கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>துப்புரவு பணியாளர், காவலர் நியமனம்:தர்மபுரியில் அதிகம், சென்னையில் குறைவு

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 2,216 துப்புரவு பணியாளர்கள், 1,492 காவலர்கள் என, 3,708 பேருக்கு, இணையதளம் வழியாக, நேற்று கலந்தாய்வு நடத்தி, பணி நியமனம் செய்யப்பட்டனர்.மொத்தம், 5,000 பேர், பணி நியமனம் செய்யப்படுவர் என, கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால், சில மாவட்டங்களில், முன்னுரிமைப் பட்டியலின் கீழ், சில பிரிவினர் இல்லாததால், முதல் கட்டமாக, 3,708 பேருக்கு மட்டும், பணி நியமனம் நடந்ததாக, பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மீதமுள்ள, 1,292 பேருக்கான பதிவுமூப்பு பட்டியல், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து பெற்று, விரைவில், பணி நியமனம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அதிகாரிகள் தெரிவித்தனர். மாநிலம் முழுவதும், 66 கல்வி மாவட்ட அலுவலகங்களில், பணி நியமன கலந்தாய்வு நடந்தது. இதை, பள்ளிக்கல்வி இயக்ககத்தில் இருந்தபடி, இயக்குனர் தேவராஜன், இணை இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் கண்காணித்தனர். கலந்தாய்வு முடிந்ததும், சம்பந்தபட்டவர்களுக்கு, கல்வி மாவட்ட அலுவலர்கள், பணி நியமன உத்தரவுகளை வழங்கினர். நியமன உத்தரவு பெற்ற அனைவரும், உடனடியாக பணியில் சேர, இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.அதிகபட்சமாக, வேலூர் கல்வி மாவட்டத்தில், 116 துப்புரவு பணியாளர்களும், 98 காவலர்களும், பணியில் சேர்ந்தனர். தர்மபுரி கல்வி மாவட்டத்தில், 85 துப்புரவு பணியாளர்கள், 67 காவலர்களும், சேலம் கல்வி மாவட்டத்தில், 69 துப்புரவு பணியாளர்கள், 59 காவலர்களும் நியமிக்கப்பட்டனர்.மிகக் குறைவாக, மத்திய சென்னை கல்வி மாவட்டத்தில், இரு பணிகளிலும், தலா ஒருவர் நியமிக்கப்பட்டனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Reducing Data Entry Workload of HMs and Teachers in EMIS - SPD Proceedings

  EMIS பணிகளிலிருந்து 28.02.2025 க்குள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவார்கள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்...