கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SCHOOL EDUCATION லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SCHOOL EDUCATION லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் ஏழு பணித் தொகுதிகளின் சிறப்பு பணி விதிமுறைகளில் (TN School Education Department Service rules) குறிப்பிடப்பட்டுள்ள மாற்றங்கள்



தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் ஏழு பணித் தொகுதிகளின் சிறப்பு பணி விதிமுறைகளில்  (TN School Education Department Service rules) குறிப்பிடப்பட்டுள்ள மாற்றங்கள் 


நண்பர்களே வணக்கம் 🙏


தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் ஏழு பணித் தொகுதிகளின் சிறப்பு பணி விதிமுறைகள் ( special rules) அடங்கிய அரசிதழ் ( Service rules) 3/6/26 நாளிட்டு வெளி வந்துள்ளது... 

பார்க்க இணைப்பு 


எனது பார்வையில் 

( *மாற்றங்கள் மட்டும்* )


1) High school HM பதவி உயர்வு பெற 

School education Admin test paper 1 & 2 கட்டாயம்.

(TET பற்றிய (தேவை என) குறிப்புகள் இல்லை)


2) High school HM பதவி உயர்வு பெற

Account test for subordinate service test part 1 தேர்ச்சி தேவை என உள்ளது ( முன்பு EO or Account test part 1 என இருந்தது, தற்போது EO missing) ( திருத்தம் வரலாம்)


3) DEO requirement by transfer (promotion) 

( High school HM/ HSS HM to DEO) 

School Ed Admin test paper 1 & 2 தேவை என உள்ளது 

( 30.1.2020 க்கு முன் மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு விலக்கு) 


4) High school HM/ HSS HM இல் இருந்து DEO வின் போது (40%, 35% )

அதில்

High school HM

HR Sec HM

High school HM

HR sec HM

இப்படி ஒருவர் மாற்றி ஒருவர் சுழற்சி முறையில் வாய்ப்பு வழங்கப்படும்...


அதில் ஒருவேளை ஒரு High school HM DEO ஆக விரும்பவில்லை என்றால் அந்த வாய்ப்பு seniority படி அடுத்த High school HM க்கு தான் செல்லும் அவரும் வேண்டாம் எனில் அடுத்த High school HM க்கு செல்லும்...


இதே போல் தான் ஒரு HR Sec HM வேண்டாம் என்றால் அந்த வாய்ப்பு பட்டியலில் உள்ள அடுத்த HSS HM க்கு தான் செல்லும்...


இந்த முறையில் சிறப்பு என்னவென்றால் 15 DEO வாய்ப்பு எனில் அதில் கட்டாயம் 

8 High school HM

7 HR Sec HM 

இடம் பெறுவார்கள்...

யார் relinquish செய்தாலும் 

இந்த ratio maintain ஆகும்...


5) PG appointment

50% direct

50% promotion

அந்த 50% direct இல்

8% SGT or its equivalent from Govt/Municipal/Aided

+ *Graduate Teacher (BT) from Govt/Municipal PUMS*

2% Ministerial staff


அதாவது Govt/Municipal Middle school BT க்கு 8% Direct PG requirements இல் வாய்ப்பு ( Sgt & others உடன் சேர்ந்து) வழங்கப்பட்டுள்ளது இது மட்டுமே புதிது ...

இது பதவி உயர்வு அல்ல... 

நேரடி நியமனத்தில் ஏற்கனவே Sgt க்கு இட ஒதுக்கீடு இருந்தது தற்போது அவர்களுடன் சேர்த்து Elementary Ed Dept BT க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது ..

(பதவி உயர்வு அல்ல நேரடி தேர்வில் இட ஒதுக்கீடு மட்டும்)


6) அதேபோல் PG promotion இல் TET குறிப்பிட வில்லை... 


