கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஐ.நா. அமைப்பின் SEEUN திட்டத்தின் கீழ் பாங்காக் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களையும், ஆசிரியரையும் குறிப்பிட்டு அமைச்சர் வாழ்த்து





ஐ.நா. அமைப்பின் SEEUN திட்டத்தின் கீழ் பாங்காக் நகரில் நடைபெறவுள்ள பன்னாட்டு மாணவர் மன்றத்தில் பங்கேற்கத் தேர்வாகியுள்ள அரசுப் பள்ளி மாணவர்களையும், ஆசிரியரையும் குறிப்பிட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்கள் வாழ்த்து


 ஐ.நா. அமைப்பின் மாணவர் கல்விப் பயணத் திட்டத்தின் (SEEUN - Student Education Expedition for the United Nations) கீழ் தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் நடைபெறவுள்ள பன்னாட்டு மாணவர் மன்றம் 5.O-வில் (International Youth Forum 5.0) தமிழ்நாடு சார்பில் பங்கேற்கத் தேர்வாகியுள்ள அரசுப் பள்ளி மாணவச் செல்வங்களுக்கும், ஆசிரியருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!


#SDG Goals எனப்படும் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த International Youth Forum-இல் கலந்துகொள்ளும் நீங்கள், அந்த இலக்குகளில் இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாகத் திகழும் தமிழ்நாட்டின் சார்பில் செல்வது பெருமிதம் தருகிறது. எளிய பின்புலத்தில் இருந்து உலக அரங்கில் தமிழ்நாட்டின் முகங்களாகச் செல்லத் தேர்வாகி இருக்கும் உங்களைப் போன்றோரின் வெற்றிதான் நமது மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் தலைமையிலான #DravidianModel அரசின் உண்மையான வெற்றி!


இந்த வாய்ப்பு உங்கள் அனைவருக்கும் சிறந்த கற்றல் அனுபவமாகவும், உலக அளவிலான exposure வழங்கிடும் பயணமாகவும் அமைந்திட வாழ்த்துகள்.


ஜூலை 18 : “தமிழ்நாடு” என பேரறிஞர் அண்ணாவால் பெயர் சூட்டப்பட்ட நாள்



 ஜூலை 18 : “தமிழ்நாடு” என பேரறிஞர் அண்ணாவால் பெயர் சூட்டப்பட்ட நாள் - மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


நமது தாய் நிலத்திற்கு “தமிழ்நாடு” என பேரறிஞர் அண்ணாவால் பெயர் சூட்டப்பட்ட நாள்!


ஜூலை 18, 1967ஆம் ஆண்டு “தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு” என சட்டப்பேரவையில் அண்ணா முழங்கியவுடன் தமிழர்களின் மனதில் ஏற்பட்ட உணர்வெழுச்சியை, பெயர் மாற்ற பாசிஸ்டுகள் துடிக்கும் போதெல்லாம் இன்றும் உணர முடிகிறது. தமிழர்களிடம் அந்த உணர்வு எழும் வரை தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார் என்பதை அவர்கள் நன்றாகவே உணர்வார்கள். 


தமிழ்நாடு வாழ்க!

தமிழ்நாடு வாழ்க!

தமிழ்நாடு வாழ்க!


Review meeting is not a place to criticize; it is a place to encourage - Honorable Minister Mr. Anbil Mahesh



 ஆய்வுக்கூட்டம் என்பது குறை கூறும் இடமல்ல ; ஊக்கமளிக்கும் இடம் - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்கள்


A Review meeting is not a place to criticize; it is a place to encourage - Honorable Minister of School Education, Mr. Anbil Mahesh



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


SLAS அறிக்கை - திருவண்ணாமலையில் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 13

 


SLAS அறிக்கை - மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 13 திருவண்ணாமலையில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


மாநிலத் திட்டக்குழுவால் வெளியிடப்பட்ட SLAS முடிவுகள் அடிப்படையில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவரும் தலைமையாசிரியர்களுடனான ஆய்வுக் கூட்டத்தின் 13வது கூட்டம், இன்று எனது தலைமையில் திருவண்ணாமலையில் நடைபெற்றது. 


4 கல்வி வட்டாரங்களில் இருந்து 500 தலைமையாசிரியர்கள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.


SLAS அறிக்கை - கள்ளக்குறிச்சியில் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 14



SLAS அறிக்கை - மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 14 கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


 தலைமையாசிரியர்களுடனான ஆய்வுக் கூட்டம்.

14வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி 


சிறப்பான தேர்ச்சி விகிதத்தை வழங்க சேவையாற்றும் தலைமையாசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். தங்களின் முயற்சிகளுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம்.


Trichy Panjappur Bus Standலிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் பேருந்து நடைமேடைகள், வழித்தடங்கள் அறிவிப்பு



திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையத்திலிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் பேருந்து நடைமேடைகள், வழித்தடங்கள் அறிவிப்பு


Announcement of bus platforms and routes going to various cities from Trichy Panchappur Bus Terminal



>>> மாவட்ட ஆட்சியர் செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் 09.05.2025 அன்று திறந்தவைக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் பயணிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதை தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தை முனையமாக (Terminus) கொண்டு இயக்கப்பட்ட அனைத்து புறநகர பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகள் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு 16.07.2025 அன்று முதல் மாற்றம் செய்யப்படுகிறது.


அதன் விவரம் வருமாறு:


விரைவு பேருந்துகள் / புறநகரப் பேருந்துகள்.


