கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.07.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.07.2023 - School Morning Prayer Activities...

  

கல்பனா சாவ்லா


திருக்குறள் :

பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: ஈகை


குறள் :227


பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்

தீப்பிணி தீண்டல் அரிது.


விளக்கம்:


பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை.



பழமொழி :

All this fair in love and war


ஆபத்துக்கு பாவமில்லை



இரண்டொழுக்க பண்புகள் : 


1. உன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டு தாழ்த்திக் கொள்ளாதே. 


2. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாம் தங்கள் நேரத்தில் ஒளி வீசுகின்றன. ஒன்றோடொன்று ஒத்து பார்ப்பதில்லை


பொன்மொழி :


வெளிச்சத்தில் தனியாக நடப்பதை விட இருட்டில் ஒரு நண்பருடன் நடப்பது சிறந்தது. --ஹெலன் கெல்லர்


பொது அறிவு :


1. முதல் இந்திய பெண் விண்வெளி வீரர் யார்?


விடை: கல்பனா சாவ்லா


2. இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை நியமிப்பவர் யார்?

விடை: ஜனாதிபதி


English words & meanings :


 Excelled - the best சிறந்து விளங்கியது

Gathered - assemble திரட்டுதல், கூடுதல்


ஆரோக்ய வாழ்வு :


சோம்பை பெருஞ்சீரகம், வெண்சீரகம் என்று அழைப்பார்கள். வெண்மை நிறத்துடன் சிறிது பச்சை கலந்த நிறமுடையது.


நீதிக்கதை


கர்வம் வேண்டாம்



அடர்ந்த காட்டுப்பகுதியில் குதிரை புல் மேய்ந்து கொண்டிருந்தது. அங்குள்ள பொந்து ஒன்றில் வசித்த எலியைக் கண்டதும், இரண்டும் பேசிப் பழகின. சிறந்த நண்பர்கள் ஆனார்கள். இருந்தாலும் எலி தற்பெருமை அடித்துக் கொள்ளும். நான் மிகவும் வலிமையானவன், மண்ணையே துளைத்து வளை அமைத்துவிடுவேன். என்னை யாறாலும் ஒன்றும் செய்யமுடியாது. பாம்பைக்கூட விரட்டியடித்து விடுவேன்' என்று வீண் பெருமை பேசும். ஒருநாள் எலியும், குதிரையும் கொஞ்சம் தூரத்தில் சென்று மேய்ந்து வர முடிவு செய்தன. இரண்டும் பேசிக்கொண்டு நடந்தன. அப்போது, 'நான்தான் உன்னை வழி நடத்தி செல்வேன். நான் சண்டையில் அவனை வீழ்த்தியிருக்கிறேன். இவனை வீழ்த்தியிருக்கிறேன்' என்று தம்பட்டம் அடித்துக் கொண்டே முன் சென்றது எலி. திடீரென்று எலி நின்றது. 'ஏன் நின்றுவிட்டாய்? தொடர்ந்து செல்' என்றது குதிரை. 'உனக்கு கண் சரியாக தெரியாதா? எதிரே பார் ஆறு ஓடுகிறது, எப்படி கடப்பது?' என்று கேட்டது எலி. 'அது ஆறா? சிறிய கால்வாய் தானே இது. எளிதாக கடந்துவிடலாம்' என்றது குதிரை, 'குதிரையே இது கால்வாயா? எனக்கு ஆறுபோல்தான் தெரிகிறது. இறங்கினால் நிச்சயம் தண்ணீர் அடித்துச் சென்றுவிடும். நாம் இரண்டு பேரும் மூழ்கிவிடுவோம்' என்றது எலி. குதிரை எலியின் பேச்சை கண்டுகொள்ளாமல் கால்வாயில் இறங்கியது. "ஏய் எலியே, என் முழங்கால் அளவு கூட வெள்ளம் இல்லை. இதையை நீ ஆறு என்கிறாய், உடனே இறங்கி வா என்றது குதிரை, 'நண்பா உனக்கு வேண்டுமானால், இது குறைந்த தண்ணீராக இருக்கலாம். ஆனால் என் உருவத்திற்கு இது நதிபோல வெள்ளப்பெருக்கு தான். தயவு செய்து என்னை உன் முதுகில் ஏற்றி அக்கரையில் விடு, நான் என்னைப் பற்றி கர்வத்துடன் பேசியதை மறந்துவிடு" என்று மன்னிப்புக் கேட்டு அடங்கியது எலி, 'அப்படிவா, வழிக்கு, இனியும் வீண் பெருமை பேசி வாழாதே' என்று எலியை, தன் முதுகில் ஏற்றி அக்கரையில் விட்டது குதிரை. இரண்டும் கர்வமின்றி நண்பர்களாக வாழ்ந்தன.


இன்றைய செய்திகள்


31.07. 2023


*மக்கள் ஆரோக்கியமாக வாழ மண்வளம் காக்கப்பட வேண்டும். ஈசாவின் பாரம்பரிய நெல் திருவிழாவில் திருச்சி மேயர் பேச்சு. 


