டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான
சான்றிதழ் சரிபார்ப்பு பணி, 32 மாவட்டங்களிலும், நேற்று துவங்கியது.
இம்மாதம், 2ம் தேதி வெளியான, டி.இ.டி., தேர்வு முடிவில், 19 ஆயிரத்து 246
பேர், தேர்ச்சி பெற்றனர். இவர்களில், 10 ஆயிரத்து 397 பேர், இடைநிலை
ஆசிரியருக்கான முதல் தாள் தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள். மீதமுள்ள, 8,849
பேர், பட்டதாரி ஆசிரியருக்கான, இரண்டாம் தாள் தேர்வில், தேர்ச்சி
பெற்றவர்கள். இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நேற்று, சான்றிதழ்
சரிபார்ப்பு பணி துவங்கியது. இன்றும், தொடர்ந்து நடக்கிறது. சென்னை
மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, எழும்பூர், மாநில
மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இரு நாளும் சேர்த்து, 417 பேர்,
பங்கேற்கின்றனர். 10 குழுக்களைச் சேர்ந்த அலுவலர்கள், சான்றிதழ்களை
சரிபார்க்கின்றனர். வரும், 8, 9ம் தேதிகளில், முதல் தாள் தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதில், சென்னை
மாவட்டத்தில், 572 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பணிகள் முடிந்த பின்,
இறுதி தேர்வுப் பட்டியலில், எத்தனை பேர் இடம்பெற்றுள்ளனர் என்ற விவரம்
தெரியவரும். உரிய சான்றிதழ் இல்லாத தேர்வர்கள், தேர்வுப் பட்டியலில்
இருந்து நீக்கப்படுவர். இம்மாத இறுதிக்குள், இறுதி தேர்வுப் பட்டியல்
அடங்கிய கோப்புகளை, கல்வித்துறைக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் அனுப்பும்.
அதன்பின், சம்பந்தபட்ட ஆசிரியர்களுக்கு, பணி நியமன கலந்தாய்வு நடக்கும்.
டிசம்பர் இறுதிக்குள், 19 ஆயிரம் பேரும், பணி நியமனம் செய்யப்படுவர் என,
எதிர்பார்க்கப்படுகிறது.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...