7) RTE act படி 1-8 வகுப்பு கையாளுபவர்களுக்கு மட்டுமே TET needed என உள்ளது ( Middle school HM, BT, Primary HM ஆக பதவி உயர்விற்கு TET must)


8) RTE act வரம்பிற்குள் இல்லாத PGT (BT to PG) ,  High school HM (BT/BEO to HS HM) க்கு பதவி உயர்வில் TET தேவை என்று இல்லை... 


கூடுதல் தகவல்கள்/விவரங்களுக்கு விரைவில்


தகவலுக்காக

க.செல்வக்குமார்

தலைமை ஆசிரியர்

அரசு மேல்நிலைப் பள்ளி

மதுரை மாவட்டம்

7/6/26🙏



TN School Education Department Service Rules Reissued - Tamilnadu Government Gazette No. 22, Dated : 03-06-2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 





TN School Education Department Service Rules Reissued - Gazette No. 22, Dated : 03-06-2026



தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி - இயக்குநர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள், மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு தேவையான தகுதிகள் - அரசிதழ் வெளியீடு


Tamil Nadu Government School Education - Qualifications required for appointment and promotion of Directors, Chief Educational Officers, District Educational Officers and Block Educational Officers, Headmasters of Higher Secondary School, High School, Middle School and Elementary School, Post Graduate Teachers, Graduate Teachers and Secondary Grade Teachers - Gazette Publication


தமிழ்நாடு அரசு கல்வி, கல்விசார் பணிகள் தொடர்பாக அரசிதழ் வெளியீடு - உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு TET தேவையில்லை (தேவை என்று குறிப்பிடவில்லை) - ஆனால் PSHM, MSHM & பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு TET கட்டாயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது



TN School Education Department Service Rules Reissued - Tamilnadu Government Gazette No. 22, Dated : 03-06-2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




Schemes implemented in TNSED



பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்தப்பட்டுள்ள பல திட்டங்கள் குறித்த தகவல் தொகுப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 2805, நாள் : 23-11-2025


Schemes implemented in TNSED


Information collection on various schemes implemented in the School Education Department - Tamil Nadu Government Press Release No.: 2805, Date: 23-11-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Yeturu's Aloe Refresh Premium Soap 100gms (Set of 4)


https://amzn.to/49BJnoP




பள்ளிக் கல்வித் துறையில் உள்ள தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம் செய்த அரசாணையில் திருத்தங்கள் மேற்கொண்டு புதிய அரசாணை நிலை எண் : 215, நாள் : 23-09-2025 வெளியீடு

 

பள்ளிக் கல்வித் துறையில் உள்ள தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம் செய்த அரசாணையில் திருத்தங்கள் மேற்கொண்டு புதிய அரசாணை நிலை எண் : 215, நாள் : 23-09-2025 வெளியீடு



G.O.Ms.No.215 , Dated : 23-09-2025 - Post Permanent - Amendment



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


2025-2026 பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகள்



2025-2026 பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையில் இன்று (25.04.2025) வெளியிடப்பட்ட பல்வேறு  அறிவிப்புகள்


Various announcements released today (25.04.2025) in the 2025-2026 School Education Department Grant Request



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



14 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 20 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.



>>> அறிவிப்புகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



சட்டப்பேரவையில் பள்ளி கல்வித்துறைக்கான புதிய அறிவிப்புகள்:


அரசுப் பள்ளிகளில் 6 - 8ம் வகுப்பு பயிலும் 13 லட்ச மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்தும் வகையில் 'திறன் எண்ணும் முனைப்பு இயக்கம்' ரூ.19 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.


பள்ளி நூலகங்கள் வாயிலாக மாணவர்களின் அறிவுத் தேடல் மற்றும் வாசிப்புத் திறன்கள் மேம்படுத்தப்படும்.


கலைத்திருவிழாப் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ  மாணவியர்களுக்குக் ”கலைச்சிற்பி” என்ற தலைப்பில் கோடைக்கால சிறப்பு முகாம் நடத்தப்படும்.


