கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>> சாலர் டி உயினி உப்புப் படுகை - பொலிவியா

 உப்பு படுகை என்பது இயற்கையாக தரைமுழுக்க உப்பு மற்று பிற கனிமங்களால் ஆன ஒரு நிலப்பரப்பாகும். இந்த நிலப்பரப்பு கதிரொளியில் பளபளக்கும். பொதுவாக உப்புப்படுகைகள் பாலைவனங்களில் காணப்படுகின்றன. 

உப்பு படுகை என்பது பாலைவனத்தில் உள்ள ஒரு நீர்நிலை அதாவது குளம் அல்லது ஏரி போன்றவற்றில் மழைப்பொழிவால் தேங்கிய நீர் ஆவியாக்கி அதனால் தோன்றுவது ஆகும். வாய்க்கால் வழியாக வெளியேற முடியாத நில அமைப்பு கொண்ட இப்பகுதியில் தேங்கும் இந்த நீர் ஆவியாகி அதனால் அதில் கரைந்துள்ள உப்பு போன்ற கனிமங்கள் தரையின் மேற்பரப்பில் படிகின்றன. இவ்வாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கனிமங்கள் (பொதுவாக உப்புக்கள்) தரையின் மேற்பரப்பில் குவிகின்றன. இந்த கனிமங்கள் சூரிய கதிர்கள் பட்டு பிரதிபலிக்கின்றன இவை வெள்ளை நிலப்பரப்பாக தோன்றும்.

உப்புப் படுகைகள் ஆபத்து நிறைந்தவை. புதைசேற்றை மூடியபடி உள்ள உப்பு மேலோடுகள் உள்ள சில இடங்களில் ஒரு சரக்குந்தையே மூழ்கடிக்க இயலும். கிழக்கு சகாரா பாலைவனத்தில் உள்ள குவாட்ரா டிப்ரசியன் உப்பு படுகை இரண்டாம் உலகப்போரின்போது படைகளை அழிக்கும் பொறியாக பயன்படுத்தப்பட்டது.

உலகின் சில உப்புப் படுகைகள்

1.பொலிவியாவில் உள்ள சாலர் டி உயினிதான் உலகின் மிகப்பெரிய உப்பு படுகையாகும். இதில் உலகின் 50%-70% அளவுள்ள லித்தியம் காணப்படுகிறது.

2. ஐக்கிய அமெரிக்காவின் யூட்டாவில் உள்ள வறண்ட பகுதியில் உள்ள புகழ்பெற்ற பான்னிவில்லி என்று அழைக்கப்படும் உப்பு படுகை.

3.நமீபியாவில் உள்ள இதோசா தேசிய பூங்காவில் உள்ள இதோசா உப்பு படுகை இன்னொரு புகழ்வாய்ந்த ஒரு உப்புப் படுகை.

4. டெவில் 'கோல்ஃப் கோர்ஸ் உள்ள சாவுப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவில் அமெரிக்காவின் பெரிய உப்புப் படுகை உள்ளது.


>>>பொலிவியாவிலுள்ள உயினி உப்புப் படுகையின் காணொளியை காண இங்கே சொடுக்குங்கள்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

What will be the tomorrow's important announcement?

 நாளை வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு என்னவாக இருக்கும்? What will be the major announcement tomorrow? தமிழ்நாட்டில் இரும்புக் காலம் முன்னதாக...