கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>தமிழகத்தில் 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்குப் பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு...

தமிழகத்தில் இக்கல்வி ஆண்டில் 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுகின்றனர்.தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்களின் பதவி உயர்வுக்கு பின்னர் பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

இதில் 31.5.2012 நிலவரப்படி அனைத்து இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களும் கடந்த 13ம் தேதி நடந்த பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் கவுன்சிலிங்கிற்காக பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக மாற்றப்பட்டுள்ளது.எனவே, வரும் 30ம் தேதி நடக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்கில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இதில் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களில் வரும் 3ம் தேதி பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும் என பள்ளிக் கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) ராஜ ராஜேஸ்வரி, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில நிர்வாகிகளிடம் உறுதி அளித்துள்ளார் என்று மாநில அமைப்பு செயலாளர் இசக்கியப்பன், மாநில பொது செயலாளர் குமரேசன், மாநில பொருளாளர் உதயசூரியன், தலைமையிட செயலாளர் சோமசேகர், சென்னை மாவட்ட தலைவர் கயத்தாறு தெரிவித்தனர்.வரும் 30ம் தேதி நடக்கும் வுன்சிலிங்கில் தமிழ் பாடத்தில் 1,227, வரலாறு 416, ஆங்கிலம் 400, கணிதம் 252, அறிவியல் 86, புவியியல் 6 உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் - 2320 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு & விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள்...

  மெட்ராஸ் உயர் நீதிமன்றம் - 2320 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு & விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள்... >>> விண்ணப்பதாரர்கள...