சென்னை/திருப்பதி/வேலூர்/விழுப்புரம்/ காஞ்சிபுரம்/புதுச்சேரி மார்க்கம்


அனைத்து மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் பேருந்துகளும் நெ.1 டோல்கேட், பழைய பால் பண்ணை, தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக திரும்பச் செல்ல வேண்டும்.


தஞ்சாவூர் / கும்பகோணம்/ வேளாங்கண்ணி/காரைக்கால் மார்க்கம்


மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் துவாக்குடி, திருவெறும்பூர், பழைய பால்பண்ணை, டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்லவேண்டும். பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து முனையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை, டிவிஎஸ் டோல்கேட், பழைய பால்பண்ணை வழியாக திரும்பச் செல்ல வேண்டும்.


நாமக்கல்/ சேலம் / பெங்களுரு மார்க்கம்


மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் நெ.1 டோல்கேட், பழைய பால்பண்ணை, டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை. டிவிஎஸ் டோல்கேட், நெ.1 டோல்கேட் வழியாக திரும்பச் செல்லவேண்டும். 


புதுக்கோட்டை/ அறந்தாங்கி/ ராமேஸ்வரம் மார்க்கம்


மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் விமான நிலையம், டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் வரை செல்ல வேண்டும். பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து இதே வழித்தடத்தில் திரும்பச் செல்ல வேண்டும்


கரூர்/ ஈரோடு/ திருப்பூர்/ கோயம்புத்தூர் மார்க்கம்


மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் சத்திரம் பேருந்து நிலையம், கரூர் புறவழிச்சாலை, சாஸ்திரி சாலை, மாவட்ட நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வ.உ.சிசாலை, மத்திய பேருந்து நிலையம், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் வரை செல்ல வேண்டும். பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து இதே வழித்தடத்தில் திரும்பச் செல்லவேண்டும்.


மணப்பாறை/ திண்டுக்கல்/ பழனி/ குமுளி மார்க்கம்


அனைத்து மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் பேருந்துகளும் கருமண்டபம். மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். இவை பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து இதே வழிதடத்தில் திரும்பச் செல்ல வேண்டும்.


மதுரை/ தூத்துக்குடி/ விருதுநகர்/திருநெல்வேலி மார்க்கம்


மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் வரை செல்ல வேண்டும். இவை பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து இதே வழிதடத்தில் திரும்பச் செல்ல வேண்டும்.


நகரப் பேருந்துகள்


மத்திய பேருந்து நிலையத்தை முனையமாகக் (Terminus) கொண்டு இயங்கும் அனைத்து நகரப் பேருந்துகளும் மத்திய பேருந்து நிலையம், மன்னார்புரம் வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். இவை பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து இதே வழிதடத்தில் திரும்பச் செல்லவேண்டும்.


ஆம்னி பேருந்துகள்


மத்திய பேருந்து நிலையத்தின் சுற்றுப்பகுதிகளில் ஒப்பந்த ஊர்தி ஆம்னி பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றக்கூடாது. இவை முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு அருகில் தற்காலிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள காலி இடத்தில் பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும்.


உள் வருகை மற்றும் வெளிச் செல்கை (Entry and Exit)


அனைத்து பேருந்துகளும் பேருந்து முனையத்திற்கு உள்வரும்போது (Entry) காவல் சோதனை சாவடி எண்.2 (CP-2) வழியாக சென்று பேருந்து முனையத்தின் பின்வழியாக உள்ளே வரவேண்டும்.


பேருந்து முனையத்திலிருந்து வெளிச்செல்லும் (Exit) அனைத்து பேருந்துகளும் (மதுரை மார்க்கம் தவிர்த்து) தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் சந்திப்பு வரை சென்று திரும்பி (U Turn) செல்ல வேண்டும்.


பயணிகளுக்கான வசதிகள்


திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான உணவு, சிற்றுண்டி, தேநீர், காபி மற்றும் குளிர்பானங்கள் போன்ற உணவு பொருட்கள் விற்பனைக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்பேருந்து முனையத்தில் 20 எண்ணிக்கையில் 10 கடைகளும், 12 எண்ணிக்கையில் உணவகங்களும், எண்ணிக்கையில் சிற்றுண்டி கடைகளும் (Snacks) செயல்படவுள்ளது.


மேலும் பஞ்சப்பூர் பேருந்து முனையத்தை ஒவ்வொரு மணி நேரமும் சுத்தம் செய்து தூய்மையாக பராமரிக்க 228 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு தொடர்ந்து தூய்மை செய்யும் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.பயணிகள் மற்றும் அவர்தம் உடைமைகளின் பாதுகாப்பிற்கு காவல் துறையினர் 52 பேர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.பயணிகளின் தேவைக்கேற்ப ஆட்டோ, டாக்ஸி மற்றும் இ-டாக்ஸி சேவைகள் வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.பயணிகளுக்கு உதவி செய்ய தன்னார்வலர்கள் 30 Guit நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.பேருந்து முனையத்திற்குள் நடந்து செல்ல சிரமப்படும் முதியவர்கள், நோயாளிகள் பயன்பாட்டிற்காக 3 எண்ணிக்கையிலான பேட்டரி வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.


பயணிகளின் அவசரத் தேவைக்காக அழைப்பின் பேரில் (On call) மருத்துவர் குழு (Health Desk) தயார் நிலையில் உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் அவர்கள் தெரிவித்தார்.


செய்தி வெளியீடு :

மாவட்ட ஆட்சியர்,

திருச்சிராப்பள்ளி மாவட்டம்.


