கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
>>>ஆக., 11ல் சென்னை வருகிறது எக்ஸ்பிரஸ் கண்காட்சி ரயில்
இந்தியா முழுவதும் வலம் வரும், "சயின்ஸ் எக்ஸ்பிரஸ்" கண்காட்சி ரயில், ஆக., 11ல் சென்னை வருகிறது.
உயிரி பன்மயம் குறித்து, மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், "சயின்ஸ் எக்ஸ்பிரஸ்" சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இதில், 12 பெட்டிகள் உள்ளன. உயிரினங்கள் அழிந்து வருவதை, மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக இந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், ஆக., 11ல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வருகிறது. அங்கு மாணவர்கள், பொதுமக்கள் பார்வைக்காக, ஆக., 15 வரை நிறுத்தப்படுகிறது.
மதுரையில் கூடல் நகர் ரயில் நிலையத்தில் ஆக., 16 முதல் 19 வரையும், கன்னியாகுமரியில் ஆக., 20 முதல் 23ம் தேதி வரையும் நிறுத்தப்படுகிறது. மாணவர்கள், இதை பார்வையிடலாம். இதில், மாணவர்களுக்காக தினசரி ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு, இறுதி நாளில் பரிசும் வழங்கப்படுகிறது.
மேலும், இதில் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. மாணவர்களுக்கு விளக்கம் அளிக்க, இந்த ரயிலில், 60 பேர் பணியாற்றுகின்றனர். இது தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள, அந்தந்த மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர்களை அணுகலாம் என, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்து உள்ளது.
>>>ஆங்கில இலக்கியம் - நடைமுறை ஆங்கிலம் சமமானதே: ஐகோர்ட்
பி.ஏ., நடைமுறை ஆங்கிலம் மற்றும் ஆங்கில இலக்கிய பாடங்களை வேறுபடுத்தி பார்க்கக்கூடாது எனவும், நடைமுறை ஆங்கிலம் படித்தவர்களுக்கு பட்டதாரி உதவி ஆசிரியர் பணி வழங்க வேண்டும் எனவும், மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
திருநெல்வேலி பகுதியை சேர்ந்தவர்கள் செல்லத்தாய், அனுராதா. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில், 2004 ல் செல்லத்தாயும், 2005 ல் அனுராதாவும் பி.ஏ.,நடைமுறை ஆங்கிலம் (Functional English) தேர்ச்சி பெற்றனர். வேறு பல்கலையில் 2010 ல் பி.எட்.,தேர்ச்சி பெற்றனர். 2009-10 ல், பட்டதாரி உதவி ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கு இருவரின் பெயர்களும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட்டது.
சான்றிதழ் சரிபார்ப்புக்குச் சென்றனர். பணி நியமனம் வழங்கவில்லை. தேர்வுசெய்து படித்திருந்தனர். இதனால் அவர்களுக்கு பணிவாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், இது பி.ஏ. ஆங்கில இலக்கியப் பாடத்திற்கு சமமானது என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதனால், தங்களுக்கு பணி நியமனம் வழங்க உத்தரவிடக்கோரி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு, நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன் விசாரணைக்கு வந்தது.
அரசு வக்கீல், "அரசு உத்தரவுப்படி பி.ஏ.,நடைமுறை ஆங்கிலத்தை, பி.ஏ., ஆங்கில இலக்கியத்திற்கு சமம் என, பல்கலை கூறவில்லை,&'&' என்றார். மனுதாரர் வக்கீல், "கோவை அவினாசிலிங்கம் பல்கலையில் பி.ஏ.,நடைமுறை ஆங்கிலத்தை அரசு அங்கீகரித்து, பணி நியமனம் வழங்கியுள்ளது,&'&' என்றார்.
நீதிபதி: நிகர்நிலை பல்கலையில் பி.ஏ.,நடைமுறை ஆங்கிலத்தை, பி.ஏ., ஆங்கில இலக்கியத்திற்கு சமமாக கருதும் அரசு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பாடத்தை மட்டும் ஏன் வேறுபடுத்தி பார்க்க வேண்டும். இது தவறு. மனுதாரர்கள் இருவருக்கும் பணி நியமன உத்தரவு வழங்க வேண்டும், என்றார்.
