கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

To write TET No Permission Need - BEO Proceedings


TET எழுத துறை அனுமதி தேவையில்லை - BEO செயல்முறைகள்


15-11-2025 மற்றும் 16-11-2025 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வுகளில் (தாள் 1 & 2) தேர்ச்சி பெற்றவர்களின் தேர்வு முடிவுகளை  பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய முன் அனுமதி அவசியம் இல்லை.


ஆசிரியர் தகுதி தேர்வு எழுத துறை அனுமதி தேவையில்லை - தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) ஆகியோரின் செயல்முறைகள் கடிதத்தை மேற்கோள் காட்டி கொடுமுடி வட்டார கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்


To write TET No Permission Need - BEO Proceedings 


No need to get departmental permission to write TET - BEO Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-02-2026

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-02-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 27.02.2026 

கிழமை:- வெள்ளி



திருக்குறள்: 

குறள் 568:

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகுந் திரு.         

விளக்க உரை:

அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து எண்ணாத அரசன், சினத்தின் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்.


பழமொழி :
Grasp all lose all.

பேராசை பெருநஷ்டம்.


இரண்டொழுக்க பண்புகள் :.

1. உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர்.

2.எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.


பொன்மொழி :

நீ வெற்றிக்காக போராடும் பொழுது வீண் முயற்சி என்று சொல்பவர்கள், நீ வெற்றி பெற்ற பின் விடாமுயற்சி என்று சொல்வார்கள் - கண்ணதாசன்


பொது அறிவு :

01.இந்தியாவின் முதன்மையான வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?

டேராடூன் -  உத்தராகண்ட்

  Dehradun, Uttarakhand

02.இந்தியாவில் எந்த உயிரியல் பூங்காவில் வெள்ளை புலிகள் அதிகம் உள்ளன?

நந்தன்கானன் உயிரியல் பூங்கா - ஒடிசா

Nandankanan Zoological Park - Odisha


English words :

Preening-cleaning

Bifurcated-splitted


தமிழ் இலக்கணம்:

இறந்த காலம் –எதிர்காலம்

*நேற்று* என்னிடம் *பேசும் போது* அம்மா கூறினார்.
நேற்று என்பது இறந்த காலம்

பேசும் போது என்பது எதிர் காலம்

இறந்த காலத்தில் பேசும் போது எதிர்காலம் உபயோகப் படுத்த கூடாது. சரியான சொற்றொடர் என்னவென்றால்

நேற்று என்னிடம் பேசுகிற போது அம்மா கூறினார்.

எங்கள் கிராமத்தை சுற்றி *வரும்போது* ஒரு பாழடைந்த மண்டபத்தை *பார்த்தேன்*

வரும்போது எதிர்காலம்

பார்த்தேன் இறந்த காலம்

சரியான சொற்றொடர்

எங்கள் கிராமத்தை சுற்றி *வந்தபோது* ஒரு பாழடைந்த மண்டபத்தை *பார்த்தேன்*


அறிவியல் களஞ்சியம் :

பல நூற்றாண்டுகளாக பூமியின் சுழற்சி மெதுவாக ஆவதற்கு சந்திரனின் ஈர்ப்பு விசை முக்கிய காரணம் ஆனது.  இந்த நிகழ்வு ""ஓதத் தடை"" (Tidal Braking) என்பதனால் ஏற்படுகிறது. சந்திரனின் ஈர்ப்பு என்பது பூமியின் நீர்ப்பரப்புகளை (மற்றும் ஓரளவு திடப்பரப்புகளையும்) இழுத்து, பூமி சந்திரனை நோக்கி சிறிது புடைப்பு ஏற்படுத்துகிறது. இந்த உராய்வு, ஆற்றல் பரிமாற்றம் காரணமாக  பூமியின் சுழற்சி உந்தம் குறைக்கப்படுகிறது. இதில் சந்திரன் ஒரு கைத் தடை (Handbrake) போலவே செயல்படுகிறது.


பிப்ரவரி 27

பன்னாட்டு அரசு சார்பற்ற அமைப்புகளின் நாள்



நீதிக்கதை

காவல்காரன்

மகத நாட்டின் மன்னர், தான் புதிதாக அமைத்த அழகிய தென்னந்தோப்பைக் காவல் காக்க, பொறுப்பான ஆள் தேவை. அந்த வேலையை யாரிடம் ஒப்படைக்கலாம் என யோசனை செய்தார். அப்போது அவருக்கு ராமனின் நினைவு வந்தது. அரசவையில் கோமாளியைப் போல் ஒரு வேலையும் செய்யாமல் சுற்றி வருகிறான். ஆகையால் அவனுக்கு இந்த வேலையை கொடுப்பது என்று முடிவு செய்தார். இந்த நிலத்தில் தென்னங்கன்றுகள் நடப் போகிறோம். இவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பு உன்னுடையது. இந்தக் கன்றுகளை இரவிலும், பகலிலும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். கவனமாக நடந்து கொள் என்றார்.

அரசே! நீங்கள் கூறியது போலவே நடந்து கொள்வேன் என்றான் ராமன். அங்கே தென்னங்கன்றுகள் நடப்பட்டன. அவற்றிற்கு காவல் இருக்கத் தொடங்கினான் ராமன். பகல் வேளையில், அவற்றைப் பார்த்துக் கொள்வது அவனுக்கு எரிச்சலாக இருந்தது. இரவு வந்தது. வீடு செல்ல வேண்டும். தென்னங்கன்றுகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும். என்ன செய்வது என்று சிந்தித்தான். நல்ல வழி ஒன்று அவனுக்குத் தோன்றியது. தென்னங்கன்றுகளை எல்லாம் பிடுங்கி, ஒன்றாகக் கட்டினான். அவற்றைத் தூக்கி கொண்டு, தன் வீட்டிற்கு வந்தான். தன் கண் பார்வையிலேயே அவற்றை வைத்திருந்தான். பொழுது விடிந்தது. அந்தக் கன்றுகளைத் தூக்கிக் கொண்டு நிலத்திற்கு வந்தான். முன்பு இருந்தது போலவே அவற்றை நட்டு வைத்தான். பொழுது சாய்ந்ததும் அவற்றைப் பிடுங்கி எடுத்துக் கொண்டு, தன் வீட்டிற்குச் சென்றான். இப்படியே தொடர்ந்து நடந்து வந்தது. ஒரு வாரம் சென்றது. தென்னங்கன்றுகள் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக அரசர் அங்கு வந்தார்.

தென்னங்கன்றுகள் அனைத்தும் வாடிக் கிடப்பதைப் பார்த்தார். கோபம் கொண்ட அவர், நீ பொறுப்பாகத் தென்னந்தோப்பைக் காவல் காப்பாய் என்று உன் பொறுப்பில் விட்டேன். எல்லா கன்றுகளும் வாடிக் கிடக்கின்றன. என்ன செய்தாய்? என்று கோபமாகக் கேட்டார். அரசே! நீங்கள்தான் இவற்றைப் பகலிலும், இரவிலும் நான் காவல் காக்க வேண்டும் என்றீர்கள். இரவில் நான் இவற்றை வீட்டிற்கு எடுத்துச் சென்று பாதுகாத்தேன். பகலில் மீண்டும் இவற்றை இங்கே நட்டேன். நீங்கள் சொன்னது போலவே நடந்து கொண்டேன். இவை ஏன் வாடி விட்டன! என்று எனக்கும் தெரியவில்லை, என்றான். இதைக் கேட்ட அரசர், இவனிடம் போய் இந்த வேலையை கொடுத்தோமே என்று தலையில் அடித்துக் கொண்டார். அப்பாடா! தப்பித்தோம்! என்று நினைத்து பெருமூச்சு விட்டான் ராமன்.


