கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மாற்றத்தின் பயன்...?

ஒருவன் தன் கழுதை மேல் சுமை ஏற்றிக் கொண்டிருக்கும் போது எதிரிகள் வருவதைப் பார்த்தான், பயந்துபோய், “கழுதையே வா! நாமிருவரும் ஒடிப்போய்விடலாம­். எதிரிகள் வருகிறார்கள் ” என்றான்.

கழுதை, “நான் வரவில்லை. நீ ஓடு!” என்றது.

”ஏன் என்றான் கழுதைக்கு சொந்தக்காரன்.?”

”எதிரிகளுக்கும் ­ பொதி சுமக்கத்தானே போகிறேன். உன்னுடன் வந்தால் எனக்கு சுமை குறையப்போகிறதா ­?” என்றது.

நீதி: அரசு மாறும்போது, ஏழை மக்களுக்கு நிகழும் ஒரே மாற்றம் எஜமானர்களின் பெயர் மட்டுமே

>>>கால்சியம் அதிகம் இருக்கும் உணவுகள்...

உடலுக்கு வேண்டிய சத்துக்களில் கால்சியம் மிகவும் இன்றியமையாதது. கால்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால், எலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, இரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சனைகள் ஏற்படும்.

தற்போது நிறைய மக்கள் மூட்டு வலியால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். இவற்றிற்கு காரணம் உடலில் கால்சியம் சத்தானது மிகவும் குறைவாக இருப்பதால் தான். மேலும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சரியாக உட்கொள்ளததும் ஒரு வகையில் காரணம். அதுமட்டுமின்றி கால்சியம் உள்ள உணவுகளை மட்டும் சாப்பிட்டால், அனைத்தும் சரியாகிவிடாது.

ஏனெனில் கால்சியம் உள்ள உணவுகளை சாப்பிட்டால், கால்சியத்தை உடலில் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி சத்தும் மிகவும் அவசியமாகிறது. எனவே கால்சியத்துடன், வைட்டமின் டி உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். பொதுவாக கால்சியம் குறைபாடானது ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படும்.

ஏனெனில் மாதம் மாதம் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதால், அதிலேயே பெரும்பாலான கால்சியம் உடலில் இருந்து வெளியேறிவிடும். மேலும் பிரசவத்தின் போதும் நிறைய் கால்சியமானது போய்விடும். எனவே ஆண்களை விட பெண்கள் கால்சியம் உணவுகளை சாப்பிடுவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இப்போது எந்த உணவுகளிலெல்லாம் கால்சியம் சத்து அதிகம் உள்ளது என்பதைப் பார்ப்போமா

பால்:
பாலில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பது அனைவருக்குமே தெரியும். அதிலும் பெண்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் புரோட்டீன் பொடியை சேர்த்து குடித்தால், ஒரு நாளுக்கு தேவையான கால்சியம் சத்தை பெறலாம்.

தயிர்:
பால் பிடிக்காதவர்கள், தயிரை சாப்பிடலாம். தயிரிலும் பாலில் உள்ள கால்சியத்தின் அளவு உள்ளது.

மத்தி மீன்:
மீன்களில் மத்தி மீன் மிகவும் பிரபலமானது, அத்தகைய மீனில் 33 சதவீதம் கால்சியம் சத்தை தருகிறது. எனவே இதனை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால், நல்லது.

சீஸ் :
பால் பொருட்களில் ஒன்றான சீஸ் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் சீஸிலும் கால்சியம் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.

உலர் அத்திப்பழம் :
அத்திப்பத்தில் இரண்டு வகையான முக்கியமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் பெண்களுக்கு தேவையான முக்கியமான சத்துக்கள் உள்ளது. அது கால்சியம் மற்றும் இரும்புச்சத்து. எனவே இதனை தினமும் 2-3 துண்டுகள் சாப்பிட்டு வருவது நல்லது.

