எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே 1973ல் நடந்த போர்
முடிவுக்கு வந்ததை அடுத்து, அதனை உலக ஹலோ தினமாக (நவ., 21) கொண்டாடினர்.
தற்போது 180 நாடுகளில் இது கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் உலக அமைதிக்கான
முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதே இதன் நோக்கம். இன்று 39வது ஹலோ தினம்.
குறைந்தது 10 பேரிடம் "ஹலோ' சொல்வதன் மூலமாக, இந்த தினத்தில் நீங்களும்
பங்கேற்கலாம். சக மனிதர்களுடனான உறவை மேம்படுத்துவதன் மூலமாக, உலக
மக்களிடம் அமைதியை நிலை நாட்ட முடியும். அமைதிக்கான நோபல் பரிசு வென்ற
சாதனையாளர்கள் பலர், "ஹலோ' தினத்தின் முக்கியத்துவம் பற்றி
குறிப்பிட்டுள்ளனர்.
என்ன அர்த்தம்
"ஹலோ'
என்ற வியப்பிடைச் சொல்லை தினமும் பலமுறை உபயோகிக்கிறோம். ஹலா, ஹொலா என்ற
பழங்கால ஜெர்மன் மொழி வார்த்தைகளில் இருந்து "ஹலோ' வந்துள்ளது. இது தமிழில்
வணக்கம், அழைத்தல், நலம் போன்ற அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது.
இச்சொல் முதன்முதலில் எழுத்து வடிவத்தில் 1833 ம் ஆண்டு டேவிட் கிரக்கட்
எழுதிய ""தீ ஸ்கெட்சஸ் அண்ட் எசென்ட்ரிசிட்டியஸ் ஆப் கால்'' என்ற அமெரிக்க
புத்தகத்தில் வெளியானது