கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>வியாபாரம் ஆகும் கல்வி

குழந்தையின் கல்விக்காக நூறு ரூபாய் செலவு செய்ய தடுமாறும் பெற்றோர்கள் உள்ள தமிழகத்தில்தான் தன் குழந்தையின் எல்.கே.ஜி சீட்டிற்காக 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கூடைப்பந்து மைதானத்தை கட்டிக்கொடுத்துள்ளார் சென்னையைச் சேர்ந்த ஒருவர். அடுத்த கல்வியாண்டிற்கான அட்மிசன் ஜனவரி மாதம் தொடங்க உள்ள நிலையில் இந்த கூத்து அரங்கேறி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


சென்னை கீழ்ப்பாகத்தில் உள்ள மிகப்பிரபலமான பள்ளியில் தனது குழந்தைக்கு எல்.கே.ஜி., சீட் கேட்டுச் சென்றுள்ளார் ஒரு தந்தை. அவருக்கு சீட் கொடுத்த பள்ளி நிர்வாகம் டொனேசனாக 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான கம்ப்யூட்டர் லேப்பினை பெற்றுக்கொண்டது. இதே போல், சென்னை மயிலாப்பூரில் உள்ள பள்ளி ஒன்றிற்கு தனது குழந்தையின் அட்மிஷனுக்காக சென்ற தந்தை அப்பள்ளிக்கு ரூ. 17 லட்சம் மதிப்பிலான கூடைப்பந்தாட்ட மைதானத்தை கட்டிக்கொடுத்துள்ளார்.

சென்னையில் ரூ 4 லட்சம் :

சென்னையில் உள்ள சிறந்த பள்ளிகளில் எல்.கே.ஜி.,யில் குழந்தைகளை சேர்ப்பதற்கு ரூ. 4 லட்சம் வரை டொனேஷன் கேட்கப்படுகிறது. சில இடங்களில் பெற்றோர்களிடம் ரூ. 1 லட்சம் வரை வட்டியில்லா கடனாக பெற்று, அக்குழந்தை பள்ளியை விட்டுச் செல்லும் போது மீண்டும் வழங்கும் நடைமுறையும் உள்ளதாக கூறுகின்றனர்.

இதே இரண்டாம் நிலை நகரங்களான மதுரை, திருப்பூர் போன்ற ஊர்களில் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 75 ஆயிரம் வரை கேட்கப்படுவதாக கூறப்படுகிறது. முன்பெல்லாம் கல்வி கட்டணம் என்ற பெயரில் கூடுதலாக பல ஆயிரங்கள் கேட்பார்கள். ஆனால் இப்போது பள்ளியை சீரமைக்க வேண்டும். புதிய கட்டிடங்கள் தேவைப்படுகிறது. அதை கட்டி கொடுத்தால் உங்கள் குழந்தைகளுக்கு அட்மிஷன் தருகிறோம் என்ற புதிய முறைகளை பின்பற்றுகிறார்கள்.

பெற்றோர்களும் பங்குதாரர்கள் :

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் விதமாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சட்டம் கொண்டு வந்துள்ள நிலையில், பணப்பரிமாற்றத்திற்காக பள்ளிகளுடன் சேர்ந்து புதுப்புது வழிகளை கண்டறிய பெற்றோர்கள் தற்போது முயன்று கொண்டிருக்கிறார்கள். சில பள்ளிகளில் பெற்றோர்களை பள்ளிகளின் பங்குதாரர்களாகவே பாவிக்கும் நிலையும் உள்ளது.

அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள்தான் இன்றைக்கு உயர்பதவிகளில் இருக்கின்றனர். கல்வி என்றைக்கு தனியார்மயமாக்கப்பட்டதோ அன்றிலிருந்தே தமிழ்நாட்டில் கல்வி என்பது வியாபாரப் பொருளாகிவிட்டது. கட்டடங்களை பார்த்து கல்வியின் தரத்தை நிர்ணயிக்கின்றனர் இன்றைய பெற்றோர்கள். அதனால்தான் வசதியான பள்ளிகளில் சேர்க்க லட்சங்களை கொட்டிக் கொடுக்கவும் தயாராக உள்ளனர்.

குறைந்து வரும் கல்வித்தரம்:

டொனேசன் பெற்றுக்கொண்டு சீட் கொடுக்கும் பள்ளியில் எப்படி தரமான கல்வியை எதிர்பார்க்க முடியும்? இதனால்தான் நாட்டில் கல்வியின் தரம் குறைந்து விட்டதாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆதங்கப்பட்டுள்ளார். ஆனால் லட்சக்கணக்கில் டொனேசன் கொடுத்தாவது தனது குழந்தைகளை குறிப்பிட்ட பள்ளியில்தான் படிக்கவைப்பேன் என்று சில பெற்றோர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இதையெல்லாம் பார்க்கும் போது தமிழ்நாட்டில் கல்வி எங்கே செல்கிறது என்ற கேள்வி மனதில் எழாமல் இல்லை..

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...