கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஜாக்டோ ஜியோ போராட்டம் - தற்காலிகமாக ஒத்திவைப்பு...

ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை 12 மணிக்கு அளவில் முதல்வர் தனது அலுவலகத்துக்கு அழைத்து நேரில் பேச்சு...





 தன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் நிதிநிலை சரியான உடன் தனது வாக்குறுதியை தான் நிறைவேற்றுவேன் தாங்கள் யாரும் நம்பிக்கை இழக்க வேண்டாம் நான் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவேன் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளார்கள். ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மீண்டும் கூடி ஆலோசனை நடைபெற்று வருகிறது. விரைவில் முடிவு அறிவிக்க  உள்ளார்கள்.


ஜாக்டோ ஜியோ போராட்டம் - தற்காலிகமாக ஒத்திவைப்பு...


ஜாக்டோ ஜியோ பேரமைப்பு 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்களை அறிவித்தது.


 அதன் தொடர்ச்சியாக நாளை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்தது.


 மேலும் வரும் 26 ஆம் தேதியிலிருந்து தொடர் வேலை நிறுத்தத்தையும் அறிவித்திருந்தது.


 இந்நிலையில் நேற்றைய தினம் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் தலைமையில் மாண்புமிகு அமைச்சர் முத்துசாமி மற்றும் மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.


 கோரிக்கைகளை கேட்டு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அறிவித்தனர்.


அதன் அடிப்படையில் நேற்று மாலை நிதி அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் ஓர் அறிக்கையினை வெளியிட்டார்.


நிதிநிலை சரியான உடன் படிப்படியாக அரசு ஊழியர் ஆசிரியர்களின் கோரிக்கைகள் அரசு வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்றப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


 மேலும் அரசாணை 243 அமல்படுத்துவதில் இதுவரை வரப்பெற்றுள்ள கோரிக்கைகளின் அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது.


 எனினும் நேற்று மாலை கூடிய ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் கூட்டம் நிதி அமைச்சரின் அறிக்கையை முற்றாக நிராகரித்து போராட்டங்கள் தொடரும் என்று அறிவித்தது.


 இந்நிலையில் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு அவர்கள் ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.


அதன் அடிப்படையில் இன்று மதியம் 12 மணிக்கு ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்து கோரிக்கைகளை முன் வைத்தனர்.


அப்பொழுது முதல்வர் நிதிநிலை சீரான உடன் தங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.


என் மீது நம்பிக்கை வையுங்கள், நான் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளேன்.

என் மீது நம்பிக்கையை இழக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றேன். உங்கள் கோரிக்கை அனைத்தையும் நான் சொன்னபடி நிறைவேற்றுவேன் என உறுதி அளித்தார்.


 மீண்டும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூடி முதல்வரின் கருத்து குறித்து விவாதித்தனர்.


 பெரும்பான்மையான ஒருங்கிணைப்பாளர்கள் முதல்வரின் நம்பிக்கை மற்றும் உறுதி அளித்ததை கருத்தில் கொண்டு நாளை நடைபெறும் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கலாம் என்று தெரிவித்ததின் அடிப்படையில்,


 நாளை நடைபெற இருந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


 மீண்டும் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூடி உரிய முடிவை அறிவிக்கும்.


வரும் 19ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒரு சில அறிவிப்புகளை எதிர்பார்க்கப்படுகிறது.


 19ஆம் தேதி பட்ஜெட்  அறிவிப்பை பொறுத்து ஜாக்டோ ஜியோ வின் அடுத்த கட்ட நடவடிக்கை அமையும் என நம்பப்படுகிறது.


ஜாக்டோ ஜியோ அறிவித்த போராட்டத்திற்கு முழு மூச்சோடு களத்தில் பணியாற்றி ஆசிரியர்களை திரட்டிய பொறுப்பாளர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வணக்கங்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

 

வரும் 17ஆம் தேதி திருவண்ணாமலை மாநில செயற்குழுவில் இது பற்றிய முழு விவாதம் நடைபெற்று உரிய கருத்துக்கள் அடிப்படையில் முடிவு எடுக்கலாம் என மாநில மையம் தெரிவித்துக் கொள்கிறது.


மாநில மையம், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி.


இன்றைய முதல்வர் அவர்களுடனான சந்திப்பில்..

அமைச்சர் உதயநிதி, தங்கம் தென்னரசு, ஏ. வா. வேலு, முத்துசாமி, அன்பில் மகேஷ்...   மற்றும் IAS அதிகாரிகள் நால்வர் மற்றும் ஒரு IPS அதிகாரி உடன் இருந்தனர்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of Selected Candidates in Thirukkural Quiz held yesterday 21-12-2024 - Karur District

    நேற்று 21-12-2024 நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா போட்டியில் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் - கரூர் மாவட்டம்  List of Selected Candidates ...