இன்றைய செய்திகள்

27.02.2026

⭐நாடு முழுவதும் சுமார் 150 ஷோரூம்களை மூட முடிவு செய்துள்ளது ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்.‌ 700 ஷோரூம்கள் இருந்த நிலையில் 550 ஆக குறைத்து செயல்பாட்டு திறனை மேம்படுத்த இம்முடிவு என தெரிவிப்பு.

⭐ இந்தியாவில் வருடத்துக்கு 2 லட்சத்து 80,000 பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயால் உயிரிழந்து வருகின்றனர்.

⭐ தமிழக சிறைகளில் நீண்ட காலமாக தண்டனை அனுபவித்து வரும்  நன்னடத்தை கொண்ட கைதிகள் ஆண்டுக்கு 120 நாட்கள் வரை  குடும்பத்தினருடன் இருக்கும் வகையில் தமிழக அரசு சிறை விடுப்பு விதிகளில் திருத்தம் செய்துள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியுடன்  மோதுகிறது.


Today's Headlines

⭐Ola Electric has decided to close around 150 showrooms across the country. The company stated that this decision was taken to improve operational efficiency by reducing the total number of showrooms from 700 to 550.

⭐ In India, around 2,80,000 women die every year due to cervical cancer.

⭐ The Tamil Nadu government has amended prison leave rules, allowing well-behaved inmates who have been serving long-term sentences in Tamil Nadu prisons to stay with their families for up to 120 days a year.

🏀 Sports News

🏀 In the Super 8 round of the ICC T20 World Cup, the defending champions India are set to face Zimbabwe in their second match.


பணிபுரியும் ஆசிரியர்களுக்கான TNTET 2026 - ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்



TNTET 2026 for Working Teachers - Instructions to the Candidates "How to Apply" through Online


பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு TNTET 2026 - "ஆன்லைன் மூலம் எப்படி விண்ணப்பிப்பது" - விண்ணப்பதாரர்களுக்கான வழிமுறைகள் 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Tamil Nadu Teacher Eligibility Test for Working Teachers – 2026 

Instructions to the candidates “How to Apply” through Online

The Applicants who are applying for TNTET for working teachers 2026 are requested

to use their current & active E-Mail ID & Mobile Number. Those who do not have an E-Mail ID and Mobile No. should create an E-Mail ID and have a Mobile Number and keep them active as messages will be sent to the registered E-mail ID / Mobile Number only. Important Note: Applicants should fill all the mandatory fields which are with star mark (⋆) NEW APPLICANT / USER: 1. Applicants need to provide basic personal information during New User Sign up process.

2. Applicant must enter his/her active E-Mail ID and Validate via OTP process. 

3. Applicant also needs to validate his/her Mobile No. via OTP process. 

4. After providing the mandatory details, Applicant needs to click the “SUBMIT” button in the ‘New User Sign up’ form.

5. On successful submission, User ID & Password will be created and displayed on screen and will be sent to the candidate’s E-Mail ID and Mobile No. The Applicant should enter his/her User ID and Password in the Login page and click the Login button to complete the Login process.

APPLICATION FORM CONSISTS OF THE FOLLOWING SECTIONS:

1. Post Detail 

2. Details of the Applicant 

3. Address 

4. Special Category details 

5. Educational Qualification 

6. Examination Particulars 

7. Uploading Document 

8. Preview and Confirmation


Details of the Applicant:

 I. In the personal details page, Applicant should enter his/her Gender, Date of Birth and other personal details.

II. The Applicant should fill out his/her community details.

III. Once all the mandatory fields are entered in the ‘Details of the Applicant’ the Applicant should, click the “Next” button to proceed further and to fill the “address”.

IV. The candidate must fill the communication address in the respective fields. V. Here the applicant should fill up the details of his/her educational qualifications in the input field provided..


Uploading of Documents:

 I. All documents relating to personal details, Photo, Signature, Date of Birth, Community, Qualifications, etc. to be uploaded in the space provided. Unclear documents shall not be scrutinized and will be summarily rejected.

II. While uploading all relevant documents, care should be taken to ensure the clarity of the documents.

III. Required documents to be uploaded in ‘Uploading Document’ page and relevant documents are to be uploaded in appropriate places only.

IV. Teachers Recruitment Board will not be responsible for delayed submission / incomplete submission.

V. Failure to upload the documents as per the claim made in the Online application will result in rejection of candidature.


Preview:

 I. In this section, all the details filled in the application form will be displayed using the “Edit” button, applicants can ‘Modify’ or ‘Update’ the details.

II. Now the Application Form will be displayed with “Proceed to Submit Form” button at the end.

III. On clicking the “Submit Application Form” button, the “Declaration” pop up box will open. After enabling the checkbox, click “Submit” button to complete the application process.

IV. Once the “Submit” button is clicked and Payment is done the Applicant will not be able to change any of the details in the submitted application.


DOWNLOADING OF FILLED IN APPLICATION FORM:

The candidate needs to click the “APPLICATION FORM” link in the Applicant’s Dashboard to download the filled-in application form. The candidates are advised to keep a copy of filled in application form with them for their use in future. Note: Any query can be sent only through Applicant’s mail to trbgrievances@tn.gov.in. Other modes of representation through Post, Letter in person, etc. will not be entertained. GENERAL: Mere submission of application and appearing in the examination, does not claim any right for selection. 

CANCELLATION OF EXAMINATION: Teachers Recruitment Board has the right to cancel, postpone the examination at any point of time, on administrative and other grounds.

Secretary


Election Duty Remuneration Allowances to Polling & Counting Personnel


தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 - பணியாளர்களுக்கான ஊதியம் குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியீடு


Tamilnadu Legislative Assembly Elections 2026 - Election Duty Remuneration Allowances to Polling and Counting Personnel


Election 2026 - PO, P1, P2, P3 & Other Officials Duty Payment - Orders


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கான ஊதிய விகிதங்கள் - தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 





By Speed Post / blast Immediate

PUBLIC (ELECTIONS.III} DEPARTMENT,

SECRETARIAT, CHENNAI-600 009.


e-mail / better No.2990/2026-1, Dated: 24.02.2026

From

Tmt. Archana Patnaik, I.A.S., Chief Electoral Officer &

Principal Secretary to Government

To

All District Election Officers. (w.e.) Madam / Sir,


Sub:

ELECTIONS — General Elections to Tamil Nadu Legislative Assembly, 2026 — Payment of flat rate allowances to polling / counting personnel and others — Requirement of funde - Particulars - Called for.


Ref:

From the Election Commission of India, New Delhi, letter No.464/INST/EPS/2025/ Remuneration & TA/DA, Dated: 08.08.2025.


I am to state that the manpower requirement at various levels for appointment of polling personnel, like Presiding Officer, Polling Officer etc. has to be assessed. In view of the above, the requirement of flat rate of allowance to polling and counting personnel, Micro Observers and others for payment of remuneration has to be assessed for the ensuing General Elections to Tamil Nadu Legislative Assembly, 2026.

2. I am, therefore, to request you to furnish the details of number of polling / counting personnel, etc. along with the total requirement of funds for payment, in the formats given in Annexure-I and Annexure-II immediately based on the rates of remuneration prescribed in the table given in Annexure-III. Grand Total in Annexure-1 and Annexure-II must be tallied. The above details may be furnished to this office on or before 10.03.2026.


