கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>வேலைவாய்ப்பு குறைவு - 50 ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு மூடுவிழா


          ஆசிரியர் பயிற்சிப் படிப்பிற்கு வேலை வாய்ப்பு முற்றிலும் குறைந்து விட்டதால், இந்த படிப்பிற்கான மவுசும் குறைந்து விட்டது. கடந்த ஆண்டு, 86 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பள்ளிகளை மூட விருப்பம் தெரிவித்து, ஆசிரியர் கல்வி இயக்குனரிடம் இதுவரை, 50 நிர்வாகிகள் கடிதம் கொடுத்துள்ளனர். இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சிப் படிப்பை முடித்தால், ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியர் வேலை வாய்ப்புகளை பெறலாம். இந்த பயிற்சியை முடிக்கும் இடைநிலை ஆசிரியர், முதலில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நியமிக்கப்பட்டனர். பின், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை என சுருக்கப் பட்டது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்படுவதால், இடைநிலை ஆசிரியர் பணி வாய்ப்பு கணிசமாக குறைந்து விட்டது. மேலும், மாவட்ட பதிவுமூப்பு நிலையில் பணி நியமனம் நடந்து வந்ததை மாற்றி, மாநில பதிவுமூப்பு அடிப்படையில் என மாற்றியதும், இந்த படிப்பிற்கு பெரும் சரிவை ஏற்படுத்தியது.ஏற்கனவே, 1.5 லட்சம் பேர், இந்த பயிற்சியை முடித்து, வேலைக்காக தவம் இருக்கின்றனர். இவர்களில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம். மாநில பதிவுமூப்பில் வேலை கிடைப்பது குதிரைக்கொம்பு என்பதால், கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தப் படிப்பிற்கு படிப்படியாக மவுசு குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு, 86 பள்ளிகள் மூடப்பட்டன. இந்த ஆண்டு, இதுவரை, 50 நிர்வாகிகள், பள்ளிகளை மூட விருப்பம் தெரிவித்து, ஆசிரியர் பயிற்சி இயக்குனரகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளனர். தருமபுரி, ஈரோடு, நாகை, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை, திருச்சி, நெல்லை, திருவள்ளூர், தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகள், மூடுவிழா பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஜூலை மாதம், "கவுன்சிலிங்' துவங்குவதற்குள், மேலும், 50 பள்ளிகள் மூடுவதற்கான விருப்பக் கடிதங்கள்வரும் என, துறை எதிர்பார்க்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், 700 பள்ளிகள் இருந்தன. இது, கடந்த ஆண்டு, 600ஆக குறைந்தது. இந்த ஆண்டு, 500க்கும் குறைவாக வந்துவிடும் என எதிர்பார்க்கப் படுகிறது. மூடப்படும் பட்டியலில் இடம்பெற்றுள்ள தருமபுரி ஆதிபராசக்தி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் தாளாளர் செல்வராஜ் கூறியதாவது:ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை ஆரம்பித்தது, பெரிய தவறாகி விட்டது. 2008 - 09ல் தான் ஆரம்பித்தேன். இதற்குள் மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, இடைநிலை ஆசிரியர் நியமிக்கப்பட்டது வரை, இந்த படிப்பிற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர் நியமனம் மற்றும் மாநில பதிவுமூப்பு அடிப்படையில் வேலை ஆகிய இரண்டும், ஆசிரியர் பயிற்சி கல்விக்கு வேட்டு வைத்து விட்டது. ஆண்டுக்கு, 15 ஆயிரம் ரூபாய் கூட கட்டணம் தர மாணவர்கள் மறுக்கின்றனர். வகுப்பிற்கு மாணவர்கள் சரியாக வருவதும் இல்லை; அவர்களிடையே ஆர்வம் குறைந்து விட்டது.கையில் இருந்து பணத்தை செலவழித்து பள்ளியை நடத்த முடியாது என்பதால், மூட விருப்பம் தெரிவித்து கடிதம் கொடுத்துவிட்டேன். இந்த இடத்தில் வேறு எதையும் ஆரம்பிக்க திட்டம் இல்லை.இவ்வாறு செல்வராஜ் கூறினார்.ஜூலை 5ல் "கவுன்சிலிங்':ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில், 48 ஆயிரம் இடங்கள் இருந்தன. இதில், "கவுன்சிலிங்' மூலம், 18 ஆயிரம் இடங்களும், மீதியுள்ள இடங்கள் பள்ளி நிர்வாகங்களும் நிரப்பி வந்தன. இந்த ஆண்டு, 100 பள்ளிகள் வரை மூடப்படும் என்பதால், மொத்த இடங்கள் கணிசமாகக் குறையும். இது குறித்த விவரம், "கவுன்சிலிங்' துவங்கும் போது தான் தெரியும். ஜூலை 5ம் தேதி முதல், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கை நடத்த, தமிழக அரசு அனுமதித்துள்ளது. திருச்சியில், ஆறு இடங்களில் "கவுன்சிலிங்' நடக்கிறது. இதற்கு முன்னதாக, மூடப்பட்ட பள்ளிகள் பட்டியல், துறையின் இணையதளத்தில் வெளியிடப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி-தினமலர்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

27-01-2025 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் குறள் எண்:956 அதிகாரம...