கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மருத்துவ மாணவர்களின் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்

"இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைப்படி, மருத்துவ மாணவர்களின் தேர்வு முடிவுகளை, மீண்டும் வெளியிட, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என, சுகாதார துறை அமைச்சர் விஜய், கூறியதை அடுத்து, உள்ளிருப்பு போராட்டத்தை, மருத்துவ மாணவர்கள் வாபஸ் பெற்றனர். எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான ஆண்டு தேர்வு, மதிப்பீட்டு முறையில் கொண்டு வரப்பட்டுள்ள, புதிய நடைமுறைகளை வாபஸ் பெற வேண்டும்; தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களில், தேர்ச்சி பெற்ற பின்தான் மாணவர்கள், அடுத்த ஆண்டு படிப்பை தொடர வேண்டும் (பிரேக் சிஸ்டம்) என்ற நிபந்தனையை திரும்ப பெற வேண்டும், உள்ளிட்ட, ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின், மாணவ, மாணவியர், 500க்கும் மேற்பட்டோர், சென்னை, கிண்டியில் உள்ள, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று, உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கினர். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, பல்கலைக்கு வந்த அமைச்சர் விஜய், மருத்துவ மாணவர்களின் பிரதிநிதிகளுடன், 20 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, "இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைப்படி, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மாணவர்களின், தேர்வு தாள்களை, மீண்டும் மதிப்பீடு செய்து, முடிவுகளை வெளியிட, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். "பிரேக் சிஸ்டத்தை" திரும்ப பெறவும், பல்கலை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்" என, அமைச்சர் விஜய், உறுதி அளித்தார். இதையடுத்து, தாங்களின் உள்ளிருப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக, தமிழ்நாடு மருத்துவ மாணவர் கூட்டமைப்பின் தலைவர் காமராஜ் தெரிவித்தார்.
அமைச்சரை சாதுர்யமாக மடக்கிய மாணவர்கள்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, மருத்துவ மாணவர்கள் அறிவித்திருந்தனர். அதேசமயம், அமைச்சரின் வருகையை அறிந்த அவர்கள், சேப்பாக்கத்தில் பெயரளவிற்கு ஆர்ப்பாட்டத்தை நடத்திவிட்டு, மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில், உள்ளிருப்பு போராட்டத்தை தீவிரப்படுத்தினர். சமீபத்தில், தங்கள் கோரிக்கைகளை எடுத்துக் கூற, தலைமைச் செயலகத்திற்கு வந்த மருத்துவ மாணவர்களை, சந்திக்க மறுத்த அமைச்சர் விஜய், நேற்று, வேறு வழியின்றி, மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியதாயிற்று.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Donation of property can be canceled if children do not maintain parents - Supreme Court

பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காவிட்டால் சொத்துகளின் தான பத்திரத்தை ரத்து செய்யலாம் - உச்சநீதிமன்றம்  Donation of property can be canceled if chi...