பச்சை இலைக்காய்கறிகள் :
பால் பொருட்களைத் தவிர, கால்சியம் சத்தானது பச்சை இலைக் காய்கறிகளில் நிறைந்துள்ளது. அதிலும் பசலைக் கீரை, ப்ராக்கோலி போன்றவற்றை அளவுக்கு அதிமான அளவில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.

கடல் சிப்பி :
பொதுவாக அனைத்து கடல் உணவுகளிலும் கால்சியம் ஆக்சலேட் என்னும் பொருள் உள்ளது. ஆனால் இதனை ஆண்கள் அதிக அளவில் சாப்பிட்டால், அவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் வந்துவிடும். பெண்கள் இதை சாப்பிட்டால், அதிகப்படியான கால்சியத்தை பெறலாம்.

பாதாம் :
பாதாமில் வைட்டமின் ஈ சத்து மட்டுமின்றி, 70-80 சதவீத கால்சியம் நிறைந்துள்ளது. எனவே தினமும் ஒரு கையளவு பாதாமை சாப்பிட்டு, உடலில் கால்சியத்தை அதிகரியுங்கள்.

இறால்:
இறாலில் கால்சியம் அதிகம் உள்ளது. ஆனால் அதை அளவுக்கு அதிகமாக வேக வைத்தால், அதில் உள்ள கால்சியம் போய்விடும். எனவே தீயை குறைவில் வைத்து, அளவுக்கு அதிகமாக வேக வைத்துவிடாமல் சாப்பிட வேண்டும்.

எள் :
பொதுவாக எள்ளை அதிகமாக சாப்பிட மாட்டோம். ஆனால் ஒரு டீஸ்பூன் எள்ளில், ஒரு டம்ளர் பாலில் இருக்கும் கால்சியம் சத்தானது நிறைந்துள்ளது.

பிரேசில் நட்ஸ்:
6 பிரேசில் நட்ஸில் 45 மில்லி கிராம் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இந்த நட்ஸிலும் அதிகமான புரோட்டீன் உள்ளது.

உலர்த்திய மூலிகைகள்:
நிறைய உலர்த்திய மூலிகைகளிலும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளன. எப்படியிருப்பினும் இத்தகைய மூலிகைகளை அப்படியே சாப்பிட முடியாது. ஆனால் அவற்றை சூப், குழம்பு போன்றவற்றில் தினமும் சிறிது சேர்த்து சாப்பிட்டால் நல்லது.

டோஃபு:
டோஃபு என்பது சோயா பாலினால் உருவான ஒரு வகையாக சீஸ். பொதுவாக சோயா பாலிலும் கால்சியம் அதிகம் இருக்கும். எனவே இந்த டோஃபுவிலும் நிச்சயம் கால்சியம் அதிகம் இருக்கும்.

ஆரஞ்சு :
சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மட்டுமின்றி, கால்சியம் சத்தும் அடங்கியுள்ளது.

சாலமன்:
சாலமன் மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதோடு, இந்த மீன் கடல் நீரில் உள்ள கனிமச்சத்துக்களை உறிஞ்சிக் கொள்வதால், இதனை முள்ளோடு சாப்பிட வேண்டும். இதில் கால்சியம் குறைவாக இருப்பினும், உடலுக்கு வேண்டிய மற்ற அனைத்து சத்துக்களையும் பெறலாம்.

சோயா பால் :
சோயா பாலில் சாதாண பாலை விட அதிக அளவில் கால்சியம் இல்லாவிட்டாலும், ஒரு அவுண்ஸ் பாலில் 300 மில்லி கிராம் கால்சியம் சத்தை பெறலாம்.

ஓட்ஸ்:
ஓட்ஸை அதிகம் சாப்பிடுவதால், இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. அதேசமயம் இதில் சில கால்சியம் சத்தும் உள்ளடங்கியுள்ளது. எனவே பெண்களுக்கு, இது ஒரு சிறந்த காலை உணவாக இருக்கும்.

