கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>கேட் தேர்வு தேதிகளை அறிவித்தன ஐஐஎம் -கள்

ஐஐஎம் போன்ற மேலாண்மை கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதற்காக நடத்தப்படும் கேட் தேர்வை 2012ம் ஆண்டு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 11ம் தேதி துவங்கும் கேட் தேர்வானது நவம்பர் 6ம் தேதி வரை மொத்தம் 21 நாட்கள் நடத்தப்படுகிறது.
கேட் தேர்வின் மூலம் ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கப்படக்கூடிய சில முதுநிலை மேலாண்மை பாடத்திட்ட விபரங்கள்:
PGP, PGP - ABM, PGSEM, PGPPM, PGP - PGDM, PGP - PGDCM, EPGP, PGDHRM
போன்ற படிப்புகள் திருச்சி, பெங்களூர் மற்றும் கோழிக்கோடு உள்பட, நாட்டில் மொத்தமுள்ள 13 ஐஐஎம் களில் வழங்கப்படுகின்றன.
மேலும் FPM(Fellow Programmes in Management) எனப்படும் முனைவர் பட்டத்திற்கு இணையான படிப்பானது, அகமதாபாத், பெங்களூர், கொல்கத்தா, இந்தூர், கோழிக்கோடு, லக்னோ, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங் மற்றும் திருச்சி ஆகிய இடங்களிலுள்ள ஐஐஎம் களில் வழங்கப்படுகிறது.
இத்தேர்வை எழுதுவதற்கான தகுதிகள்
குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது CGPA தகுதி பெற்றிருக்க வேண்டும். SC/ST பிரிவு மாணவர்கள் 45% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. இளநிலைப் பட்டப் படிப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தால் பின்பற்றப்படும் பயிற்சியின் அடிப்படையில் மதிப்பிடப்படும். இறுதியாண்டு படிப்பவர்கள் மற்றும் இறுதி தேர்வு முடிவுகளுக்காக காத்திருப்பவர்களும் இத்தேர்வை எழுதலாம்.
அதுபோன்ற தகுதி நிலையில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், அவர்கள் படித்த கல்வி நிறுவனத்தின் முதல்வர் அல்லது பதிவாளர் அளிக்கும் தகுதி சான்றிதழின் அடிப்படையிலேயே தற்காலிகமாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஐஐஎம் கள் பலவிதமான நிலைகளில் ஒரு மாணவரின் தகுதியை சரிபார்க்கும்.
பொருத்தமான தகுதியுடைய மாணவர்கள், தேர்வுசெய்யும் செயல்பாடு முழுவதும் முடிவடையும்வரை, தங்களது மின்னஞ்சல்(E-mail) முகவரி மற்றும் தொலைபேசி எண்களை மாற்றாமல் வைத்து, பராமரிக்க வேண்டும்.
இடஒதுக்கீட்டு முறை
இந்திய அரசின் விதிப்படி, 15% இடங்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும், 7.5% இடங்கள் பழங்குடியின மக்களுக்காகவும், 27% இடங்கள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், 3% இடங்கள் ஊனமுற்ற மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இடஒதுக்கீட்டிற்கு தகுயுள்ள மாணவர்கள், விண்ணப்பத்தில் அதை குறிப்பிடுவதுடன், தகுதி விதிமுறைகளையும் தெளிவாகப் படிக்க வேண்டும்.
கேட் - 2012 தேர்வின் வவுச்சர்களை அக்சிஸ் வங்கியின் கிளைகள் மற்றும் அது சார்ந்த கிளைகளில், ஜுலை 30 முதல் செப்டம்பர் 17 வரை பெற்றுக் கொள்ளலாம். அதன் விலை ரூ.1600. SC/ST பிரிவு மாணவர்களுக்கு ரூ.800. வவுச்சரை ஒரு தடவை வாங்கி விட்டால், அதை மீண்டும் திருப்பி கொடுத்து பணம் வாங்க முடியாது.
தேர்வு மையங்கள்
நாடு முழுவதும் மொத்தம் 36 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. எந்த தேர்வு மையத்தையும் மாற்றவோ அல்லது ரத்து செய்யவோ அல்லது டெஸ்ட் விண்டோ நேரம் மற்றும் தேதியை மாற்றவோ ஐஐஎம் களுக்கு அதிகாரம் உண்டு.
கேட் 2012 மதிப்பெண்
கேட் 2012 தேர்வின் மதிப்பெண்களை, www.catiim.in என்ற வலைத்தளத்தில் 9 ஜனவரி, 2013 முதல் பார்க்கலாம். மதிப்பெண் அட்டையின் பிரிண்ட் அவுட் நகலை மாணவர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இந்த கேட் 2012 மதிப்பெண் அட்டையானது, 31 டிசம்பர், 2013 வரை செல்லும்.
இந்த மதிப்பெண் அட்டையை 31 டிசம்பர், 2013 வரை, www.catiim.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சேர்க்கை செயல்முறை
எழுத்து திறன் தேர்வு(WAT), குழு கலந்தாய்வு(GD) மற்றும் நேர்முகத் தேர்வு போன்றவை சேர்க்கை செயல்முறையில் பின்பற்றப்படுகின்றன. மேலும், கேட் தேர்வில் ஒருவரின் செயல்பாடு, மாணவர் சேர்க்கையில் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கும்.
இவைத்தவிர, ஒரு மாணவரின் முந்தைய கல்வி நிலைய செயல்பாடுகள், தொடர்புடைய பணி அனுபவம் போன்றவையும் கணக்கில் எடுக்கப்படும்.
இந்தத் தேர்வைப் பற்றி முழுமையான அம்சங்களை அறிந்துகொள்ள www.catiim.in என்ற வலைத்தளம் செல்க.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of Centennial Schools - District wise

  நூற்றாண்டு பள்ளிகளின் பட்டியல் - மாவட்ட வாரியாக  List of Centennial Schools - District wise  >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவு...