இந்தியாவின் பெரும்பாலான பகுதி கிராமங்கள் தான். இங்கு வாழும்
பெண்களின் வாழ்க்கைத் தரம் பின்தங்கிய நிலையில் உள்ளது. இவர்களின் பிரதான
தொழில் விவசாயம். கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் என பல வழிகளிலும்
நகர்ப்புற பெண்களுக்கு கிடைக்கும் வசதிகள், கிராமப்புற பெண்களுக்கு
கிடைப்பதில்லை. இவர்கள் வீட்டு வேலைகளை மட்டுமல்லாமல், விவசாயம், மீன்
பிடித்தல், மேய்ச்சல் உள்ளிட்ட தொழில்களையும் செய்கின்றனர். இதில்
பல்வேறு சிரமங்கள் இருந்தாலும், இவர்களது பணி தொடர்கிறது. கிராமப்பற
குடும்பங்களில், பெண்களின் வருமானமும் முக்கிய தேவையாக உள்ளது. உலகின்
வளர்ச்சிக்கு, கிராமப்புற பெண்களின் பங்களிப்பை மறுக்க முடியாது. இவர்களை
அங்கீகரிக்கும் விதத்திலும், உரிய வசதிகள் செய்து தர வலியுறுத்தியும்
அக்.,15ம் தேதி, சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
விவசாயம் அதிகம்
உலக
உணவு உற்பத்தியில் கிராமப்புற பெண்களின் பங்கு தான் அதிகம். காய்கறிகள்,
பழங்கள், தானியங்கள், பூக்கள் உள்ளிட்ட விவசாயத் துறையின் முதுகெலும்பாக
இவர்கள் திகழ்கின்றனர். உலகளவில் பெண்களின் வேலைவாய்ப்பில், மூன்றாவது
இடத்தில் விவசாயத்துறை உள்ளது. ஆப்ரிக்கா, தெற்கு ஆசிய நாடுகளில் 60 சதவீத
பெண்கள், விவசாயப் பணிகளில் தான் ஈடுபடுகின்றனர். கிராம பெண்களின் வேலை
நேரம், ஆண்களை விட கூடுதலாக உள்ளது. என்ன செய்யலாம்கிராமப்புற பெண்களின்
தொழில்களுக்கு கடனுதவி வழங்குதல், வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்குதல்,
இலவச மருத்துவ பரிசோதனை , சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை அவர்களுக்கு செய்து
தருவது ஒவ்வொரு அரசின் கடமை.