கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>டி.இ.டி. தேர்வு: ரோல் நம்பர், பெயர் தெரிவித்தால் எழுதலாம்

நாளை நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, ஹால் டிக்கெட் கிடைக்காத விண்ணப்பதாரர்கள், தங்களது ரோல் நம்பர், பெயர் தெரிவித்து தேர்வு எழுதலாம் என ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் சேது ராமவர்மா தெரிவித்தார்.
இதுகுறித்து மதுரையில் அவர் கூறியதாவது: ஜூலை 12ல் நடக்கும் டி.இ.டி., தேர்வு தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் சி.இ.ஓ., டி.இ.ஓ., மற்றும் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளன. கேள்வித்தாள் மற்றும் ஓ.எம்.ஆர்., ஷீட்டுகள் ஒவ்வொரு மையத்திலும் 10 சதவீதம் அதிகமாக வைத்திருக்க உத்தரவிடப்பட்டது.
பல விண்ணப்பதாரர்களுக்கு ஹால் டிக்கெட் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. டி.ஆர்.பி., சார்பில் அனைவருக்கும் ஹால் டிக்கெட் அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பிடம் ஒரு இடத்திலும், விண்ணப்பத்தில் வேறு முகவரி குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே ஹால் டிக்கெட் கிடைத்திருக்காது. இது ஒரு பிரச்னை இல்லை.
விண்ணப்பதாரர் ரோல் நம்பர், பெயர் தெரிவித்தாலே அதை தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர் சரிபார்த்து தேர்வு எழுத அனுமதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெயர், முகவரி உட்பட விண்ணப்பத்தில் தவறாக நிரப்பிய ஒரு லட்சம் விண்ணப்பங்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஏற்கப்பட்டுள்ளன. அந்த விண்ணப்பதாரர்கள் முன்னதாக தேர்வு மையத்துக்கு சென்று சரியான பெயர், முகவரி, பிறந்த தேதிக்கான உரிய கல்வி சான்றிதழை காண்பித்து ஓ.எம்.ஆர்., ஷீட்டில் சரியாக நிரப்பி தேர்வு எழுத அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து தேர்வு மையங்களிலும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கு தரை தளத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்வில் எவ்வித தவறும் நடந்துவிடாமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி-தினமலர்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

USA - Wildfires in California & Los Angeles - Hundreds of homes in ashes

அமெரிக்கா - கலிபோர்னியா & லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத் தீ - சாம்பலான நூற்றுக்கணக்கான வீடுகள் - காணொளி USA - Wildfires in California & Lo...