கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் & பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் பெயர் பட்டியல் (Leadership Training for Head Masters – Proceedings of Commissioner of School Education & Name List of Teachers Participating in Training)...



தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் & பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் பெயர் பட்டியல் (Leadership Training for Head Masters – Proceedings of Commissioner of School Education & Name List of Teachers Participating in Training)...

 


 

2022-2023 ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது , மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் , பள்ளிக்கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் சார்ந்து வெளியிட்ட அறிவிப்பில் , பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் இணை இயக்குநர்கள் , முதன்மைக் கல்வி அலுவலர்கள் , மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் , வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் என சுமார் 12,000 பேருக்கு நாட்டின் தலை சிறந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் உதவியுடன் பணித்திறன் மேம்பாடு , தலைமை திறன் , மேலாண்மை ஆகிய பொருண்மைகளில் ஆண்டுதோறும் உள்ளுறை பயிற்சி ( Residential Training ) அளிக்கப்படும் “ என்று தெரிவித்ததன் அடிப்படையில் , 2022-2023ஆம் கல்வி ஆண்டின் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.



 முதற்கட்டமாக , தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி அளிப்பதற்கான முதன்மை கருத்தாளர் பயிற்சி 22.08.2022 முதல் 27.08.2022 வரை விருதுநகர் மாவட்டம் , இராஜபாளையம் வேங்கநல்லூரில் உள்ள ராம்கோ தொழில்நுட்ப கல்லூரியில் ( Ramco Institute of Technology ) நடைபெறவுள்ளது.




இதன்பொருட்டு , இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள தலைமை ஆசிரியர்களை வளாகத்திலேயே தங்கி பயிற்சியில் கலந்து கொள்ள ஏதுவாக , அவர்களை பணியிலிருந்து விடுவித்தும் , பயிற்சிக்கு வரும் ஆசிரியர்களை தங்களது மடிக்கணினியுடன் 21.08.2022 அன்று மாலை 7.00 மணிக்குள் பயிற்சி வளாகத்திற்கு வந்து பதிவு தலைமை செய்யுமாறும் , மாவட்ட அறிவுறுத்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , பயிற்சி சார்ந்த விவரங்களுக்கு திரு.பி.சிவசக்தி கணேஷ்குமார் ( கைப்பேசி எண் .9442570306 , 9345570306 ) உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ( ADPC ) முதன்மைக் கல்வி அலுவலகம் , விருதுநகர் என்பவர் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.



>>> பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்  (Leadership Training for Head Masters – Proceedings of Commissioner of School Education)...



>>> பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் பெயர் பட்டியல் (Leadership Training for Head Masters – Name List of Teachers Participating in Training)...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...