on pending RTI appeals)...



 நிலுவையில் உள்ள RTI மேல்முறையீட்டு மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வித் துறை உத்தரவு (School Education Department orders action on pending RTI appeals)...


>>> பள்ளிக்கல்வி இயக்குநரக உதவி இயக்குநரின் கடிதம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஆசிரியர்களுக்கு BRTE's மூலம் பயிற்சி வழங்க கோரியதற்கு - மாநில திட்ட இயக்குநரின் பதில் ஓ.மு.எண்: 1212/ A3/ ஒபக/ 2023, நாள்: 31-07-2023 (Regarding the request for imparting training to teachers through BRTE's - State Project Director's reply O.M.No: 1212/ A3/ SS/ 2023, Dated: 31-07-2023)...


>>> ஆசிரியர்களுக்கு BRTE's மூலம் பயிற்சி வழங்க கோரியதற்கு - மாநில திட்ட இயக்குநரின் பதில் ஓ.மு.எண்: 1212/ A3/ ஒபக/ 2023, நாள்: 31-07-2023 (Regarding the request for imparting training to teachers through BRTE's - State Project Director's reply O.M.No: 1212/ A3/ SS/ 2023, Dated: 31-07-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

சாமானிய இந்திய குடிமகன் பச்சை மையினால் கையொப்பமிடக் கூடாது என்பதற்கான அரசால் பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் இல்லை - தேனி மாவட்ட வருவாய் அலுவலரின் தகவல் அறிவிப்பு, நாள்: 18-05-2023 (NO ORDERS ISSUED BY THE GOVERNMENT NOT TO SIGN IN GREEN INK FOR A COMMON INDIAN CITIZEN - THENI DISTRICT REVENUE OFFICER INFORMATION NOTIFICATION, DATED: 18-05-2023)...



>>> சாமானிய இந்திய குடிமகன் பச்சை மையினால் கையொப்பமிடக் கூடாது என்பதற்கான அரசால் பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் இல்லை - தேனி மாவட்ட வருவாய் அலுவலரின் தகவல் அறிவிப்பு, நாள்: 18-05-2023 (NO ORDERS ISSUED BY THE GOVERNMENT NOT TO SIGN IN GREEN INK FOR A COMMON INDIAN CITIZEN - THENI DISTRICT REVENUE OFFICER INFORMATION NOTIFICATION, DATED: 18-05-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2035ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கு சொந்த விண்வெளி நிலையம்

  2035ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைத்துவிடும் என இஸ்ரோ ISRO தலைவர் நாராயணன் அறிவிப்பு  2035ஆம் ஆண்டுக்குள் இந்தி...