தொழிற்பயிற்சி நிலைய ஆய்வகங்கள் வழியாக 12,000 மாணவர்களுக்கு ரூ.13 கோடி மதிப்பீட்டில் திறன் பயிற்சி அளிக்கப்படும்.


10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சிபெறும் அரசுப் பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.


புதிய தொடக்கப் பள்ளிகள் 13 தொடங்கப்படும், 38 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். 


மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.


தனியார் சுயநிதி மற்றும் பிற வாரியப் பள்ளிகளில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர்களுக்கு ரூ.4.94 லட்சம் மதிப்பீட்டில் பயிற்சி வழங்கப்படும்.


 ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அரசின் துறைத் தேர்வுகளுக்கான நூல்கள் வெளியிடப்படும்.


 ரூ.30 கோடி மதிப்பீட்டில் நூலகக் கட்டடங்கள் மறுகட்டமைப்பு செய்யப்படும்.


அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கருத்தரங்கக்கூடம் அமைக்கப்படும்.


இசைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கை பெறும் வகையில் 10,12ம் வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும்.


New Teacher appointment and Promotion case - School Education Minister's response in the Legislative Assembly



 புதிய ஆசிரியர் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு வழக்கு தொடர்பாக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்களின் பதில் 


The Minister of School Education's response in the Legislative Assembly regarding the new teacher appointment and promotion case




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


Achievements of School Education Department - Press Release No: 1397, Date: 10-09-2024...


 திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறையின் சாதனைகள் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு எண்: 1397, நாள்: 10-09-2024...


Achievements of School Education Department under Dravida Model Government - Government of Tamil Nadu Press Release No: 1397, Date: 10-09-2024...





வருகைப்பதிவு, தேர்வு முடிவுகள் உள்பட மாணவர்களின் அனைத்து விவரங்களையும் பெற்றோர் அறிய நவீன அம்சங்களுடன் செயலி விரைவில் அறிமுகம்...



வருகைப்பதிவு, தேர்வு முடிவுகள் உள்பட மாணவர்களின் அனைத்து விவரங்களையும் பெற்றோர் அறிய நவீன அம்சங்களுடன் செயலி விரைவில் அறிமுகம்...




The application will soon be launched with modern features for parents to know all the details of students including attendance, exam results...





பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பு 2024-25 - பள்ளிக்கல்வி துறை மானிய கோரிக்கை...

 


🏫🏫🏫🏫🏫🏫🏫🏫

பள்ளிக் கல்வித் துறை - கொள்கை விளக்கக் குறிப்பு மற்றும் செலவின விவரங்கள் 2024-2025...


பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பு 2024-25 - பள்ளிக்கல்வி துறை மானிய கோரிக்கை...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>>  பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை எண்: 43 - அறிவிப்புகள் - 2024-25...


பள்ளிக் கல்வித் துறையின் அமைப்பு முறைகள் மற்றும் தரத்தினை மேம்படுத்த மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைத்து கண்காணித்திட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவு...


பள்ளிக் கல்வித் துறையின் அமைப்பு முறைகள் மற்றும் தரத்தினை மேம்படுத்த மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைத்து கண்காணித்திட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தா மீனா உத்தரவு & மாவட்ட அளவிலான கல்வி ஆய்வுக்கான வழிகாட்டு நெறிமுறகள் - Guidelines for District Education Review...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மாபெரும் வாசிப்பு இயக்கம் என்னும் முன்னோடி திட்டத்தில் பங்கு பெற எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை அழைப்பு (The Tamil Nadu Government School Education Department invites writers to participate in the pilot program of the Great Reading Movement)...



  மாபெரும் வாசிப்பு இயக்கம் என்னும் முன்னோடி திட்டத்தில் பங்கு பெற எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை அழைப்பு (The Tamil Nadu Government School Education Department invites writers to participate in the pilot program of the Great Reading Movement)...