*கலைஞர் மகளிர் உரிமை திட்டம்- சென்னையில் 3 லட்சத்து 73000 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளது- ராதாகிருஷ்ணன் தகவல். 


*'தோழி விடுதிகள்' வரலாற்று பக்கங்களில் நிலை கொள்ளும் -

மு. க. ஸ்டாலின் ட்விட்டர் பதிவு.


**மாமல்லபுரம் புராதன சின்னங்களின் வரலாற்றை அறிய ரூபாய் 5 கோடி செலவில் '3டி' லேசர் காட்சி அரங்கம்- அமைச்சர் தகவல்.


*ஜப்பான் ஓபன் பேட்மிட்டன் சாம்பியன் பட்டம் வென்றார்  - அக்சல்சென்.


*டெஸ்ட் கிரிக்கெட்- சச்சின் டெண்டுல்கர் உலக சாதனையை சமன் செய்த ஜோ ரூட்.


Today's Headlines


*Soil should be protected for people to live healthy.  Trichy Mayor's speech at the traditional rice festival of Isa.


 *Kalainjar  Women's  Rights Project- 3 lakh 73000 applications have been registered in Chennai- Radhakrishnan informs.


 *'Thozhi Viduthikal'  will remain in the pages of history -

 M. K.  Stalin's Twitter post.


 * 3D laser display theater at a cost of Rs 5 crore to know the history of Mamallapuram ancient Monuments - Minister information by Minister.


 *Japan Open Badminton Champion - Axelsen.


 *Test cricket- Joe Root equals Sachin Tendulkar's world record.

 

எட்டாம் வகுப்பு - அனைத்துப் பாடங்கள் - மாதம், வாரம் & பாடத்தலைப்பு வாரியான கற்றல் விளைவுகள் எண்களுடன் - பருவம் 1, 2 & 3 (8th Standard - All Subjects - Month, Week & Topic Wise Learning Outcomes with Numbers - Term 1, 2 & 3)...

 

>>> எட்டாம் வகுப்பு - அனைத்துப் பாடங்கள் - மாதம், வாரம் & பாடத்தலைப்பு வாரியான கற்றல் விளைவுகள் எண்களுடன் - பருவம் 1, 2 & 3 (8th Standard - All Subjects - Month, Week & Topic Wise Learning Outcomes with Numbers - Term 1, 2 & 3)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பருவம் 1 - 6 மற்றும் 7ஆம் வகுப்புகள் - அனைத்துப் பாடங்களுக்கும் பாடத்தலைப்பு வாரியாக கற்றல் விளைவுகள் எண் குறியீடு (Term 1 – Lesson wise Learning Outcomes with Number Codes for all Subjects for Class 6 & 7)...

  

>>> பருவம் 1 - 6 மற்றும் 7ஆம் வகுப்புகள் - அனைத்துப் பாடங்களுக்கும் பாடத்தலைப்பு வாரியாக கற்றல் விளைவுகள் எண் குறியீடு (Term 1 – Lesson wise Learning Outcomes with Number Codes for all Subjects for Class 6 & 7)...


Prepared by,

Block Educational Officer - K.Paramathi...


எண்ணும் எழுத்தும் - பருவம் 1 - வகுப்பு - 1, 2, 3 மாணவர்களுக்கான ஆங்கிலம் வாசிப்பு பயிற்சி புத்தகம் - பாடத்தலைப்பு வாரியாக (Ennum Ezhuthum - Term 1 - Class - 1, 2, 3 English Reading Practice Book for Students - Topic wise)...



>>> எண்ணும் எழுத்தும் - பருவம் 1 - வகுப்பு - 1, 2, 3 மாணவர்களுக்கான ஆங்கிலம் வாசிப்பு பயிற்சி புத்தகம் - பாடத்தலைப்பு வாரியாக (Ennum Ezhuthum - Term 1 - Class - 1, 2, 3 English Reading Practice Book for Students - Topic wise)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

எண்ணும் எழுத்தும் - பருவம் 1 - வகுப்பு - 1, 2, 3 மாணவர்களுக்கான தமிழ் வாசிப்பு பயிற்சி புத்தகம் - பாடத்தலைப்பு வாரியாக (Ennum Ezhuthum - Term 1 - Class - 1, 2, 3 Tamil Reading Practice Book for Students - Topic wise)...

 

>>> எண்ணும் எழுத்தும் - பருவம் 1 - வகுப்பு - 1, 2, 3 மாணவர்களுக்கான தமிழ் வாசிப்பு பயிற்சி புத்தகம் - பாடத்தலைப்பு வாரியாக (Ennum Ezhuthum - Term 1 - Class - 1, 2, 3 Tamil Reading Practice Book for Students - Topic wise)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

எட்டாம் வகுப்பு - அறிவியல் - மாதம், வாரம் & பாடத்தலைப்பு வாரியான கற்றல் விளைவுகள் எண்களுடன் - பருவம் 1, 2 & 3 (Class VIII - Science - Month, Week & Topic Wise Learning Outcomes with Numbers - Term 1, 2 & 3)...