>>>சிமேட் தேர்வெழுத தயாராகுங்கள்
அனைத்துவிதமான மேலாண்மை படிப்புகளுக்கும் தகுதியான மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக, ஏஐசிடிஇ ஏற்கனவே அறிவித்த சிமேட் தேர்வை, தற்போது வருடத்திற்கு 2 முறை நடத்த உத்தேசித்துள்ளது.
வரும் 2013-14 ம் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படவுள்ள முதல் சிமேட்(CMAT - Common Management Admission Test) தேர்விற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த 2 தேர்வுகளிலுமே கலந்து கொள்ளலாம் மற்றும் அந்த 2 மதிப்பெண்களில் சிறந்த மதிப்பெண்ணானது மாணவர் சேர்க்கைக்கு பயன்படுத்திக் கொள்ளப்படும்.
முதல் தேர்வுக்கான தேதி விபரம்
* Registration Window திறக்கப்படும் நாள் - 03.08.2012
* ஆன்லைன் பதிவிற்கான கடைசித் தேதி - 02.09.2012
* ஹால் டிக்கெட் பிரின்ட்அவுட் தேதி - 15.09.2012 முதல்
* கணினி அடிப்படையிலான தேர்வு தேதிகள் - 27.09.2012 முதல் 01.10.2012 வரை
* தேர்வு நேரங்கள் - காலை 9.30 முதல் மதியம் 12.30 வரை
* மதியம் 2.30 முதல் மாலை 5.30 வரை
* தேர்வு முடிவுகளை அறிவிக்கப்படும் தேதி - 17.10.2012
* மதிப்பெண் அட்டைகளை பிரின்ட்அவுட் செய்தல் - 17.10.2012 முதல் 17.11.2012 வரை.
தகுதி நிலைகள்
ஏதாவதொரு பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் அல்லது இறுதியாண்டு பட்டப் படிப்பு மேற்கொள்வோர் இதை எழுத தகுதி வாய்ந்தவர்கள்.
பதிவு
www.aicte-cmat.in என்ற வலைத்தளத்தில், ஆகஸ்ட் 3 முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை, ஆன்லைன் முறையில் பதிவுசெய்து கொள்ளலாம். ஆன்லைன் தேர்வெழுதுவதற்கான 3 நகரங்களை நமது விருப்பத்திற்கிணங்க தேர்வு செய்யலாம். அவற்றில் இறுதியான ஒன்று முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கீடு நடைபெறும்.
கட்டண விபரங்கள்
சிமேட் - பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 1200, SC/ST/PD பிரிவு மாணவர்களுக்கு 600.
இந்த கட்டணத்தோடு, வங்கி சேவைக் கட்டணமும் அடக்கம். ஒருமுறை கட்டிய கட்டணம் எக்காரணம் கொண்டு திரும்பத் தரப்பட மாட்டாது.
நெட் பேக்கிங், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமும், நேரடி பணம் செலுத்துதல் மூலமும் கட்டணம் செலுத்தலாம்.
தேர்வு மையங்கள்
நாட்டின் 64 நகரங்கள் தேர்வு மையங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தேர்வு மையம் அல்லது நேரத்தை, ரத்துசெய்யவோ, மாற்றவோ AICTE -க்கு முழு அதிகாரம் உண்டு.
சேர்க்கை செயல்பாடு
மத்திய கவுன்சிலிங் அல்லது குறிப்பிடப்பட்ட சேர்க்கை நடைமுறைகள் மூலமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் விபரங்கள், அந்தந்த மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதேசமயம், மத்திய கவுன்சிலிங் இல்லையெனில், மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும்.
இதுகுறித்த முழுமையான விபரங்களுக்கு www.aicte-cmat.in என்ற இணையதளம் செல்க.