எழுத்தாளர்களுக்கு ஓர் அழைப்பு

*************************************


வணக்கம்!


தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் முக்கியமான திட்டமான மாபெரும் வாசிப்பு இயக்கத்தில் தங்களின் படைப்புகளைத் தந்து பங்கேற்பினை நல்க அன்புடன் அழைக்கிறோம்.


தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக மாபெரும் வாசிப்பு இயக்கம் என்ற திட்டம் தற்போது முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 


இதில் குழந்தைகளின் வாசிப்பு நிலைகளுக்கு ஏற்ப நுழை, நட, ஓடு, பற என்ற வகைகளில் ஒரு கதை, ஒரு புத்தகம், 16 பக்கம் என முதல் கட்டமாக 53 கதைப் புத்தகங்கள்  சிறார் எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு ஆளுமைகளின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டு,  அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.   


அடுத்தகட்டமாக 197 நூல்கள்  உருவாக்கப்பட்டு 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் தொடர்ந்து வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


வாசிப்பு இயக்கத்திற்காக கீழ்க்கண்ட கருப்பொருளைக் கொண்டு தங்களது படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.


* குழந்தைகள் எளிதில் வாசிக்கும் வகையில் எளிய மொழி நடை.


* சின்னச் சின்ன வாக்கியங்கள்.


* குழந்தைகள் பரவலாக பயன்படுத்தும் சொற்கள், நகைச்சுவை, வேடிக்கைக் கதைகள் வரவேற்கப்படுகின்றன. 


• மாற்றுத் திறனாளிகள், திருநர், விளிம்பு நிலை மனிதர்களை உள்ளடக்கிய கதைகள் 


* பெண்ணுரிமை,  மனிதநேயம், சகோதரத்துவம், சமத்துவம், அறிவியல் புனைவுகள், எளிய மனிதர்களின் வாழ்வியல், குழந்தைகளின் மனநலம் போன்றவற்றை கருப்பொருளாகக்  கொண்ட கதைகள் வரவேற்கப்படுகின்றன.


 தேர்வு  செய்யப்படும் கதைகள்   வாசிப்பு இயக்கத்தின் தேவைக்கேற்ப படைப்புக் குழு செழுமைப்படுத்தும்.


கதைகளைத் தேர்ந்தெடுக்கவோ, நிராகரிக்கவோ, மறுபரிசீலனை செய்யவோ அரசால் அமைக்கப்பட்ட சீராய்வுக் குழுவிற்கு முழு அதிகாரம் உண்டு. 


மேலும் சீராய்வுக் குழுவின் முடிவே இறுதியானதாகும்.


வழிகாட்டு நெறிமுறைகள் :


1. தயவுசெய்து தங்களது கதைகளை வாசிப்பு இயக்கத்தின் தேவைக்கு ஏற்றவாறு எழுதி அனுப்பவும்.


2. படைப்புகளை தமிழிலேயே அனுப்பவும்.


3. தங்களால் எழுதப்பட்ட தங்களது சொந்தப் படைப்புகளை  மட்டும் அனுப்பவும்.


4. தங்களுடைய கதைகள் தெரிவு செய்யப்பட்டால் தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.


5. தங்களுடைய படைப்புகளாயினும் ஏற்கனவே வேறு ஏதேனும் புத்தகத்திலோ அல்லது இதழ்களிலோ பதிப்பிக்கப்பட்டிருந்தால் அதனைக் குறிப்பிடவும்.


6. மொழிபெயர்ப்புக் கதைகளாக இருப்பின் அது பற்றிய முழு  விவரத்தைக் குறிப்பிடவும்.


தங்களுடைய கதைகள் வாசிப்பின் நிலைகளான... 


"நுழை" எனில் 200 முதல் 250  வார்த்தைகளுக்குள் இருத்தல் வேண்டும்.