Yours faithfully,

for Chief Electoral Officer & Principal Secretary to Government


General Elections to TNLA, 2O2D

ANNEXURE I

Name of the District No. of ACs

No. of Polling Stations :


Category No. of personnel drafted for election duty Rate Total amount

I. Polling personnel

Presiding Officer

Polling officer-I

Polling officer-II

Polling officer-III

Office Assistant

(Class-IV-poll duty)


II. Micro Observers

Micro Observers (Poll Duty)

Micro Observers (Counting)

III. Counting personnel

Counting Supervisor

Counting Assistant

Office Assistant

(Class-IV-counting duty)

IV. Other Category

Sector Magistrate/ Zonal

Officer

Asst. Zonal Officer

Reception Officer

Cashier / Asst. Cashier

VAOs

Village Assistants

Instructors

Office Assistants

Others

Grand Total

ARCHANA PATNAIK

CHIEF ELECTORAL OFFICER & PRINCIPAL SECRETARY TO GOVERNMENT


// TRUE COPY //



ANNEXURE — II 

Requirement o£ fzznds for sanction o£ Lumpsum advaace payable to Pollacg / Count:tzzg Personnel acd otbers drafted For election duty


Name of the District


Total No. of ACs


Requirement of funds for sanction of lumpsum advance payable to


Grand Total

Polling Personnel Counting Personnel

Others

(Rs.) (Rs) (Rs.) (Rs.)



ARCHANA PATNAIK

CHIEF ELECTORAL OFFICER &

PRINCIPAL SECRETARY TO GOVERNMENT


// TRUE COPY //



 ANNEXURE-III

Rates of Remuneration payable to Polling / Counting personnel and others drafted For election duty


Presiding Officer 500+500 500 500 500+500 3000

Polling Officer - I, II 400+400 400 400 500+500 2600

Office Assistant 350 350 500+500 1700

(Class.IV)

(Commissioning of EVMs, Dispatch of polling parties and poll materials on pre-poll day/ Poll dayJ

Counting Supervisor 500 - 500 500 1500

Counting Assistant 450 450 500 1400

Office Assistant 350 500 850

(Class.IV)

(Counting duty)

Micro Observer 2

Other categories


Category ‘Training Day (Rs.) Pre- poll day (Rs.) Poll/ Counting day (Rs./ Refreshment charges in lieu of packed lunch (Rs.) Total (Rs.)

Sector Magistrate/

Zonal Officer 1500

Asst. Zonal Officer 1000

Reception Officer ROO ROO 500+500 1800

Cashier / Asst.

Cashier 400 ROO 500+500 1800

VAO 400 400 500+500 1800

Village Assistant 350 350 500+500 1700

Instructors ROO 400 500+500 1800

Office Assistants 350 350 500+500 1700

Others 350 350 500+500 1700

ARCHANA PATNAIK

CHIEF ELECTORAL OFFICER & PRINCIPAL SECRETARY TO GOVERNMENT


// TRUE COPY //



TET தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்ச்சி மதிப்பெண் 40% ஆக குறைப்பு - புதிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் - TRB அறிவிப்பு

 

TET தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்ச்சி மதிப்பெண் 40% ஆக குறைப்பு - புதிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் - TRB பத்திரிகைச் செய்தி


தற்போது அரசாணை (நிலை) எண் : 46 பள்ளிக் கல்வித் (TRB) துறை நாள் : 25.02.2026 ல் மாற்றுத்திறனாளி (PWD Candidate) தேர்வர்களுக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 40% என அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இவ்வரசாணையில் ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை 6103/2025 வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கும் பொருந்தும் எனத் நாள்:11.08.2025ன் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே,தகுதி பெற்ற தேர்வர்கள் தங்களது தகுதிச் சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.gov.in) 28.02.2026 முற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.



>>>  TRB அறிவிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


BC , MBC / DNC பிரிவினருக்கு TETல் 40% மதிப்பெண்கள் நிர்ணயம் செய்ய வேண்டி மீண்டும் ஒரு வழக்கு

BC , MBC / DNC பிரிவினருக்கு TETல் 40% மதிப்பெண்கள் நிர்ணயம் செய்ய வேண்டி மீண்டும் ஒரு வழக்கு 


 BC , MBC / DNC பிரிவினருக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண்கள் நிர்ணயம் செய்ய வேண்டி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கு - 16.03.2026க்கு விசாரணை ஒத்திவைப்பு



G.O. (Ms) No : 41, Dated : 13-02-2026 - சத்துணவு மற்றும் அங்கன்வாடி அமைப்பாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உயர்வு - தமிழ்நாடு அரசு அரசாணை

 

சத்துணவு மற்றும்  அங்கன்வாடி அமைப்பாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உயர்வு - தமிழ்நாடு அரசு அரசாணை (நிலை) எண்: 41, நாள் : 13-02-2026 வெளியீடு


G.O. (Ms) No : 41, Dated : 13-02-2026 - Increase in pension and family pension for (nutritional food) Noon Meal and Anganwadi organizers and employees - Tamil Nadu Government Order issued



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


TET தகுதி மதிப்பெண் சார்ந்து TRB வெளியிட்டுள்ள பிற்சேர்க்கை அறிவிக்கைகள் (Addendums)

 

ஆசிரியர் தகுதி தேர்வு TET தகுதி மதிப்பெண் சார்ந்து TRB வெளியிட்டுள்ள பிற்சேர்க்கை அறிவிக்கைகள் (Addendums)



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


G.O.(Ms) No.46, Dated 25.02.2026 - ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்ச்சி, 40% சதவீதமாக குறைத்து அரசாணை வெளியீடு



அரசாணை (நிலை) எண் 46, நாள் 25.02.2026


ஆசிரியர் தகுதித் தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்ச்சி, 40% சதவீதமாக (60 மதிப்பெண்கள்) குறைத்து அரசாணை G.O.(MS) No.46, Dated 25.02.2026 வெளியீடு 


G.O(Ms)No.46 - Reduce Differently Abled Pass % in TET



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



நவம்பர் 2025 இல் நடைபெற்ற தேர்வுக்கும் இது பொருந்தும்.


Permission is hereby accorded to the Teachers Recruitment Board to follow the minimum qualifying marks fixed as above for the Teacher Eligibility Tests already conducted by the Teachers Recruitment Board, as per the Teachers Recruitment Board Notification No.3/25, dated 11.08.2025 and for the Notification No.1/26, dated 13.02.2026.



GOVERNMENT OF TAMILNADU 


ABSTRACT


School Education - Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) - Fixing of minimum qualifying marks for the category of Persons with Disability - Orders -Issued.


SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT


G.O.(MS) No.46


Dated 25.02.2026


திருவள்ளுவர் ஆண்டு 2057


விசுவாவசு வருடம், மாசி-13


Read:-


1. G.O(Ms) No.23, School Education (TRB) Department, dated 28.01.2026.


2. The Commissioner of Welfare of Differently Abled, Letter Rc.No.3163573/5/2022, Dated 09.02.2026


ORDER:-


In the Government order first read above, orders were issued, fixing the category-wise minimum qualifying marks for passing the Tamil Nadu Teacher Eligibility Test in accordance with the guidelines issued by the National Council for Teacher Education (NCTE) dated 11.02.2011 (Notification No. 76-4/2010/NCTE/Acad) as given below and permitting the Teachers Recruitment Board to follow the category-wise fixing of minimum qualifying marks for the Teacher Eligibility Tests already conducted as per the Teachers Recruitment Board Notification No. 3/25, dated 11.08.2025.


Category


Maximum Marks


Minimum Marks (%) to be obtained in


TNTET


Paper-I


Paper-II


General


150


60% or 90 Marks


60% or 90 Marks


BC, BC(M), MBC,


150


50% or 75 Marks


50% or 75 Marks


DNC/PWD


150


40% or 60 Marks


40% or 60 Marks


SC, SC(A), ST


2. In the letter second read above, the Commissioner of Welfare of Differently Abled has stated that in the States of Andhra Pradesh and Telangana, the minimum qualifying marks fixed for the differently abled candidates to pass the Teacher Eligibility Test is 40%, as prescribed for the category of Scheduled Castes /Scheduled Tribes and in the State of Odisha, the minimum qualifying mark of 50% fixed for the category of Scheduled Castes


2


/Scheduled Tribes has been fixed for the differently abled candidates. He has therefore requested the Government, to issue orders for fixing the minimum qualifying marks for Person with Disabilities candidates as fixed for the category of Scheduled Castes /Scheduled Tribes.


3. The Government, after careful examination of the proposal of the Commissioner of Welfare of Differently Abled have decided to accept the same and to fix the minimum qualifying marks as 40% for the category of Person with Disabilities to pass in the Tamil Nadu Teacher Eligibility Test (TNTET), in accordance with the guidelines issued by the National Council for Teacher Education (NCTE) dated 11.02.2011 (Notification No. 76-4/2010/NCTE/Acad) and order accordingly.


4. Permission is hereby accorded to the Teachers Recruitment Board to follow the minimum qualifying marks fixed as above for the Teacher Eligibility Tests already conducted by the Teachers Recruitment Board, as per the Teachers Recruitment Board Notification No.3/25, dated 11.08.2025 and for the Notification No. 1/26, dated 13.02.2026.


(BY ORDER OF THE GOVERNOR)


CHANDRA MOHAN.B


ADDITIONAL CHIEF SECRETARY TO GOVERNMENT


To


The Chairman, Teachers Recruitment Board, Chennai-600 006.


The Director of School Education, Chennai - 600 006.


The Director of Elementary Education, Chennai-600 006.


The Director of Private Schools, Chennai- 600 006.


The State Project Director, Sarva Shiksha Abhiyaan,


Chennai-600 006.


Commissioner of Welfare of Differently Abled, Chennai-600 005.


Copy to


The Personal Assistant to Hon'ble Chief Minister's Office, Chennai-600 009.


The Senior Personal Assistant to Hon'ble Minister for School Education, Chennai-600 009.


The Senior Private Secretary to Additional Chief Secretary to Government, School Education Department, Secretariat, Chennai-600 009.


The Private Secretary to Secretary to Government, Welfare of Differently Abled Persons Department, Secretariat, Chennai-600 009.


The Private Secretary to Secretary to Government, Adi Dravidar and Tribal Welfare Department, Secretariat, Chennnai-600 009.


The Private Secretary to Secretary to Government, Backward Classes, Most Backward Classes & Minorities Welfare Department, Secretariat, Chennnai-600 009


Stock File / Spare Copy.


//FORWARDED BY ORDER//


SECTION OFFICER


25.02.2026


TET - Service Certificate பெற விண்ணப்பிப்பவர்களுக்கான முகப்பு கடிதம் & Annexure 1 படிவம்


பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு TET - Service Certificate விண்ணப்பிப்பவர்களுக்கான முகப்பு கடிதம் (Covering Letter), Service Certificate Annexure 1 படிவம்


TET SERVICE CERTIFICATE WITH COVERING LETTER



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Process for update Uniform status



Process for update Uniform status


Uniform measurement - Noon Meal - YesNo status


UNIFORM MEASUREMENT - NOON MEAL - YES/NO STATUS MARKING - USER MANUAL



>>> Click Here to Download 



SCHOOL LOGIN :

HTTPS://EMIS.TNSCHOOLS.GOV.IN/SCHOOL/CLASSANDSECTION


STEP 1:

LOG IN TO THE SCHOOL PORTAL AND SELECT "CLASS AND SECTION GROUPING MODULE


STEP 2:

CHECK WHICH CLASS AND SECTION THE PARTICULAR CLASS TEACHER IS TAGGED TO. IF THE TEACHER IS NOT TAGGED, ENSURE THEY ARE ASSIGNED TO THE APPROPRIATE CLASS AND SECTION.


STEP 3:

LOG IN TO THE TNSED SCHOOLS APP USING THE RESPECTIVE CLASS TEACHER’S LOGIN CREDENTIALS.


STEP 4:

CLICK ON THE SCHEMES ICON IN THE TN SCHOOLS APP.


STEP 5:

CLICK ON THE RESPECTIVE CLASS AND THEN SELECT THE SECTION.


STEP 6:

PLEASE VERIFY THE SPECIFIC STUDENTS AND CHANGE THEIR STATUS TO YES. ONCE UPDATED, ONLY THOSE STUDENTS WILL BE DISPLAYED IN THE ICO LOGIN UNDER THE UNIFORM MEASUREMENT MODULE. 

AFTER MAKING THE CHANGES, CLICK THE SAVE BUTTON TO APPLY THEM.


STEP 7:

AFTER THE CHANGES ARE MADE IN THE SCHOOL LOGIN, THE UPDATED STUDENT LIST WILL BE REFLECTED IN THE ICO LOGIN IN 

TNEMIS:

HTTPS://TNEMIS.TNSCHOOLS.GOV.IN/COMPONENT/UNIFORM-MEASUREMENT-TRACK



EB Bill Report எடுக்க எளிமையான வழி

 


EB Bill Report எடுக்க எளிமையான வழி 


TNEB MOBILE APP ஐ install செய்து கொண்டு 

Link: https://play.google.com/store/apps/details?id=com.tneb.tangedco

Home Page ல

MY CONSUMER Option இருக்கும்.


 அதுல உங்க  service number ah ADD பண்ணுங்க...


 பிறகு உங்க SERVICE NUMBER ah SELECT செய்தால் 

MY CONSUMER PAGE க்குப் போகும்.


 அதுல MY USAGE OPTION ah SELECT செய்து தேவையான மாதத்திற்குரிய ரசீதுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...👍


Thank you all ... 🙏

Thank you so much ... 🙏❤️🙏


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-02-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-02-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 26.02.2026 

கிழமை:- வியாழன்



திருக்குறள்: 

குறள் 565:

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்ன துடைத்து.

விளக்க உரை:

எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.


பழமொழி :
Anything valued where it belongs.

எதுவும் இருக்கிற இடத்திலே இருந்தால் தான் மதிப்பு.


இரண்டொழுக்க பண்புகள் :.

1. உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர்.

2.எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.


பொன்மொழி :

நாம் துன்பப்படுவது நமது செயல்களின் காரணமாகத்தான் . அதற்கு கடவுள் பொறுப்பல்ல - சுவாமி விவேகானந்தர்


பொது அறிவு :

01.இந்தியாவில் முழுமையாக குளிர்சாதன வசதி செய்யப்பட்ட முதல் ரயில் எது?

ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ்
Howrah Rajdhani Express

02.தமிழ்நாட்டின் மிக உயரமான மலை சிகரம் எது,?

தொட்டபெட்டா -Doddabetta


English words :

rapple -struggle

Contronym - a word with opposite meaning


தமிழ் இலக்கணம்:

"இரண்டு மூன்று நாளில் எல்லாம் சரியாகி விடும்"

மருத்துவமனையில் இருப்பவரை பார்க்க செல்லும் போது இப்படி சொல்வது உண்டு. இது சரியானதா?

இரண்டு மூன்று என்று ஏறு வரிசையில் சொல்லும் போது இன்னும் நிறைய நாட்கள் ஆகலாம் என்று பொருள் வந்து விடும்.

பிறகு எது சரியான சொற்றொடர்?

இரண்டொரு நாளில் சரியாகி விடும்.

என்பதே சரி. இதில் இறங்கு வரிசையில் சொல்வதால் விரைவில் குணமாகி விடும் என்று பொருள் படும்.
அறிவியல் களஞ்சியம் :

சந்திரன் பூமிக்கு மிக அருகில் இருந்ததால், அதன் தாக்கத்தால், பூமியிலிருந்து கோண உந்தத்தை மாற்றி, அதன் சுழற்சியை மெதுவாக்கும் வலுவான அலைகளை ஏற்படுத்தியது. தற்போதைய 24 மணி நேர நாள் என்பது பூமியின் 4.5 பில்லியன் ஆண்டு வரலாற்றில் ஒப்பீட்டளவில் சமீபத்திய வளர்ச்சியாகும்.


