பிளஸ் 2 உடனடித் தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவியருக்கு, 10ம் தேதி முதல், அந்தந்த தேர்வு மையங்களிலேயே மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.
பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவுகள் 3ம் தேதி பிற்பகல் (இன்று), தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வர்கள், 10ம் தேதி முதல், ஞாயிற்றுக்கிழமை தவிர, இதர நாட்களில், தேர்வெழுதிய மையங்களுக்குச் சென்று, மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம்.
தத்கால் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, தேர்வெழுதியவர்களுக்கு, அவர்களின் வீட்டு முகவரிக்கு சான்றிதழ் அனுப்பப்படும். விடைத்தாள் நகல், மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு, செப்டம்பர், அக்டோபர் தனித்தேர்வு ஆகியவை குறித்த அறிவிப்புகள், விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.