"நட" எனில் 250 முதல் 300  வார்த்தைகளுக்குள் இருத்தல் வேண்டும்.


"ஓடு" எனில் 300 முதல்  400   வார்த்தைகளுக்குள் இருத்தல் வேண்டும்.


"பற" எனில் 400 முதல் 500   வார்த்தைகளுக்குள் இருத்தல் வேண்டும்.


தேர்வு செய்யப்பட்ட கதைகளுக்கான ஓவியம், வடிவமைப்பு, செழுமைப்படுத்துதல் பற்றி தங்களிடம் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்படும்.


தேர்வு செய்யப்படவுள்ள  நூல்கள் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிக்  குழந்தைகளுக்கும் வகுப்பறையிலும் நூலகங்களிலும் வழங்க இருப்பதால் கதைகளுக்கு சன்மானம் எதுவும் வழங்கப்பட மாட்டாது. 


தேர்வு செய்யப்பட்ட கதைகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.


17/09/2023 அன்று மாலை 5.00 மணிக்குள்ளாக ssatnvit@gmail.com  என்ற அலுவலக மின்னஞ்சலுக்கு தங்களது படைப்புகளை அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


இது குறித்து மேலும் விவரங்களுக்கு  8248259501 என்கிற எண்ணை தொடர்புகொள்ளவும்.


மிக்க நன்றி!

,

மாநில ஒருங்கிணைப்பாளர்,

வாசிப்பு இயக்கம்,

பள்ளிக் கல்வித் துறை

தமிழ்நாடு.


#TNGovtSchools | #School | #Students | #Education | #Teachers | #GovtSchools | #TNSED | #TNEducation | #TNDIPR | #Arasupalli | #vaasippuiyakkam | #வாசிப்புஇயக்கம் | #பள்ளிக்கல்வித்துறை


Anbil Mahesh Poyyamozhi






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை - புதிய அறிவிப்புகள் 2023 - 2024 (TamilNadu School Education Department Grant Request - New Announcements 2023 - 2024)...

 


>>> பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை -  புதிய அறிவிப்புகள் 2023 - 2024 (TamilNadu School Education Department Grant Request - New Announcements 2023 - 2024)...



>>> Clear File - பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை -  புதிய அறிவிப்புகள் 2023 - 2024 (TamilNadu School Education Department Grant Request - New Announcements 2023 - 2024)...



>>> பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை -  புதிய அறிவிப்புகள் 2023 - 2024 - Picture Cards (TamilNadu School Education Department Grant Request - New Announcements 2023 - 2024)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



6-8 வகுப்புகளில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் நடுநிலைப் பள்ளிகளில் 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்படும்...


வரலாறு, வணிகவியல் போன்ற பாடப்பிரிவு இல்லாத அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிப்படியாக  3ஆம் பாடப்பிரிவு (3rd Group)  உருவாக்கப்படும்...


பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக முதலமைச்சரின் இன்றைய அறிவிப்புகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு எண்: 001/032023, நாள்: 01-03-2023 (Today's announcements of the Chief Minister regarding the School Education Department, Commissioner of School Education's Press Note No: 001/032023, Dated: 01-03-2023)...


>>> பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக முதலமைச்சரின் இன்றைய அறிவிப்புகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு எண்: 001/032023, நாள்: 01-03-2023 (Today's announcements of the Chief Minister regarding the School Education Department, Commissioner of School Education's Press Note No: 001/032023, Dated: 01-03-2023)...



>>> முதல்வரின் அறிவிப்புகள் - Picture Cards...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 

பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் புதிய கட்டமைப்பு வசதிகள் - அமைச்சர் உதயநிதி நாளை (01.03.2023) திறந்து வைக்கிறார் - பள்ளிக்கல்வி ஆணையர் செய்திக் குறிப்பு எண்: 003/ 022023, நாள்: 28-02-2023(New structural facilities in Perasiriyar Anbazhagan Educational Complex - Minister Udayanidhi will inaugurate tomorrow (01.03.2023) - Commissioner of Education Press Note No: 003/ 022023, Date: 28-02-2023)...

