கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>சோளத்தில் உள்ள ஊட்ட சத்துக்கள்...

 
சோளம் பொதுவாக நாம் மெரினா பீச்சில் சாப்பிட்டு இருப்போம் சோளத்தை சுட்டு தருவார்கள் தின்பதற்கு மிகவும் அருமையாய் இருக்கும் மற்றும் பொழுது போக்கு சார்ந்த இடங்களிலும் சாப்பிட்டு இருப்போம் . நவீன காலத்தில் பெரும்பான்மையான வணிக வளாகங்கள் தியேட்டர்கள் மற்றும் பொழுது போக்கு இடங்களில் சோளம் சில கலவைகளை சேர்த்து விற்பனை செய்கிறார்கள் . சோளத்தில் இவளவு நன்மைகள் இருக்கிறது என்று நமக்கு தெரியாது சோளம் மிகவும் ஒரு சத்தான பொருளாகவே இருக்கிறது

இந்தியாவில் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக சோளம் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. முழுமையான மற்றும் உடைத்த சோளம் வேகவைத்து அரிசி போன்றும் பயன்படுத்தப்படுகிறது. முழுச்சோளம் அரைத்து மாவிலிருந்து சப்பாத்தி போன்றும் பயன்படுத்தப்படுகிறது. சோளமானது நொதித்தல் தொழிற்சாலை மற்றும் எரிசாராயம் மற்றும் கரைப்பான் தொழிற்சாலைகளில் மாவுச்சத்து பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

சோளத்தில் உள்ள ஊட்டசத்து விபரம்

ஆற்றல்-349 கி.கலோரி, புரம்-10.4 கிராம், கொழுப்பூ1.9 கி, மாவுச்சத்து - 72.6 கி, கால்சியம் - 25 மி.லி, இரும்புசத்து 4.1 மி.கி, பி-கரோட்டின் – 47 மி.கி, தயமின் - 0.37 மி.கி, ரிபோப்ளோவின் 0.13 மி.லி, நயசின் - 3.1 மி.கி

>>>Have you observed these?

Psychologists Say :
1) If A Person Laughs Too Much, Even At Stupid Things, He Is Lonely Deep Inside.
2) If A Person Sleeps A Lot, He Is Sad.
3) If A Person Speaks Less, He Keeps Secrets.
4) If Some One Can't Cry, He Is Weak.
5) If Some One Eats In An Abnormal Manner, He Is Tensed.
6) If Some One Cries On Little Things, He Is Innocent & Soft-Hearted.
7) If Some One Becomes Angry Over Silly Or Petty (Small) Things, It Means He Needs Love......

>>>நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முள்ளங்கி..!

 
நாம் உண்ணும் உணவே சில சமயம் மருந்தாக செயல்படுகிறது. காய் வகைகளில் ஒன்றான முள்ளங்கியில் பல்வேறு பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. கோடை காலத்தில் உடலுக்கு உஷ்ணம் அதிகம் அதிகம் ஏற்படாமல் பாதுகாப்பதில் முள்ளங்கிக்கு முக்கிய பங்குண்டு. அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின்சத்துக்களும் தாது உப்புக்களும் உள்ளன.

ுள்ளங்கியில் சிவப்புமுள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி என இரண்டு வகை உண்டு. இதில் வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருந்தாகப் பயன்படுகின்றது. சிவப்பு முள்ளங்கி சுவைக்கு மட்டுமே ஏற்றது.

>>>பல் வலியும் அதன் மற்ற தாக்கங்களும்..!

 
பல்வலி என்றால் அப்படியரு வலி. அவரது கீழ்த் தாடையில் இரண்டு பற்களில் குழி. ஒவ்வொரு முறை சாப்பிட்டு முடிக்கும் போதும், சில பருக்கைகள் அந்தக் குழிகளில் போய் உட்கார்ந்து கொள்ளும். அந்தப் பருக்கைகளை குண்டூசி, குச்சிகள் போன்ற ஆயுதங்களுடன் போராடித்தான் மீட்க வேண்டியது வரும். இதோடு முடிந்து விடாது.

