நாட்டின் சிறந்த தொழிற்கல்வி நிறுவனங்களில் இளநிலை இன்ஜினியரிங் மாணவர்
சேர்க்கைக்காக நடத்தப்பட்டுவந்த ஏ.ஐ.இ.இ.இ/ ஐ.ஐ.டி- ஜே.இ.இ., தேர்வுகள்,
வரும் கல்வியாண்டு முதல் ஜே.இ.இ., (மெயின்), ஜே.இ.இ., (அட்வான்ஸ்டு) என
மாற்றம் பெறுகிறது.
ஜே.இ.இ.,(மெயின்) தேர்வு
அடிப்படையில், என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., மற்றும் மத்திய, மாநில அரசு நிதி உதவி
பெறும் பிற தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த முதல் 1.5 லட்சம் மாணவர்கள் மட்டுமே
ஜே.இ.இ., (அட்வான்ஸ்டு) தேர்வு எழுதமுடியும். ஜே.இ.இ.,(அட்வான்ஸ்டு)
தேர்வில் சிறந்து விளங்கும் மாணவர்கள் மட்டுமே நாட்டின் சிறந்த தொழில்நுட்ப
கல்வி நிறுவனங்களாக கருதப்படும் ஐ.ஐ.டி.,களில் சேர முடியும்.
தற்போது ஜே.இ.இ., (மெயின்) தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதி
வயது: எஸ்.சி/எஸ்.டி., உடல் ஊனமுற்றோர் 1983 அக்., 1க்கு பிறகும், மற்றவர்கள் 1988 அக்.,1க்கு பிறகும் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம்
பாடங்களோடு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வை,
மூன்று முறை எழுதலாம். 2011-12ல் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், தற்போது
பிளஸ் 2 படித்துக்கொண்டிருப்பர்கள் மட்டுமே எழுத முடியும்.
ஜே.இ.இ., மெயின் தேர்வு, இரண்டு தாள்களை கொண்டது. தாள் 2
பி.ஆர்க்/பி.பிளானிங் படிப்புகளுக்கும், தாள் 1 மற்ற இன்ஜினியரிங்
படிப்புகளுக்கும் நடத்தப்படுகிறது. தாள் 1 தேர்வை ஆன்லைன் மற்றும் ஆப்லைன்
முறைகளில் எழுதலாம். தாள் 2 தேர்வை ஆப்லைனில் மட்டுமே எழுத முடியும்.
மூன்று மணி நேரம் நடக்கும் இத்தேர்வில், ஆங்கிலம் மற்றும் இந்தியில்
வினாக்கள் இடம் பெற்றிருக்கும்.
தாள் 1ல் இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற பாடங்களிலிருந்து அப்ஜெக்டிவ் வகை கேள்விகள் இடம் பெறும். தாள் 2ல் கணிதம், ஆப்டிடியூட் டெஸ்ட், டிராயிங் டெஸ்ட் என்ற பிரிவுகளில் அப்ஜெக்டிவ் வகையில் வினாக்கள் இடம் பெறும்.
தாள் 1ல் இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற பாடங்களிலிருந்து அப்ஜெக்டிவ் வகை கேள்விகள் இடம் பெறும். தாள் 2ல் கணிதம், ஆப்டிடியூட் டெஸ்ட், டிராயிங் டெஸ்ட் என்ற பிரிவுகளில் அப்ஜெக்டிவ் வகையில் வினாக்கள் இடம் பெறும்.
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: பிளஸ் 2வில் பெறும்
மதிப்பெண்களை 40 சதவீதத்திற்கும், ஜே.இ.இ., தேர்வில் பெறும் மதிப்பெண்களை
60 சதவீதத்திற்கும், கணக்கீடு செய்து, அதிக மதிப்பெண்கள் அடிப்படையில்
சேர்க்கை நடைபெறும். ஆப்லைன் தேர்வு, 2013 ஏப்.,7 அன்று காலை தாள் 1ம்,
தாள் 2 அன்று மாலையிலும் நடைபெறும். தாள் 1ன் ஆன்லைன் தேர்வு 2013 ஏப்.,
8ல் தொடங்கி 2013 ஏப்., 25 வரை நடைபெறும். இதற்கு ஆன்லைனில் மட்டுமே
விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி நாள் டிச., 15.
கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு 1800 ரூபாயும், எஸ்.சி/எஸ்.டி.,
பிரிவினருக்கு 900 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவரங்களுக்கு http://jeemain.nic.in/jeemain2013/welcome.aspx என்ற இணையதளத்தை பார்க்கலாம்.