நீதிக்கதை

நொண்டி குதிரை

காட்டில் அடர்ந்த புல்வெளியில் ஏராளமான குதிரைகள் வசித்து வந்தன. அந்தக் குதிரைகளின் கூட்டத்தில் நொண்டிக் குதிரை ஒன்றும் இருந்தது. மற்றக் குதிரைகள் எல்லாம் அந்த நொண்டிக் குதிரையை மட்டமாகவே நினைத்தன. எல்லாக் குதிரைகளும் அந்தப் புல்வெளியில் ஓடியாடி விளையாடுகின்ற நேரத்தில் அந்த நொண்டிக் குதிரையானது அமைதியுடன் ஒரிடத்தில் படுத்திருக்கும். அதனால், மற்ற குதிரைகள் எல்லாம் அதனை சோம்பேறி என்று கேலி செய்தன.

நண்பர்கள் எல்லாம் தன்னைக் கேலி செய்கிறார்களே என்று நொண்டிக் குதிரைக்கு சற்று வருத்தமாகயிருந்தது. நண்பர்கள் எல்லாம் அறியாமையின் காரணமாக இப்படிக் கேலி செய்கின்றனர். அதனால் நாம் அவர்களின் மீது கோபப்படுவது நல்லதல்ல... என்று முடிவு செய்தது அந்த நொண்டிக் குதிரை. ஒருநாள் சிங்கம் ஒன்று அந்தப் புல்தரையில் பக்கமாக வந்தது. அந்த இடத்தில் ஏராளமான குதிரைகள் புற்களை மேய்ந்தபடி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தது.

புல்தரையின் ஓர் ஓரத்தில் படுத்திருந்த நொண்டிக் குதிரை, சிங்கத்தை கவனித்து விட்டது. இந்தச் சிங்கம் நம்மையும், நம் நண்பர்களையும் கவனித்து விட்டது. நிச்சயமாக இதனால் நமக்கு ஆபத்து நேரிடும். உடனடியாக இதனைப்பற்றி நம் நண்பர்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று நினைத்தது அந்தக் குதிரை.

நண்பர்களே, சற்று நேரத்திற்கு முன்னர் சிங்கராஜா மறைந்திருந்து நம்மையெல்லாம் கவனித்துச் சென்றுவிட்டார். இன்னும் ஓரிரு நாட்களில் அவரால் நமக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள, உடனடியாக இந்த புல்வெளியினை விட்டு வேறு இடத்திற்குச் சென்றுவிட வேண்டும், என்றது.

நொண்டிக் குதிரையின் பேச்சைக்கேட்ட மற்ற குதிரைகள் எல்லாம் சிரித்தன. நொண்டிக் குதிரையின் வார்த்தைகளை மற்ற குதிரைகள் சிறிதும் பொருட்படுத்தவில்லை. சிங்க ராஜாவின் பிடியில் இருந்து எப்படியாவது நண்பர்களை காப்பாற்ற வேண்டும். எப்படி காப்பாற்றுவது என்று யோசித்தது. திடீரென அதன் மனதில் ஓர் எண்ணம் தோன்றியது. அதன்படி அந்தக் குதிரையானது சிங்கத்தைத் தேடிச் சென்றது. தன் எதிரே தைரியத்துடன் ஒரு குதிரை நொண்டியபடி வருவதை, வியப்போடு பார்த்தது சிங்கம்.

சிங்க ராஜாவே, வணக்கம். என் வருகை உங்களுக்கு வியப்பினை ஏற்படுத்தலாம். இருந்தாலும் உங்களுக்கு சந்தோஷமான செய்தி சொல்லவே வந்துள்ளேன். என்னை நம்புங்கள், என்று பணிவோடு கூறியது குதிரை. சிங்க ராஜா! குதிரையைப் பார்த்து, என்னை எதற்காக சந்திக்க வந்திருக்கிறாய் என்று கேட்டது? அதற்கு நொண்டிக் குதிரை, சிங்க ராஜாவே, ஒருநாள் நானும் என் நண்பர்களும் புல்தரையில் நின்றபோது மறைந்திருந்து நீங்கள் எங்களை கவனித்து விட்டீர்கள். தங்கள் மூலம் என் நண்பர்களுக்கு ஆபத்து ஏற்படப் போகிறது என்பதை உணர்ந்தேன். அதனால் தான் அதனைத் தடுக்க வேண்டி ஓடோடி வந்தேன்.

சிங்க ராஜாவே! நான் என் நண்பர்களை, என் உயிரை விட மேலாக மதித்து வருகிறேன். ஆகையால் என் நண்பர்களை காப்பாற்ற நானே என் உயிரைக் கொடுத்து உங்களுக்கு விருந்தாக வந்துள்ளேன். நீங்கள் என்னைச் சாப்பிடுங்கள். என் நண்பர்களை விட்டு விடுங்கள் என்று கெஞ்சிக் கேட்டது நொண்டிக் குதிரை. தன் நண்பர்களுக்காக இந்த அளவுக்கு கெஞ்சும் நொண்டிக் குதிரையைக் கண்டு சிங்கத்தின் மனம் மேலும் இளகியது. உன்னுடைய உயர்ந்த குணத்தைப் பற்றி அவர்களுக்கு எடுத்துரைக்கிறேன் என்று கூறி குதிரையை தன்னுடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டது சிங்கம்.

நொண்டிக் குதிரை சிங்கத்தோடு வருவதைக் கண்டதும் எல்லாக் குதிரைகளும் திடுக்கிட்டன. உடனே சிங்கம், நீங்கள் யாரும் என்னைக் கண்டு பயப்பட வேண்டாம். நான் உங்களை ஒன்றும் செய்ய மாட்டேன். நான் உங்களின் நண்பனான நொண்டிக் குதிரையை நீங்கள் இவ்வளவு நாட்களாக உங்களில் ஒருவனாக எண்ணாமல் அதன் மனத்தை புண்படுத்தி வந்தீர்கள்.

ஆனால், உங்கள் நண்பனான இவனோ, என்னால் உங்களுக்கு வரப்போகின்ற ஆபத்தைத் தடுத்து, உங்களுக்காக எனக்கு விருந்தாக உணவளிக்க வந்தது. இவ்வளவு நல்ல குணங்களைக் கொண்ட இந்த குதிரையின் மனதை இவ்வளவு நாட்களாகப் புண்படுத்தி வந்துள்ளீர்கள். இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் என்றது சிங்கம். சிங்கத்தின் பேச்சைக் கேட்டதும் எல்லா குதிரைகளும் தலை குனிந்தன. அன்போடு அந்த நொண்டிக் குதிரையினை சூழ்ந்து கொண்டன. அதனைக் கண்டு சிங்கமும் மகிழ்ச்சியடைந்தது.

நண்பா, உனக்கு கால்தான் ஊனம். ஆனால், எங்களுக்கோ மனமே ஊனமாகி விட்டது. உன் நல்ல குணத்தைப் புரிந்து கொண்டோம். குதிரைகள் அனைத்தும் நொண்டி குதிரையிடம் எங்களை மன்னித்து விடு என்று மன்னிப்பு கேட்டன. குதிரைகள் அனைத்தும் நொண்டிக் குதிரையை புரிந்து கொண்டதைப் பார்த்து சிங்கம் மிகவும் மகிழ்ச்சியடைந்தது.


இன்றைய செய்திகள்

26.02.2026

⭐ தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடியாக உள்ளது.SIR ல் விடுபட்ட சுமார் 29 லட்சம் பேர் தங்களது பெயரை மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைத்துள்ளனர்.