படுக்கப் போகும்போது பல்லில் வலி லேசாக எட்டிப் பார்க்கும். அந்த வலி அப்படியே கூடிக் கொண்டு போய் அன்றைய தூக்கம் காலி. சிறு வயது முதல் பற்களைப் பாதுகாக்க மறந்த அவரது அலட்சியம்தான் இதற்குக் காரணம். இதயம், சிறுநீரகம், போன்று பற்களுக்கும் தனி கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். காரணம், பல் மற்றும் ஈறுகளில் வரும் நோய்கள், முடக்கு வாதம், இருதய வால்வு அடைப்பு, சிறுநீரக அழற்சி, தோலில் ஒவ்வாமை, ஜீரண உறுப்புகளில் கோளாறு போன்றவற்றிற்குக் காரணமானாலும் ஆகலாம்.

பல் சொத்தை ஏன் விழுகிறது?

>>>ஏழைகளின் தலைவர் கர்ம வீரர் காமராஜர்...!

 
“அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் .., முன்பகுதியிலேயே இருக்கும் மூக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன்.
குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 -ருபாயை கொடுத்தார் மூக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.

ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுத்தடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ’ஏன்யா. நான் அவசரமா வெளியில போகணும்னு காத்துக்கிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மூக்கையா தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்டல்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ரூபாய்க்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா’என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி....

அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. ஒரு அரசாணயை வெளியிட்டிருந்தது அரசு..அந்த உத்தரவை படித்துக்காட்டச் சொன்னார்..வீட்டிலுள்ளவர்களை..அதனைக் கேட்டதும் அழுது புரண்டு கதறினார். ’அரசாங்க உத்தியோகத்தில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்கக் கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்தக்கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு வந்தார்.

முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.என்னவென்று கேட்கிறார். ’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். அவரும் ஏதாவது சமாதானம் சொல்லணுமே என்று ’முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்’ என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்பரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியாளர் எடுப்பார்கள்.

மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த மூக்கையா தேவரைப் பார்க்கிறார். அவருக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா” என்கிறார்.

மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ‘ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு’ தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை....

அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்? என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. முதல்வர் உங்களைக் கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது முதல்வரிடம் என புரிகிறது. மூக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி ’ஐயா நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜை நோக்கி வாகனம் பறக்கிறது.

முதரல்வரின் அறையில் உள்ள சோஃபாவில், கன்னத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள். நீங்கதான் மண்ணாங்கட்டியா...என்கிறார். ஆமாங்க ஐயா. நான்
தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை வா...வாண்னேன். வந்து பக்கதில உட்காருங்கன்னேன் என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.

மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்து கும்பிட்டு ‘நான் தப்பு பண்ணீட்டன் தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே...ரெண்டு நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே.
சமைக்கலயாமே....உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க...எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்..எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்கக்கூடாது. ‘இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது
தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதரவு சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை...

அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளை பார்த்து ‘இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்படாதீங்கன்னு அவரோட மனைவி, குழந்தைங்ககிட்ட சொல்லுங்க’ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி ’போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய்க் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.

மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதல்வர் காமராஜரும் எழுந்து கையெடுத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.

ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்.

இவரைபோன்ற மக்கள் தலைவரை தமிழகம் மீண்டும் பெறுமா?

>>>வரலாறு போற்றும் அறிஞர் அண்ணா...!

 
அப்பாவியாக தோற்றமளித்த அறிஞன்.எதிராளியையும் வசப்படுத்திய வைசியன்.குரலால்,எழுத்தால்,ஆண்ட மன்னன்.தமிழ் நாட்டின் அண்ணன் அறிஞர் அண்ணா.
இன்று அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள்.

சி.என்.எ. என்ற மூன்று எழுத்தால் அறிமுகமான அண்ணாதான் தமிழ்நாட்டு அரசியலில் உருவான முதல் "தளபதி" .பெரியாரின் சீடராக வலம் வந்த போது அப்படிதான் அழைக்கப்பட்டார்.அதன் பிறகு எல்லோருக்கும் அவர் அண்ணாதான்.
பள்ளியில் படிக்கும்போதே பொடி போடும் பழக்கம் கொண்டவர்.கல்லூரிக் காலத்தில் வெற்றிலை போடும் பழக்கத்திற்கு ஆளானார்.அதன் காரணமாக எச்சில் துப்ப வகுப்பில் ஜன்னல் ஓரமாகஅமர்ந்துகொள்வார்.
வெற்றிலை போடும் பழக்கம் அவரின் மரணம் வரை இருந்தது.