>>>ஆகஸ்ட் 03 [August 03]....
- வெனிசுலா கொடி நாள்
- காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1976)
- தேசிய கூடைப்பந்து சங்கம் அமெரிக்காவில் அமைக்கப்பட்டது(1949)
- அமெரிக்காவின் முதல் கப்பலான லெ கிரிஃபோன், ராபர்ட் லசால் என்பவரால் அமைக்கப்பட்டது(1678)
>>>சமனில்லாத சமன்!
கடந்த ஆண்டு இதே காலத்தில் சமச்சீர் கல்வி பற்றி மிகப்பெரிய குழப்பம் ஆசிரியர்களிடையேயும் மாணவர்களிடையேயும் இருந்தது. இது தொடர்பாக போராட்டங்களும் ஆங்காங்கே நடந்தன. தில்லி உச்ச நீதிமன்றம்வரை சென்ற அந்தப் பிரச்னை ஒரு வழியாக சுமுகமாக்கப்பட்டது. கல்வி அனைவருக்கும் சமமாக்கப்பட வேண்டும் என்ற பெயரில் சமச்சீர் உருவாக்கப்பட்டது பாராட்டுக்குரியதுதான். ""ஒரு கட்டடத்தை இரு தூண்கள் தாங்கிக் கொண்டுள்ளன. அதில் ஒரு தூணின் மேற்பகுதி சிறிது உடைந்துவிட்டது. இப்போது மேல்தளம் சமனில்லாமல் ஒரு புறம் சரிந்துள்ளது. இதனை சமன்செய்வதற்கான பல வழிகள் தொடர்பாகக் கூறப்பட்ட ஒரு யோசனை செயல்படுத்தப்பட்டது. அது என்னவென்றால், நன்றாக உள்ள மற்றொரு தூணையும் உடைந்த தூணின் அளவுக்கு உடைப்பதென்பது. அது அவ்வாறே மேற்கொள்ளப்பட்டு மேல் தளத்தைச் சமன்படுத்தியாயிற்று''. இதுபோன்று எளிதில் புரியக்கூடிய, அழகான எடுத்துக்காட்டுகளைக் கொண்டிருக்கும் சமச்சீர் புத்தகம் அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போதைக்குப் பிரச்னை அதுவல்ல. 8-ஆம் வகுப்பு வரை அமல்படுத்தப்பட்டுள்ள, மாணவர்களும் ஆசிரியர்களும் செயல்படுத்த வேண்டிய பல்வேறு செயல்பாடுகளைப் பற்றித்தான். செயல்வழிக்கற்றல், படைப்பாற்றல் கல்வி முறை மூலம் மாணவர்கள் பாடங்களைக் கற்கும் முறை இந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் தினமும் அதிகநேரம் படிப்பது என்பது மாறி அதிகநேரம் செயல்வழிக் கற்றல் என்றாகிறது. இது பாடங்களை எளிதில் புரிந்து கொள்வதற்குச் சிறந்த வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இந்த செயல் வழிக்கற்றலுக்காக மாணவர்களுக்கு சில மூலப்பொருள்கள் (சார்ட், அதில் ஒட்டுவதற்குப் படங்கள்..,) தேவைப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு மாணவனுக்கும் தினமும் குறைந்தது 20 ரூபாய் தேவைப்படுகிறது. 20 ரூபாய் என்பது உயர் வருவாய் பிரிவினருக்கு பெரும் தொகையல்ல. அரசுப் பள்ளியில் குழந்தைகளை விட்டுவிட்டு டாஸ்மாக்கில் நாள்தோறும் வருகையைப் பதிவு செய்யும் தந்தைக்கும், இலவசமாக அளிக்கக்கூடிய அரிசியைக்கூட கிலோ ரூ.3-க்கு வாங்கும் தாய்க்கும் இது பெருந்தொகையே! இது மாணவர்களுடைய பிரச்னை. இந்தமுறையில் ஆசிரியர்களுக்கு என்ன பிரச்னை? இங்குதான் ஆசிரியர்கள் ஆசிரியர்களாக அல்லாமல் மாணவர்களின் செயல்பாடுகளை ஆவணப்படுத்தும் அலுவலர்களாக மாறியிருக்கின்றனர். ஒவ்வொரு மாணவனுக்கும் 5 அல்லது 6 பக்கம் ஒதுக்கப்பட்டு, மாணவர்களைத் தனித்தனியே