அறுகீரை (Arugula) :
இது ஒருவகையான கீரை வகைகளுள் ஒன்று. இதனை பொதுவாக சாலட்டில் தான் பயன்படுத்துவார்கள். இந்த கீரையில் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளதால்,. இதனை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.

வெள்ளை காராமணி:
பொதுவாக பீன்ஸில் கால்சியம் அதிகம் இருக்கும் என்று கேள்விபட்டிருக்கமாட்டோம். ஆனால் இதிலும் ஓரளவு கால்சியம் நிறைந்துள்ளது. அதிலும் 1/2 கப் வெள்ளைக் காராமணியில் 100 மில்லி கிராம் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.

>>>பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் ஆன்லைனில் பெறலாம் (சென்னை, மதுரை, கோயம்பத்தூர் , திருச்சி மாநகராட்சி)

இன்று மிக முக்கியமாக கருதப்படும் ஒன்று பிறப்பு இறப்பு சான்றிதழ். ஆம் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உங்களிடம் இருக்கிறதா. சில பேரிடம் இறந்த சான்றிதழ் தொலைத்திருக்க வாய்ப்புன்டு. அதேபோல் இந்த சான்றிதழை பெற மாநகராட்சி அலுவுலகத்தில் இனிமேல் நீங்க அலைய வேண்டியதில்லை. இதை இனிமேல் ஆன்லைனில் பெறலாம் அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பிடிஎஃப் காப்பியில் சேவ் கூட செய்யலாம். உங்களிடம் ஏற்கனவே சான்றிதழ் இருந்தாலும் இந்த ஈ-காப்பி டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் வேண்டும்போது பிரின்ட் அவுட் செய்து கொள்ளலாம். அது போக பரிமாற்றம் செய்ய அப்படியே ஈமெயிலில் பரிமாறிக்கொள்ளலாம்.

வெளியூர் ஆட்களும் இதனால் பலன் அடையலாம். அது போக உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒரே விஷயம் தான். அது பிறந்த தேதி மட்டும் அல்லது இறந்த தேதி மட்டும் போதும். இது இருந்தால் உடனே அந்த நாளில் பிறந்த இறந்த அத்தனை ஆட்களின் பெயரும் ஏ - இசட் ஆல்ஃபபட் முறையில் வரும். அதில் உங்களுக்கு வேன்டிய பெயரை கிளிக் செய்து பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள் அல்லது சேவ்
செய்து கொள்ளுங்கள். அது போக பிறந்த இறந்த சான்றிதழில் ஏதேனும் தவறு இருந்தால் இங்கேயே திருத்தும் வசதி உள்ளது. ஒவ்வொரு சான்றிதழுக்கும் ஒரு யுனிக் நம்பர் உண்டு. அதனால் சொத்து வாரிசு சான்றிதழ் கூட இதை வைத்து தான் வழங்கப்படும். அதனால் வீட்டில் இருந்தே பெற்று கொள்ளுங்கள். Dont waste your Time & Money.

சென்னை  மாநகராட்சி

உங்களுக்கு பிறப்பு சான்றிதழ் பெற - http://www.chennaicorporation.gov.in/online-civic-services/birthCertificate.do?do=ShowBasicSearch

உங்கள் பிறப்பு சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தி கொள்ள - http://www.chennaicorporation.gov.in/admin/birthCertificateList.do?method=editRecord&mode=enduser&regitrationNumber=COC%2F2011%2F08%2F116%2F000510%2F0

உங்களுக்கு தேவையான இறப்பு சான்றிதழ் பெற - http://www.chennaicorporation.gov.in/online-civic-services/deathCertificateBasicSearch.jsp
 
உங்கள் இறப்பு சான்றிதழை திருத்தி கொள்ள
http://www.chennaicorporation.gov.in/admin/deathCertificateList.do?method=editRecord&mode=enduser&registrationNumber=COC%2F2007%2F02%2F024%2F001095%2F0

இது சென்னை,மதுரை, கோயம்பத்தூர் , திருச்சி, மாநகராட்சியில் வசிக்கும் ஆட்களுக்கு மட்டும். மற்றவர்களுக்கு வருகிறது கூடிய சீக்கிரம்........

