கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாரத்தான் ஓட்டப்பந்தய வரலாறு


மாரத்தான் ஓட்டப்பந்தய வரலாறு 


கிரேக்கத்தில் நிலவும் ஒரு மரபு வழிக் கதையின்படி, கி.மு. 490-ஆம் ஆண்டு, பெர்சியர்கள் கிரேக்க நாட்டை ஆக்கிரமித்தபோது, மாரத்தான் என்ற இடத்தில் போர் நடைபெற்றது. அப்போது, கிரேக்கர்கள் வென்ற செய்தியினை... ஒரு கிரேக்க வீரர் மாரத்தனிலிருந்து, ஏதென்ஸ்க்கு ஓடியே வந்து தெரிவித்து, மயங்கி விழுந்து, உயிர் நீத்தார். மாரத்தான் முதல் ஏதென்ஸ் வரை தூரமானது 25 மைல்கள் அல்லது கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர்கள்.


எனவே, ஒலிம்பிக்ஸ் போட்டி மறுபடி 1896-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபோது, இது 40 கிலோமீட்டர் என நிறுவப்பட்டது. ஆனால், பின்னர், 1908-ஆம் ஆண்டு, லண்டனில் ஒலிம்பிக்ஸ் நடைபெற்ற போது, மாரத்தான் போட்டியின் தூரமானது பிரிட்டிஷ் ராஜ வம்சத்தினருக்காக நீட்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது, வின்ஸ்டர் கோட்டையிலிருந்து, ஒலிம்பிக் விளையாட்டரங்கின் ராஜ வம்சத்தினர் அமரும் இடம் வரை. அது 26.2 மைல்கள் என இருந்தது. அதுவே தொடர்ந்து விட்டது. 1921-ஆம் ஆண்டு, அதுவே அளவுகோலாக நிர்ணயிக்கப்பட்டது.


எனவே, 26.2 மைல்கள் அல்லது 42.195 கிலோமீட்டர்கள் மாரத்தான் போட்டி தூரம்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNPSC - Annual Planner 2026

    TNPSC ஆண்டுத் திட்டம் 2026 TNPSC - Annual Planner 2026 அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்வுகள் TNPSC ANNUAL PLANNER  2026 ஆம் ஆண்டிற்கான (TNP...