⭐ கன்னியாகுமரியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா - முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

⭐தமிழக போலீஸ் துறையில் புதிய மென்பொருள் - முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்.

⭐இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்; அவருக்கு வயது 101. தோழர் நல்லக்கண்ணுவின் உடல் அவரது விருப்பப்படியே  மாணவர்களின் கல்விக்காக சென்னை மருத்துவ கல்லூரிக்கு தானமாக ஒப்படைக்கப்படுகிறது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்தத் தொடரின் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இந்த நிலையில், இன்று (பிப். 26) நடைபெறும் சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் இந்திய அணி ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது.


Today's Headlines

⭐ Tamil Nadu's total voters are 5.67 crore. About 29 lakh people who were left out of the SIR have re-registered their names.

⭐ Mini Tidal Park in Kanyakumari at an estimated cost of Rs. 30 crore - Chief Minister laid the foundation stone.

⭐ New software in the Tamil Nadu Police Department - Chief Minister to launch today.

⭐ Senior leader of the Communist Party of India, Nallakannu, passes away; He was 101 years old. Comrade Nallakannu's body is being donated to the Chennai Medical College for the education of students as per his wishes.

🏀 Sports News

🏀 The T20 World Cup cricket series is being held in India and Sri Lanka. The Super 8 round matches of this series have reached a thrilling stage. In this situation, the Indian team will face the Zimbabwe team in a Super 8 round match today (Feb. 26).


Foundational Learning Study (2025-26) மாதிரி வினாத்தாட்கள் - இயக்குநரின் செயல்முறைகள்



FLS - Foundation Leaning Study - 3rd Standard Tamil and English Sample Questions


Foundational Learning Study (2025-26) Model Question Paper - DSE Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6.


ந.க.எண்:2066/ எப் 1/2026, நாள்:10.02.2026


பொருள்:


தொடக்கக் கல்வி 3ம் வகுப்பு மாணவர்களுக்கு Foundational Learning Study (2025-26) மாதிரி வினாத்தாட்கள் வழங்குதல் மற்றும் பயிற்சி அளித்தல் தொடர்பாக.


பார்வை


சென்னை-06 மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடிதம் ந.க.எண் 2133192-ஜி3/2025 நாள் : 02.02.2026.


பார்வையில் காணும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடிதத்தில் 2026 பிப்ரவரி/ மார்ச் மாதத்தில் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு Foundational Learning Study (2025-26) தொடர்பான தமிழ், ஆங்கிலம் மற்றும் உருது ஆகிய மொழிகளுக்கான NCERTயால் தயாரிக்கப்பட்ட மாதிரி வினாத்தாட்கள் கள அளவில் சோதனைகள் மேற்கொள்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது.


இம்மாதிரி வினாத்தாட்களை அனைத்துப் பள்ளிகளுக்கு அனுப்பிடவும் 3ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை ஆசிரியர்கள் மூலம் வழங்கிடவும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக அனைத்துப் பள்ளித் தலைமயாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.


இணைப்பு-


1. தமிழ் மாதிரி வினாத்தாள்


2. ஆங்கில மாதிரி வினாத்தாள்


3. உருது மாதிரி வினாத்தாள்



தொடக்கக் கல்வி இயக்குநருக்காக

10-02-26


பெறுநர்

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி)

மின்னஞ்சல் மூலமாக.


3 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 8 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிடமாற்றம் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

 

3 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 8 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிடமாற்றம் - தமிழ்நாடு அரசு அரசாணை எண் : 630, நாள் : 24-02-2026 வெளியீடு


8 I.A.S. Officers including 3 District Collectors Transfer - Tamil Nadu Government G.O. No.: 630, Dated: 24-02-2026 Released


டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த சண்முகசுந்தரம் மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமனம்


செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கரூர் மாவட்டங்களின் ஆட்சியர்கள் மாற்றம்


8 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


March 2026 மாதத்தில் 3 நாட்கள் வரையறுக்கப்பட்ட விடுப்புகள் (RL / RH)

 


RL Holidays


மார்ச் 2026 மாதத்தில் மூன்று நாட்கள் வரையறுக்கப்பட்ட விடுப்புகள் (RL&RH)  உள்ளன

Restricted Holidays in March 2026

💢💢💢💢💢💢💢💢


📍(02.03.2026) *திங்கள்*

- மாசிமகம்


📍04.03.2026) *புதன்கிழமை*

- பகவான் வைகுண்டசாமி அவதாரதினம்


📍(16-03-2026) *திங்கள்*

- ஷபேகாதர்




பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-02-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-02-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 25.02.2026 

கிழமை:- புதன்



திருக்குறள்: 

அதிகாரம் 57 – வெருவந்த செய்யாமை

குறள் 561:

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங் கொறுப்பது வேந்து.

விளக்க உரை:

செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்.


பழமொழி :
Laughter is the best medicine.

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.


இரண்டொழுக்க பண்புகள் :.

1. உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர்.

2.எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.


பொன்மொழி :

தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இந்த மூன்று நற்குணங்களுடன் அன்பும் சேர்ந்து விட்டால் உலகமே சொர்க்கமயமாகிவிடும்       

விவேகானந்தர்


பொது அறிவு :

01.ரவீந்திரநாத் தாகூரின் முதல் கவிதை நூல்  எது?

சந்தியா சங்கீத்' (Sandhya Sangit - மாலைக்கால கவிதைகள்)

02."சிலம்புச் செல்வர்"என்று அழைக்கப்படும் தமிழறிஞர் யார்?

ம.பொ. சிவஞானம் (மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்)
Mylai Ponnuswamy Sivagnanam.


English words :

Terminate –to end, முடிவுறுதல், முடிவுறச் செய்தல்

culminate –to reach a final result.

இறுதி முடிவை எட்டுதல்


தமிழ் இலக்கணம்:

நர்/ னர்
எந்த விகுதி எந்த வார்த்தையின் பின் வரும் என்பதை இன்று பார்க்கப் போகிறோம்.
கட்டளை சொல்லின் பின்னால்
நர் வரும். மற்ற சொற்களின் பின்னால் னர் வரும்

* அனுப்பு (கட்டளை) = அனுப்புநர்

* பெறு (கட்டளை) = பெறுநர்


* அளித்த (கட்டளை இல்லை) = அளித்தனர்

* பேசி (கட்டளை இல்லை) = பேசினர்



அறிவியல் களஞ்சியம் :

துவக்கத்தில் பூமியின் விரைவான சுழற்சியால் ஒரு நாள் = 6 மணி நேரம் இருப்பினும் சில மதிப்பீடுகள் சந்திரனை உருவாக்கிய மாபெரும் மோதலுக்குப் பிறகு உடனடியாக 4 மணி நேரம் வரை குறுகியதாக இருந்தது. ஒரு நாளின் நீளம் காலப்போக்கில் அதிகரித்து, சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் என்பது, சுமார் 12 மணி நேரத்தையும், சுமார் 1 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு 19 மணி நேரத்தையும் எட்டியது.


நீதிக்கதை

தேவதை கொடுத்த பரிசு

ஒரு கிராமத்தில் இரண்டு மீனவர்கள் நண்பர்களாக இருந்தனர். ஒரு நண்பரின் பெயர் மதன். மற்றவன் பெயர் குணா. இருவரும் தினமும் காலை நேரத்தில் கட்டு மரத்தில் ஏறி, மீன் பிடிக்கச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

ஒருநாள் காலை நேரத்தில் இருவரும் வழக்கம் போல் மீன் பிடிக்கச் சென்றனர். அன்றைய தினம் மாலை நேரம் ஆகியும் கூட இருவர் வலையிலும் போதுமான மீன்கள் சிக்கவில்லை. மிகக் குறைந்த அளவிலேயே மீன்கள் மாட்டின. கரையை அடைந்த இருவரும் தங்களுக்குக் கிடைத்த மீனைப் பங்கிட்டுப் பார்த்தனர்.