உயர்கல்வி வழிகாட்டு செய்திகள் 15.07.2025

 

 

உயர்கல்வி வழிகாட்டு செய்திகள் 15.07.2025


👉 இன்று பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் - கல்வி வளர்ச்சி நாளாக எழுச்சியுடன் கொண்டாட தமிழ்நாடு அரசு உத்தரவு.


👉 தமிழ்நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் கல்விக்கண் திறந்த காமராசர் குறித்த பேச்சு ஓவியம் கட்டுரைப் போட்டிகள் நடைபெறும்.


👉 இன்று கடைசி தேதி.

TNAU - Agri - Counselling Fees கட்டி College preference order மாற்றி அமைத்து "SAVE" செய்வது மிக மிக முக்கியம். இன்று இரவு 11.59 மணி வரை மட்டுமே அவகாசம்.🛑🛑🛑


👉 இன்று கடைசி தேதி.

CUET தேர்வு எழுதியுள்ள மாணவ மாணவிகள் திண்டுக்கல் காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகத்தில்  BSc Agri BTech Civil BSC BEd Microbiology MA Economics & Public Administration & Sociology உள்பட 19 விதமான பட்ட படிப்புகள் படிக்க Online மூலம் விண்ணப்பிக்க இன்று 15.07.2025 கடைசி நாள். ஒவ்வொரு படிப்பிற்கும் தனித்தனியாக ரூ.300 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அருமையான அட்டகாசமான வாய்ப்பு. Don't Miss🛑🛑🛑


👉 இன்று கடைசி தேதி.

டெல்லிக்கு அருகில் NIFTEM ஹரியானாவில் B.Tech Food Technology படிக்க இன்று கடைசி தேதி. JEE NEET CUET எழுதிய மாணவ மாணவிகளுக்கு அட்டசாசமான படிப்பு. Don't Miss🛑🛑🛑


👉 நாளை 16.07.2025 கடைசி நாள். தமிழ்நாட்டில் BE படிக்க 179 and above cut off எடுத்துள்ள 39000 மாணவ மாணவிகள் மட்டும் தங்களுக்கு பிடித்த BE படிப்புகள் & கல்லூரிகளை .... தங்கள் Login மூலம் உள்ளே சென்று Choice Filling செய்ய நாளை 16.7.25 புதன் மாலை 5 மணியுடன் அவகாசம் நிறைவு பெறுகிறது.


👉 BE Counselling விண்ணப்பித்துள்ள 7.5 கோட்டா அரசுப் பள்ளி குழந்தைகள் மட்டும்


7.5 Free Seat Counselling & General Fee Payment Seat Counselling ஆகிய இரண்டு Login மூலம் தனித்தனியாக Login செய்து இரண்டிலும் Choice Filling செய்யலாம்.


👉 இரண்டிலும் நாளை மறுநாள் 17.07.2025 வியாழன் காலை 10 மணிக்கு Seat கிடைத்த பிறகு.... Free Seat ஆ ? Payment Seat ஆ? எதில் சேர்ந்து படிக்கலாம் என யோசித்து முடிவு செய்யலாம்.


👉 Choice Filling செய்யும் போது சுமார் சிறந்த 50-70 கல்லூரிகளை தேர்வு செய்து... ஒவ்வொரு கல்லூரியிலும் உள்ள 10-12 படிப்புகளை தேர்வு செய்து சுமார் 500-700 Choices வைப்பது நல்லது.


👉 நாளை 16.07.2025 மாலை 4.30 வரை Lock செய்யக் கூடாது.


👉 நன்கு யோசித்து Choices மேலும் கீழும் நகர்த்தி முழு திருப்தி அடைந்த பிறகு


நாளை மாலை 4.35 மணிக்கு மேல் 5.00 மணிக்குள் Lock செய்வது நல்லது.


Lock செய்த பிறகு Choice order மாற்ற முடியாது.🛑🛑🛑


👉 நாளை 4.35 PM க்கு பிறகு Lock செய்த பிறகு .... Download Locked Choices என்ற option ஐ தொட்டு


Choice Filling Copy -ஐ Download செய்து Print எடுத்து வைத்து கொள்வது அல்லது Whatsapp ல் Save செய்து வைத்து கொள்ள வேண்டியது மிக மிக முக்கியம்.🛑🛑🛑


👉 அந்த Choice List கைவசம் இருந்தால் தால் .... Upward கொடுக்கலாமா ? வேண்டாமா? என 17.07.2025 காலை 10 மணிக்கு மேல் முடிவு செய்ய பேருதவியாக இருக்கும்.


👉 உங்கள் User id & Password ஆகியவை உங்கள் வீட்டு பீரோ சாவி போன்றது. மிக மிக ரகசியமானது. அதனை யாரிடமும் கொடுக்க கூடாது.🛑🛑🛑


👉 பொறுமையாக நிதானமாக பதற்றமின்றி இன்றும் நாளையும் செயல்படுங்கள்.