  

>>> எட்டாம் வகுப்பு - அறிவியல் - மாதம், வாரம் & பாடத்தலைப்பு வாரியான கற்றல் விளைவுகள் எண்களுடன் - பருவம் 1, 2 & 3 (8th Standard - Science - Month, Week & Topic Wise Learning Outcomes with Numbers - Term 1, 2 & 3)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

NMMS அறிவியல் - இயற்பியல் அளவுகள் - வாய்பாடுகள் & SI அலகுகள் (NMMS Science - Physics Measurements - Formulas & SI Units)...

 

>>> NMMS அறிவியல் - இயற்பியல் அளவுகள் - வாய்பாடுகள் & SI அலகுகள் (NMMS Science - Physics Measurements - Formulas & SI Units)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

NMMS - 7 மற்றும் 8ஆம் வகுப்புகள் - அறிவியல் பாட கணக்குகள் தொகுப்பு (NMMS - Class 7 & 8 - Science Sums Collection)...

 

>>> NMMS - 7 மற்றும் 8ஆம் வகுப்புகள் - அறிவியல் பாட கணக்குகள் தொகுப்பு (NMMS - Class 7 & 8 - Science Sums Collection)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

வீட்டுப்பாடம் எழுதவில்லை என ஆசிரியை பிரம்பால் அடித்ததில் நான்காம் வகுப்பு மாணவி காயம் - போலீசில் பெற்றோர் புகார் (Class IV student injured after teacher hit her with a stick for not writing homework - Parents complain to police)...

 வீட்டுப்பாடம் எழுதவில்லை என ஆசிரியை பிரம்பால் அடித்ததில் நான்காம் வகுப்பு மாணவி காயம் - போலீசில் பெற்றோர் புகார் (Class IV student injured after teacher hit her with a stick for not writing homework - Parents complain to police)...




ஆசிரியர்கள் இருவரை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் - தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு (2 teachers should be included in the old pension scheme - High Court orders the Tamil Nadu Government)...

 ஆசிரியர்கள் இருவரை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் - தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு (2 teachers should be included in the old pension scheme - High Court orders the Tamil Nadu Government)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்களுக்கான ஆகஸ்ட் 2023 மாத குறுவள மைய அளவிலான பயிற்சி (CRC Training) தேதி (05-08-2023) அறிவிப்பு - SCERT இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 24-07-2023 (August 2023 Cluster Resource Center Level Training (CRC Training) Date (05-08-2023) for Teachers handling Class 1 to 5 Notification - SCERT Director Proceedings, Dated: 24-07-2023)...

 

>>> 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்களுக்கான ஆகஸ்ட் 2023 மாத குறுவள மைய அளவிலான பயிற்சி (CRC Training) தேதி (05-08-2023) அறிவிப்பு - SCERT இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 24-07-2023 (August 2023 Cluster Resource Center Level Training (CRC Training) Date (05-08-2023) for Teachers handling Class 1 to 5 Notification - SCERT Director Proceedings, Dated: 24-07-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


1முதல் 5 வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களுக்கான குறுவளமையப் பயிற்சி 05.08.2023 அன்று நடைபெறும்

- மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர்


🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥

*CRC 1-5 ஆசிரியர்களுக்கு 5/8/2023 அன்று நடைபெறுகிறது

*பயிற்சித் தலைப்பு :

*1-3 ஆசிரியர்கள் :
Classroom Management & Parents Involvement

*4 & 5 ஆசிரியர்கள் :
Common Challenges & Best Practices of EE.


☀️ஆகஸ்ட் -- 2023 -- CRC பயிற்சி

  

💥 1,2,3 வகுப்பு ஆசிரியர்களுக்கு,

*தலைப்பு : வகுப்பறை மேலாண்மை மற்றும் பெற்றோர் ஈடுபாடு

*CRC  பயிற்சி நாள்: 05.08.2023 (சனிக்கிழமை)


*💥4, 5 வகுப்பு ஆசிரியர்களுக்கு,

*தலைப்பு :எண்ணும் எழுத்தும் பொதுவான இடர்பாடுகள் மற்றும் சிறந்த நடைமுறைகள்

*CRC பயிற்சி நாள்: 05.08.2023 (சனிக்கிழமை)



ஆகஸ்ட் 2023 - பள்ளி நாட்காட்டி (August 2023 School Dairy)...



ஆகஸ்ட் 2023 - பள்ளி நாட்காட்டி (August 2023 School Calendar)...


🇨🇮15.08.2023 - சுதந்திர தினம். 


வரையறுக்கப்பட்ட  விடுப்புகள்


✍️03.08.2023 - ஆடிப்பெருக்கு.            

✍️25.08.2023 -   வரலட்சுமி விரதம்                  

✍️29.08.2023 - ஓணம் திருநாள்.          

✍️29.08.2023 - ரிக் உபாகர்மா.                    

✍️30.08.2023 -யஜூர்உபாகர்மா.             