கவனித்து அவர்களைப் பற்றி வளர் மதிப்பீடு, தொகுப்பு மதிப்பீடு என்று ஆவணப்படுத்தும் வேலை ஆசிரியர்களுக்கு. இதனால் கற்றுத்தரும் நேரம் குறைவாகவும் ஆவணப்படுத்தும் நேரம் அதிகமாகவும் செலவிட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. உதாரணத்துக்கு மாணவனிடம் ஆசிரியர் ஒரு கேள்வி கேட்டால், மாணவனிடம் என்ன கேள்வியைக் கேட்டோம் என்று ஆவணப்படுத்த வேண்டும். மாணவன் புத்தகத்தை கையில் தொட்டால், அதற்கு தனி மதிப்பெண் என்று அதனையும் பதிவு செய்ய வேண்டும். இந்த வேலைகளையெல்லாம் செய்துதான் மாணவன் எந்த இடத்தில் தேங்குகிறான், தொய்வடைகிறான் என்று ஆசிரியர் அறிய வேண்டியதில்லை. மாணவர்களின் சில செயல்பாடுகளை வைத்தே அவனைப் பற்றி கணிக்கக் கூடிய திறமை ஆசிரியர்களிடத்தில் உண்டு. மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவாகவும் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் தகவல்களை ஆவணப்படுத்தும் முறை எப்படி சாத்தியமாகும்? இந்நிலையில் இத்தனை வழிமுறைகளை அமல்படுத்தினால் மாணவர்களுக்குக் கல்வி சுமையாகின்றதோ இல்லையோ ஆசிரியர்களுக்கு சுமையாகிவிடாதா? ஆசிரியர்களைப் பொருத்தவரையில் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களைக் காட்டிலும், தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் மேலானவர்கள். புதிதாகக் கொண்டு வந்துள்ள முறை தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தியுள்ளதா? வண்டியில் சாட்டையைக் கையில் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பவர் பாரத்தை இழுக்கும் எருதின் கஷ்டத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை. கல்வி முறைகளில் உள்ள குறைகளைக் கூறினால், ""சம்பளம் அதிகம்; அதனால் வேலை அதிகம்; இதைக் கூட அவர்கள் செய்ய முடியாதா?'' என்று கேள்விக்கணைகள். வேலை செய்ய ஆசிரியர்கள் தயார். ஆனால், ஓட்டைப் பானையை வைத்து செடிகளுக்கு எப்படி நீர் ஊற்றுவது? இங்கு மாற்ற வேண்டியது பானையையா, நீர் ஊற்றுபவர்களையா? கால்குலேட்டர் வந்தவுடன் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் திறன் குறைந்தது; செல்போன் வந்தவுடன் நினைவுத்திறன் குறைந்தது; இவைகளை இழந்து நாம் எதைப்பெற்றோம் என்று தெரியவில்லை. அதேபோல் தொழில்நுட்பம் வந்தபின் எழுதுவது குறைந்தது. அட்டை வழி, செயல்வழி கற்றல்கள் மூலம் மாணவனின் வாசிப்புத் திறன் மறைந்து கொண்டிருக்கிறது. எழுத்து, வாசிப்பு இவையிரண்டும் இல்லாமல் எப்படி ஒரு மொழியைக் காப்பாற்றுவது? மாற்றங்கள் வரும்போது ஒன்றை நாம் இழக்கத்தான் வேண்டும். மாற்றத்தை மறுப்பவர்கள் பிற்போக்காளர்கள், இந்த காலத்துக்கு உதவ மாட்டார்கள் என்று மாற்றத்தை ஏற்பவர்கள் ஏளனம் செய்கிறார்கள். அசோகர் மரம் நட்ட வரலாற்றுக் கல்வியைத் தூக்கிப்போடுங்கள். இந்த காலத்துக்கு ஏற்ற