👉 அண்ணா பல்கலைக்கழகம் CEG MIT ACT SAP PSG CIT TCE - மதுரை GCT GEC - சேலம் திருநெல்வேலி GEC கரைக்குடி அழகப்பா ஈரோடு IRTT பர்கூர் GEC  போன்ற மிகச்சிறந்த கல்லூரிகளில் இடம் பிடித்து வாழ்வில் உயர வாழ்த்துகள்.💐💐💐


👉 மீண்டும் நினைவூட்டுகிறோம். எல்லா Branch படிப்பும் சிறந்த படிப்புகளே. Computer Science ம் Civil & Chemical & Mechanical எல்லாமே நல்ல துறைகள் தான். சொல்லப் போனால் லட்சம் பேர் படிக்கும் Computer ஐ விட சில ஆயிரம் பேர் படிக்கும் Civil & Mechanical சிறந்த எதிர்காலத்தை நிச்சயம் தரும்..👍 நாம் எந்த கல்லூரியில் படிக்கிறோம் என்பது தான் முக்கியம். Best படிப்பு என எதுவுமில்லை. Best கல்லூரிகள் தான் முக்கியம். எல்லா படிப்பும் Best தான். Best கல்லூரிகளில் படித்தால்.👍👍👍 நிதானம்.... பிரதானம்.💐💐💐


பதிவு நாள் : 15.07.2025


மீண்டும் Cash-க்கு மாறும் சிறிய கடைகள்



 பணப்பரிவர்த்தனையை ஜி.எஸ்.டி. ஆணையரகம் கண்காணித்து நோட்டீஸ் அனுப்புவதால் மீண்டும் Cash-க்கு மாறும் சிறிய கடைகள்






பெங்களூருவின் பல அக்கம்பக்கக் கடைகளில், டிஜிட்டல் பணம் செலுத்துவதை மிகவும் எளிதாக்கிய QR குறியீடு ஸ்டிக்கர்கள், "UPI இல்லை, பணம் மட்டும்" என்று எழுதப்பட்ட அச்சுப்பிரதிகள் அல்லது கையால் எழுதப்பட்ட குறிப்புகளால் மாற்றப்பட்டுள்ளன. டிஜிட்டல் பணம் செலுத்துதல்களில் தொடர்ந்து முன்னணியில் இருக்கும் ஒரு நகரத்தில், UPI பணம் செலுத்துவதை விரும்பிய சிறிய விற்பனையாளர்கள் இப்போது வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தைக் கோருவது அதிகரித்து வருகிறது. 

 அத்தகைய விற்பனையாளர்கள், UPI இலிருந்து விலகிச் சென்றுவிட்டதாகவோ அல்லது கட்டணச் செயலிகளின் பயன்பாட்டைக் குறைத்துள்ளதாகவோ தெரிவித்தனர், ஏனெனில் பலர் பொருட்கள் மற்றும் சேவை வரியைக் கோரி அறிவிப்புகளைப் பெற்றுள்ளனர். "நான் ஒரு நாளைக்கு சுமார் ரூ. 3,000 வணிகம் செய்கிறேன், நான் சம்பாதிக்கும் சிறிய லாபத்தில் வாழ்கிறேன். இனி UPI மூலம் பணம் செலுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது," என்று பெங்களூருவின் ஹொரமாவுவில் உள்ள ஒரு கடைக்காரர் சங்கர் கூறினார், அவர் தனது முழுப் பெயரை வெளிப்படுத்தினார். 

பதிவு செய்யப்படாத ஆயிரக்கணக்கான தொழிலதிபர்கள், புஷ் கார்ட்களில் இருந்து ஷார்ட் ஈட்ஸ், காண்டிமென்ட்கள், தெரு உணவுகள், தேநீர் மற்றும் பிஸ்கட்களை விற்பனை செய்பவர்களுக்கு கூட  GST கோரி அறிவிப்புகளைப் பெற்றுள்ளனர், சில சந்தர்ப்பங்களில் லட்சக்கணக்கான ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று விற்பனையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் கணக்காளர்கள் தெரிவித்தனர். பெங்களூரு தெருவோர வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் இணைச் செயலாளர் வழக்கறிஞர் வினய் கே ஸ்ரீனிவாசா கூறுகையில், பல விற்பனையாளர்கள் ஜிஎஸ்டி அதிகாரிகளின் துன்புறுத்தலுக்கு பயந்தும், வரி அறிவிப்புகளைக் காரணம் காட்டி நகராட்சி அதிகாரிகளால் வெளியேற்றப்படுவதற்கும் பயந்தும் யுபிஐக்கு பதிலாக ரொக்கமாகவே பணத்தை விரும்புகிறார்கள். ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ், பொருட்களை வழங்கும் வணிகங்கள் ஜிஎஸ்டியில் பதிவு செய்து, ஆண்டுக்கு ரூ.40 லட்சத்தைத் தாண்டினால் வரி செலுத்த வேண்டும். சேவைகளைப் பொறுத்தவரை, வரம்பு ரூ.20 லட்சம்.


வணிக வரித் துறை, ஒரு அறிக்கையில், 2021-22 முதல் பல ஆண்டுகளாக UPI பரிவர்த்தனை தரவுகளில் GST பதிவு மற்றும் வரி செலுத்துதல் தேவைப்படும் வருவாய் இருந்த சந்தர்ப்பங்களில் மட்டுமே அறிவிப்புகளை வெளியிட்டதாகக் கூறியது. அத்தகைய அனைத்து வணிகர்களும் GST பதிவை எடுத்து, வரி விதிக்கக்கூடிய வருவாயை வெளிப்படுத்தி வரிகளை அனுப்ப வேண்டும் என்று அது மேலும் கூறியது. இருப்பினும், கர்நாடகாவில் வணிக வரிகளின் முன்னாள் கூடுதல் ஆணையரான HD அருண் குமார், GST அதிகாரிகள் ஒரு சீரற்ற எண்ணை விற்றுமுதல் என்று குறிப்பிட முடியாது என்றும் வரிகளை கோர முடியாது என்றும் கூறினார். "GST சட்டங்களின் கீழ், ஆதாரத்தின் சுமை அதிகாரிகள் மீது உள்ளது. பணமோசடி வழக்குகளைப் போலல்லாமல், வரி கோரிக்கைக்கு வருவதற்கு முன்பு அவர்கள் அதை நிறுவ வேண்டும்," என்று அவர் கூறினார். 