✍️31.08.2023-காயத்திரி ஜெபம் 


🌺 05.08.2023 - BEO அலுவலக குறைதீர் நாள் & CRC - 1,2,3 வகுப்பு ஆசிரியர்கள்


🌺 12.08.2023 -  CRC- 4,5 வகுப்பு ஆசிரியர்கள்






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளியில் உபரி ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படாமல் இருக்க EMIS வலைதளத்தில் மேற்கொள்ள வேண்டியவை (What to do on EMIS website to avoid surplus teacher posts in school)...


பள்ளியில் உபரி ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படாமல் இருக்க EMIS வலைதளத்தில் மேற்கொள்ள வேண்டியவை (What to do on EMIS website to avoid surplus teacher posts in school)...


பள்ளியில் உபரி ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படாமல் இருக்க மாணவர்கள் எண்ணிக்கையை உறுதி செய்யுங்கள்...


EMIS ENTRY


பள்ளியிலுள்ள ஆசிரியர்களை Surplusல் இருந்து தக்கவைத்துக் கொள்ள & Need Postஐ உறுதி செய்துகொள்ளத் தேவையான மாணவர் எண்ணிக்கையை EMISல் முழுமையாக 31.07.2023-ற்குள் பதிவேற்றிவிடுங்கள். இந்தத் தேதிக்கு முன்னோ / பின்னோ நீங்கள் எத்தனை மாணவர்களை admission செய்து பள்ளி ஆவணங்களிலும், MRலும் எழுதி வைத்தாலும் அதனால் எந்தப்பயனுமில்லை. EMIS தளத்தில் உள்ள எண்ணிக்கையை வைத்து மட்டுமே 01.08 Particulars (Surplus / Need) உறுதி செய்யப்படும். அந்த எண்ணிக்கையும் இயக்குநரகத்தால் (ஆகஸ்ட் மாதத்தில் ஏதேனும் ஒரு தேதியின் அடிப்படையில்) வட்டார / மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.. அந்த எண்ணிக்கையை வைத்தே வட்டார / மாவட்டக் கல்வி அலுவலர்கள் Surplus / Need Postஐ உறுதி செய்வர்.


Surplus Postஐப் பொறுத்தவரை 30:1 என்ற விகிதாச்சாரம் பின்பற்றப்படுகிறது.


Need Postஐப் பொறுத்தவரை 45:1 என்ற விகிதாச்சாரம் பின்பற்றப்படுகிறது. உதாரணமாக RTE படி 91 மாணவர்கள் இருந்தாலே 4-வது Post உண்டு. ஆனால், நடைமுறையில் 116 மாணவர்கள் இருந்தால் மட்டுமே 4-வது Post அனுமதிக்கப்படுகிறது.


இதற்கேற்ப உங்களது பள்ளியின் மாணவர் எண்ணிக்கையை EMISல் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உறுதிப்படுத்திய எண்ணிக்கையை ஆகஸ்ட் 15 வரை குறையவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பணியாளர் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வசதிக் கடன் ரூ.20 இலட்சமாக உயர்வு - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் சுற்றறிக்கை எண்: 1/2023, நாள்: 26-07-2023 (Increase in housing loan to Rs.20 lakhs for members of Employees Co-operative Credit Societies - Registrar of Co-operative Societies Circular No: 1/2023, Dated: 26-07-2023)...


>>> பணியாளர் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வசதிக் கடன் ரூ.20 இலட்சமாக உயர்வு - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் சுற்றறிக்கை எண்: 1/2023, நாள்: 26-07-2023 (Increase in housing loan to Rs.20 lakhs for members of Employees Co-operative Credit Societies - Registrar of Co-operative Societies Circular No: 1/2023, Dated: 26-07-2023)...


பட்ஜெட் 2024-2025 – IFHRMS-ல் எண்வகைப் பட்டியல் அறிக்கை தயாரித்தல் மற்றும் சமர்ப்பித்தல் – வழங்கப்பட்ட வழிமுறைகள் - தொடர்பாக நிதித்துறையின் அரசு முதன்மைச் செயலாளர் கடிதம் எண்.25804/BG-I/ 2023-1, நாள்: 27-07-2023 (BUDGET 2024-2025 – Preparation and Submission of Number Statement in the IFHRMS – Instructions issued - Regarding FINANCE [BG-I] DEPARTMENT Principal Secretary to Government Letter No.25804/BG-I/ 2023-1, dated 27th July 2023...


>>> பட்ஜெட் 2024-2025 – IFHRMS-ல் எண்வகைப் பட்டியல் அறிக்கை தயாரித்தல் மற்றும் சமர்ப்பித்தல் – வழங்கப்பட்ட வழிமுறைகள் -  தொடர்பாக நிதித்துறையின் அரசு முதன்மைச் செயலாளர்  கடிதம் எண்.25804/BG-I/ 2023-1, நாள்: 27-07-2023 (BUDGET 2024-2025 – Preparation and Submission of Number Statement in the IFHRMS – Instructions issued - Regarding FINANCE [BG-I] DEPARTMENT Principal Secretary to Government Letter No.25804/BG-I/ 2023-1, dated 27th July 2023...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பிரதமரின் கல்வி உதவி தொகை 9 மற்றும் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு Rs.75000/- , 11 மற்றும் 12 வரை படிக்கும் மாணவர்களுக்கு Rs.1,25,000/- வரை கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது (Prime Minister's Scholarship is Rs.75000/- for students studying upto 9th and 10th class and Rs.125000/- for students studying upto 11th and 12th class)...

