10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை நாளை (14.10.2026) பிற்பகல் 12.30க்கு வெளியாகிறது - அரசு தேர்வுகள் இயக்குநர் கடிதம்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை நாளை (14.10.2026) பிற்பகல் 12.30க்கு வெளியாகிறது - அரசு தேர்வுகள் இயக்குநர் கடிதம்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
10-ஆம் வகுப்பு SSLC தேர்வு முடிவுகள் வெளியீடு
மொத்தம் 94.31% பேர் தேர்ச்சி
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 2026 - பகுப்பாய்வு அறிக்கை
10th Public Exam Results Analysis
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
10th Result - முதல் 5 இடங்களை பெற்ற மாவட்டங்கள் :
👇👇👇👇👇👇
மாவட்ட வாரியான தேர்ச்சி விழுக்காடு
1. புதுக்கோட்டை - 97.57%
2. சிவகங்கை - 97.54%
3. தஞ்சாவூர் - 97.41%
4. திருச்சி - 97.31%
5. கன்னியாகுமரி - 97.30%
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் வெளியிட்டார்.
மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு முடிவுகள் - பகுப்பாய்வு அறிக்கை வெளியீடு
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7.53 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் - தேர்ச்சி விகிதம் 93.58%
ஒட்டு மொத்த பள்ளிகளில் முதல் மூன்று இடம் பிடித்த மாவட்டங்கள்
* ஈரோடு
* சிவகங்கை
* கன்னியாகுமரி
அரசுப் பள்ளிகளில் பனிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடம் பிடித்த மாவட்டங்கள்
👉 ஈரோடு
👉 சிவகங்கை
👉 திருச்சி
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2026 பகுப்பாய்வு அறிக்கை
+2 Exam Result Analysis
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - பள்ளிக் கல்வித் துறை செயலாளர் வெளியிட்டார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7.53 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் - தேர்ச்சி விகிதம் 95.20%
மாணவர்கள் 93.19% மாணவிகள் 97% தேர்ச்சி.
வரும் 13ஆம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.
+2 தேர்ச்சியில் முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள் :
*ஈரோடு - 98.87%
*சிவகங்கை - 98.05%
*கன்னியாகுமரி- 97.63%
*நெல்லை - 97.54%
*திருச்சி - 97.5%
இன்று (08-05-2026) காலை 9.30 மணிக்கு +2 ரிசல்ட் வெளியீடு
திட்டமிட்டபடி தமிழ்நாட்டில் இன்று காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள் வெளியீடு: - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன்
அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியீடு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
சென்னை டிபிஐ வளாகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்; 8 லட்சம் மாணவர்கள் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான மேல்நிலைப் பொதுத்தேர்வு (Class 12) முடிவுகள் குறித்த முக்கியத் தகவல்கள் இதோ:
* முடிவுகள் வெளியாகும் நாள் மற்றும் நேரம்:
08.05.2026 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும்.
* தேர்வு முடிவுகளைப் பார்க்கும் இணையதள முகவரிகள்:
* https://www.tnresults.nic.in
* https://www.dge.tn.gov.in
* https://results.digilocker.gov.in
* வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் அறியும் முறை:
இந்த ஆண்டு முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வசதியைப் பயன்படுத்த, **7845252525** என்ற எண்ணைச் சேமித்து "Hi" என்று பதிவிட வேண்டும். பின்னர் கேட்கப்படும் விவரங்களான தேர்வெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து முடிவுகளைப் பெறலாம்.
* குறுஞ்செய்தி (SMS) வசதி:
மாணவர்கள் பள்ளியில் வழங்கிய உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்குத் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
* பள்ளிகள் மூலம்:
மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை நேரில் அறிந்து கொள்ளலாம்.
* உதவி மையம் (Helpline):
தேர்வு முடிவுகள் குறித்து ஏதேனும் ஐயங்கள் இருந்தாலோ அல்லது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான ஆலோசனைகள் தேவைப்பட்டாலோ 14417 , 104 , 14416 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
* துணைத்தேர்வு:
தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு விரைவில் துணைத்தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பும், அதற்கான சிறப்புப் பயிற்சியும் பள்ளிகள் மூலம் வழங்கப்படும்.
* முக்கியக் குறிப்பு: மதிப்பெண்கள் ஒருவரின் வாழ்க்கை அல்லது திறமையை நிர்ணயிப்பவை அல்ல என்பதால், மாணவர்கள் முடிவுகளைத் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6. மேல்நிலைப் பொதுத் தேர்வுகள் மார்ச் 2026
தேர்வு முடிவுகள் வெளியீடு
செய்திக்குறிப்பு
மார்ச் 2026-ல் நடைபெற்ற 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலைப் பொதுத்தேர்வு முடிவுகள் 08.05.2026 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு SIEMAT Hall, SCERT, DPI வளாகத்தில் வெளியிடப்படவுள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.