எதிர்க்கட்சி பாஜக எம்எல்ஏ எஸ் சுரேஷ் குமார், இந்த விஷயத்தில் தலையிடக் கோரி முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதுவதாகக் கூறினார். முன்னாள் GST கள அதிகாரி ஒருவர், தனது சொந்த அனுபவத்திலிருந்து நினைவு கூர்ந்து, பணம் செலுத்தும் செயலி மூலம் பெறப்பட்ட மற்றும் GST அறிவிப்பில் கைப்பற்றப்பட்ட முழு பணமும் வணிக வருமானத்தை பிரதிபலிக்காது என்று கூறினார். அவற்றில் சில முறைசாரா வணிகக் கடன்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து பரிமாற்றங்கள் என்று அவர் கூறினார்.


"பெங்களூரு ஒரு சோதனை நிகழ்வாக வெளிப்படலாம். பதிவு செய்யப்படாத விற்பனையாளர்களைத் தட்டிக் கேட்பதன் மூலம் ஜிஎஸ்டி அதிகாரிகள் நல்ல வருவாயைப் பெற முடிந்தால், ஒவ்வொரு மாநிலமும் நிதிக்காக ஏங்கித் தவிப்பதால், மற்ற மாநிலங்களும் அதை ஏற்றுக் கொள்ளும்," என்று பெங்களூருவைச் சேர்ந்த ஸ்ரீனி & அசோசியேட்ஸின் பட்டயக் கணக்காளர் ஸ்ரீனிவாசன் ராமகிருஷ்ணன் கூறினார். 

5000 அரசுப் பள்ளிகள் மூடப்படும் விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்


 உத்தரப் பிரதேசத்தில் சுமார் 5000 அரசுப் பள்ளிகள் மூடப்படும் விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்


5000 அரசுப் பள்ளிகளை மூடுவது தொடர்பான உத்தரவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் 5000 தொடக்கப் பள்ளிகளை மூடுவது தொடர்பான அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளை தள்ளுபடி செய்ததை அடுத்து, இந்த பள்ளிகளை மூடுவது தொடர்பான உத்தரவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. 


உத்தரப் பிரதேச அரசு, இந்தப் பள்ளிகளை மூடி, அவற்றை அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்க முடிவு செய்திருந்தது. இந்த முடிவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், அரசாங்கத்தின் முடிவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 


உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளதுடன், இது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை பட்டியலிடவும் உத்தரவிட்டுள்ளது. 




5,000 அரசுப் பள்ளிகளை மூடும் நடவடிக்கையை கடுமையாக சாடியுள்ளார் பிரியங்கா காந்தி



5,000 அரசுப் பள்ளிகளை மூடும் நடவடிக்கையை கடுமையாக சாடியுள்ளார் பிரியங்கா காந்தி


உத்தரபிரதேச அரசின் பள்ளி இணைப்பு நடவடிக்கையை பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார், இது பின்னோக்கி செல்லும் ; பள்ளிகளுக்கு எதிரானது என்று கூறுகிறார் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா 


திங்களன்று உத்தரபிரதேசத்தில் உள்ள பாஜக அரசு இணைப்பு என்ற பெயரில் சுமார் 5,000 அரசுப் பள்ளிகளை மூட உள்ளது என்றும், இந்த நடவடிக்கை கல்வி உரிமைக்கு எதிரானது மட்டுமல்ல, தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர், ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும் எதிரானது என்றும் கூறினார். 


யோகி-ஆதித்யநாத் தலைமையிலான அரசு கல்வி வளங்களை பகுத்தறிவு செய்யவும், குறைந்த மாணவர் சேர்க்கை, ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்பின் நகல் போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கவும் பள்ளிகளை இணைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 


இந்த நடவடிக்கை, சிறிய மற்றும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள பள்ளிகளை ஒருங்கிணைத்து அருகிலுள்ள நிறுவனங்களுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.


 X இல் இந்தியில் ஒரு பதிவில், பிரியங்கா காந்தி, 

"உத்தரபிரதேச அரசு இணைப்பு என்ற பெயரில் சுமார் 5,000 அரசுப் பள்ளிகளை மூட உள்ளது. ஆசிரியர் அமைப்புகளின் கூற்றுப்படி, அரசாங்கத்தின் நோக்கம் சுமார் 27,000 பள்ளிகளை மூடுவதாகும்" என்று கூறினார்.


Priyanka slams UP govt's schools merger move, says it's against backwards


 Congress leader Priyanka Gandhi Vadra on Monday claimed that the BJP government in Uttar Pradesh is set to close around 5,000 government schools in the name of merger and said the alleged move is not only against the Right to Education, but also against the Dalits, backwards, tribals, minorities, poor, and deprived sections.


The Yogi-Adityanath-led government has reportedly decided to merge schools to rationalise educational resources and address issues such as low enrolment, teacher shortage, and duplication of infrastructure. The move, officials claim, aims to consolidate small and under-enrolled schools and merge them with nearby institutions.


In a post in Hindi on X, Priyanka Gandhi said, "The Uttar Pradesh government is set to close around 5,000 government schools in the name of merger. According to teachers' organisations, the government's intention is to close approximately 27,000 schools."


வகுப்பறைகளில் 'ப' வடிவில் இருக்கைகள் அமைக்கும் உத்தரவை நிறுத்தி வைத்ததா தமிழ்நாடு அரசு?