கோயம்புத்தூர் - Birth https://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content&view=article&id=81&Itemid=150

கோயம்புத்தூர்  - Death - https://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content&view=article&id=81&Itemid=151

மதுரை  - http://203.101.40.168/newmducorp/birthfront.htm (NO DNS so use the same format)

திருச்சி  - https://www.trichycorporation.gov.in/birth_search.php#menu

திருநெல்வேலி Form மட்டும் - http://tirunelvelicorp.tn.gov.in/download.html

>>>ஜனவரி 18 [January 18]....

நிகழ்வுகள்

  • 350 - ஜெனரல் மக்னென்டியஸ் ரோமப் பேரரசன் கொன்ஸ்டன்சை அகற்றி தன்னை மன்னனாக அறிவித்தான்.
  • 1520 - அசுண்டே ஆற்றுக்கருகில் இடம்பெற்ற போரில் டென்மார்க் மற்றும் நோர்வேயின் இரண்டாம் கிறிஸ்டியன் சுவீடனை வென்றான்.
  • 1535 - லீமா நகரம் நிறுவப்பட்டது.
  • 1591 - சியாம் மன்னன் நரெசுவான் பர்மாவின் இளவரசன் மின்சிட் சிராவுடன் மோதி அவனைக் கொன்றான்.
  • 1670 - ஹென்றி மோர்கன் பனாமாவைக் கைப்பற்றினான்.
  • 1701 - பிரஷ்யாவின் மன்னானாக முதலாம் பிரெடெரிக் முடி சூடினான்.
  • 1778 - ஹவாய் தீவுகளைக் கண்டறிந்த முதலாவது ஐரோப்பியன் கப்டன் ஜேம்ஸ் குக். இதற்கு சான்ட்விச் தீவுகள் எனப் பெயரிட்டான்.
  • 1788 - இங்கிலாந்தில் இருந்து 736 கைதிகளைக் கொண்ட முதலாவது தொகுதி ஆஸ்திரேலியாவின் பொட்டனி விரிகுடாவைச் சென்றடைந்தது.
  • 1824 - இலங்கையின் ஆளுநராக சேர் எட்வர்ட் பார்ன்ஸ் நியமிக்கப்பட்டார்.
  • 1871 - வடக்கு ஜெர்மனி கூட்டமைப்பு மற்றும் தெற்கு ஜெர்மன் மாநிலங்கள் ஆகியன ஜெர்மன் பேரரசு என்ற பெயரில் இணைந்தன. முதலாம் வில்ஹெல்ம் அதன் முதலாவது மன்னனான்.
  • 1896 - எக்ஸ்ரே இயந்திரம் முதற் தடவையாகக் காட்சிப்படுத்தப்பட்டது.
  • 1911 - யூஜின் எலி என்பவர் தனது விமானத்தை சான் பிரான்சிஸ்கோ துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த USS பென்சில்வானியா என்ற கப்பலின் மீது இறக்கினார். கப்பலொன்றில் தரையிறக்கப்பட்ட முதலாவது விமானத் இதுவாகும்.
  • 1919 - முதலாம் உலகப் போர்: பாரிஸ் அமைதி உச்சி மாநாடு பிரான்சில் வேர்சாயி நகரில் ஆரம்பமானது.
  • 1929 - லியோன் ட்ரொட்ஸ்கி சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
  • 1944 - இரண்டாம் உலகப் போர்: மூன்று ஆண்டுகளாக நாசிகளால் முற்றுகையிடப்பட்டிருந்த லெனின்கிராட் நகரை சோவியத் படைகள் மீட்டெடுத்தன.
  • 1960 - கொங்கோவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய வட்டமேசை மாநாடு பெல்ஜியத்தில் நடைபெற்றது.
  • 1969 - ஐக்கிய அமெரிக்காவின் விமானம் ஒன்று சாண்டா மொனிக்கா விரிகுடாவில் வீழ்ந்ததில் 38 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1977 - அவுஸ்திரேலியாவின் சிட்னியின் புறநகர்ப் பகுதியான கிரான்வில் என்ற இடத்தில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதன் மேல் சென்று கொண்டிருந்த தொடருந்து கீழே வீழ்ந்ததில் 83 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1995 - 17,000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் தெற்கு பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டன.
  • 1997 - போர்ஜ் அவுஸ்லாண்ட் என்பவர் அண்டார்க்டிக்காவை துணை எதுவுமின்றி முதன் முதலில் கடந்து சாதனை படைத்தார்.
  • 2002 - சியேரா லியோனியில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
  • 2003 - கன்பராவில் இடம்பெற்ற காட்டுத்தீயில் 4 பேர் கொல்லப்பட்டு 500 வீடுகள் முற்றாக எரிந்து சேதமடைந்தன.
  • 2007 - மேற்கு ஐரோப்பாவின் 20 நாடுகளில் தாக்கிய கிரில் சூறாவளியினால் ஐக்கிய இராச்சியத்தில் 14 பேர், மற்றும் ஜெர்மனியில் 13 பேருமாக மொத்தம் 44 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