 


>>> பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் புதிய கட்டமைப்பு வசதிகள் - அமைச்சர் உதயநிதி நாளை (01.03.2023) திறந்து வைக்கிறார் - பள்ளிக்கல்வி ஆணையர் செய்திக் குறிப்பு எண்: 003/ 022023, நாள்: 28-02-2023(New structural facilities in Perasiriyar Anbazhagan Educational Complex - Minister Udayanidhi will inaugurate tomorrow (01.03.2023) - Commissioner of Education Press Note No: 003/ 022023, Date: 28-02-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 


தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறை) விதிகள் 2023 - அரசாணை நிலை எண்: 14, பள்ளிக்கல்வித்துறை, நாள்: 13-01-2023 & தேவையான படிவங்கள் அரசிதழில் வெளியீடு [TN Private Schools (Regulation) Rules 2023 - G.O.Ms.No.14, School Education (Ms), Dated: 13-01-2023 & Needed Forms - Gazette Published]...



>>> தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறை) விதிகள் 2023 - அரசாணை நிலை எண்: 14, பள்ளிக்கல்வித்துறை, நாள்: 13-01-2023 அரசிதழில் வெளியீடு [TN Private Schools (Regulation) Rules 2023 - G.O.Ms.No.14, School Education (Ms), Dated: 13-01-2023 - Gazette Published]...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் நம் அரசுப் பள்ளி மாணவர்கள் துபாயில் குழந்தைகள் தின நாள் உறுதிமொழி எடுத்த நிகழ்வு - காணொளி (Under the leadership of the Minister of School Education, our government school students took the pledge on Children's Day in Dubai - Video)...



>>> பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் நம் அரசுப் பள்ளி மாணவர்கள் துபாயில் குழந்தைகள் தின நாள் உறுதிமொழி எடுத்த நிகழ்வு - காணொளி (Under the leadership of the Minister of School Education, our government school students took the pledge on Children's Day in Dubai - Video)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



துபாயில் அரசுப் பள்ளி மாணவர்கள் - பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட காணொளி (Government School Students in Dubai - Video released by School Education Department)...



>>> துபாயில் அரசுப் பள்ளி மாணவர்கள் - பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட காணொளி (Government School Students in Dubai - Video released by School Education Department)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



பள்ளிக் கல்வித் துறை நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றம் - அரசாணை எண்: 151, நாள்: 09.09.2022 வெளியீடு (A Major Change in School Education Department Administration - G.O.Ms.No: 151, Dated: 09.09.2022)....



>>> பள்ளிக் கல்வித் துறை நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றம் - அரசாணை எண்: 151, நாள்: 09.09.2022 வெளியீடு (A Major Change in School Education Department Administration - G.O.Ms.No: 151, Dated: 09.09.2022)...



>>> அரசாணை எண்: 151, நாள்: 09.09.2022ன் தமிழாக்கம் - Google Lens மூலம் மொழிபெயர்க்கப்பட்டது...





ஆசிரியர் தின வாழ்த்துகள் - பள்ளிக்கல்வித்துறை (Teacher's Day Wishes - Department of School Education)...



>>> ஆசிரியர் தின வாழ்த்துகள் - பள்ளிக்கல்வித்துறை (Teacher's Day Wishes - Department of School Education)...




உங்களால் இதைப் படிக்க முடிகின்றது என்றால், இதற்காக நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது யாருக்கு என்பதும் உங்களுக்குத் தெரியும் (If you can read this, You know who deserves to be thanked)...



















இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

On Duty Permission for Census Duty Teachers CEO Proceedings

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி - 31.08.2026 வரை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் ஆசிரிர்களுக்கு முற்பகல்/பிற்பகல் பிறபணியில் (OD) அனுமதி - தஞ...