 பள்ளி வகுப்பறைகளில் 'ப' வடிவில் இருக்கைகள் அமைக்கும் உத்தரவை நிறுத்தி வைத்ததா தமிழ்நாடு அரசு?


'ப' வடிவில் இருக்கைகள் அமைக்கப்பட்டால், ஒவ்வொரு மாணவரும் கரும்பலகையையும், ஆசிரியரையும் தெளிவாக பார்க்க முடியும் என்று கூறப்பட்டது.


கேரளாவில் பள்ளி வகுப்பறைகளில் கடைசி இருக்கை மாணவர் என்ற வார்த்தை இருக்கக் கூடாது என்ற நோக்கில், 'ப' வடிவில் வகுப்பறைகளில் இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கேரளாவைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் அதனை அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.


அதன்படி, இதுபோல் இருக்கைகள் அமைக்கப்பட்டால், ஒவ்வொரு மாணவரும் கரும்பலகையையும், ஆசிரியரையும் தெளிவாக பார்க்க முடியும். மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எளிதான அணுகுமுறை உருவாகும். ஆசிரியர்கள் மாணவர்களை உன்னிப்பாக கண்காணிக்க முடியும். ஆசிரியர்கள் கூறுவதை மாணவர்கள் கேட்பதில் இருக்கும் சிரமம் குறையும் என கல்வித்துறை தெரிவித்திருந்தது.


மேலும் இருக்கைகள் அமைக்கப்படுவது போல, அதற்கேற்ற காற்றோட்ட வசதி, ஒளி வசதி ஆகியவற்றையும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.


இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறையின் இந்த உத்தரவு, சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஒரு தரப்பினர் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், இன்னொரு தரப்பினர் இந்த கல்வித்துறையின் அறிவிப்பை குறை கூறினர். 


மாணவர்கள் நீண்ட நேரம் பக்கவாட்டில் பார்வையை செலுத்த வேண்டி இருக்கும். இதனால் மாணவர்களுக்கு கழுத்து வலி, பெண் குழந்தைகளுக்கு இடுப்பு வலி, ஏற்பட வாய்ப்புள்ளதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.


இதையடுத்து, உத்தரவு பிறப்பித்த அதே நாளிலேயே 'ப' வடிவில் மாற்றி அமைக்கும் திட்டமானது நிறுத்தி வைக்கப்படு வதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வந்தது. வல்லுனர்களிடம் உரிய ஆலோசனை பெறும் வரை திட்டத்தை நிறுத்தி வைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 


இந்தநிலையில், பள்ளி வகுப்பறைகளில் 'ப' வடிவில் இருக்கைகள் வசதி உத்தரவை நிறுத்தி வைப்பதாக சமூகவலைதளங்களில் சிலர் தவறான தகவலை பரப்பு வருவதாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தரப்பில் இருந்து  தெரிவிக்கப்பட்டுள்ளது.



>>> பள்ளி வகுப்பறைகளில் மாணவர்களை "ப" வடிவில் அமரவைக்க வெளியிடப்பட்ட இயக்குநரின் செயல்முறைகள்...


PGTRB போட்டித் தேர்வுக்கான தேதி மாற்றம்

 


PGTRB போட்டித் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம் செய்தி வெளியீடு 


PGTRB - Exam Date Changed. It will be announced later 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு - CEO அறிவுறுத்தல்



பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு - முதன்மைக் கல்வி அலுவலரின் அறிவுறுத்தல்


ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி திருவேங்கட உடையான்பட்டி தஞ்சாவூர் ஒன்றியம் பள்ளி மாணவர்கள் நீரில் முழ்கி இறந்த சோக நிகழ்வு


பள்ளி தலைமை ஆசிரியர்கள் தம் பள்ளி மாணவர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கும்படியும், ஆறு மற்றும் குளங்களில் இறங்கவேண்டாம் என அறிவுறுத்தும்படியும் வேண்டுகோள்.


தகவல்:

முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள், தஞ்சாவூர்.


தமிழ்நாட்டில் இன்று 10 இடங்களில் வெயில் 100°Fஐ தாண்டிய இடங்கள்

 

 

தமிழ்நாட்டில் இன்று 10 இடங்களில் வெயில் 100°Fஐ தாண்டிய இடங்கள்


மதுரை விமான நிலையம் - 104.9°F


நாகப்பட்டினம் - 102.38°F


தஞ்சாவூர் - 102.2°F


மீனம்பாக்கம் - 101.84°F


திருச்சி - 101.3°F


கடலூர், மதுரை நகரம், புதுச்சேரி - 101.12°F


கரூர் பரமத்தி - 100.4°F


காரைக்கால் - 100.04°F


‘கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்?’ - ‘ப’ வடிவ இருக்கை குறித்து அன்புமணி கருத்து


‘கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்?’ - ‘ப’ வடிவ இருக்கை குறித்து அன்புமணி கருத்து


‘ப’வடிவில் இருக்கைகளை அமைப்பது இருக்கட்டும்... முதலில் வகுப்பறைகளும், ஆசிரியர்களும் இருப்பதை உறுதி செய்யுங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.



இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பள்ளி வகுப்பறைகளில் மாணவர் இருக்கைகள் 'ப' வடிவில் அமைக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனரகம் ஆணை பிறப்பித்துள்ளது. அனைத்து மாணவர்களும் முதல் வரிசை மாணவர்களாக கருதப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் ‘ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்’ என்ற மலையாளத் திரைப்படத்தில் வலியுறுத்தப்பட்ட கருத்துக்கு செயல்வடிவம் கொடுக்க முயல்வதில் தவறு இல்லை.


