கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்பு: நாளை 2ம் கட்ட கலந்தாய்வு

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., பட்டப் படிப்புகளில் காலியாக உள்ள, 243 இடங்களுக்கு, இரண்டாம் கட்டக் கலந்தாய்வு, நாளை துவங்குகிறது.
தமிழகத்தில் உள்ள, 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 1,823 எம்.பி.பி.எஸ்., இடங்களும், அரசு பல் மருத்துவக் கல்லூரியில், 100 பி.டி.எஸ்., இடங்களும் காலியாக உள்ளன. இவற்றில், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு, 15 சதவீத இடங்கள் போக, மீதமுள்ள இடங்களை நிரப்புவதற்கான முதல்கட்ட கலந்தாய்வு, கடந்த ஜூலையில் நடந்தது.
தற்போது, அகில இந்திய ஒதுக்கீட்டில், எம்.பி.பி.எஸ்., படிப்பில், 39 இடங்கள், பி.டி.எஸ்., படிப்பில், 19 இடங்களும், நிரப்பப்படாமல் திரும்பத் தரப்பட்டுள்ளன.
முதல்கட்ட கலந்தாய்வில் ஒதுக்கீடு பெற்று கல்லூரிகளில், மாணவர்கள் சேராதது உள்ளிட்ட காரணங்களால், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டில், 79 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 106 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., பட்டப் படிப்புகளில், மொத்தம் காலியாக உள்ள, 243 இடங்களை நிரப்ப, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி கலையரங்கில், நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது.
இதுகுறித்து, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைத் தேர்வுக் குழு செயலர் சுகுமார் கூறும்போது, "இதில் பங்கேற்க, விண்ணப்பதாரர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்படாது. www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள காத்திருப்போர் பட்டியலின்படி, தகுதியானோர், கலந்தாய்வில் பங்கேற்கலாம். கலந்தாய்வுக் கட்டணம், சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்கள் உள்ளிட்ட விவரங்களையும் இணையதளத்தில் பெறலாம் என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Manarkeni App Download - DEE Proceedings - Key Considerations

  மணற்கேணி செயலி பதிறக்கம் செய்தல் - இயக்குநரின் செயல்முறைகள் - முக்கியக் கருததுகள் Manarkeni App Download - DEE Proceedings - Important Thi...