  • 1921 - நாம்பு ஓச்சிரோ, இயற்பியல் அறிஞர்
  • 1937 - ஜோன் ஹியூம், நோபல் பரிசு பெற்றவர்.
  • 1955 - எரிக் சொல்ஹெய்ம், நோர்வே அமைச்சர்

இறப்புகள்

  • 1862 - ஜான் டைலர், ஐக்கிய அமெரிக்காவின் 10வது குடியரசுத் தலைவர் (பி. 1790)
  • 1873 - எட்வர்ட் பல்வர்-லிட்டன், ஆங்கில எழுத்தாளர் (பி. 1803)
  • 1936 - ரூடியார்ட் கிப்லிங், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1865)
  • 1963 - ப. ஜீவானந்தம், தமிழகப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் (பி. 1906)
  • 1995 - அடொல்ஃப் பியூட்டெனண்ட், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானிய வேதியியலாளர் (பி. 1903)
  • 1996 - என். டி. ராமராவ், தெலுங்கு திரைப்பட நடிகர், அரசியல்வாதி (பி. 1923)

>>>மனித உரிமைகள் - ஒரு அறிமுகம்...

 
முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள் நடைபெற்றபோது வளர்ந்த மற்றும் பலம் மிகுந்த நாடுகளின் ஆதிக்க வெறிக்கு சாமானிய மக்கள் பலியானது சமூக சிந்தனையாளர்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து உருவான ஐக்கிய நாடுகள் அவை, உலகில் உள்ள அனைத்து மனித குலத்தினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான ஆவணம் ஒன்றை உருவாக்கியது.

1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி, பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையில் "அனைத்துலக மனித உரிமைப் பிரகடனம்" அறிமுகம் செய்யப்பட்டது. உடனடியாக 58 உலக நாடுகள் இந்த பிரகடனத்தை அங்கீகாரம் செய்தன.

இந்த மனித உரிமைப் பிரகடனத்தில் 30 உறுப்புகள் உள்ளன.

1. சமத்துவ உரிமை - சகல மனிதர்களும் சுதந்திரமாக பிறக்கின்றனர். அவர்கள் பெருமானத்திலும், உரிமைகளிலும் சமமானவர்கள், அவர்கள் நியாயத்தையும், மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள்.

2. ஏற்றத்தாழ்வுகள் காட்டப்படாமல் இருப்பதற்கான உரிமை - இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் மற்றும் தேசிய அல்லது சமூகம், பிறப்பு அல்லது பிற அந்தஸ்துகளால் வேறுபடுத்த முடியாமல் உலகில் உள்ள மனிதர்கள் எல்லோரும் சம உரிமை பெற்றவர்கள்.

3. சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு.

4. யாரையும் அடிமையாக நடத்த எவருக்கும் உரிமை இல்லை.

5. சித்திரவதைக்கு, மனிதத் தன்மையற்ற தாக்குதல்களுக்கும் உள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம்.

6. சட்டத்தின் முன் அனைவருக்கும் சம உரிமை

7. பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் பாதுகாப்புக்கும் எல்லோரும் உரித்தானவர்கள்.

8. ஒருவரின் உரிமை மதிக்கப்படாத போது சட்ட உதவியை நாடும் உரிமை.

9. சட்டத்துக்கு புறம்பாக ஒருவரை காவலில் வைக்கவோ, நாடு கடத்தவோ யாருக்கும் உரிமை இல்லை.

10. நீதியான, பகிரங்கமான விசாரணைக்கான உரிமை

11. குற்றஞ்சாட்டப்படுவோர், குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என நிரூபிக்க வாய்ப்பு வழங்கும் உரிமை.

12. தனிப்பட்ட அல்லது அந்தரங்க விஷயத்தில் எவரும் தலையிடாமல் இருப்பதற்கான சுதந்திரம்.

13. ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் சுதந்திரமாக நடமாடுவதற்கும், நாட்டை விட்டு வெளியேறவும், திரும்பி வரவும் உரிமை.

14. ஆபத்து காலத்தில் பிற நாட்டில் தஞ்சம் கேட்க உரிமை உண்டு.

15. ஒவ்வொரு பிரஜைக்கும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற தேசிய இனத்தை மாற்றிக்கொள்ள உரிமை.

16. எந்த ஆணும், பெண்ணும் விரும்பினால், திருமணம் செய்துகொண்டு பாதுகாப்புடன் குடும்பம் நடத்துவதற்கான உரிமை. சமுதாயத்தாலும், அரசாலும் இது பாதுகாக்கப்பட வேண்டும்.

17. சொத்து வைத்துக்கொள்ளும் உரிமை. தனியாகவும், கூட்டாகவும் ஆதனத்தைச் சொந்தமாக வைத்திருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.

18. சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதச் சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.

19. கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எவருக்கும் உண்டு. எவ்வழிவகைகள் மூலமும், எல்லைகள் இன்றி தகவலையும் கருத்துக்களையும் நாடுவதற்கும், பெறுவதற்கும் பரப்புவதற்குமான சுதந்திரம்.

20. எந்த ஒரு கூட்டத்திலும் கலந்துகொள்ள, சங்கத்தில் உறுப்பினராக யாருக்கும் உரிமை உண்டு.

21. அரசியல் உரிமை - அரசாங்கத்தில், சுதந்திரமான தேர்தலில் பங்குபெறவும், பொதுச்சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டிலுள்ள அரசாங்க சேவையில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு உரிமையுண்டு.

22. சமூகப் பாதுகாப்பிற்கும், தன் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் உரிமை

23. ஒவ்வொருவரும் விரும்பிய தொழில் செய்யவும், வேறுபாடு எதுவுமின்றி, சமமான தொழிலுக்குச் சமமான சம்பளம் பெறுவதற்கு உரிமை கொண்டவர்கள். ஒவ்வொருவருக்கும் தொழிற்சங்கம் அமைக்க உரிமை. அவற்றில் சேர்வதற்கும் உரிமையுண்டு.

24. இளைப்பாறுவதற்கும், ஓய்வெடுக்கவும் உரிமை.

25. ஒவ்வொருவரும் உணவு, உடை, இருப்பிடம், மருத்துவக் காப்பு, அவசியமான சமூக சேவைகள் உட்பட தமது குடும்பத்தினாலும், உடல் நலத்துக்கும் நல்வாழ்வுக்கும் போதுமான வாழ்க்கைத்தரத்துக்கு உரிமை உடையவர்.