வகுப்பு
மேல்நிலைப் பொதுத் தேர்வு
தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள் மற்றும் நேரம்
08.05.2026 (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு
இணையதள முகவரி
www.thresults.nic.in
www.dge.tn.gov.in
results.digllocker.gov.in
தேர்வர்கள் மேற்காண் இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணாக்கர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணாக்கர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும். தனித்தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
Whatsapp செயலி வழியாகவும் தேர்வர்கள் பின்வரும் வழிமுறையை பின்பற்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
வாட்ஸ்அப் செயலியில் 7845252525 என்ற எண்ணை உங்கள் தொலைபேசி எண் தொடர்புகளில் சேமித்து வைத்து, அந்த எண்ணில் "Hi" எனப் பதிவிட்டு பின்னர் வரும் செய்தியில் துறையின் பெயர் மற்றும் தேர்வர்களின் வகுப்பினை தெரிவு செய்தால் தொடர்வரும் பதில் செய்தியில் தேர்வெண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து அனுப்பினால், தேர்வர்களின் தேர்வு முடிவுகள் அதே Whatsapp செயலி உரையாடல் மூலம் கண்டறியலாம். இந்த ஆண்டு முதன்முறையாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் Whatsapp செயலியில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்வர்கள் தேர்வு முடிவுகள் குறித்த ஐயங்கள் ஏதேனும் இருப்பின் 14417 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் ஒருவரின் வாழ்க்கை. திறமை அல்லது தன்மதிப்பை நிர்ணயிப்பவை அல்ல. தேர்வு முடிவுகள் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்றாலும் நம்பிக்கையை இழக்கவோ, தமக்குத் தாமே தீங்கு விளைவிக்கவோ அல்லது எவ்வித தீவிரமான முடிவுகளையும் எடுக்கவோ கூடாது.
ஒவ்வொரு மாணவரும் வாழ்க்கையில் பல்வேறு வழிகளில் முன்னேறி வெற்றி பெறும் திறன் கொண்டவர்கள்; மேலும் எதிர்காலத்தில் பல்வேறு வாய்ப்புகள் காத்திருக்கின்றன. தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு விரைவில் துணைத்தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். மேலும், அவர்களுக்கு ஆதரவாக பள்ளிகள் மூலம் சிறப்பு பயிற்சியும் வழங்கப்படும்.
இக்காலக்கட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பொறுமையுடனும் அக்கறையுடனும் புரிதலுடனும் துணை நிற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆசிரியர்களும் மாணவர்களுக்கு தேவையின் அடிப்படையில் வழிகாட்டுதல், ஊக்குவித்தல் மற்றும் ஆலோசனைகளை வழங்கி, அவர்கள் நேர்மறை எண்ணத்துடனும் நம்பிக்கையுடனும் இருக்க உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான ஆலோசனை உதவி எண்கள்
: 14417 / 104 / 14416.
அரசுத் தேர்வுகள் இயக்குநர்
இடம்: சென்னை-6
நாள்: .05.2026.
வெளியானது +2 பொதுத் தேர்வு முடிவுகள்
+2 public exam results released
Website Links :
https://results.digilocker.gov.in
+2 தேர்வுக் கட்டணம் & TML கட்டணம் செலுத்துதல் - DGE செயல்முறைகள்
Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
அரசு தேர்வுகள் இயக்ககம் - மார்ச் 2024 - மேல்நிலை இரண்டாம் ஆண்டு + 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடுதல் - நாள் : 06-05-2024 - பகுப்பாய்வு அறிக்கை...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் - மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்:
மாவட்டம் தேர்ச்சி விகிதம்
திருப்பூர் - 97.45%
ஈரோடு - 97.42%
சிவகங்கை - 97.42%
அரியலூர் - 97.25%
கோவை - 96.97%
விருதுநகர் - 96.64%
திருநெல்வேலி - 96.44%
பெரம்பலூர் - 96.44%
தூத்துக்குடி - 96.39%
நாமக்கல் - 96.10%
தென்காசி - 96.07%
கரூர் - 95.90%
திருச்சி - 95.74%
கன்னியாகுமரி - 95.72%
திண்டுக்கல் - 95.40%
மதுரை - 95.19%
ராமநாதபுரம் - 94.89%
செங்கல்பட்டு - 94.71%
தேனி - 94.65%
சேலம் - 94.60%
சென்னை - 94.48 %
கடலூர் - 94.36%
நீலகிரி - 94.27%
புதுக்கோட்டை - 93.79%
தருமபுரி - 93.55%
தஞ்சாவூர் - 93.46%
விழுப்புரம் - 93.17%
திருவாரூர் - 93.08%
கள்ளக்குறிச்சி - 92.91%
வேலூர் - 92.53%
மயிலாடுதுறை - 92.38%
திருப்பத்தூர் - 92.34%
ராணிப்பேட்டை - 92.28%
காஞ்சிபுரம் - 92.28%
கிருஷ்ணகிரி - 91.87%
திருவள்ளூர் - 91.32%
நாகப்பட்டினம் - 91.19%
திருவண்ணாமலை - 90.47%
மொத்தம் - 94.56%
புதுச்சேரி - 93.38%
காரைக்கால் - 87.03%
மார்ச் / ஏப்ரல் - 2024ல் நடைபெற்ற +2 வகுப்பு பொதுத் தேர்வு வினா வங்கி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு...