  பிரதமரின் கல்வி உதவி தொகை 9 மற்றும் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு Rs.75000/- , 11 மற்றும் 12 வரை படிக்கும் மாணவர்களுக்கு Rs.125000/- வரை கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டம் பற்றி மேலும் விவரங்களுக்கு https://yet.net.ac.in மற்றும் https://socialjustice.gov.in/schemes தெரிந்து கொள்ளலாம்.( அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகைப் பதிவேடு EMIS Portal லில் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும் - பதிவேடுகளில் பராமரிக்கக் கூடாது - வேலூர் மற்றும் தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலர்களின் செயல்முறைகள் - CoSE & DEE இணைச் செயல்முறைகளுடன் (Attendance records of teachers and students should be uploaded in EMIS Portal only – not maintained in registers – Vellore & Thanjavur Chief Education Officers Proceedings (with CoSE & DEE Co-Proceedings))...

 

>>> ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகைப் பதிவேடு EMIS Portal லில் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும் - பதிவேடுகளில் பராமரிக்கக் கூடாது - வேலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - CoSE & DEE இணைச் செயல்முறைகளுடன் (Attendance records of teachers and students should be uploaded in EMIS Portal only – not maintained in registers – Vellore Chief Education Officers Proceedings (with CoSE & DEE Co-Proceedings))...



>>> ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகைப் பதிவேடு EMIS Portal லில் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும் - பதிவேடுகளில் பராமரிக்கக் கூடாது -  தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலர்களின் செயல்முறைகள் - CoSE & DEE இணைச் செயல்முறைகளுடன் (Attendance records of teachers and students should be uploaded in EMIS Portal only – not maintained in registers – Thanjavur Chief Education Officers Proceedings (with CoSE & DEE Co-Proceedings))...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 1 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 7 - தமிழ் & ஆங்கில வழி (Term 1 - Unit 7 - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard - Tamil & English Medium)...

 

>>> 1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 1 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 7 - தமிழ் வழி (Term 1 - Unit 7 - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard - Tamil Medium)... 



>>> 1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 1 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 7 - ஆங்கில வழி (Term 1 - Unit 7 - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard - English Medium)...



>>> 1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 1 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 7 - தமிழ் & ஆங்கில வழி - மாதிரி 2 (Term 1 - Unit 7 - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard - Tamil & English Medium - Model 2)... 





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 1 - அலகு 7 - தமிழ் & ஆங்கில வழி பாடக்குறிப்பு (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 1 - Unit 7 - Tamil & English Medium Lesson Plan)...

 

>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 1 - அலகு 7 - தமிழ் வழி பாடக்குறிப்பு (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 1 - Unit 7 - Tamil Medium Lesson Plan )...



>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 1 - அலகு 7 - ஆங்கில வழி பாடக்குறிப்பு (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 1 - Unit 7 - English Medium Lesson Plan)...



>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 1 - அலகு 7 - தமிழ் & ஆங்கில வழி பாடக்குறிப்பு - மாதிரி 2 (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 1 - Unit 7 - Tamil & English Medium Lesson Plan - Model 2)...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.07.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.07.2023 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: ஈகை


குறள் :226


அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி.


விளக்கம்:


ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் கருவூலமாகும்.


பழமொழி :

All things come to those who wait


பொறுத்தவர் பூமி ஆள்வார்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்.


 2. துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.


பொன்மொழி :


இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.


டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம்


பொது அறிவு :


1. முதல் பரம் வீர் சக்ரா யாருக்கு வழங்கப்பட்டது?


விடை: மேஜர் சோம்நாத் சர்மா


2. உலகிலேயே மிக அதிக எல்லை நாடுகளைக் கொண்ட(14 நாடுகள்)நாடு எது?

விடை: சீனா


English words & meanings :


 vague - uncertain, unclear meaning. தெளிவற்ற.waver - moving here and there without strength. நிலை இன்றி தள்ளாடு

ஆரோக்ய வாழ்வு :


சீரகம் -நோய் எதிர்ப்பு சக்தியை சீராக பராமரிக்க சீரக நீர் குடிக்க வேண்டியது அவசியம். உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும்.


ஜூலை 28


உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள்


உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் (World Nature Conservation Day) ஒவ்வோர் ஆண்டும் சூலை 28 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.[1]


உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அதனால் ஏற்படும் சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.