>>>ஐன்ஸ்டீன் மெச்சிய போஸ்!

 
சத்யேந்திர நாத் போஸ் ஓர் ஒப்பற்ற அறிவியல் மாமேதை. ஐன்ஸ்டீன் தெரியுமென்றால் போஸையும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

குவாண்டம் இயற்பியல் துறைக்கு இவர் ஆற்றிய தொண்டு அத்தகையது. குவாண்டம் மெக்கானிக்ஸ் என்கிற துறையின் உட்பிரிவான குவாண்டம் ஸ்டாடிஸ்டிக்ஸ் இவரால்தான் உருவானது; இவர், விடுதலைக்கு முந்திய பிளவுபடாத வங்காளத்தில் படித்தார். பள்ளிகாலத்தில் இறுதி தேர்வில் 100 க்கு 110 மதிப்பெண்களை கணக்கில் இவர் பெற்றிருந்தார்; காரணம் ஒரே கணக்கை வெவ்வேறு முறைகளில் போட்டிருந்ததுதான்.

பின் கல்லூரியில் இயற்பியலில் தங்க பதக்கம் பெற்று தேறினார். இவர் கல்கத்தா மாநில கல்லூரியில் பயின்ற காலம் வங்கத்தின் பொற்காலம். தலைசிறந்த பல அறிஞர்கள் இக்காலத்தில் தான் உருவானார்கள். வெறும் அறிவியலில் மட்டும் நாட்டம் கொண்டிருக்கவில்லை அவர். ஐந்து மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்த அவர் இசை வல்லுனரும் கூட.

இவர் Max Planck's Law" மற்றும் "Light Quantum Hypothesis" பற்றிய ஒரு கட்டுரையை வெறும் ஆறு பக்கங்களில் எழுதி ஐன்ஸ்டீனுக்கு அனுப்பினார். அசந்து போனார் அவர். இருவர் பெயரையும் இணைத்து அதை வெளியிட்டார் அவர். அந்த கட்டுரையே போஸ் ஐன்ஸ்டீன் ஸ்டாடிஸ்டிக்ஸ் எனும் துறைக்கு வழிவகுத்தது. அப்பொழுது அவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கவில்லை. ஆனால் ஐன்ஸ்டீன் கடிதம் கொடுத்து "அதில் போஸைவிட தலைசிறந்த விஞ்ஞானியை நீங்கள் காண முடியுமா?"என அடிக்குறிப்பிட்டு அனுப்பினார்; உடனே டாக்கா பல்கலைகழக பேராசிரியர் ஆகினார் போஸ் என்றால் அவரின் மேதமையை உணர்ந்து கொள்ளலாம்.

இன்னும் எண்ணற்ற பிரிவுகளில் அவர் தொடர்ந்து ஆய்வுகள் செய்து கொண்டே இருந்தார். இவரின் கட்டுரைகள் தான் ஐன்ஸ்டீன் பிளான்க் முதலியோரின் குவாண்டம் தியரி மற்றும் டிராக் ஹெய்சென்பெர்க் முதலியோரின் குவாண்டம் மெக்கனிக்ஸ் இரண்டுக்கும் பாலமாக இருந்தது என்றால் அது மிகையில்லை.

இவரின் நினைவாக போசான் என துகளுக்கு பெயரிடப்பட்டது. போர் எனும் நோபல் பரிசு பெற்ற அறிஞர் ஒரு உரை நிகழ்த்தும் பொழுது தடுமாறினார்; கண்மூடிய படியே போஸ் அமர்ந்திருந்தார் / ஒரு இடத்தில போருக்கு தடுமாற்றம் வரவே இதை நீங்கள் கொஞ்சம் விளக்க முடியுமா என போசை பார்த்து கேட்க கண்களை திறந்து விளக்கி விட்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்து விட்டார் மனிதர். அது தான் போஸ். தாய்மொழி வழிக்கல்வி தான் அவசியம் என்றார். வங்காள மொழியில் அறிவியலை பயிற்றுவித்தார் அவர். அவரது நினைவுதிம் இன்று (பிப்.4). அவரை நினைவு கூர்வோம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024 - School Morning Prayer Activities... அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்...