அத்துடன் வேலையின்மை, இயலாமை, கைம்மை, முதுமை காரணமாகவும் அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரணமாகவும் வாழ்க்கை வழியில்லாமை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு பெறவும் உரிமை உண்டு.

தாய்மை நிலையும் குழந்தைப் பருவமும் விசேஷ கவனிப்பு மற்றும் உதவியை பெற உரிமை கொண்டவை.

26. ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது ஆரம்ப அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமாக இருத்தல் வேண்டும்.

27. சமுதாயத்தின் பண்பாட்டு வாழ்க்கையில் சுதந்திரமாகப் பங்குகொள்வதற்கும், கலை மற்றும் அறிவியல் முன்னேற்றத்திலும், அதன் நன்மைகளிலும் பங்கெடு்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.

28. மனித உரிமைகளை உறுதிசெய்யும் சமூக அமைப்புகளில் பங்குபற்றும் உரிமை.

29. ஒவ்வொருவரும் பிறரது உரிமையை மதிக்க வேண்டும்.

30. இந்த பிரகடனத்தில் குறிபிட்டுள்ள எந்த ஒரு உரிமையையும் ஒருவர் பெறுவதற்கு தடையாக இருக்க உரிமை கிடையாது.

ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையத்தின் இணைய தளத்தில் இந்த பிரகடனத்தின் தமிழ் மொழி பெயர்ப்பும் உள்ளது.

இந்த மனித உரிமைப் பிரகடனத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்லும் பணியில் பல அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

எனினும் மனித உரிமைகள் குறித்து அனைத்து மக்களிடமும், போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பதே உண்மை.

மனித உரிமைகள் குறி்த்து மக்களிடம் ஏற்படும் விழிப்புணர்வே மனித உரிமைகளை பாதுகாக்கவும், மேலும் விரிவுபடுத்தி வளர்த்தெடுக்கவும் உதவும். இதற்கான பணியில் கல்வி அறிவு பெற்ற அனைவரும் பங்கேற்க வேண்டும்

>>>பீட்ரூட்

 
பீட்ரூட்-ல் மாவுச்சத்து அதிகம் உள்ளது. கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சி தரும். இரத்தத்தின் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்கிறது. வயிற்று பிரச்சனைகள் தீரும்.

பீட்ரூட்டை சமைச்சோ, பச்சையாவோ சாப்பிடுறப்பஸ மலச்சிக்கல், கல்லீரல் கோளாறு, பித்தக்கோளாறு எல்லாம் சரியாகும்.

மற்ற கீரைகளைப் போல, பீட்ரூட் கீரையையும் சாப்பிடலாம். அல்சர்னு சொல்லப்படுற வயிற்றுப்புண், மஞ்சள்காமாலை இதையெல்லாம் இந்தக் கீரை குணமாக்கும்.

மாதக்கணக்குல மலச்சிக்கல், மூலக்கோளாறுனு அவதிப்படுறவங்க, பீட்ரூட் சாறோட தண்ணி சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்ன குடிச்சுட்டு வந்தா குணம் கிடைக்கும்.

தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் பரவுறதைத் தடுக்கும். ஆரம்பக்கால புற்றுநோயைக் குணமாக்குற சக்தியும் இதுக்கு இருக்கு.

கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்.

அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட். இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்கின்றனர். ‌பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.

கிட்னி, பித்தப்பை ஆகியவற்றில் சேர்ந்துள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்குவதுடன் பீட்ரூட் ஒரு சிறந்த சுத்திகரிப்பானாகவும் செயல்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.

தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில் பொடுகுகள் சரியாவதுடன் உங்கள் தலைமுடியும் பளபளவென்று மின்னும்; தலையில் அதிக முடி முளைக்கும்.

உடலுக்கு குளிர்ச்சி தரும்.

மலச்சிக்கலை நீக்கும்.

புற்று நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.