நண்பனே! இந்த மீன்களை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் நம் இருவர் குடும்பத்திற்கும் போதிய உணவுப்பொருட்களை வாங்கிச் சமைப்பது கடினம். அதனால், மீன் விற்றுக் கிடைக்கும் பணத்தினை நம்மில் ஒருவரே எடுத்துக் கொள்ளலாம் என்றான் குணா.

அப்படியானால் நீயே எடுத்துக்கொள். நீதான் மனைவி, மக்களோடு இருக்கிறாய். உன் குடும்பத்தை வறுமையில் வாடவிடாதே. நீயே எடுத்துக்கொள் என்றான் மதன். இல்லை நண்பனே. உன் குடும்பத்தில் இரண்டு நபர்கள் அதிகமாக இருக்கின்றனர். அதனால் நீதான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றான் குணா.

இல்லை நண்பனே, இல்லை கண்டிப்பாக நீதான் எடுத்துக் கொள்ள வேண்டும். உன் குடும்பத்தை வறுமையில் தவிக்க நான் என்றுமே விடமாட்டேன், என்று அழுத்தமாகக் கூறினான் மதன். ஒருவரையொருவர் இவ்வாறு விட்டுக்கொடுக்காமல், தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் திடீரென சத்தம் கேட்டது. இருவரும் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தனர். அங்கே கடற்கரையில் ஓர் அழகிய பெண் நடந்து வந்து கொண்டிருந்தாள்.

அந்தப் பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் இருவரும் திகைப்புடன் வாயடைத்துப் போயினர். அந்தப் பெண் தேவதை போன்று காட்சி தந்தாள். அந்தப் பெண்ணின் முகத்தை இருவரும் உற்றுப் பார்த்தனர். மீனவர்களே, என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்! நான்தான் இந்தக் கடலில் வசிக்கிற கடல் தேவதை. நீங்கள் இருவரும் ஏதோ வழக்கு நடத்திக் கொண்டிருப்பது போன்று தெரிகிறது. அது என்னவென்று அறிந்துகொள்ள வேண்டியே உங்கள் அருகில் வந்தேன், என்றாள் கடல் தேவதை.

தேவதையே! உன்னை சந்தித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் இருவரும் பிடிக்கிற மீன்களை பங்கு போட்டுக் கொள்வோம். இப்போது எங்களுக்குக் குறைந்த அளவே மீன்கள் கிடைத்துள்ளன. என் குடும்பம் வறுமையில் வாடும், அதனால் மீன்களை எடுத்துக்கொள் என்கிறான் என் நண்பன்.

என் குடும்பத்தைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், அவன் குடும்பம் வறுமையில் வாடக்கூடாது என்பதற்காகத்தான் எல்லா மீன்களையும் விற்று கிடைக்கிற பணத்தை என் நண்பன் எடுத்துக்கொள்ளட்டும் என்று சொல்கிறேன். என் நண்பனோ, அதனை மறுத்து என்னை எடுத்துக்கொள்ளும்படியாகச் சொல்கிறான். நீயே அவனுக்கு எடுத்துக் கூறி அவன் குடும்பத்தை வறுமையில் இருந்து காப்பாற்று! என்றான் குணா.

கடல் தேவதையோ சிரித்தபடியே இருவரையும் நோக்கியது. நீங்கள் இருவரும் ஒற்றுமையுடன் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் உங்கள் குடும்ப நலன் கருதியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் குடும்பத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பும், உங்கள் நல்லெண்ணமும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அதனால் உங்கள் இருவருக்கும் உதவி புரியவே வந்துள்ளேன் என்றது கடல் தேவதை.

பிறகு, மதன் முன்பும், குணா முன்பும் இரண்டு மூட்டைகள் தோன்றின. கடல் தேவதையும் அங்கிருந்து மறைந்தாள். இருவரும் அந்த மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அந்த மூட்டைகளில் நிறையப் பொற்காசுகள் காணப்பட்டன. இருவருமே அதனை தங்கள் ஒற்றுமைக்குக் கிடைத்த பரிசாகவே நினைத்துக் கொண்டனர். அதைக் கொண்டு பெரிய பணக்காரர்கள் ஆனார்கள்.


இன்றைய செய்திகள்

25.02.2026

⭐திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயில் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

⭐இனி கேரளா அல்ல 'கேரளம்'... பெயர் மாற்றத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

⭐தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

⭐தமிழ்நாட்டில் சுட்டெரிக்க தொடங்கிய வெயில்-அதிகபட்சமாக ஈரோட்டில் 100 டிகிரி பதிவு

⭐உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், மாஸ்கோவின் 4 விமான நிலையங்களையும் மூடுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக்கோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக  இந்திய அணி தோல்வியடைந்தபோதும் இந்திய வீரர் வருண் சக்ரவர்த்தி சாதனை படைத்திருக்கிறார்.இவர் ஐ.சி.சி. பந்து வீச்சுக்கான தர வரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்து உள்ளார்.


Today's Headlines

⭐ The Chief Minister inaugurated the silver jubilee entrance gate of the Thiruvalluvar statue.

⭐ No longer “Kerala” but “Keralam”… The Union Cabinet has approved the name change of Kerala!

⭐ The Election Commission of India has released the final electoral roll for Tamil Nadu.

⭐ The heat has started scorching in Tamil Nadu – the highest temperature of 100 degrees was recorded in Erode.

⭐ Due to the war between Ukraine and Russia intensifying again, Russia has announced the closure of four airports in Moscow.

🏀 Sports News

🏀 Although the Indian national cricket team lost to the South African national cricket team in the T20 World Cup match, Indian player Varun Chakravarthy has created a record. He has secured the number one position in the ICC bowlers' ranking.

THIRAN - பிப்ரவரி மாத மதிப்பீடு சார்ந்த தகவல்கள்

  

 

திறன் - பிப்ரவரி மாத மதிப்பீடு சார்ந்த தகவல்கள் :


THIRAN - February assessment information


Dear team, 


* Class 6 - 9, Feb monthly assessment THIRAN Tamil QPs are available for download now


Please inform the schools to download the question paper.


-  பிப்ரவரிமாத திறன் மதிப்பீடு 25.02.2026 (புதன் கிழமை) முதல் 27.02.2026 (வெள்ளி கிழமை) வரை தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களுக்கு நடைபெறவுள்ளது. 


- அதற்கான வினாத்தாள், exam.tnschools.gov.in என்ற இணையத்தளத்தில் 24.02.2026 முதல் பதிவிறக்கம் செய்ய கிடைக்கும். 


- அனைத்து திறன் மாணவர்களும் இந்த மாதாந்திர மதிப்பீட்டில் பங்குபெற வேண்டும். 


- அதிகமான கேள்விகள் BLO பிரிவில், பாடம் 01 முதல் 15 வரையில் இருந்து கேட்கப்பட வாய்ப்புள்ளது. 


- 25.02.2026 முதல் 07.03.2026 வரை EMIS -இல் மதிப்பெண் உள்ளீடு (Mark Entry) செய்ய இயலும்.


THIRAN – January assessment mark entry is now open

 

  

 

Dear team,


The THIRAN – January assessment mark entry is now open. 


It will be available until 04.02.2026. Please inform the schools to complete the mark entry within the given timeline.



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-02-2026

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-02-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 24.02.2026 

கிழமை:- செவ்வாய்



திருக்குறள்: 

குறள் 215:

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.   

விளக்க உரை:

ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.


