கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>நிலாவிலே உலா: இன்று நிலவில் மனிதன் கால் பதித்த தினம்

 இன்று மனிதன், நிலவில் காலடி வைத்த தினம் (ஜூலை 20), 43 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தான் முதன்முதலாக நிலவில் மனிதன் காலடி பதித்தான். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து நாசா விண்வெளி மையத்தின் சார்பில் 1969, ஜூலை 16ம் தேதி அப்போலோ 11 என்ற விண்கலம் நிலவுக்கு பயணமானது. இதில் கமாண்டர்கள் நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின் மற்றும் பைலட் மைக்கேல் காலியன்ஸ் ஆகிய 3 விண்வெளி வீரர்கள் பயணித்தனர்.

விண்கலம் ஜூலை 20ம் தேதி இரவு 8.17 மணிக்கு நிலவில் இறங்கியது. விண்கலத்தில் பயணம் செய்த வீரர்களில் நீல் ஆம்ஸ்ட்ராங், விண்கலத்தில் இருந்து இறங்கி நிலவில் முதலில் காலடி வைத்தார். இதன் அடையாளமாக, அமெரிக்காவின் தேசியக் கொடியையும் நிலவில் பறக்க விட்டு, நிலவில் கால் பதித்த முதல் மனிதர் என்ற சாதனையும் படைத்தார்.

ரஷ்யாவா, அமெரிக்காவா: முதன்முதலாக, 1957 அக்., 4ல் மனிதன் இல்லாத, "ஸ்புட்னிக் 1' எனும் செயற்கைக்கோளை சோவியத் யூனியன் விண்ணுக்கு அனுப்பி சாதனை படைத்தது. 1958ல் அமெரிக்கா, முதல் செயற்கைக்கோளான எக்ஸ்புளோரர் 1 - ஐ விண்ணுக்கு அனுப்பியது. பனிப்போர் காரணமாக, இருநாடுகளும் போட்டி போட்டு செயற்கைக் கோள்களை அனுப்பின. 1969ல் அமெரிக்கா, நிலவுக்கு மனிதனை அனுப்பி, விண்வெளி சாதனை மைல்கல்லில் தனி இடம் பிடித்தது.

யார் இந்த 3 பேர்: அப்போலோ 11, விண்கலத்தை தயாரிப்பதற்கு ஆன செலவு "20 பில்லியன்' டாலர். இதை உருவாக்குவதற்கு 6 ஆண்டுகள் ஆயின. 195 மணி, 18 நிமிடம், 35 வினாடிகள் இதன் பயணம் நீடித்தது. 8 நாட்களுக்கு பின், ஜூலை 24ல், கொலம் பியாவில் வெற்றிகரமாக விண்கலம் தரை இறங்கியது. விண் வெளியில் வீரர்கள், பாகர் (பன்றி இறைச்சி), சுகர் குக்கீஸ், பைன் ஆப்பிள், திராட்சை ஜூஸ், காபி ஆகிய வற்றை உணவாக எடுத்துக் கொண்டனர்.

விண்வெளி வீரர்கள்: தி நீல் ஆம்ஸ்ட்ராங் 1930, ஆக. 5ல் பிறந்தார். பி.எஸ்., (ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்) , எம்.எஸ்., (ஏரோஸ் பேஸ் இன்ஜினியரிங்) படித்தவர். திஎட்வின் ஆல்ட்ரின் 1930, ஜன. 20ல் பிறந்தார். இவரும் பி.எஸ்., பட்டதாரி. நிலவில் இறங்கிய இரண்டாவது மனிதர். தி மைக்கேல் காலியன்ஸ் 1930, அக்., 31ல் இத்தாலியில் பிறந்தார். இவரும் பி.எஸ்., பட்டதாரி. "அப்போலோ' பயணத்துக்கு பின் அமெரிக்காவின் "நேஷனல் ஏர் அண்ட் ஸ்பேஸ் மியூசிய'த்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றினார். இவர் விண்கலத்தை ஓட்டியவர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Shield Ceremony for 114 Best Schools - DEE Proceedings, Dated : 08-11-2024

   மாவட்டத்திற்கு 3 பள்ளிகள் வீதம் 38 மாவட்டங்களில் 114 சிறந்த பள்ளிகளுக்கு 14-11-2024 அன்று கேடயம் வழங்கும் விழா - தொடக்கக்கல்வி இயக்குநரின...