உலகக் கல்லீரல் அழற்சி நாள்




உலகக் கல்லீரல் அழற்சி நாள் (World Hepatitis Day), ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.கல்லீரல் அழற்சி நோய்களுக்கான அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த நாள் உலக சுகாதார அமைப்பால் (WHO) ஏற்படுத்தப்பட்டது


நீதிக்கதை


பல முறை யோசிக்கனும்




நரி ஒன்று தாகத்தால்  தவித்தது. எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. என்ன செய்வது? தண்ணீரைத் தேடி அலைந்தது. தூரத்தில் கிணறு ஒன்று இருப்பதைப் பார்த்தது. கிணற்றின் அருகே சென்றது, கிணற்றில், கயிற்றின் ஒரு முனையில் வாளி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட நரி, வாளியில் தாவி ஏறி அமர்ந்தது. உடனே வாளி 'விர்'ரெனக் கிணற்றின் உள்ளே சென்றது. நரி வயிறு நிறையத் தண்ணீரைக் குடித்தது. தாகம் தணிந்தபின் மேலே பார்த்தது. 'எப்படி வெளியேறுவது' என்று யோசிக்கத் தொடங்கியது. 'மேலேயிருந்து யாராவது கயிற்றை இழுத்தால் தானே என்னால் மேலே போக முடியும். என்ன செய்வது?' நேரம் ஆக ஆக நரிக்கு அச்சம் தோன்றியது. அந்த நேரம் பார்த்துக் கிணற்றின் அருகே ஓநாய் ஒன்று வந்தது. கிணற்றின் உள்ளே எட்டிப் பார்த்தது. அங்கு நரி இருப்பதைக் கண்டது. “அடடா! நரி ஐயா! உள்ளே என்ன செய்கிறீர்கள்?" எனக் கேட்டது. "நான் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறேன். என்ன அருமையான இடம் தெரியுமா? இங்கு மீன், கோழி, ஆடு எல்லாம் தருகிறார்கள்" என்றது நரி. ஓநாய் சற்றும் யோசிக்காமல் கயிற்றின் மறுமுனையில் கட்டப்பட்டிருந்த வாளிக்குள் குதித்தது. அந்த வாளி 'சரசர'வென்று கிணற்றின் உள்ளே போயிற்று. அப்போது நரி அமர்ந்திருந்த வாளி மேலே வந்தது. நரி மேலே வரும் போது பாதி வழியில் ஓநாயைப் பார்த்தது."நான் இப்போது சொர்க்கத்திற்கும் மேலான இடத்திற்குப் போகிறேன்". என்று கூறிக் கொண்டே மேலே சென்றது. மேலே வந்ததும் கிணற்றுச் சுவரின் மேலே தாவிக் குதித்துத் தப்பியோடியது. பாவம் ஓநாய்.! ஒரு செயலைச் செய்வதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டும்.


இன்றைய செய்திகள்


28.07. 2023


*டொயோட்டாவின் எர்டிகா வெர்ஷன் -  விரைவில் இந்தியா வரும் லோ பட்ஜெட் 7 சீட்டர்.


*பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய 3 விவசாயிகளுக்கு விருது மற்றும் ரொக்க பரிசு வழங்கினார்- முதல்வர்.


*அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கலந்தாய்வு 3000 பேர் குவிந்தனர்.


*சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.


*ஜெர்மனி ஹாக்கி தொடர்: இந்திய ஆண்கள் ஜூனியர் அணி அறிவிப்பு.


*பாகிஸ்தானை சேர்ந்த சவுத் ஷக்கிள் முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் மற்றும் இரண்டாவது டெஸ்டில் 57 ரன்கள் எடுத்ததன் மூலம் 146 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைத்திராத புதிய சாதனை படைத்துள்ளார்.


Today's Headlines


*Toyota's Ertiga version,low budget 7-seater coming to India soon.


 * Awarded and cash prizes are given to 3 farmers who excelled in traditional rice production by TN Chief Minister.


 * 3000 students were gathered for medical counseling for the government school students.


 *The price of crude oil continues to decrease in the international market.


 *Germany Hockey Series: Indian Men's Junior Team was Announced


 *Pakistan's South Shackle scored a double century in the first Test and 57 runs in the second Test, setting a new record in the 146-year history of cricket.


2023 ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சியர்களால் வழங்கப்படவுள்ள சிறந்த பள்ளி மேலாண்மை குழு விருதுக்கான அடிப்படைகள் மற்றும் மதிப்பீடு (Criteria and Weightage for the Best School Management Committee Award to be presented by the District Collectors on 15th August 2023 Independence Day)...

 

 

 சிறந்த பள்ளி மேலாண்மை குழு விருது : 2023 ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சியர்களால் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் சிறந்த பள்ளி மேலாண்மை குழுவிற்கு பாராட்டு சான்று வழங்கப்பட இருக்கிறது. அதற்கான அடிப்படைகள் (Criteria) மற்றும் மதிப்பீடு (Weightage) - மொத்த மதிப்பீடு அளவு 100 மதிப்பெண்கள் (Best School Management Committee Award : On 15th August 2023 Independence Day, District Collectors will present a certificate of appreciation to the best performing school management committee at the district level. Criteria and Weightage - Total weightage is 100 marks)...


>>> 2023 ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சியர்களால் வழங்கப்படவுள்ள சிறந்த பள்ளி மேலாண்மை குழு விருதுக்கான அடிப்படைகள் மற்றும் மதிப்பீடு (Criteria and Weightage for the Best School Management Committee Award to be presented by the District Collectors on 15th August 2023 Independence Day)...




