கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பள்ளிகளில் ஆய்வு நடத்த வருகிறது "அன்னையர் குழு'

"அனைத்து பள்ளிகளிலும், "அன்னையர் பள்ளி பார்வை குழு' ஏற்படுத்தி ஆய்வு செய்ய வேண்டும்' என, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அன்னையரை, ஐந்து பேர் கொண்ட குழுவாக அமைக்க வேண்டும். இந்த குழு, வாரம் ஒரு நாள், பள்ளி வேலை நாட்களில் ஆய்வு மேற்கொள்வர். வாரந்தோறும் இக்குழுவினர் மாறிக் கொண்டே இருப்பர். பள்ளியில் வகுப்பறை வசதி உள்ளதா, போதிய ஆசிரியர்கள் உள்ளனரா, நூலகம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா என, ஆய்வு செய்வர். இதுகுறித்து தலைமையாசிரியரிடம் தகவல் தெரிவிப்பர். அன்னையர் கூறும் குறைகளை, நிவர்த்தி செய்ய வேண்டும். இக்குழுவில், அனைத்து மாணவர்களின் அன்னையரும், இடம்பெற வகை செய்யப்பட்டுள்ளது. குறைகளை சரி செய்தது குறித்து, முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பள்ளிக் கல்வித் துறைக்கு இவர்களே தகவல் தெரிவிக்க வேண்டும் என, கூறப்பட்டு உள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Details of school education related cases to be heard in the Supreme Court today (27.02.2025)

உச்சநீதிமன்றத்தில் இன்று (27.02.2025) விசாரணைக்கு வரும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த வழக்குகள் விவரம் Details of school education related case...