March / April - 2024 - 12th Standard Public Examination Question Bank - Directorate of Government Examinations Released...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
12ஆம் வகுப்பு - உயிரியல் (தாவரவியல்) & இயற்பியல் - மாதிரி வினா விடைத் தொகுப்பு (Class 12 - Biology (Botany) & Physics - Model Question Papers)...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் இன்று (30-05-2023) முதல் விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்யலாம்.
தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராமவர்மா வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு இன்று (மே 30) மதியம் நகல் வெளியிடப்படுகிறது.
இதையடுத்து மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகல்களை www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன்பிறகு மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் அதே இணையதள பக்கத்தில் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இதை பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து நாளை (மே 31) முதல் ஜூன் 3-ம் தேதி வரை சம்பந்தபட்ட மாவட்ட தேர்வு உதவி இயக்குநர் அலுவலகங்களில் சென்று ஒப்படைக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக மறுமதிப்பீடுக்கு பாடத்துக்கு ரூ.505-ம், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ.305-ம், இதர பாடங்களுக்கு ரூ.205-ம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும்போது தரப்படும் ஒப்புகை சீட்டை தேர்வர்கள் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
அனைத்து பள்ளிகளும், நாளை பிற்பகல் 2 மணி முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து மாணவர்களின் பெயர் பட்டியலை பதிவிறக்கம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிப்பு.
+2 வேதியியல் தேர்வில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் - பகுதி 1 கேள்வி எண் 5 அல்லது 9 கேள்வி எழுதியவர்களுக்கும், பகுதி 2 ல் கேள்வி எண் 29 எழுதியவர்களுக்கும் போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் - அரசு தேர்வுகள் இயக்ககம் (Bonus marks for 2 questions in +2 Chemistry Examination will be given to those who have written Question No. 5 or 9 in Part 1 and those who have written Question No. 29 in Part 2 - Government Examinations Directorate)...
மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு மே2022 - விடைக்குறிப்புகள் - அனைத்துப் பாடங்கள் (Higher Secondary Second Year Public Examination - May 2022 - Answer Keys - All Subjects)...
12ஆம் வகுப்பு - முதல் திருப்புதல் தேர்வு பாடத்திட்டம்...
>>> தமிழ் வழி - பொதுக்கல்வி...
>>> English Medium - General Syllabus...
>>> சிறுபான்மை & பிற மொழிப் பாடங்கள்...
>>> தமிழ் வழி - தொழிற்கல்வி...
>>> English Medium - Vocational Syllabus...
12ஆம் வகுப்பு - இரண்டாம் திருப்புதல் தேர்வு பாடத்திட்டம்...
>>> தமிழ் வழி - பொதுக்கல்வி...
>>> English Medium - General Syllabus...
>>> சிறுபான்மை & பிற மொழிப் பாடங்கள்...
>>> தமிழ் வழி - தொழிற்கல்வி...
>>> English Medium - Vocational Syllabus...
12ஆம் வகுப்பு மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ் 17.09.2021 முதல் மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே வழங்கப்படும்...
பன்னிரண்டாம் வகுப்பு ஜூலை மாத ஒப்படைப்புகள் ( XII Standard July Assignments - Tamil & English Medium) - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு...
>>> தமிழ் வழி (அனைத்து பிரிவு பாடங்கள்)...
>>> English Medium (All Group Subjects)...
2021-2022 ஆம் கல்வி ஆண்டின், 12ஆம் வகுப்புக்கான(12th Standard) முன்னுரிமை அளிக்கப்பட்ட பாடத்திட்டம்(Prioritized Syllabus) - பள்ளிக் கல்வித் துறை(School Education Department) வெளியீடு...
>>> தமிழ் வழி(Tamil Medium)...
>>> ஆங்கில வழி(English Medium) (விரைவில்)...
தற்போது TNSED Schools App-ல் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது TNSED Schools App New Version: 0.4.7 - Updated on 13-10-2026 - SCERT Quiz an...