கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>டி.இ.டி., தேர்வு: ஹால் டிக்கெட் கிடைக்காதவருக்கு மாற்று ஏற்பாடு

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (டி.இ.டி.,), ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள், தங்கள் மாவட்டத்திற்கு வருகை தரும், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) அதிகாரிகளை அணுகலாம் என, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி கூறினார்.
இதுகுறித்து, மேலும் அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 1,027 மையங்களில், வரும் 12ம் தேதி, டி.இ.டி., தேர்வு நடக்கிறது; 6.59 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இவர்களுக்காக, மொத்தம் எட்டு லட்சம், ஓ.எம்.ஆர்., விடைத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன. 55,339 பேர், தேர்வுப் பணிகளை மேற்கொள்கின்றனர்.
மாற்றுத் திறனாளிகள் மற்றும் கண் பார்வையற்றோர் தேர்வெழுத, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தங்கள் பெயரில் திருத்தம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள், உரிய ஆதாரத்துடன், தேர்வு மைய தலைமை கண்காணிப்பாளரை, தேர்வு துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் அணுகலாம்.
விண்ணப்பத்தில், பிறந்த தேதியை தவறாகக் குறிப்பிட்டுள்ள விண்ணப்பதாரர்கள், சான்றிதழ் சரிபார்ப்பின் போது, அதை திருத்திக் கொள்ளலாம். டி.இ.டி., தேர்வுக்கான, "ஹால் டிக்கெட்&' இதுவரை கிடைக்கப் பெறாதவர்கள், நாளை (இன்று) முதல் 7ம் தேதி வரை, தங்கள் மாவட்டத்திற்கு வருகை தரும் டி.ஆர்.பி., அதிகாரிகளை அணுகலாம்.
அவர்களிடம், தங்களின் டி.இ.டி., விண்ணப்ப நகல், தேர்வுக் கட்டண ரசீது, விண்ணப்பத்திற்கான ஒப்புகை அட்டை ஆகியவற்றை கொடுத்து, "ஹால் டிக்கெட்&' பெறலாம். அதிகாரிகளை சந்திக்கும் நேரம், இடம் உள்ளிட்ட விவரங்களை, மாவட்ட கல்வி அலுவலகத்தில் பெறலாம். இவ்வாறு சுர்ஜித் சவுத்ரி கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Reducing Data Entry Workload of HMs and Teachers in EMIS - SPD Proceedings

  EMIS பணிகளிலிருந்து 28.02.2025 க்குள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவார்கள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்...