இரத்த சோகை, உடல் எடை சரியாகும்.

முகப்பொலிவு கூடும்.

சிறு நீரக எரிச்சலை குறைக்கிறது.


தீப்பட்ட இடத்தில் சாற்றைத் தடவ தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.

பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும், இரத்த சோகையை குணப்படுத்தும்.
பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமாணத்தக் கூட்டும்.

பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டு வர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

பீட்ரூட்டை வேகவைத்த நீரில் வினிகரை கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.

பீட்ரூட் சாறை மூக்கால் உறிஞ்ச தலைவலி, பல்வலி நீங்கும்.

பீட்ரூட் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தீப்பட்ட காயத்தில் பூசிவர புண் ஆறும்.

பீட்ரூட்டைக் கஷாயமாக்கி உடலில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் கழுவி வர அரிப்பு மாறும்.

பீட்ரூட்டில் 87.7% நீர்ச்சத்தும், 1.7% புரதச்சத்தும், 0.1% கொழுப்புச் சத்தும், 0.8% தாதூப்புக்களும், 0.9% நார்ச்சத்தும், 8.8% மாவுச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துகளும், வைட்டமின் சி, தயாமின், ரைபோபிளேவின் போன்றவையும் உள்ளன. பீட்ரூட் கீரையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது

>>>பேர்ள் துறைமுகம் {Pearl Harbor}...

 
பேர்ள் துறைமுகம் (Pearl Harbor) ஐக்கிய அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தின் தலைநகர் ஹோனலாலுவின்மேற்கே அமைந்துள்ள ஒவாகு தீவில் உள்ள ஒரு துறைமுகம். இத்துறைமுகத்தின் மிகப் பெரும்பாலானபகுதிகளும் அதைச் சுற்றியுள்ள இடங்களும் ஐக்கிய அமெரிக்காவின் ஒரு முக்கிய கடற்படைத்தளமும் ஐக்கியஅமெரிக்கப் பசிபிக் கடற்படையின் தலைமையகமும் ஆகும். ஜப்பானியர்கள் இத்துறைமுகத்தின் மீது டிசம்பர் 7, 1941 ஆம் ஆண்டில் நடத்திய குண்டுத் தாக்குதல் ஐக்கிய அமெரிக்காவை இரண்டாம் உலகப் போரில் ஈடுபடவைத்தது

பேர்ள் துறைமுகம் மீதான திடீர்த் தாக்குதல் ஐக்கிய அமெரிக்காவைத் திகைக்க வைத்தது எனலாம். டிசம்பர் 7, 1941 அதிகாலை ஜப்பான் பேரரசின் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்களும் விமானங்களும் தளபதி இசரோக்குயமமோட்டோ தலைமையில் இத்துறைமுகம் மீது திடீர்த் தாக்குதலை மேற்கொண்டன.

இத்தாக்குதல்நடத்தப்படக்கூடும் என ஏற்கனவே அமெரிக்கா அறிந்திருக்க ஏதுநிலை இருந்திருந்தாலும் அமெரிக்காஇத்தாக்குதலுக்குத் தயாராக இருக்கவில்லை. அன்று காலை 6:09 மணிக்கு ஆறு விமானத் தாங்கிக் கப்பல்களில்இருந்து 181 விமானங்கள் குண்டு மழை பொழிய ஆரம்பித்தன. அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களும் இராணுவத் தளங்களும் அழிக்கப்பட்டன.

மொத்தமாக 21 கப்பல்கள் அழிக்கப்பட்டு 2,350 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 68பேர் பொது மக்கள். 1,178 பேர் படுகாயமடைந்தனர். இத்தாக்குதலை அடுத்து ஐக்கிய அமெரிக்கா இரண்டாம்உலகப் போரில் நேரடியாகக் குதித்தது .

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The completion of direct inspection conducted by Minister Anbil Mahesh Poiyamozhi in all 234 constituencies

234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு The completion of direct inspection...