ஆனால், ப வடிவத்தில் இருக்கைகளை அமைப்பதில் நிறைகள் இருப்பதைப் போலவே குறைகளும் உள்ளன. இந்த முறையை மலையாள திரைப்படமும், தமிழக அரசும் வலியுறுத்துவதற்கு பல பத்தாண்டுகளுக்கு முன்பே அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் நடைமுறைப்படுத்தியுள்ளனர். இந்த முறையில் அனைத்து மாணவர்களும் முதல் வரிசை மாணவர்களாக கருதப்படுவார்கள் என்பது மாணவர்களின் மனநிலையை மேம்படுத்தக்கூடும், கற்றல் - கற்பித்தல் என்பது கலந்துரையாடலாக அமையும் என்பவை சாதகமான அம்சங்கள்.



எனினும், பெரும்பான்மையான வகுப்பறைகள் 20 அடி அகலமும், 20 அடி நீளமும் கொண்டவையாகவே உள்ளன. இந்த வகுப்பறைகளில் ப வடிவில் அதிக அளவாக 20 முதல் 24 மாணவர்களை மட்டுமே அமர வைக்க முடியும்; அதற்கும் கூடுதலாக மாணவர்கள் இருந்தால் அனைவரிடத்திலும் ஆசிரியர்கள் கவனம் செலுத்த முடியாது.


வகுப்பறையின் இரு புறமும் அமர்ந்துள்ள மாணவர்கள் கரும்பலகையை பார்த்து எழுதுவதற்கு கழுத்தை ஒருபுறமாக திருப்பி வைத்திருக்க வேண்டும் என்பதால் அவர்களுக்கு கழுத்து வலி ஏற்படும்; மாணவர்கள் எதிரெதிராக அமர்ந்திருக்கும் போது கவனச் சிதறல்கள் ஏற்படும் என்பன போன்ற பாதகமான அம்சங்களும் உள்ளன.



இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்... மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு அடிப்படைத் தேவை ஆசிரியர்களும், வகுப்பறைகளும் தான். ஆனால், தமிழ்நாடு முழுவதும் 3,800 தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளை கையாள்வதற்கு தலா ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளனர். மீதமுள்ள 25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இவ்வளவு குறைவான விகிதத்தில் ஆசிரியர்களை வைத்துக் கொண்டு அரசு பள்ளிகளில் தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?


பெரும்பான்மையான பள்ளிகளில் வகுப்பறைக் கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் தான் உள்ளன. பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.7500 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் எத்தனை வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன என்பது அரசுக்கே வெளிச்சம். புதிய வகுப்பறை கட்டிடங்களிலும் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுவது வாடிக்கையாகி விட்டது.



மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்றால் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மட்டும் குறைந்தது ஒரு லட்சம் வகுப்பறைகள் கட்டப்படுவதுடன், ஒரு லட்சம் ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட வேண்டும். அதை விடுத்து ப வடிவில் இருக்கைகளை அமைப்போம் என்பதெல்லாம் கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்? என்பதற்கு இணையான நகைச்சுவையாகவே அமையும். எனவே, தமிழக அரசு நகைச்சுவை செய்வதை விடுத்து கல்வி வளர்ச்சியில் உண்மையான அக்கறையை காட்ட வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


ப _ வடிவில் வகுப்பறை இருக்கை அமைக்கும் நடைமுறை சாத்தியமா?



ப _ வடிவில் வகுப்பறை இருக்கை அமைக்கும் நடைமுறை சாத்தியமா?


தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகளை அமைக்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.


முன்னதாக, கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் உள்ள சில பள்ளிகளில் பின்வரிசை, முன்வரிசை என்ற பாகுபாட்டைக் களையும் பொருட்டு அரைவட்ட வடிவில் மாணவர்களின் இருக்கை அமைக்கப்பட்டது தொடர்பான செய்திகள் வைரலாகின. இந்நிலையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகளை அமைக்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்துகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இணைக்கப்பட்ட படத்தில் ‘சம இருக்கை, சமூக நீதி’ என்ற வாசகம் சேர்க்கப்படுள்ளது.


இந்த இருக்கை வசதி பற்றி தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அளித்த பேட்டி ஒன்றில், “பின் இருக்கையில் படிப்பவர்கள் நன்றாக படிக்க மாட்டார்கள், முன் இருக்கையில் படிப்பவர்கள் நன்றாகப் படிப்பார்கள் என்ற வகையில் எல்லாம் இருக்கை அமைப்பை மாற்றும் முடிவை எடுக்கவில்லை. பின் வரிசையில் அமர்ந்தவர்கள் கூட பெரும் சாதனையாளர்களாக, ஒரு வகுப்பறையில் ஆசிரியர் கற்பிக்கும்போது இந்த மாதிரியான வடிவமைப்பில் இருக்கைகள் இருந்தால் அது மாணவர்கள் - ஆசிரியர்கள் இடையேயான தொடர்பை மேம்படுத்துமா என்பதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.


மாணவர்கள் மத்தியில் சமத்துவம் ஏற்படுத்தும் என்றால், இது நல்ல முயற்சியே. எதிர்காலத்தில் ஒரு போர்டு மீட்டிங்கில் அமரும்போது ஏற்படும் உணர்வை மாணவர்கள் இப்போதே பெறட்டுமே. மாற்றங்கள் நல்லதாக இருந்து அது எந்த மாநிலத்தில் நிகழ்ந்தாலும் நாம் அதை பின்பற்றலாம். இந்த முயற்சி எப்படி பலனளிக்கிறது என்று ஆசிரியர்கள் முயற்சிக்கட்டும்” என்றார்.