பழமொழி :
Pride goes before a fall.

அகம்பாவம் அழிவை தரும்.


இரண்டொழுக்க பண்புகள் :.

1. உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர்.

2.எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.


பொன்மொழி :

நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல் . நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகி விடும் .- சுவாமி விவேகானந்தர்


பொது அறிவு :

01.அடால்ஃப் ஹிட்லர்  பிறந்த நாடு எது?

ஆஸ்திரியா-Austria

02.தமிழ்நாட்டின் முதல் கல் கோவில் (குடைவரைக் கோவில்) எது?

திருமூர்த்தி கோவில் , மண்டகப்பட்டு -விழுப்புரம்

Tirumurti Temple Mandagapattu

Villuppuram


English words :

bountiful –abundant. அபரிதமான அளவு

bonanza –a situation which creates a great profit

செல்வச்செழிப்பு


தமிழ் இலக்கணம்:

விலங்குகளின் சரியான ஒலிக்கான வார்த்தை
ஆந்தை –அலறும்
யானை –பிளிரும்
மயில் –அகவும்
குயில் –கூவும்
புலி  –உறுமும்
சிங்கம் –கர்ச்சிக்கும்

அறிவியல் களஞ்சியம் :

பூமி உருவானபோது ஒரு நாளின் நேரம்(6 மணி): பூமி சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானபோது, ​​ஒரு நாள் என்பது  சுமார் 6 மணி நேரம் மட்டுமே. சந்திரன் மிக நெருக்கமாக இருந்ததாலும், வேகமான கோளின் சுழற்சியாலும், பூமி இன்று இருப்பதைவிட கணிசமாக வேகமாகச் சுழன்றது. பில்லியன்கணக்கான ஆண்டுகளில், சந்திரனில் இருந்து வரும் அலை சக்திகள் படிப்படியாக இந்த சுழற்சியைக் குறைத்தன


பிப்ரவரி 24

ஸ்டீவ் ஜொப்ஸ் அவர்களின் பிறந்தநாள்

ஸ்டீவ் ஜொப்ஸ் (தமிழக வழக்கு: ஸ்டீவ் ஜாப்ஸ்) (Steve Jobs, பிறப்பு பெப்ரவரி 24, 1955- அக்டோபர் 5, 2011) ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் தலைமை ஆட்சியரும், கணினித் துறையின் குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமையாளரும் ஆவார். இவர் 1985 ஆம் ஆண்டில், அமெரிக்க நாட்டரசு, அவர்களின் குடியரசுத் தலைவரால் வழங்கிப் பெருமை செய்யும் அந்நாட்டின் தலையாய பரிசாகிய தொழில்நுட்பத்துக்கும் புதுமையாக்கத்துக்குமான பதக்கத்தை வென்றார்.

ஸ்டீவ் ஜொப்ஸ், 1976 இல் ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர். இவர் பிக்ஃசார் அசைபட நிறுவனத்தின் (Pixar Animation Studios) தலைமை ஆட்சியராகவும், வால்ட் டிசினி (Walt Disney) போன்ற பல நிறுவனங்களின் ஆட்சிப் பேராய இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்தார். ஆகத்து 24, 2011 அன்று உடல்நிலை காரணமாக தலைவர் பதவியிலிருந்து விலகினார். இவரையடுத்து டிம் குக் பொறுப்பேற்றார். 2011 ஆம் ஆண்டு அக்டோபர்  06 ஆம் திங்கள்  அதிகாலை ஸ்டீவ் ஜொப்ஸ்  உயிரிழந்தார்.


நீதிக்கதை

பழைய நிலைமையை மறந்து விடாதே!

முன்னொரு காலத்தில், ஒரு நாட்டை ஆண்ட அரசரிடம் விவேகமிக்க மந்திரி ஒருவர் இருந்தார். அவர் பெயர் தனயன். அரசர், எங்கு சென்றாலும், தனயனை அழைத்துச் செல்வார். தனயனின் ஆலோசனைப்படியே அனைத்தையும் செய்வார்.

இதனால், மந்திரி தனயனின் புகழ், நாடு முழுவதும் பரவியது. இதைக்கண்ட சிலர், மந்திரி மீது பொறாமை கொண்டனர். தனயன் எங்கு சென்றாலும், தன்னுடன் ஒரு பெட்டியை எடுத்துச் செல்வது வழக்கம். பொறாமைக்காரர்கள் இதை வைத்தே அரசனிடம் கோள் மூட்ட எண்ணினர்.

அரசே, மந்திரி நல்லவர் போல் நடித்து, நம்மை ஏமாற்றுகிறார். அரண்மனையில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் அபகரித்து தன் பெட்டியில் வைத்துள்ளார். வேண்டுமானால் அதைச் சோதனை செய்து பாருங்கள் என்றனர்.

அரசனுக்கும், சிறிது சந்தேகம் ஏற்பட்டது. ஒருநாள் வேட்டைக்குப் போகும்போது, மந்திரி வழக்கம் போல் பெட்டியை தன்னோடு எடுத்து வந்தார். பெட்டியில் என்ன? என்று கேட்டார் அரசர். உடனே மந்திரி, பெட்டியைத் திறந்து காட்டினார், ஆடு மாடு மேய்ப்பவன் உடுத்தும் கந்தல் துணி இருந்தது.

இதெல்லாம் என்ன? என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் அரசர். அரசே! ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, என் புத்திக்கூர்மையை பார்த்து, என்னை மந்திரி ஆக்கினீர்கள். இவ்வளவு உயர் பதவி கிடைத்தால், சிலர் பழைய நிலைமையை மறந்து விடுவர். எனக்கு அப்படியிருக்க மனம் வரவில்லை. பழைய நிலைமையை சுமந்தபடியே, மந்திரி பதவியில் இருக்க விரும்புகிறேன். அதனால் தான், இப்பெட்டியை எந்நேரமும் என்னுடன் வைத்திருக்கிறேன் என்றார் மந்திரி.

மந்திரியை பெரிதும் பாராட்டியதோடு, பொறாமைக்காரர்களுக்கு தக்க தண்டனையும் கொடுத்தார் அரசர். மந்திரிக்கு பல பரிசுகள் கொடுத்து கௌரவித்தார். பொறாமைக்காரர்கள், தாங்கள் செய்த சூழ்ச்சியே, தங்களது வீழ்ச்சிக்கு காரணமானதை எண்ணி வருந்தினர்.

நீதி : கேடு நினைப்பவன் கெடுவான்.


இன்றைய செய்திகள்

24.02.2026

⭐தமிழகத்தில் பனிப்பொழிவு தொடர்ந்து வரும் நிலையில், நிமோனியா எனப்படும் நுரையீரல் தொற்று பரவல் அதிகரித்து உள்ளது.

⭐ ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் பெஹ்சுத் மாவட்டத்தில் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேர் பலியாகி உள்ளனர்.

⭐ஈரானை விட்டு வெளியேறுங்கள்.
இந்தியர்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.


Today's Headlines

⭐ As cold weather continues in Tamil Nadu, the spread of the lung infection called pneumonia has increased.

⭐ In Afghanistan, 17 members of the same family were killed in an attack carried out by Pakistani warplanes in the Behsood district.

⭐ “Leave Iran.” The central government has strongly urged Indians.

🏀 Sports News

🏀 In the Super 8 round of the T20 World Cup series, the Indian team faced the South African team yesterday. In this match, the Indian team lost by a margin of 76 runs.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ECINET செயலியில் தாங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி குறித்த தகவல் வெளியாகியுள்ளது

Presiding Officers கவனத்திற்கு... தற்போது ECINET செயலியில் தாங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி எண் உள்ளிட்ட விவரங்களை காட்டுகிறது. ஒரு சில ம...