கல்வியை உருவாக்குங்கள் என்று முற்போக்கு சிந்தனைவாதிகளின் (?) குரல்கள் முன்பு கேட்டன. ஆனால் இன்றோ, உலக வெப்பமயமாதலைத் தடுக்க ஜி-20 மாநாட்டில் ஆலோசிக்கப்படுகிறது. மரத்தின் அருமை குறித்து அரசு பல விளம்பரங்களைச் செய்து வருகிறது. மரங்களை வளர்க்க பல இயக்கங்கள் தோன்றிவிட்டன. இப்போதாவது புரிகிறதா, பழைய கல்வி முறை எவ்வளவு உகந்ததென்று? எந்தக் கல்வி முறையை மாற்ற வேண்டுமென்று யார் கூறுவது? மாற்றங்களை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டுமா? அவ்வாறாயின், உருவில் சிறியதாக இருந்து அறை முழுவதும் மணத்தை பரப்பக்கூடிய மல்லிகை போல்தானே அது இருக்க வேண்டும். அதைவிடுத்து காற்றிலே பட்டவுடன் சுருங்கி விடும் பஞ்சு மிட்டாய் போன்று இருந்து என்ன பயன்? இந்த வகையான கற்றல் முறைகள் எல்லாம் சிபிஎஸ்இ-க்கு ஈடாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது அதிகாரிகளின் கருத்து. ஒருவேளை இந்த முறையும் அதற்கு ஈடாகவில்லையென்றால் என்ன செய்வது என்று ஆசிரியர்களிடம் கேள்வியெழுப்பினால், "நாம் என்ன செய்ய, அரசன் எவ்வழியோ நாம் அவ்வழி' என்ற பழமொழியை நினைவூட்டுகிறார்கள். நீரில் நனைந்த காகிதமோ, அட்டையோ ஈரம் காய்ந்தபின் முன்பைவிட விறைப்பாகத்தான் இருக்கும். அதற்காக அது உறுதியாகத்தான் உள்ளது என்று கூறிவிட முடியுமா? முன்னர் பார்த்த கட்டட உதாரணத்தில், எதிர்கால சிந்தனையின்றி மேல்தளம் சமன்செய்யப்பட்டது. பாருங்கள், நாளைக்கு ஏற்கெனவே பாதிப்படைந்த தூண் பளு தாங்காமல் மேலும் பாதிப்படைந்தால் மேல்தளத்தை எப்படி சமன் செய்வது? மீண்டும் நன்றாக உள்ள தூணை வெட்டி சமன் செய்வதா? இதைத் தவிர்க்க முன்னரே என்ன செய்திருக்க வேண்டும்?
நன்றி-தினமணி
>>>ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்ற 32 மாவட்டங்களைச் சேர்ந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஆகஸ்ட் 4-ல் சான்றிதழ் சரிபார்ப்பு [Recruitment of Post Graduate Assistants for the year 2011 - 12 - Venue wise Candidates Individual Query for C.V ]
Direct Recruitment of Post Graduate Assistants/Physical Education Directors Grade I in Government Schools - 2011 - 12
List of Candidates Called for Certificate Verification : 3063
sub | subject | Total |
12PG01 | TAMIL | 618 |
12PG02 | ENGLISH | 374 |
12PG03 | MATHEMATICS | 336 |
12PG04 | PHYSICS | 259 |
12PG05 | CHEMISTRY | 243 |
12PG06 | BOTANY | 227 |
12PG07 | ZOOLOGY | 213 |
12PG08 | HISTORY | 184 |
12PG10 | ECONOMICS | 258 |
12PG11 | COMMERCE | 310 |
12PG19 | PHYSICAL DIRECTOR | 41 |
Certificate Verification - 32 District and Date of Certificate Verification - 04.08.2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்: பழ...