பள்ளிகளில் வகுப்பறை இட வசதி, இருக்கை வசதி மற்றும் மாணவர் எண்ணிக்கை ஆகிய காரணிகளை உள்ளடக்கியே இத்தகைய "ப" வடிவ இருக்கை ஏற்படுத்த இயலும் என கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.


வாய்ப்புள்ள பள்ளிகளில் 'ப' வடிவ வகுப்பறை இருக்கைகள் - அமைச்சர்

 வாய்ப்புள்ள பள்ளிகளில் 'ப' வடிவ வகுப்பறை இருக்கைகள் -அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி


 ப வடிவ வகுப்பில் மாணவர்கள் ஒருவருடன் ஒருவர் கலந்துரையாட முடியும் . ஆசிரியர்கள், தங்களின் மாணவர்கள் அனைவரையும் பார்க்க முடியும். தொடக்க வகுப்புகளில் செயல்படுத்தப்பட்டுவரும் இந்த அமைப்பினை பிற வகுப்புகளிலும் செயல்படுத்திப் பார்க்க இருக்கிறோம். முதற்கட்டமாக , வாய்ப்புள்ள பள்ளிகளின் வகுப்பறைகளில் ‘ ப வடிவ இருக்கை அமைக்கப்படும் . 


- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி



குட்டையில் குளிக்கச் சென்ற 6 குழந்தைகள் உயிரிழப்பு

 


குட்டையில் குளிக்கச் சென்ற 6 குழந்தைகள் உயிரிழப்பு


ராணிப்பேட்டை - மேட்டு குன்னத்தூரில் குட்டையில் குளிக்கச் சென்ற 3 குழந்தைகள் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு


புவனேஸ்வரன்(7), சுஜன்(7), மற்றும் சிறுமி மோனி(9) ஆகிய 3 குழந்தைகளும் குட்டையில் மூழ்கி மரணம்


நீரில் மூழ்கிய 3 குழந்தைகளும் தீயணைப்பு வீரர்கள் உதவியோடு சடலமாக மீட்பு - காவல்துறையினர் விசாரணை




தஞ்சாவூர் மாவட்டம் மருதகுடியில் குளத்தில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.


தஞ்சாவூர் மாவட்டம் திருவேங்கப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ் மகன் மாதவன் (10), அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரின் மகன் பாலமுருகன் (10), ஸ்ரீதர் மகன் ஜஸ்வந்த் (8) ஆகிய மூன்று பேரும் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லாமல் மருதகுடி ஊரணி குளத்தில் குளித்துள்ளனர்.


வெகு நேரம் ஆகியும் மாதவன் உட்பட மூன்று பேரும் வீட்டிற்கு வராததால் அவர்களின் பெற்றோர்கள் தேட ஆரம்பித்துள்ளனர். அப்போது அவர்கள் மருதகுடி கிராமத்திற்கு சென்றதாக தகவல் கிடைத்து அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது ஊரணி குளத்தின் கரையில் சிறுவர்கள் அணிந்திருந்த செருப்புகளை பெற்றோர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


உடன் அந்த பகுதி மக்கள் குளத்தில் இறங்கி தேடிப் பார்த்தபோது மூன்று சிறுவர்களும் குளத்தில் மூழ்கி கிடந்தது தெரியவந்தது. உடன் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிறுவர்களை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மருத்துவமனையில் சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.


இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



மாநிலங்களவைக்கு 4 நியமன MPக்கள் நியமனம்



 மாநிலங்களவைக்கு 4 நியமன எம்.பி.க்கள் நியமனம் 


- வழக்கறிஞர் உஜ்வல் நிகம்.


* கேரளாவைச் சேர்ந்த சதானந்தன் மாஸ்டர்.


* முன்னாள் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்ளா.


* மீனாட்சி ஜெயின் ஆகிய 4 பேரும் குடியரசுத்தலைவரால் ராஜ்யசபாவுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


THIRUKKURAL - Treasure Of Universal Wisdom நூல் வெளியீடு - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு



“உலகப் பொதுமறை திருக்குறள்” (THIRUKKURAL - Treasure Of Universal Wisdom) நூல் வெளியீடு - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு


 “உலகப் பொதுமறை திருக்குறள்” (THIRUKKURAL - Treasure Of Universal Wisdom) நூலை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டார்


உலகின் பெரும்பான்மையான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அய்யன் திருவள்ளுவரின் திருக்குறள் இனி பெரும்பான்மையானோர் கைகளுக்கும் செல்லவுள்ளது! 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தின் கீழ், சிகாகோ உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையுடன் இணைந்து பதிப்பித்துள்ள “உலகப் பொதுமறை திருக்குறள்” (THIRUKKURAL - Treasure Of Universal Wisdom) நூலை, மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களின் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டுச் சிறப்பித்தார். 


கையடக்க வடிவில் வெளியிடப்பட்டுள்ள இந்நூல் உலகெங்கும் அனைவரின் இல்லங்களுக்கும், உள்ளங்களுக்கும் சென்று சேரும்!


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஐ.நா. அமைப்பின் SEEUN திட்டத்தின் கீழ் பாங்காக் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களையும், ஆசிரியரையும் குறிப்பிட்டு அமைச்சர் வாழ்த்து

ஐ.நா. அமைப்பின் SEEUN திட்டத்தின் கீழ் பாங்காக் நகரில் நடைபெறவுள்ள பன்னாட்டு மாணவர் மன்றத்தில் பங்கேற்கத் தேர்வாகியுள்ள அரசுப் பள்ளி மாணவர்க...