"வரவு எட்டணா... செலவு பத்தணா' வாக இருந்தால், வாழ்க்கையில் சந்தோஷம்
வராமல் போகும். ஆயிரங்களிலும், லட்சங்களிலும் சம்பளம் வாங்குவோர்
மட்டுமல்ல... அன்றாடம் கூலி வேலை செய்பவர்களுக்கும், சேமிப்பு அவசியம்.
வரவு அறிந்து செலவு உணர்ந்து செயல்பட்டால், சந்தோஷம் நம் வசமாகும். அடுத்து வரும் காலங்களில் குடிநீருக்காக பெரும் போராட்டம் நடக்கும். கடந்த
10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடு, நமக்கு ஒரு எச்சரிக்கை.
புழக்கத்திற்குத் தேவையான தண்ணீரில், 75 சதவீதம் நிலத்தடி நீரை
நம்பியுள்ளோம். பெரு நகரங்களில் உள்ள அடுக்குமாடி வீடுகள், மற்றும்
மூடப்பட்ட கிணறுகளால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. தமிழ்நாட்டை
தற்போது அச்சுறுத்தும் ஒரே விஷயம், மின்வெட்டு தான். இனி வரும்
காலங்களில், ஒவ்வொருவரின் மின் தேவையும் அதிகரிக்கும் போது, இப்பிரச்னை
இன்னும் பூதாகரமாக எழும். இன்று உலக சிக்கன நாள்... ஒவ்வொரு வீட்டிலும்,
பொருளாதாரம், மின்சாரம், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தினால் தான், அடுத்த
தலைமுறை தப்பிக்கும். ரேஷனில்
ஒவ்வொரு மாதமும் அரிசியை வாங்கி, வீணாக்குகிறோம். இட்லிக்கு இதையும்
சேர்த்து அரைக்கலாம். இடியாப்பத்திற்கு ருசியாக இருக்கும். அரைத்து வேக
வைத்து கூழாக்கி, வடகம் செய்யலாம். இதன்மூலம், மாதந்தோறும் கிட்டத்தட்ட ஏழு
கிலோ அரிசிக்குரிய காசை மிச்சப்படுத்தலாம். ஆடம்பரத்திற்கு ஆடைகள்
வாங்காமல், அத்தியாவசியத்திற்கு வாங்கலாம். குழந்தைகளின் நாளைய கல்விக்கு,
சிறுமுதலீடாக இன்சூரன்ஸ் செய்யலாம். மளிகைப்
பொருட்களை தினமும் வாங்குவதை விட, மொத்தமாக வாங்கலாம். சிலர் சமைக்கும்
போது அளவு தெரியாமல், கூடுதலாக செய்வர். தேவைக்கேற்ப சமைத்தால், எதுவும்
வீணாகாது. ஒரு பொருளை வாங்கும் போது, இருமுறை யோசித்து வாங்க வேண்டும்.
வருமானம் முழுவதையும் செலவு செய்யாமல், சம்பளத்தில் 10 சதவீதத்தை, தனி
சேமிப்பாக வைக்க வேண்டும். மிக அவசரம் என்றால் ஒழிய, அப்பணத்தை
தொடக்கூடாது. குடும்பத்தில் கணவன்,
மனைவியும் தங்கள் சம்பளத்தை வைத்து முதலில் திட்டமிட்டு, ஒரு
"பட்ஜெட்' போட வேண்டும். வருமானத்திற்குள் செலவு அடங்க வேண்டும். அடிக்கடி
ஓட்டல்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். "பாக்கெட்' பொருட்களை
தவிர்த்து, குழந்தைகளுக்கு விருப்பமானவற்றை, வீட்டில் செய்து கொடுப்பது,
வீண் செலவை தவிர்க்கும். நடந்து செல்லும் தூரத்திற்கு வாகனம் வேண்டாம். சிக்கனமாக இருந்தால், வீட்டில் பொருளாதாரத்தை
மேம்படுத்தலாம். ஆடம்பர பொருட்கள் வாங்குவதை தவிர்த்து, தீபாவளி உட்பட
முக்கிய விழாக்களுக்கு ஆடைகள் வாங்கலாம். வீட்டு சூழ்நிலையை பொருத்து
திட்டமிட வேண்டும். அடுத்த வீட்டில் வாங்கும் பொருட்களை கணக்கில் எடுக்கக்
கூடாது. குழந்தைகளுக்கும் சேமிப்பை கற்றுக் கொடுக்க வேண்டும். குடிநீர் சிக்கனம் குறித்து பள்ளி அளவில் விழிப்புணர்வு
ஏற்படுத்துவது அவசியம். "பிரிட்ஜில்',
காய்கறிகளை சேர்த்து வைக்காமல், தினமும் மார்க்கெட்டிற்கு சென்று
காய்கறிகளை வாங்கலாம். வாய்ப்பிருந்தால் ஒரே அறையில் அனைவரும் தூங்கலாம்.
அவசியத்திற்கு "மிக்ஸி'யும், மற்றவைகளுக்கு அம்மியிலும் அரைக்க வேண்டும்.
வீட்டில் இருக்கும் போது அம்மி அரைத்தால், ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டினால்,
உடல்நலம் மேம்படும். பொருளாதார ரீதியாகவும் நமக்கு பணம் மிச்சமாகும். "வாஷிங்
மிஷின்', வாட்டர் ஹீட்டர் பயன்பாட்டை குறைக்க வேண்டும். உடைந்த
"ஸ்விட்ச்',"பிளக்', பழுதுபட்ட "வயர்'களை மாற்றி, மின்கசிவை தடுக்க
வேண்டும். ஐ.எஸ்.ஐ., முத்திரை பெற்ற மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டும்.
தினந்தோறும் துணிகளை "அயர்ன்' பண்ணுவதை தவிர்த்து, வாரத்தில் ஒரு நாள்
செய்யலாம். "டியூப் லைட்'களில், "எலக்ட்ரானிக் சோக்' பொருத்தலாம். மின்சாரம்
இருந்தால் தான் சேமிக்க முடியும். மின்சாரம் இருக்கும் நேரத்தில்தான்,
அனைத்து பணிகளையும் செய்யும், கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
₹ 1.1 lakh compensation for insect bite while traveling in bus - Court orders
பேருந்தில் பயணித்தபோது பூச்சி கடித்ததால் ₹ 1.1 லட்சம் இழப்பீடு - நீதிமன்றம் உத்தரவு ₹ 1.1 lakh compensation for insect bite while traveling...