பள்ளி மேலாண்மை குழு கூட்டம் (SMC Meeting) - அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் ஆகஸ்ட் 2023 மாத பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்துதல் - வழிகாட்டுதல் வழங்குதல் சார்பு - ஒருங்கிணைந்த பள்ளிக்கள்ளி மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 1680/ A11/ ஒபக/ பமேகு/ 2023, நாள்: 27-07-2023 (School Management Committee Meeting – Conduct of School Management Committee Meeting in August 2023 in all categories of Government Schools – Provision of Guidance – Proceedings of State Project Director of Samagra Shiksha Rc.No.: 1680/ A11/ SS/ SMC/ 2023, Dated: 27-07-2023)...

 

 

>>> பள்ளி மேலாண்மை குழு கூட்டம் (SMC Meeting) - அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் ஆகஸ்ட் 2023 மாத பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்துதல் - வழிகாட்டுதல் வழங்குதல் சார்பு - ஒருங்கிணைந்த பள்ளிக்கள்ளி மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 1680/ A11/ ஒபக/ பமேகு/ 2023, நாள்: 27-07-2023 (School Management Committee Meeting – Conduct of School Management Committee Meeting in August 2023 in all categories of Government Schools – Provision of Guidance – Proceedings of State Project Director of Samagra Shiksha Rc.No.: 1680/ A11/ SS/ SMC/ 2023, Dated: 27-07-2023)...


ஆகஸ்ட் -  2023 மாதம் நடைபெறவுள்ள மாதாந்திரப் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் - 04.08.2023


பள்ளி மேலாண்மைக் குழுவின் கூட்டமானது மாதந்தோறும் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் நடைபெற்று வருகிறது. சூலை 2023 மாதம் பள்ளி மேலாண்மைக் குழு சிறப்புக் கூட்டமானது அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கடந்த 14.7.2023 அன்றும் , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 19.7.2023 அன்றும் சிறப்பாக நடத்திய பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் . பள்ளித் தலைமையாசரியர் , ஆசிரியர் பிரதிநிதி உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒருங்கிணைந்தப் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பாராட்டுக்கள்.


தொடர்ந்து , ஆகஸ்ட் -2023 மாதம் நடைபெறவுள்ள மாதாந்திரப் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தினை அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் வரும் 04.08.2023 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 03:00 மணி முதல் 04:30 மணி வரை நடத்திட அறிவுறுத்தப்படுகிறது .






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

2023-2024 ஆம் கல்வியாண்டில் AIIMS மற்றும் JIPMER மற்றும் நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள் - மாநிலம் / யூனியன் பிரதேச வாரியான பட்டியல் (State / Union Territory wise list of Government and Private Medical Colleges including AIIMS and JIPMER & Seats in the Country for the Academic Year 2023-2024)...

 



>>> 2023-2024 ஆம் கல்வியாண்டில் AIIMS மற்றும் JIPMER மற்றும் நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள்  - மாநிலம் / யூனியன் பிரதேச வாரியான பட்டியல் (State / Union Territory wise list of Government and Private Medical Colleges including AIIMS and JIPMER  & Seats in the Country for the Academic Year 2023-2024)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் (NILP) - 2022-2023ல் சிறப்பாக செயல்படுத்திய கற்போர் மையங்களுக்கு விருது வழங்குதல் - மாவட்ட வாரியாக ஒன்றிய வாரியாக பள்ளியில் பெயர் பட்டியல் வெளியீடு - பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 871/ஆ2/2023, நாள்: 26/07/2023 (New India Literacy Program - Awarding of best performing learning centers in 2022-2023 - Publication of school name list in district wise Union wise - Proceedings of Director of Non-School and Adult Education NO: 871/A2/2023, Date: 26/07/ 2023)...

 

>>> புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் (NILP) - 2022-2023ல் சிறப்பாக செயல்படுத்திய கற்போர் மையங்களுக்கு விருது வழங்குதல் - மாவட்ட வாரியாக ஒன்றிய வாரியாக பள்ளியில் பெயர் பட்டியல் வெளியீடு - பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 871/ஆ2/2023, நாள்: 26/07/2023 (New India Literacy Program - Awarding of best performing learning centers in 2022-2023 - Publication of school name list in district wise Union wise - Proceedings of Director of Non-School and Adult Education NO: 871/A2/2023, Date: 26/07/ 2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.07.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.07.2023 - School Morning Prayer Activities...


 திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: ஈகை


குறள் :225


ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின்.


விளக்கம்:


பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.


பழமொழி :

All that glitters is not gold


மின்னுவதெல்லாம் பொன்னல்ல.


இரண்டொழுக்க பண்புகள் :


1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்.


 2. துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.


பொன்மொழி :


அழகை பற்றி கனவு காணாதீர்கள் அது உங்கள் கடமையை பாழாகி விடும்.. கடமையை பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.


டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் 


பொது அறிவு :


1. ஹரியானா சூறாவளி’ என்று அழைக்கப்படும் பிரபல கிரிக்கெட் வீரர் யார்?


