கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

டிஎன்பிஎஸ்சி தேர்வில் ‘பயோ மெட்ரிக்’ முறை – ஆள்மாறாட்டத்தை தடுக்க நடவடிக்கை...

 


தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் அரசு பணிகளுக்கான தேர்வுகளில் நடைபெறும் ஆள் மாறாட்டங்களை தவிர்க்க ஆதார் அட்டை அடிப்படையிலான ‘பயோ மெட்ரிக்’ சேவையை நடைமுறைப்படுத்த உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் அதிகம் ஆள் மாறாட்டம் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. இதனை தடுக்க இந்த ஆண்டு நடத்தப்படும் தேர்வுகளில் அதிக மாற்றங்களை டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. பல்வேறு கட்டுப்பாடுகள் உடன் நடைபெற்ற இந்த தேர்வில் சில நேரங்களில் விதி மீறல்களும் நடைபெறுகின்றன.

இதனை தடுக்கும் விதத்தில் டிஎன்பிஎஸ்சி ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அதன்படி போட்டித் தேர்வு நடத்தப்படும் தேர்வு மையங்களில் ஆதார் அடிப்படையிலான ‘பயோ மெட்ரிக்’ வருகைப்பதிவு முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த திட்டத்திற்கான நிறுவனத்தை தேர்வு செய்து அதன்பின் மார்ச் மாதம் நடத்தப்படும் துறை தேர்வுகள், இன்ஜினியரிங் பணி தேர்வுகள், குரூப் 4, குரூப் 2, குரூப் 1 தேர்வுகளில் பயோ மெட்ரிக் முறை அமலுக்கு வரும் என டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SLAS - 2025 Report Card வெளியீடு

SLAS - 2025 Report Card Tamilnadu - Class 3, 5 & 8 - State  State Level Achievement Survey  மாநில அடைவு ஆய்வுத் தேர்வு முடிவுகள் வெளியீட...