விடை: கபில் தேவ்


2. மேன் புக்கர் பரிசை வென்ற முதல் இந்தியர் யார்?

விடை: அருந்ததி ராய்


English words & meanings :


fe·lic·i·ta·tion - an expression of joy for the achievement of other persons. Noun. மற்றொருவரின் வெற்றியில் மகிழ்ச்சியின் வெளிப்பாடு. பெயர்ச்சொல்


ஆரோக்ய வாழ்வு :


சீரகம் -வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவது முகம், கூந்தல் அழகுக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். மேலும் பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு இயற்கை தீர்வாகவும் அமைகிறது. 


ஜூலை 27


அப்துல் கலாம் அவர்களின் நினைவுநாள்


ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam, அக்டோபர் 15, 1931 - ஜூலை 27, 2015) பொதுவாக டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகிறார். இவர் இந்தியாவின், 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும், நிர்வாகியும் ஆவார். இவர் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.


கலாம், குடியரசுத் தலைவராக பதவி ஏற்பதற்குமுன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார்.  2002 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சூலை 27, 2015 இல் இந்தியாவின், மேகாலயா மாநிலத்தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் (மாலை சுமார் 6.30 மணியளவில்) மயங்கி விழுந்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார்.


நீதிக்கதை 


ஒரு நாள் எறும்பும் பறவையும் தங்களுக்குள் ஒரு பந்தயம் வைத்துக் கொண்டன. யார் முதலில் சென்று அந்த வான்உயர்ந்த மலையை தொடுவது என்பது தான் இருவரின் பந்தயம்.


பறவை எறும்பை பார்த்து ஏளனமாக சிரித்துவிட்டு மலையை நோக்கி பறந்தது. வெகு சீக்கிரத்திலேயே பறவை மலையின் உச்சியை தொட்டது.


மலை உச்சிக்கு சென்ற பறவை மேலிருந்து கீழே இருக்கும் எறும்பை தேடியது. அப்போது எறும்பு மலை அடிவாரத்தில் இருந்து பாதி தூரத்தை கூட தொடவில்லை.


எறும்பை பார்த்து பறவை கூறியது எனக்கு முதலிலேயே தெரியும் வெற்றி எனக்குதான் என்று.


பறவையிடம் ஒரு சிறு எறும்பு போட்டியிடலாமா? எறும்பை பார்த்து கேலி செய்து பறவை நகைத்தது.


வெகு நாட்கள் கழித்து எறும்பின் விடாமுற்ச்சியால் ஒரு நாள் எறும்பு அந்த மலையின் உச்சியை சென்றடைந்தது. அப்போது அந்த பக்கமாக மலையை கடந்து சென்ற பறவை மலை உச்சியில் இருக்கும் எறும்பை ஆச்சரியமாக பார்த்தது.



அப்போது பறவையை பார்த்து எறும்பு கூறியது, “வெற்றி என்பது எல்லோருக்கும் பொதுவானது. சிலருக்கு வெற்றி சீக்கிரமாகவே கிடைத்துவிடும் சிலருக்கோ தாமதமாகவும் கிடைக்கும். விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தாலே போதும், வெற்றி ஒரு நாள் எல்லோருக்கும் நிச்சயம்”, என்றது எறும்பு.


இன்றைய செய்திகள்


27.07. 2023


*லடாக் கார்கிலில் முதல் மகளிர் காவல் நிலையம் திறப்பு.


*விடிய விடிய பலத்த மழை - டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.


*சோழன் விரைவு ரயில் ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் நேரம் மாற்றம்.


*கூட்டாற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் தனித்தீவாக மாறிய உடுமலை வனப்பகுதி.


*ஜப்பான் ஓபன் பேட்மிட்டன்: முதல் சுற்றில் திரில் வெற்றி பெற்ற லக்ஷயாசென்.


*4 ஓவர்...8 ரன்...7 விக்கெட் ....சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த மலேசிய வீரர் சையார்சுல் இசாட்.


Today's Headlines


*First women police station inaugurated in Kargil, Ladakh.


 *Heavy rain at dawn - Orange alert for Delhi: Flooding on roads.


 *Cholan Express train timing change from 14th August.


 * Udumalai forest area which has become a separate island due to increase in water flow in the river.


 *Japan Open Badminton: Lakshyasen wins first round.


 *4 overs...8 runs...7 wickets...Malaysian player Sayarsul Izad has set a new record in international T20 cricket.

 

+1 & +2 அசல் மதிப்பெண் சான்றிதழ் 31.07.2023 முதல் மாணவர்களுக்கு வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் (Letter from Director of Government Examinations to issue +1 & +2 original mark certificate to students from 31.07.2023)...

 

>>> +1 & +2 அசல் மதிப்பெண் சான்றிதழ் 31.07.2023 முதல் மாணவர்களுக்கு வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் (Letter from Director of Government Examinations to issue +1 & +2 original mark certificate to students from 31.07.2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு... 27-04-2024 – Press News – Date Extension for Online Application - Direct R...